ஏழைத் தாயின் மகன் என வாய்ச்சவடால் பேசிவிட்டு, மாளிகை வாழ்க்கையும், மணிக்கு ஒரு ஆடையும் என சொகுசு வாழ்க்கை வாழும் ஆட்சியாளர்களைத் தான் இன்று பார்க்கிறோம்!
இருவர் கூட வசதியாக படுப்பதற்கு வழியில்லாத வீடு, தொடர்ந்து மூன்று நாட்கள் வயிராற உண்ண இயலாத வாழ்க்கை சூழல், சொர்ப்பமான கோதுமை உணவிற்காக தன் கவச ஆடையை அடைமானம் வைக்கும் நிலை என மக்களில் ஒருவராக, எளிய வாழ்க்கையை வாழ்ந்த தலைவர் தான் முஹம்மத்(ஸல்)!
#ThePerfectLeaderMohamed
https://t.co/EXsNL1rg1x
திரைக்கவர்ச்சியில் வீழும் இளைஞர்களை தங்களது அரசியல் இலாபத்திற்காக சினிமா கூத்தாடிகள் பயன்படுத்தும் அவலம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது!
ஒழுக்கத்தின் உறைவிடமாய், நீதியின் முழுவடிவாய், மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வை படித்துப் பார்த்து, திரைக்கவர்ச்சியின் மாயையிலிருந்து வெளியே வா இளைஞனே!
#ThePerfectLeaderMohamed
முற்போக்கு எனும் பெயரில் LGBTQ என்கிற கலாச்சார சீரழிவிற்கு அங்கீகாரம் வழங்கி, ஆட்சியாளர்களாக அவர்களை பணியமர்த்தி(!), மக்களின் மனங்களை மடைமாற்றும் வேலையை மேற்கத்திய உலகம் செய்கிறது.
ஆணும் பெண்ணும் இணையும் மன வாழ்வே இயற்கை மரபின் வழி. இதற்கு அப்பாற்பட்ட எவ்வித உறவும் மனிதகுலத்திற்கு எதிரானது என மக்களை எச்சரித்து, ஒழுக்கக் கேட்டிற்கு வழிவகுக்காத ஆட்சியை நடத்தியவர் தான் முஹம்மத்(ஸல்)!
#ThePerfectLeaderMohamed
https://t.co/say7dIZeL1
எவ்வித மனித மாண்பும் இல்லாமல், கொடூரமான செயல்கள் போர் எனும் பெயரில் அமெரிக்காவினாலும், இஸ்ரேலினாலும் இன்று நடத்தப்பட்டு வருகிறது!
சர்வ பலமும் பெற்று, எதற்கும் அஞ்சாத படையை கொண்டிருந்த முஹம்மத்(அலை) அவர்கள், போரில் கடைபிடித்த மனிதநேயமென்பது எந்த ஆட்சியாளரும் செய்திடாத செயல்! இவரை பார்த்து பாடம் கற்க வேண்டும் இன்றைய ஆட்சியாளர்கள்!
#ThePerfectLeaderMohamed
இன்று சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் பல தீமைகளை களைய இயலாமல் ஆட்சி நடக்கிறது!
ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த முஹம்மத்(ஸல்) அவர்களோ - மது, தீண்டாமை, வட்டி போன்ற சமூக தீமைகளை அடியோடு ஒழித்து மாபெரும் சமூகப் புரட்சியையே நடத்திக் காட்டினார்கள்.
#ThePerfectLeaderMohamed
பிஹார் மாநிலம் நலந்தாவில் கடைக்கு சென்று வந்த பெண்ணை தேவையில்லாமல் சந்தேகப்பட்டு, சாலை நெடுக இழுத்து சென்று அப்பெண்ணை பலரும் சேர்ந்து மானபங்கப்படுத்தி, நெற்றியில் குங்குமம் வைத்து, வலுக்கட்டாயாமாக திருமணம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது சைக்கோ கும்பல்.
தனக்கு திருமணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ளன என்று கூறியும், இந்த கொடுமைகளை செய்துள்ளனர். மீண்டும் மணிப்பூர் சம்பவவத்தை நினைவுபடுத்துகிறது இந்த காணொளி.
இரண்டு பேர் மட்டுமே கைதாகியுள்ள நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டு அதிகபட்ச தண்டனை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். பிஹாரில் பாஜகவின் நிழல் ஆட்சி நடக்கும் போதே இந்நிலை என்றால், முழுமையாக ஆட்சி மாற்றம் அமைந்தால் பெண்களின் பாதுகாப்பு மேலும் மோசமடையும்!
https://t.co/EF5dEqZsfO
FCRA சட்டத் திருத்தத்தின் மூலம் சிறுபான்மை சமூக மக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு கட்டமைகப்பட்ட கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நிறுவனங்கள் என அனைத்தையும் சட்டரீதியாக அரசே சுருட்டி கொண்டு கார்ப்பரேட்களுக்கு கொல்லைப்புறமாக தாரைவார்க்கும் முயற்சி கொண்டுவரப்பட உள்ளது.
வக்ஃப் திருத்த சட்டத்தின் மூலம் சங்பரிவார சிந்தனை கொண்டவர்களை வக்ஃப் சொத்தின் நிர்வாகத்தில் புகுத்தி, பிரச்சினைகளை உருவாக்குவதற்கு பதிலாக, சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களை ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில், முறைகேடு நடந்துள்ளது என்று அறிக்கை வெளியிட்டுவிட்டு, உரிமைத்தை பறித்து, மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய ஒன்றிய அரசு இறங்கியுள்ளது.
அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்த சட்டம் கொண்டு வர துப்பில்லாமல், NGO க்களை முடக்கி சிறுபான்மையினரை மேலும் நசுக்கும் இந்த முயற்சியை அனைவரும்
கடுமையாக எதிர்க்க வேண்டும்.
https://t.co/P8iBuYBXzc
ஜம்மு காஷ்மீரில் ஜூலை 1997 ஆண்டு கூர்கா ரெஜிமெண்ட் படையால் பிடித்து செல்லப்பட்ட அப்துல் வாஹித் வானி என்ற இஸ்லாமியரை சிறையில் வைத்தே இராணுவ அதிகாரி மேஜர் V.P.யாதவ் கொலை செய்துள்ளார்.
கொல்லப்பட்டவரின் எந்த தடையங்களும் கிடைக்காத நிலையில் சட்டரீதியான அனுமானத்தின் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின் வானி கொல்லப்பட்டுள்ளார் என
ஸ்ரீநகர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
1989 முதல் இன்று வரை J&Kல் சுமார் 8000-10000 பேர் வரை காணாமல் போயுள்ளனர். தங்களின் கணவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமலேயே 1500-2500 பெண்கள் அரை விதவைகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கெல்லாம் நீதி கிடைக்குமா?
https://t.co/WHmdY6ywtY
மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராம் தொகுதியின் மொத்த மக்கள் தொகையில் 25% பேர் முஸ்லிம்கள் உள்ளனர் . ஆனால், SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களில் 95% பேர் முஸ்லிம்களாக உள்ளனர் என ஆராய்ச்சி நிறுவனமான Sabar Institute அறிக்கை வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் மம்தா பேனர்ஜி இத்தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் மீண்டும் வெற்றியை பெறுவதற்கு முஸ்லிம்களின் வாக்குகளை நீக்கும் வேலைகள் சட்டரீதியாக நடந்துள்ளது. மேற்குவங்க மக்கள் விழிப்புடன் வாக்களிக்க வேண்டும்.
https://t.co/kVTLEvGH6X
மணிப்பூரில் ஏப்ரல் 7, 2026 நடந்த குண்டுவீச்சில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டு அவர்களது தாய் காயமடைந்த சம்பவம், பெரும் அதிர்வை ஏற்படுத்தியதை அடுத்து மக்களின் கொந்தளிப்பான போராட்டம் வெடித்துள்ளது.
பாதிப்புகள் வெளி உலகிற்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, செய்திகள் வெளியே கசியாத வண்ணம் அரசு நிர்வாகம் வேலை செய்கிறது.
பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் மணிப்பூரின் நிலை மோசம் அடைந்துள்ளது.
https://t.co/ZRKldWHAvV
தன்னை எதிர்ப்பவர்களை விட ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டால், நினைத்ததை எல்லாம் சட்டமாக கொண்டுவரலாம் என்ற போக்கில் தொகுதி மறுவரை சட்டத்தை தான்தோன்றித்தனமாக அமல்படுத்த ஒன்றிய அரசு முனைந்து தோற்றுப்போனது.
மதீனாவில் முஹம்மத்(ஸல்) ஆட்சி செய்த காலங்களில், யூதர்கள் தன்னை எதிர்த்தார்கள் என்ற போதும், அவர்களை ஓரம்கட்ட சட்டம் போட்டு, அவர்களுக்கான உரிமைகளை பறிக்கும் வேலையை நபிகள் நாயகம்(ஸல்) ஒரு போதும் செய்ததில்லை.
#ThePerfectLeaderMohamed
https://t.co/grhk0igPRg