TVK already has voter ID data of its members.
We must cross-check our database with the draft/deleted lists, identify missing supporters, and help them re-enroll.
This cannot be left to individual voters.
Everyone knows the SIR numbers and deadlines.
What’s missing is action.
TVK already has voter ID data of its members.
We must cross-check our database with the draft/deleted lists, identify missing supporters, and help them re-enroll.
This cannot be left to individual voters.
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்!
அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது என்பதை இந்தச் சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகும், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலையீட்டிற்குப் பிறகும் தான் காவல் துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்பதை நாடறியும்.
இந்த ஆட்சியின் போது நடந்த பல்வேறு காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.
அஜித்குமார் காவல் மரண வழக்கில் காவல் துறையினரே கொலைக் குற்றவாளிகள் என்பதால், இதனைத் தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது. எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போலவே இந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்.
இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
NH-77 Chengam (Kariyamangalam)Toll plaza,TN-25 N0740 TVM/TVM2 bus stopped at more dhan 1hr for no money in Fast tag 🏷️
Passenger pay his own money 💵
@arasubus whether the govt has no money to pay for toll,kindly ensure this won’t happen again.
@NHAI_Official stop this shit.
இன்னைக்கு விஜயோட அரசியலுக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்க விஜயகாந்த் சாரும் ஒரு முக்கிய காரணம்.
இந்த இரண்டு திராவிட கட்சிகளும் மூணாவதா ஒரு சக்தி உருவாகிட கூடாதுன்னு விஜயகாந்த் மேல கட்டின குடிகார பட்டம் கிராமம் வரை சென்றடைந்தது
காமெடி ஷோகளில் விஜயகாந்தின் மிமிக்ரி கூட குடிகாரர் போன்ற வாய்ஸில் தான் செஞ்சார்கள்.
திராவிட கட்சிகளின் பணம் அவர் கூட நடித்த நடிகர்களையே அவர்களுக்கு எதிராக பேச வைத்தது
மனதில் பட்டதை அப்படியே கேட்கக்கூடிய அப்படியே செய்யக்கூடிய வெள்ளந்தியான ஒரு மனிதரை இரு திராவிட கட்சிகளின் அடிமையாக இருந்த மீடியா திரும்பத் திரும்ப அவரை காமெடியனாக ஒரு கோமாளியாக காட்டியது.
அதை பார்த்து பார்த்து மக்களுக்கும் அது பழகிப் போய்விட்டது. உண்மையில் அவர் ஒரு குடிகாரரோ என்ற எண்ணமும் அவர்களுக்குள் வந்துவிட்டது.
இது தேர்தலில் எதிரொலித்தது அரசியலில் தோற்றார் உடல் நலம் சரியில்லாததால் அரசியலில் இருந்தும் இல்லாமல் ஆகினார்.
திடீரென்று ஒரு நாள் அவர் இறந்த பொழுது தமிழ்நாடு மக்களுக்கு அதிர்ச்சி. ஆம் ஒரு நல்லவர் இறக்கும்பொழுது தான் அவர் செய்த நல்லவைகள் மட்டுமே ஞாபகம் வரும் என்று கூறுவார்கள்.
அதுபோல் அவர் இறந்தவுடன் அவர் செய்த நன்மைகளும் திராவிட கட்சிகளால் நாம் எவ்வாறு கோமாளியாக்கப்பட்டோம் என்ற உண்மையும் தமிழ்நாடு மக்களுக்கு புரிந்தது.
கடைசியாக அவரைப் பார்க்க எங்கெங்கோ இருந்து இதுவரை கண்டிராத ஒரு இமாலய கூட்டம் திரண்டது.
இந்த திராவிட கட்சிகளின் சூழ்ச்சியால் ஒரு நல்ல மனிதரை கிண்டல் செய்து தோற்கடித்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி இன்னமும் நிறைய மக்களிடம் உள்ளது.
அதன் பிறகு மக்களிடம் ஒரு தெளிவு ஏற்பட்டது இனிமேல் எக்காரணத்திற்கொண்டும் இந்த மீடியாக்கள் கூறுவதையும் திராவிட கட்சிகள் கூறுவதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பக் கூடாது என்று.
அதனால் தான் இன்று விஜய் மீது எந்த விமர்சனம் வைத்தாலும் பாமர மக்கள் முதலில் கூறுவது விஜயகாந்த் போல் இவர் மீதும் அவதூறு பரப்புகிறார்கள் என்று.
அவர்கள் விஜய்க்கு வாக்களிப்பார்களா இல்லையா என்பது இரண்டாம் பட்சம் ஆனால் அவரைப் பற்றி ஒரு எதிரிமறை கூற்றை வைக்கும் பொழுது கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல் விஜயகாந்த் போன்று இவருக்கும் செய்கிறார்கள் என்ற சிந்தனை அவர்களுக்குள் வருகிறது.
அதனால்தான் திராவிட கட்சிகளால் அவர்களுடைய கட்சி ஆட்களை தவிர விஜயை பற்றிய எந்த ஒரு புதிய எதிர்மறை செய்தியையும் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை
மூன்றாவதாக ஒரு கட்சி வந்தால் தான் என்ன என்று இளைஞர்களுடன் சேர்ந்து நடுத்தர வயது மக்களும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
உண்மையில் அரசியலிலும் தளபதிக்கு கேப்டன் ஒரு முன்னோடியாக ஒரு வழிகாட்டியாக இருந்துள்ளார்
நன்றி கேப்டன்... மூன்றாவதாக ஒரு கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்ற உங்களின் கனவை தளபதி நிச்சயம் நிறைவேற்றுவார் 🙏🙏🙏
#TVKVijay @TVKVijayHQ
#தமிழகவெற்றிக்கழகம்
சில கேள்விகள்.
1. அக்யூஸ்டை பேட்டியெடுத்து (யார் எடுத்திருந்தாலும்) அந்த காணொலியை சமூக வலைதளத்தில் பரப்ப @News18TamilNadu க்கு மற்றும் @NewsTamilTV24x7 க்கு யார் அதிகாரம் தந்தது?
2. இந்த வீடியோவை எடுத்தது காவல்துறையா அல்லது நியூஸ் சேனலா? எப்பொழுது எடுத்தார்கள்? அக்யூஸ்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் முன் அவரது வாக்குமூலம் ஏன் சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது?
3. அக்யூஸ்டுடைய உறவினர்கள் எந்த கட்சியிலிருந்தால் என்ன? அது இந்த கேஸுக்கு எந்த வகையில் அவசியம்?
4. கட்சிக்கொடி, அதுவும் ஆளும் கட்சிக்கொடி மாட்டிக்கொண்டு போனால் டோல் கட்டணம் செலுத்தாமல் போகலாம் என்று சொல்கிறார் இவர். அப்படியென்றால் எல்லோரும் கட்சிக்கொடியை மாட்டிக்கொண்டு போகலாமா? முக்கியமாக, திமுகவில் இருப்பவர்கள் சுங்கக்கட்டணம் செலுத்துவதில்லையா? @sivasankar1ss@nitin_gadkari ?
5. எந்த கட்சிக்கொடி என்பது இங்கு பிரச்சனையா அல்லது இவர்கள் செய்தது பாலியல் சீண்டல், தண்டிக்கத்தக்க செயல் என்பது பிரச்சனையா? அப்படி பேட்டி எடுத்தாலுமே கேள்விகள் அவர்கள் செய்த செயலைப்பற்றி அதன் நோக்கத்தைப்பற்றி இருக்க வேண்டுமா அல்லது கேள்விகள் அரசியல் கட்சித் தொடர்புகள் பற்றியிருக்க வேண்டுமா? பெண்களுக்கு தொல்லைகொடுத்த இந்த நபர்களது செயல்களை @NCWIndia கண்டிக்கிறதா?
6. அக்யூஸ்டு அதிமுக பிரமுகரின் உறவுக்காரர் என்பதால் அதிமுக மேல் குற்றம் சொல்கிறார் @RSBharathiDMK அவர்கள். அப்பொழுது அண்ணா பல்கலைக்கழகம் அக்யூஸ்டு ஞானசேகரன் @Subramanian_ma அவர்களுடன் புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு சில நிகழ்ச்சிகளில் கூட இருந்ததாக சொல்லப்படுவதால் மட்டுமே திமுகவிற்கும் குற்றத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?
7. இந்த நபர் இந்த காரை யாருக்காகவோ சரிசெய்து கொடுப்பதற்காக தன்வசம் வைத்திருந்ததாகச் சொல்கிறார். சரிசெய்து கொடுக்க எடுத்த காரை இவர் தனது பர்ஸனல் யூசுக்கு ஏன் பயன்படுத்த வேண்டும்? அதுவும் வேலண்டைன்ஸ் டேக்கு கொடைக்கானல் போவதற்கு?
8. வேலண்டைன்ஸ் டே பிப்ரவரி 14. சம்பவம் நடந்தது ஜனவரி கடைசி வாரத்தில். கொடைக்கானல் டூருக்காகத்தான் கொடி கட்டினார்கள் என்றால் 15 நாட்கள் முன் ஏன் கட்டவேண்டும்?
9. இவன் வண்டியை ஓட்டிச்சென்றதாகத் தெரிகிறது. சந்தோஷ் என்பவன் தான் விரட்டச்சொல்லியிருக்கிறான். அவனை கைது செய்தாகிவிட்டதா? அல்லது இந்த சந்துரு மற்ற அனைவருக்கும் பலியாடாகிறானா? @tnpoliceoffl
மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்
2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமார வரவேற்கிறேன். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல் / டீசல் வரிக் குறைப்பு மற்றும் GST வரிக் குறைப்பு / எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
முதல்முறையாகத் தொழில்முனைவோராக உருவாகும் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளடங்கிய முதல் 5 லட்சம் பேர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உளமார வரவேற்கிறது.
அதே சமயம் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
குறிப்பாக, சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வாயிலாக இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
புதிய ரயில் தடங்கள், சாலைகள், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற தமிழ்நாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்த ஓர் அறிவிப்பும் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் மிகத் தொன்மையான இரும்பு நாகரிகம் இருந்தது அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கின்ற கண்டுபிடிப்பாகும். இதற்கு உரிய அங்கீகாரமும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதியும் வழங்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
அணுஉலை மின் உற்பத்தி PPP (Public Private Partnership) மூலம் தனியார் மயமாக்கப்படுதலுக்கு இந்த நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வழங்கி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் அணுமின் உற்பத்தி தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
Asset Monetization வாயிலாகப் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், ஒரு சில பெரும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விடுமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போதும், சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது மற்ற மாநிலங்களையும் அந்த மாநில மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒன்றிய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது.
அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை.