14வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துதல், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களை அழைத்து பேசி தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும். (1/2)
அதை விட்டுவிட்டு வெளியிலிருந்து அனுபவமில்லாத தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் உயிரோடு விளையாடக் கூடாது. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்.(2/2)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 3.03.2021 முதல் 10.03.2021 வரை தலைமைக்கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தை மீட்டெடுத்திடவும் அம்மா அவர்களின் உண்மையானஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திடவும் வரும் தேர்தலில் தீயசக்தியான திமுகவை தலையெடுக்கவிடாமல் செய்திடவும் அம்மா அவர்களின் உண்மை தொண்டர்களாகிய நாம்அனைவரும் ஒற்றுமையோடு இருந்து செயல்படுவோம்3/3
கொரோனா கால வழிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து, தியாகத்தலைவி சின்னம்மா அவர்களுக்கும் உங்கள் அன்புச் சகோதரனாகிய எனக்கும் எவ்வித அவப்பெயரும் ஏற்படா வண்ணம் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றிட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். (2/3)
தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள், வருகிற 7.2.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழக எல்லையில் இருந்து சென்னை வருகிற வரை வழி நெடுக அவர்களுக்கு அளிக்கப்படுகிற வரவேற்பை, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் இன்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.(1/3)