இவர்களெல்லாம் பொறக்கும்போதே ஆங்கிலப் புலமையோட பொறத்தாங்களாமாம்? குழந்தைகளை கூட்டமாக போயி முற்றுகையிட்டு அச்சுறுத்தி பெரிய ஆளுனு காட்டிக்கிறதுல என்ன பெருமை இருக்கு. நாங்க படிக்கும்போது இருந்த பேச்சு மொழி ஆங்கிலப்புலமையை விட இப்ப இருக்க அரசுப்பள்ளி மாணவர்களின் பேச்சு மொழி ஆங்கிலப் புலமை நல்ல முன்னேற்றம் தான். விசிலுக்கு குத்திய அரசுப்பள்ளி ஆசியர்களுக்கு இந்த அவமானம் தேவைதான்.
எந்த ஒரு அரசும் பொறுப்பேற்றப்பின் தன் துறைகளை விட்டுக்கொடுக்காது. இந்த செயலுக்கு முதல்வர் மாதிரி சொல்லணும்னா வாய்ல நல்லா வருது…
🔴ஒரே நாளில் ஆன்லைனில் அனுமதி கொடுத்த 1,000 தனியார் பள்ளிகளுக்கு ஆள் சேர்க்க - //அரசுப் பள்ளி தரமற்றவை// என குழந்தைகளின் பெற்றோரை மைண்ட் செட் பண்ணுவதற்காக - தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இப்படிச் செய்தாரா?!
Abilash Chandran அவர்களின் பதிவு 👇🏽
🔴அமைச்சர் கீர்த்தனாவின் முன்னெண்ணமும் திமிரும்
அமைச்சர் கீர்த்தனாவின் காணொளி ஒன்றைக் கண்டேன். அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன் காமிரா டீமுடன் ஆய்வுக்குப் போய் ஒரு வகுப்பறைக்குள் நுழைகிறார். மாணவிகளைக் காட்டுவது, கீர்த்தனாவிடம் மிட் ஷாட், குளோஸ் அப், லாங் ஷாட் என காமிரா பாய்ந்து பாய்ந்து படம் பிடிக்கிறது. கீர்த்தனாவிடம் ஏற்கனவே ஒரு திரைக்கதை இருந்தது தெரிகிறது - அவர் ஒரு மாணவியை அழைத்து அவரிடம் உள்ள பாடநூலில் இருந்து ஒரு ஆங்கில வார்த்தைக்குப் பொருள் கேட்கிறார். மொத்த மாணவர்களும் பதிலளிக்கிறார்கள். ஓக்கே என்று இன்னொரு சொல்லை எடுக்கிறார். சற்று நேரம் அமைதி நிலவுகிறது. பார்த்தீங்களா என்றவாறு கீர்த்தனா ஆங்கில ஆசிரியைப் பார்க்கிறார். முதல் வரிசைப் பெண் குழந்தை எழுந்து அதற்கு ஒருவாறு பதில் சொல்கிறார். இப்போது கீர்த்தனா தன் திரைக்கதையில் இருந்து விலக விரும்பாமல் "இப்படி புத்தகத்தில் உள்ளதை மட்டும் படிச்சு பதில் சொன்னா போதாது. ஸ்போக்க இங்கிஷ் தெரியுமா?" என்கிரார். அப்பெண் குழந்தை தயங்குகிறது. அதான் சொல்றேன் எனும் கணக்கில் பேசிவிட்டு கீர்த்தனா அடுத்து அக்குழந்தையிடம் "வாட் இஸ் யுவர் பாதர்" என்று கேட்கிறார். குழந்தை விழிக்கிறது. உடனே கீர்த்தனா மீண்டும் "பார்த்தீங்களா? ஸ்போக்கன் இங்கிலிஷ் தெரியல" என்கிறார். ஆசிரியை வந்து "தைரியமா பேசும்மா" என்று அக்குழந்தையை ஊக்கப்படுத்தி விட்டு "வாட் இஸ் யுவர் பாதர்ஸ் புரொபஷன்?" என்று கேட்கிறார். அக்குழந்தை உடனே சொல்கிறார். அவருக்கு ஒரு தன்னம்பிக்கை வந்து எந்தக் கேள்விக்கும் தயார் எனும் கணக்கில் நிற்கிறார். உடனே கீர்த்தனா குறுக்கிட்டு "இதெல்லாம் சரிங்க. ஆனால் பின் வரிசையில் இருப்பவர்களிடம் கேட்டால் ஒருத்தருக்கும் பதில் தெரிஞ்சிருக்காது." என்று சொல்லிவிட்டு பேச்சு ஆங்கிலத்தை முன்னேற்ற வேண்டிய அவசியம் பற்றி உரையாற்றுகிறார்.
அமைச்சர் கீர்த்தனா செய்தது சுத்த அயோக்கியத்தனம் - அந்த மாணவர்களைச் சரிவர சோதிக்காமல் அவர்களுடைய கல்வியில் ஒரு இடைவெளி (learning gap) இருப்பதாக அவரே ஒரு முன்முடிவுக்கு வந்து தன் திடீர் ஆய்வில் அதைக் கண்டுபிடித்ததாக காமிராவில் பதிவு பண்ணி அக்குழந்தைகளை அவமதிக்கிறார். இதை அவரால் ஒரு தனியார் பள்ளியில் போய் செய்ய இயலுமா? லதா ரஜினிகாந்தின் பள்ளிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களிடம் உங்களுக்கு அறிவு போதவில்லை என்று கூற முடியுமா? ஒரு தொழில்துறை அமைச்சருக்கு இத்தகுதி எங்கிருந்து வருகிறது? மேலும், ஒரு வகுப்பில் எல்லா மானவர்களும் சமமான ஆற்றலுடன் இருக்க இயலாது. தனியார் பள்ளிகளிலும் கூட இப்படித்தான் இருப்பார்கள். எல்லாருக்குமான கல்வியை அளிப்பதையே differentiated instruction என்கிறார்கள். பலவிதமான மாணவர்களை அடையாளம் கண்டு தனித்தனியாக கவனம் செலுத்தி முன்னேற்றுவது. எல்லா மாணவர்களையும் ஒரே போல பாவிப்பது அல்ல. கல்வியல் மட்டுமல்ல காமன் சென்ஸே இல்லாதவராக அமைச்சர் இருக்கிறார்.
நான் ஒரு ஆசிரியராக அங்கு இருந்திருந்தால் மாணவர்களை இப்படி காமிரா முன்னால் அவமதித்து ஊக்கமிழக்கச் செய்யக் கூடாது என்றும், அதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்லி இருப்பேன். ஏனென்றால் ஒரு வகுப்பில் ஆசிரியருக்கு உள்ள இறையாண்மை கேள்விக்கு அப்பாலானது. அடுத்து பேச்சு ஆங்கிலத்தை மேம்படுத்த வேண்டுமெனில் அதற்கு ஒரு தனி ஆசிரியரை நியமித்து அதற்கென ஒரு பாடத்திட்டத்தைத் தயார் பண்ண வேண்டும். அதற்கென நேரத்தை ஒதுக்க வேண்டும். அதற்கென்ன நடைமுறைகள் உள்ளன. சும்மா வந்து ஆங்கில ஆசிரியரை மிரட்டினால் ஒன்றும் நடக்காது. அடுத்து, ஒரு வகுப்பறைக்குள் இப்படியான ஆய்வுகளைக் காணொளியாகப் பதிவு பண்ணுவது ஒரு அத்துமீறல். மாணவர்களை இது கடுமையாகப் பாதிக்கும்.
அரசுப் பள்ளிகள் குறித்து தவெக அமைச்சர்கள் கொண்டுள்ள தாழ்வான எண்ணத்தையே இது காட்டுகிறது. தனியார் பள்ளிகளில் மட்டுமே மாணவர்கள் படிக்கிறார்கள், அரசுப் பள்ளிகளில் தரமற்ற கல்வியே உள்ளது எனும் கீழான எண்ணத்தையே அவர் அங்கு நிறுவ முயல்கிறார். பள்ளியை மேம்படுத்த முயன்றதாக பாவிப்பது ஒரு பாசாங்கு மட்டுமே. அவரது உடல்மொழியில் தென்பட்டது திமிர்த்தனம், நடத்தையில் தெரிந்தது கல்வி குறித்த அறிவீனம்.
ஒரே ஒரு விசயத்துக்காக கீர்த்தனாவைப் பாராட்ட வேண்டும் - அவர் மாணவர்களிடம் விஜய் பாடல்களுக்கு நடனமாடச் சொல்லவில்லை.
🔴 அபிலாஷ் சந்திரன்
தனியார் மயமாகும் படைப்பகங்கள்
மாணவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் பயனளிக்கும் "படைப்பகங்கள்" கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன
அதன் success பார்த்த தனியார் நிறுவனங்கள் அவர்களது Co Working Spaces Business ஐ இந்த படைப்பகங்கள் பாதிப்பதாக சொல்லி வந்தார்கள்.
இப்போது அந்த படைப்பகங்களை தனியார் மயமாக்கும் பணிகள் தொடங்கி இருக்கின்றன
இப்போதைய ஆளும் #தவெக அரசுக்கான பெரிய ஆதரவு இளைஞர்களிடம் இருந்து தான் வந்தது. இந்த படைப்பகங்களின் பயன் என்ன அதை தனியார் மயமாக்கினால் என்ன பாதிப்பு என்பது எல்லாம் நம்மை விட அதிகமாகவே அவர்கள் அறிந்திருப்பார்கள்
அரசின் இந்த முடிவை அவர்கள் வரவேற்கிறார்களா விமர்சிக்கிறார்களா என்பதில் இருக்கிறது அவர்களது நேர்மை!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மட்டுமல்ல,ஊத்தங்கரை MLA-இளையராஜாவும் எங்கேயோ ஓடி ஒளிந்து கொண்டுள்ளார் போல 😊
எந்தவொரு வழக்கின் விசாரணையாக இருந்தாலும் தரவுகள் தான் முதல் கட்டம்
அதுவே அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கான படியாக மாறும்
ஆட்சிக்கலைப்பு சதி வழக்கில்
காவல்துறை கைப்பற்றியுள்ள தரவுகள்
கற்பாறைகளா ? முட்டை ஓடுகளா ? என்பது
விரைவில் தெரிந்து விடும்
"MLA பதவியை ராஜினாமா செய்ய வைப்போம்"ன்னு வெளிப்படையா பேசுற தவெக மாவட்ட செயலாளர். 😳
வீடியோ வெளியே வந்தாச்சு...
இப்போ பாருங்க... இந்த செய்தியை திசை திருப்ப,
"DMK 🤝 ADMK கூட்டணி"ன்னு ஒரு புதிய கதை கிளப்பி முட்டு கொடுக்க வருவாங்க. 🤦🏻♂️
ஆட்சியை கலைக்க சதி என்ற தவெக MLA இளையராஜா புகார் தொடர்பாக FIR பதிவு செய்யப்பட்ட தேதி 30-06-2026
நாள் செவ்வாய்க்கிழமை
நேரம் 19:00 மணி
அதே நாள் இரவு 2:30 மணிக்கு
“தினமுகம்” மாத இதழ் நடத்தி வரும்
ராஜேஷ் வீட்டிற்கு
சாதாரண உடையில் சென்ற 3 போலீஸார் உளவுத்துறை எனக்கூறி
வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளனர்
ஏதோ ஒரு சமூக நலக்கூடத்தில்
2 தினங்கள் வெறுமனே அமர்த்தி
எந்த கேள்வியும் கேட்காமல்,
விசாரணையும் நடத்தாமல் வியாழக்கிழமை இரவு போலீஸார் ரிமாண்ட் செய்துள்ளனர்
உண்மையில் கைது செய்யப்பட்ட ராஜேஷ் எனக்கு யாரென்றே தெரியாது..
இவ்வளவு பெரிய விவகாரத்தில் சாதாரண ஒரு மாத இதழ் நடத்தும் நபர் எப்படி சம்மந்தப்பட்டிருக்க முடியும் என்ற வியப்பில் தான் விசாரிக்க தொடங்கினேன்
ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாக யாரையோ சந்திக்க நாடார் பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பை நடத்தும் ஸ்ரீனிவாசனோடு 26-06-2026 அன்று கிண்டியில் உள்ள Ramada நட்சத்திர ஹோட்டலிலுக்கு ராஜேஷூம் சென்றுள்ளார்
Hotel Lobby-யில் அவர்கள் அமர்ந்திருக்கும் CCTV வீடியோவை கைப்பற்றிய போலீஸார்
அந்த ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்
இந்த வழக்கை AC அல்லது Inspector லெவல் அதிகாரி விசாரிப்பார் என்று நினைத்தேன்..
ஆனால் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஒருவரே விசாரணை நடத்துவதாக தெரிகிறது
போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள ராஜேஷ் நடத்தும் மாத இதழின் ஜூன் வெளியீட்டின் முன்பக்க படத்தை பாருங்கள்…
அதேபோல அந்த இதழில் கைதாகியுள்ள ஸ்ரீனிவாசன் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விளம்பரமும் வெளியாகியுள்ளது
இவர்களை தான் ஆட்சிக்கலைப்பு சதியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது @chennaipolice_
இந்த வழக்கு மிகவும் வலுவான வழக்காக
எனக்கு நிச்சயம் தோன்றவில்லை
15 நாள் முன்னாடியே நடந்து இருக்கு, இப்பவும் கட்சிகாரங்களே கேஸ் கொடுக்கவும் தான் விஷயம் வெளியே தெரிஞ்சுருக்கு.
அந்தளவுக்கு ரகசியமா திருட்டு வேல பாக்குறானுங்க.
அவர் தெளிவாகத்தான் பேசியிருக்கிறார் … அதற்கு விளக்கமும் அளித்திலுக்கிறார் !
ஆனால் அவர் பேசியதை வேணும்னே சாதிய ரீதியாத திரித்து அவதூறு பரப்பி இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுத்த முயற்சி செய்யும் இவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க @CMOTamilnadu ?!
அப்புறம் அவர் கேட்ட கேள்விக்கு ஏன் நீங்க பதில் சொல்லவில்லை ? SRM ல என்ன நடந்துச்சு @RameshOffcl ?! 🤪
ராஜினாமா செய்ய சொல்லி தனக்கு மிரட்டல் விடுப்பதாக தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் மீது கோவில்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி புகார்
இதே போன்ற புகாரை தான் திமுகவினர் மீது தமிழக வெற்றி கழகத்தினர் முன்வைத்திருந்தனர். இதற்காக திமுகவினர் கைது செய்யப்பட்டது போல தமிழக வெற்றிக் கழகத்தினர் கைது செய்யப்படுவார்களா எனவும் எம் எல் ஏ கேள்வி