சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly
தவெகவினர் சட்டமன்றத்தைச் சினிமா தியேட்டர் போல இன்று மாற்றிவிட்டார்கள். விசில் அடித்துக் கொண்டிருந்தார்கள். விரைவில் அமைச்சர்கள் சினிமா பாடலுக்கு ஆட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
அறுதிப் பெரும்பான்மையின்றி
அவசர கதியில் ஆட்சி அமைத்தவர்கள், ஆளுநர் உரை என்ற பெயரில் ஆளுங்கட்சியின் சுயத்தம்பட்ட ஆராதனை உரையை அரங்கேற்றி இருக்கிறார்கள்;
நம்பி வாக்களித்த மக்களுக்கு
நன்மை செய்யும்
எந்த நல்ல திட்டங்களும் இடம்பெறாத அந்த வெற்று உரை REELS -க்கு பயன்படுமே தவிர REAL-ஆன நடப்புக்கு பயன்படாது!
மொத்தத்தில் அது
மக்கள் விரைவில், 'PACK UP' சொல்லப் போகும்
‘MAKE UP' MAN-க்காக எழுதப்பட்ட உரை என்பதே பொருத்தமானது!
🔥🌄🖤❤️
@mkstalin@Udhaystalin
#LeaderOfOpposition
#DMK
#TNAssembly
#TVKFails
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரி மண்ணில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், நான்கு வழிச்சாலை, சர்க்கரை ஆலைகளில் மின் இணை உற்பத்தி நிலையங்கள், முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம், சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி… என எண்ணிடலங்கா நலத்திட்டங்களை, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தருமபுரிக்கு வழங்கியிருக்கிறார்.
மேலும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த, மீண்டும் #திராவிடமாடல் அரசு அமைய, அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, சேப்பாக்கம் பகுதி, 62-வது வட்டக்கழகம், சிந்தாதிரிப்பேட்டை ரெக்ஸ் தெரு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 700 பேருக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கி, பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தோம்.
@nchitrarasu@Madhanmohandmk@iamchsekar #Jegadeesan
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் கன்னிமாரா நூலகத்தில் ரூ 4.58 கோடி மதிப்பில் பல்வேறு புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நவீன சிறுவர் நூலகம், அறிவியல் மையம், புதுப்பிக்கப்பட்ட குடிமையியல் பிரிவு, சொந்த நூல் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டுக் கூடம் போன்ற இந்த வசதிகளை இன்று நாம் திறந்து வைத்தோம்.
135 ஆண்டுகள் கடந்து இன்றும் வாசகர்களை ஈர்க்கின்ற கன்னிமாராவில், இந்தப் புதிய வசதிகளை பயன்படுத்தி தங்கள் அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள பொதுமக்கள் - வாசகர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்!
@PKSekarbabu@Anbil_Mahesh@Dayanidhi_Maran@iparanthamen
பழைய-புதிய அடிமைகளைக் கொண்டு டெல்லியில் இருந்து, தமிழ்நாட்டை இயக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சூழ்ச்சிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, தமிழ்நாட்டின் உரிமைகளையும் தன்மானத்தையும் காக்கும்
#திராவிடமாடல் அரசே 2026-லும் தொடர அயராது உழைப்போம்!
#திராவிடப்_பொங்கல்
சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் மறு கட்டுமான பணிகளுக்காக இடம்பெயர்ந்துள்ள 1150 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சியை தடுக்க நினைக்கும், பாசிஸ்ட்டுகளையும், அவர்களின் அடிமைகளையும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வீழ்த்திடுவோம் என உரையாற்றினோம்.
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகளோடு தை திருநாளை உற்சாகத்துடன் கொண்டாட பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தோம்.
@PKSekarbabu@Dayanidhi_Maran@thayagamkavi@JosephsamuelMLA@VetriazhaganA@PriyarajanDMK
India Skills 2026 போட்டியில் வெல்லும் மாணவர்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசுக்கும் - L & T, Nippon Paints, Festo, Naturals, Sri Ramakrishna Advanced Training Institute, Vummidi Bangaru, Shoba Builders உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையே நம் முன்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
நம் #திராவிட_மாடல் அரசின் முன்னெடுப்பால் தமிழ்நாட்டு மாணவர்கள் - இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் பணிவாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ள அத்தனை நிறுவனங்களுக்கும்என் அன்பும், நன்றியும்!
@Dayanidhi_Maran@Dr_Ezhilan@nchitrarasu #PradeepYadavIAS @kranthi_tweet
சென்னை தெற்கு மாவட்டக்கழகம் சார்பில், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி ஜாஃபர்கான்பேட்டையில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், கலைஞர் கணினி கல்வியகம் - கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றி பயிற்சி பெற்ற மாணவர்கள் - இளைஞர்கள் 1500 பேர் மற்றும் மானிய விலையில் ஆட்டோக்களைப் பெற்ற 1500 பேர் என மொத்தம் 3000 பேருக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டு மாணவர் - இளைஞர்கள் - உழைக்கும் மக்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கழகமும் - கழக அரசும் என்றும் துணை நிற்கும் என உரையாற்றினோம்.
தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் - அடையாளத்தையும் வீழ்த்திட நினைக்கும் பாசிஸ்ட்டுகள் - அடிமைகளை வீழ்த்தி, மீண்டும் திராவிட மாடல் அரசினை அமைக்க அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்று பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தோம்!
@Subramanian_ma@thayagamkavi@PrabhakarRaja88@MMageshkumaar
கழக இளைஞர் அணி நடத்திய #திமுக75_அறிவுத்திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற #இருவண்ணக்கொடிக்கு_வயது75 கருத்தரங்கத்தின் ஆறாவது அமர்வில், ‘ஆமாம், மைனாரிட்டி தி.மு.க.தான்' என்னும் தலைப்பில், கழக அயலக அணிச் செயலாளர் @pudugaiabdulla அவர்கள் ஆற்றிய உரையின் காணொலி தொகுப்பை இன்று மாலை 6:30 மணிக்கு @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்!
#DMK4TN
கழக இளைஞர் அணியின் முதல் நான்கு மண்டலங்களுக்கு உள்பட்ட சென்னை தெற்கு, திருவள்ளூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, வேலூர் வடக்கு, தர்மபுரி மேற்கு, சேலம் கிழக்கு, ஈரோடு மத்திய ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களை, மாநில துணைச் செயலாளர்கள் @Prabhugajendran , @pssrinivasandmk ஆகியோர் முன்னிலையில், இன்று நேர்காணல் செய்தோம்.
அவர்கள் இதுவரை ஆற்றியுள்ள கழகப் பணிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து, கொண்டுவந்திருந்த மினிட் புத்தகம், புகைப்பட தொகுப்பு உள்ளிட்ட ஆவணங்களைப் பார்வையிட்டு, உற்சாகமாகக் கழகப் பணியாற்றுமாறு வாழ்த்தினோம்!
@dmk_youthwing #கழக_இளைஞர்_அணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தனது #கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள ஜி.கே.எம்.காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்டுமானப் பணிகளுக்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
நமது பள்ளிக் கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை வழங்கிய தாயுமானவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, அதே விழாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களோடு இணைந்து நன்றியைத் தெரிவித்துக்கொண்டோம்.
தொடர்ந்து
🏡 பெரியார் நகர் அமுதம் அங்காடி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்
💍 ரூ.25.72 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை திறப்பு விழா.
👩❤️💋👩 15 இணைகளுக்கு திருமணம்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்று சிறப்பித்த இந்நிகழ்வுகளில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களோடு இணைந்து கலந்துகொண்டோம்.
@KN_NEHRU@PKSekarbabu
மதுரைக்கு இன்று வருகை தந்த போது எழுச்சிமிகு வரவேற்பை அளித்த கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகள் - இளைஞரணி தம்பிமார்கள் - பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய அன்பையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். @pmoorthy21
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், பூவிருந்தவல்லியில் ரூ.43.53 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள மின்சார பேருந்து பணிமனையை இன்று திறந்து வைத்தோம்.
இந்நிகழ்வில், 45 புதிய தாழ்தள A/C பேருந்துகள் உட்பட 125 தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தோம்.
இந்த நவீன பணிமனையையும் - பேருந்து சேவைகளையும், பொதுமக்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவும், அவர்களின் பயணம் இனிதாக அமையவும் என்னுடைய அன்பும், வாழ்த்தும்.
@sivasankar1ss@Avadi_Nasar@office_krishna
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம்முடைய சுய உதவிக்குழு சகோதரிகளுக்கான SARAS MELA கண்காட்சி - குழு சகோதரிகள் நடத்தும் உணவுத்திருவிழா ஆகியவற்றை மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி வைத்தோம்.
இந்த கண்காட்சி மற்றும் உணவுத்திருவிழாவில் பொருட்களை பார்வையிட்டும், உணவு வகைகளை சாப்பிட்டும் நம் குழு சகோதரிகளை வாழ்த்தினோம்.
இந்த திருவிழாவில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க அழைக்கிறோம். நம் குழு சகோதரிகளின் பொருளாதார ஏற்றத்துக்கு துணை நிற்போம்!
@pmoorthy21@ptrmadurai@g_thalapathimla