சேலம் - Dr.சுந்தர்ராஜன் ��ருத்துவமனையில், CATH LAB - GE IGS 330 (இதய வடிகுழாய் ஆய்வகம்) திறந்து வைத்த போது. உடன் மருத்துவர் சுந்தர்ராஜன், விருதை வள்ளல் மருத்துவர் ஆர்.கோவிந்தசாமி மற்றும் ஆர்.ஜி.மகேந்திரன் அவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழ���மத்தினர்.!
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் தொடங்கிய நான்கு நாட்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை பூம்புகாரில் நிறைவு செய்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது. உடன் விவசாய சங்க நிர்வாகிகள், உழவர் பேரியக்கம் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள்.!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர��நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், திருப்பூரில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாற்றிய போது.!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே எ��ப்ப��ும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்தும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் நடப்பு கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வலியுறுத்திய போது.!
#CasteSurvey #PMK
பதவி விலகிய 3 அதிமுக எம்.எல��.ஏக்கள் த.வெ.கவில்
இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும்
எதிரானது: மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் த.வெ.க.வில் சேர்ந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் ஆகும். அவர்களின் செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாள்கள் மட்டும��� ஆகின்றன. அதற்குள்ளாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய தேவை என்ன? காவிரி பிரச்சினைக்காகவோ, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. மாறாக, ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியல�� முன்னெடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார் என்��து தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை.
த.வெ.க.வின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சேர்கின்றனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்?
அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுனர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை த.வெ.க. தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பது தான் இதற்கான காரணம். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது.
ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவ��தித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்த பட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது.
@TVKVijayHQ
மரக்காணம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ��ெண்கள் மற்றும் குழந்தைகள்
பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த வண்டிபாளையம் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தை என்றும் பாராமல் இத்தகைய செயல்களில் மனித மிருகங்கள் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது.
கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே நிகழ்ந்துள்ள இந்தக் கொடுமை குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அரசு கூடுதல் கவனமும், அக்கறையும் காட்ட வேண்டும் என்ற�� வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத் திறனாளி பெண் மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமக்க��� நேர்ந்த அவலத்தை நேரடியாக வெளிப்படுத்துவதற்கு கூட முடியாத நிலையில் உள்ள இளம்பெண்ணை மனித மிருகங்கள் சீரழிந்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
கறம்பக்குடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பணியாற்றி வரும் அந்தப் பெண் , வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, அங்கு மகிழுந்தில் வந்த கும்பல் அவரை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கறம்பக்குடி-ஆலங்குடி சாலையில் தள்ளிவிட்டு சென்றிருக்கிறது.
அதேபோல், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஞ்சா வணிகம் குறித்து செய்தி வெளியிட்டதால், ஆத்திரமடைந்த கஞ்சா வணிகக் கும்பல் ஒன்று, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் காஜா முகைதீன் என்பவரை கத்தியால் குத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த செய்தியாளர் தஞ்சாவூர் மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பெருந்தீமைகளில் குறிப்பிடத்தக்கது கஞ்சா வணிகமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்தது ஆகும். திமுக ஆட்சி அகற்றப்பட்ட பிறகும் அத்தகைய குற்றங்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் தொடர்வது கவலையளிக்கிறது.
தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்ற விஜய் அவர்கள், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார். திமுக அரசில் ஏற்பட���ட தீமைகளை ஒழிப்பதில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான ஆர்வம் காட்டுவதற்கு இந்த நிகழ்வுகள் சான்றாகும்.
புதுக்கோட்டை அருகே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்விலும், கஞ்சா வணிகக் கும்பலால் செய்தியாளர் கத்தியால் குத்தப்பட்ட நிகழ்விலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்களுக்கு வரவேற்பு: 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சமூகநீதி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்!
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் அவர்கள், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார். தமிழ்நாட்டின் இன்றைய தலையாயத் தேவைகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க வேண்ட��யதும் தான். அவற்றுக்கு வகை செய்யும் திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஒழிக்கப்பட வேண்டிய போதைப் பொருள்கள் கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் மட்டுமல்ல... அரசின் சார்பில் விற்பனை செய்யப்படும் மது வகைகளும் தான். மதுவால் தான் ஆண்டுக்கு 20 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன; லட்சக்கணக்கான குடும்பங்கள் தலைவர்களை இழந்து நடுத்தெருவுக்க��� வருகின்றன. எனவே டாஸ்மாக் மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தின் இன்றைய முக்கியத் தேவைகளில் இன்னொன்று சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதி கணக்கெடுப்பை நடத்துவதாகும். சமூகநீதியில் தமிழகத்தை தனித்துவப்படுத்தி காட்டுவது 69% இட ஒதுக்கீடு தான். ஆனால், உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் கூட சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதிக் கணக்கெடுப்பு நடத்தப்படாததால், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கி��் காரணமாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதைத் தடுக்க சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
ஆளும் த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையின் முதல் வாக்குறுதியே,’’ ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரி கணக்கீட்டு சர்வே மே���்கொள்ளப்படும்” என்பது தான். அந்த வகையில் சமூகநீதியைக் காப்பதில் ஆளும் த.வெ.க.வும் உடன்படுகிறது.
எனவே, இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதி கணக்கெடுப்பை நடத்தவும், அதனடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது, உரிய அளவில் அனைத்து சமூகங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிப்பது ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் புதிய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
#SocialJustice
@CMOTamilnadu @TVKVijayHQ
"மறந்துடாம மாம்பழத்துக்கு ஓட்டு போடுங்க, நோட்டீஸை பின்னாடி திருப்பி பாருங்க வாக்குறுதிகளாம் இருக்கு கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.. ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க”.. தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளரான தனது தாய் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக மாம்பழம் சின்னத்திற்கு வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அன்பு மகள்கள்..!
#Dharmapuri | #PMK | #TNElection2026 | #ElectionCampaign | #PolimerNews
கனிமொழி தயாரித்த தேர்தல் அறிக்கையில் மது ஒழிப்பு குறித்தோ போதைப் பொருள் தடுப்பு குறித்தோ ஒரு வார்த்தை கூட இடம் பெறாதது ஏன்..? ஆனால் அ.தி.மு.க. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. எடப்பாடி பழன��சாமி எங்கே..? தற்போதைய முதல்வர் எங்கே..? அன்புமணி கேள்வி
#Viluppuram | #PMK | #AnbumaniRamadoss | #DMK | #Election2026 | #PolimerNews
Watch | தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக களமிறங்கியுள்ள தங்களது தாயார் செளமியா அன்புமணிக்காக, மகள்கள் சங்கமித்ரா, சம்யுத்ரா இருவரும் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
#SunNews | #TNElectionWithSunNews | #PMK
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், தருமபுரி சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிடும் எனக்கு, பாமக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாக வந்து தருமபுரியில் வரவேற்றனர்.!
#election2026 | #PMK | #NDA | #ADMK | #BJP | #AMMK | #Dharmapuri
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க... ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?
அரசு நிர்வாகத்தைக் கவனிப்பதை விட, விளம்பரப் படங்களில் நடிப்பதிலேயே அதிக நேரம் செலவிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று புதிதாக ஒரு விளம்பரப் படத்தில் நடித்து வெளியிட்டிருக்கிறார். முதலமைச்சர் எத்தனை விளம்பரப் படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொள்ளட்டும்... அதற்காக மக்களின் வரிப்பணத்தைக் கூட வீணடித்துக் கொள்ளட்டும்... அதையும் கூட பொறுத்துக் கொள்வோம். ஆனால், முதலமைச்சரின் சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமை இருக்கிறதா? என்பது தான் நமது வினா.
கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவா, ஜீவா என்ற சிறுவர்கள் அருகில் உள்ள நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறையே 5 மற்றும் 2 ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் அளவுக்கு புகழ்பெற்றிருக்கும் அவர்கள் ‘படிப்பை மட்டும் ��ிட்றவே விட்றாதீங்க...’ என்று வலியுறுத்தி வெளியிட்ட ரீல்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது அலுவலகத்துக்கு அழைத்துப் பேசி வீடியோ வெளியிட்டதுடன், கலெக்டராகவும், காவல்துறை அதிகாரியாகவும் வரும் அளவுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார். இதில் ஒன்றும் தவறு இல்லை.
முதலமைச்சரின் ஷூட்டிங் பாணியில் பேசுவதாக இருந்தால், அடுத்த ஷாட்டுக்கு கடலூர் மாவட்டம் நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு செல்வோம்.... அந்த பள்ளியில் தான் ரீல்ஸ் புகழ் மாணவர்கள் தேவாவும், ஜீவாவ���ம் படிக்கிறார்கள்.
நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மொத்தம் 5 வகுப்புகள் உள்ளன. 30 மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். ஆனால், அந்தப் பள்ளியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
இரு ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு 5 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்த முடியும்? எப்படி தரமான கல்வி வழங்க முடியும்? தேவாவும், ஜீவாவும் எப்படி ��லெக்டராகவும், காவல் அதிகாரியாகவும் ஆவதற்கு ஏற்ற அடிப்படைக் கல்வியை பெற முடியும்? சொல்லுங்க முதல்வரே.
தேவா, ஜீவா பயிலும் பள்ளியின் நிலைமை மட்டும் இவ்வளவு மோசமாக இல்லை. தொடக்கக் கல்வித்துறை சார்பில் 22,831 தொடக்கப் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு வெறும் 2 ஆசிரியர்கள் மட்டும் தான். மேலும் 3800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளுக்���ும் சேர்த்து ஒரே ஆசிரியர் தான்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 29,418 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இந்த லட்சணத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி எங்கிருந்து கிடைக்கும் முதலமைச்சர் அவர்களே?
மாணவர்களின் கல்வி மீது கொண்ட ஆர்வத்தால் நீங்கள் இந்த சந்திப்பை நிகழ்த்தவில்லை; விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாதால் மாநிலம் முழுவதும் மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்புவதற்காகத் தான் இந்த விளம்பரப்படத்தை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
இத்தகைய விளம்பரப்படங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது. இன்னும் சில வாரங்களில் நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களால் மறக்க முடியாத தீர்ப்பை அளிப்பார்க���். அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து தான் நீங்கள் பொழுதைக் கழிக்க வேண்டியிருக்கும். @CMOTamilnadu
மத்திய சுகாதாரம��� மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றிய போது உலகத்திலேயே மிகப்பெரிய சுகாதார திட்டமான (NRHM) தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நான் அறிமுகப்படுத்திய ஆஷா(Accredited Social Health Activist - ASHA) திட்டத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் "ஆஷா" என்ற திரைப்படத்தை மராத்திய மொழியில் வெளியிட்டு, இத்திட்டத்தின் சிறப்புகளை நேர்த்தியாக காட்டியதற்காக படக்குழுவினரை சென்னைக்கு அழைத்து பாராட்டி, பத்திரிகையாளர்களை சந்தித்தபோது.!
ஆஷா எனும் அற்புத சாதனை!
நாம் படைத்த சாதனைகளை இந்த உலகம் கொண்டாடும் போது, அது சார்ந்த மலரும் நினைவுகளை மனதில் ஓட்டிப் பார்ப்பதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றிய போது இந்தியாவில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நான் அறிமுகப்படுத்திய ஆஷா(Accredited Social Health Activist - ASHA) திட்டத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் ஆஷா என்ற மராத்திய திரைப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் பார்த்த போது எனக்கு அதே உணர்வு தான் ஏற்பட்டது.
ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் ஆகும். இது 2005&ஆம் ஆண்டில் நான் அறிமுகப்படுத்திய உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் பிரிக்க முடியாத அங்கம் தான் ஆஷாக்கள் ஆவர். இந்தியாவின் ��வ்வொரு கிராமத்திலும் பயிற்சி பெற்ற சுகாதாரப் பெண் பணியாளர் ஒருவரையாவது நியமிக்க வேண்டும் என்பது தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் அடிப்படை விதி ஆகும். இந்த விதியை நிறைவேற்ற நியமிக்கப்பட்டவர்கள் தான் ஆஷாக்கள் ஆவர். இந்தியா முழுவதும் 10 லட்சம் ஆஷாக்கள் பணியாற்றி வருகின்றனர்.
கருவுற்ற பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் ஐயங்களையும், அச்சத்தையும் போக்க வேண்டுமா? அவர்களுக்கு நுண்ணூட்டச் சத்து மற்றும் துப்புரவு தொடர்பான ஆலோசனைகளை வழங்க வேண்டுமா? கருவுற்ற பெண்களை குறித்த காலத்தில் மருத்துமனைகளுக்கு அழைத்துச் ச��ல்ல வேண்டுமா? பிறந்த குழந்தைகளின் உடல் நலத்தைக் காக்க வேண்டுமா? குறித்த காலத்தில் தடுப்பூசிகள் போடப்படுவதை உறுதி செய்ய வேண்டுமா? அனைத்தையும் ஆஷாக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
அவர்களின் துடிப்பான பணிகளால் தான் இன்று 100% பிரசவங்களும் மருத்துமனைகளில் நடைபெறுகின்றன; தாய்மார்கள் இறப்பு விகிதம் 60 விழுக்காடும், குழந்தைகள் இறப்பு விகிதம் 80 விழுக்காடும் குறைந்துள்ளன. ஆஷா பணியாளர்க��ின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு உலக சுகாதார தலைவர்கள் விருதை உலக சுகாதார நிறுவனம் வழங்கிப் பாராட்டியிருக்கிறது.
இவ்வளவு சிறப்பு மிக்க ஆஷா திட்டத்தை கதைக்களமாக வைத்து ஆஷா திரைப்படத்தை தயாரித்த அதன் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I feel a profound sense of pride and emotional fulfillment after watching the Marathi film Asha, which powerfully portrays the life and service of an ASHA health worker. I was moved to tears seeing a full-length feature film based on an initiative that began as a public health mission during my tenure as the Union Health Minister of India.
The ASHA (Accredited Social Health Activist) initiative was conceived and launched under the National Rural Health Mission (NRHM) on April 12, 2005, as the world’s largest public health programme. It was built on a clear political vision — to democratize healthcare, decentralize service delivery, and empower rural women as the backbone of India’s public health system. It was not merely a scheme; it was a social revolution in rural healthcare.
When we initiated this mission, the challenges were enormous. Rural India faced high maternal and infant mortality rates, limited access to institutional deliveries, and inadequate awareness of preventive healthcare. Over the past two decades, India has witnessed a historic transformation, with the maternal mortality rate reduced by nearly 60% and the infant mortality rate reduced by nearly 80%. These are not mere statistics; they represent lakhs of saved mothers and children, and stronger families across rural India.
Today, there are more than 10 lakh ASHAs working tirelessly across the country. They serve as the first point of contact between our healthcare system and rural communities. They are trusted companions for pregnant women, guardians of newborn health, facilitators of immunisation, and champions of nutrition and sanitation awareness.
The global community has also recognised their extraordinary contribution. In 2022, the World Health Organization (WHO) conferred the Global Health Leaders Award on India’s ASHA workforce, recognising their outstanding service in advancing public health, strengthening community outreach, and playing a critical role during the COVID-19 pandemic.
ASHA workers have become the face of grassroots governance. They are the bridge between the government and the people. They embody the spirit of inclusive development and women-led empowerment.
Watching this transformative journey portrayed on screen was not just emotional , it was deeply personal. I vividly remember the long hours we spent over several months, conceptualising this mission, refining every detail, within the walls of Nirman Bhavan, New Delhi. I wholeheartedly congratulate the writer, director, producer, and the entire cast and crew of the film Asha, now streaming on Amazon Prime Video, for bringing national attention to the silent warriors of our healthcare system. This film is a tribute to India’s grassroots democracy in action.
Let this film remind us that visionary public policy, backed by political will and sustained commitment, can truly change the destiny of a nation.