உங்க கனவு இல்லம் வாங்க இதவிட நல்ல இடம் கண்டிப்பா கிடைக்காதுங்க!🤯🤯🤯🤯🤯🤯🤯 Tiruppur Perumanallur!🏡🤩🤩
For contact
96008 75832
97891 84926
To more videos follow❤️
#tirupur#dreamhome#viral#trending#explore
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#CMJosephVijay
தவறான தகவல் @DinakaranNews
நேற்று வெண்கலமூர்த்தி நகர் கோயில் திருவிழாவிற்கு சென்றபோது மக்கள் பல மாதங்களாக குடிநீர் இல்லாமல், நிலத்தடி நீரும் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் கடும் பாதிப்பில் இருப்பதாக கூறினார்.
உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி இன்று காலை குடிநீர் பைப்புகளை சீர் செய்யும் பணிகளை துவக்கப்பட்டு, குழாய்கள் சீர்செய்யும் பணி முடிவடையும் வரை தற்காலிகமாக அரசு சார்பாக குடிநீர் விநியோகிக்கும் பணிகளை துவங்கி வைத்து மக்களிடமும் தெரிவித்து விட்டு வந்தோம்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நாளை (01.06.2026) திங்கள்கிழமை, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்
(ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்),
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
இன்று (29.05.2026) தலைமைச் செயலகத்தில் 45 அரசு உதவி வழக்கறிஞர்கள் (நிலை–2) மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் @CMOTamilnadu அவர்களின் உத்தரவின் பெயரில் வழங்கப்பட்டது.
புதியதாக நியமனம் பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மூடப்படும் முறைகேடான குவாரிகள் !
இத்தனை ஆண்டுகாலம் தமிழ்நாடு எப்படி சுரண்டப்பட்டிருகிறது என்பதற்கு உதாரணம் பல்லடம் கல்குவாரி.
5 லட்சம் கன மீட்டருக்கு அனுமதி வாங்கிவிட்டு, 25 லட்சம் கனமீட்டருக்கும் அதிகமாக குடையப்பட்டிருக்கிறது பூமித்தாயின் அருள் மடி.
வெற்றிக்கழக அரசு அமைந்ததும் மின்னல் வேகத்தில் இந்த குடைசல் கொள்ளை ஒழிக்கப்பட்டிருக்கிறது.
மூடப்பட்டது கல் குவாரி மட்டுமல்ல, நம் மண்ணின் ரத்தத்தை அறுத்தெடுத்து அதை நம்மிடமே ஓட்டுக்குப்பணமாக கொடுத்த அரசியலும் தான்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.5.2026) புதுதில்லியிலிருந்து சென்னை திரும்புவதற்கு முன்பாக தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
#CMJosephVijay
தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் உரிய தெளிவுரை வழங்கக் கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர்
திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.05.2026)வழங்கிய கடிதம்.
#CMJosephVijay
மதுரை மாவட்டம் சூலப்புரத்தில் கடந்த 26.05.2026 அன்று ஏற்பட்ட இடிமின்னல் தாக்குதலில் 3 பெண்கள் உயிரிழந்ததும், காயமடைந்ததும் மிகுந்த வேதனையளிக்கிறது. முதல்வர்அண்ணன் @CMOTamilnadu அவர்களின் உத்தரவின் பேரில் இச்சம்பவத்தில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை இன்று (27.05.2026) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து. மேலும், அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, தேவையான சிகிச்சைகளை விரைந்து வழங்குமாறு அறிவுறுத்தபட்டது.
மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை இன்று (27.05.2026) புதுதில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay