5/6
காதலென்பது உடுப்பைக் கிழிக்கும் பூனை... ஏனென்று கேட்டால் உள்ளத்தையும் கிழிக்கும்...
இதோ மன்மதன் நான் வருகிறேன்... அதைமுன்னிட்டு எங்கெங்கும் கேட்கும் வரிகள் என்னவோ, "யோக்கியர் வருகிறார் செம்பை எடுத்து அகத்தே இடுங்கள்!" என்பதே!
காதல் அத்தியாயம் முற்றிற்று...
4/6
ராப்பாடியின் கட்டியமும் கசப்பாய்த் தெரியும் காதலுண்ட கன்னியர்க்கு... பூவோடு சேர்ந்த நாரும் நாறியதைப் போல, ராப்பாடியோடு சேர்ந்த வாதைகளுக்கும் உறக்கமில்லை...
நாய்கள் குறைத்துக் கொண்டே திரிந்தாலும் உடுக்கையொலி கேட்காவிடில் அந்த இரவு விடியாது...