திமுக மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் இவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த வீடியோவை சொல்லப்படும் அனைத்தும் உண்மையாய் அல்லது பொய்யா என்று விளக்கம் நீங்கள் @svembu கூற வேண்டும்.
பெண் பாதுகாப்பு போதைப்பொருள் விவகாரம்
இந்தியாவுலேயே ஸ்டாலின் ஆட்சியில்தான் தமிழ்நாட்டில்தான் கம்மியாக இருந்தது
மோஷமாக இருந்தது என்று கட்டமைத்தது எல்லாம் விஜய் சொன்ன பொய்
இன்னிக்கு கூட்டணில இல்லாதனால பொய் சொல்ல மாட்டேன்
வெட்ட வெளிச்சத்திற்கு வந்த அமைச்சர்களின் குடுமிப்பிடி சண்டை!
த.வெ.க அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் அமைச்சர் கீர்த்தனா இடையிலான அப்பட்டமான மேடை மோதல், இந்த ஆட்சியின் அவலத்தை அப்படியே தோலுரிக்கிறது.
மக்களுக்கு யார் அதிக நல்லது செய்வது என்று இவர்கள் போட்டிப் போட்டிருந்தால்
அது போதைப்பொருள் இல்லையாம்.. குழந்தைக்கு குடுக்க மாத்திரைய crush பண்ணாராம்... அங்க குழந்தையே frame ல இல்லங்குறது இருக்கட்டும்.. குழந்தைக்கு கொடுக்க மாத்திரைய போன்ல வச்சிதான் crush பண்ணுவீங்களா சார்?? அதுவும் ATM கார்டு வச்சி line போட்டுதான் குழந்தைக்கு மாத்திரைய குடுப்பீங்களா சார்? அதுவும் கைல 500ரூ நோட்ட வச்சிகிட்டுதான் குழந்தைக்கு மாத்திரைய குடுப்பீங்களா சார்??
தூய்மை பணியாளர் நிரந்தரம் பண்ணாத சாபம் தான் DMK வை இந்த நிலைக்கு தள்ளியது
சொன்னது @TheBluePen25
இப்போ என்ன சொல்ல போறாங்க 🤣🤣
Anyways
போராடி மாற்றம் வேணும்னு ப்ரோபகாண்டா பண்ணின ஆட்கள் நிலைமை
இன்று ஜீரணிக்க முடியாத ஒரு செய்தி. எனது அரசியல் ஆசான் தோழர் மகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது.
ஆழ்ந்த வாசிப்பாளர், கொள்கைப் பற்றாளர் , தத்துவ நோக்கில் தடம் பிறழாமல் பயணித்தவர் என்ற பார்வையில் அவரை தரிசித்த எனது கண்களை நானே இன்று நொந்துக் கொண்டேன்.
எந்த தத்துவமும் கொள்கையும் அற்ற ஒரு கூட்டம் வெறும் ரசிக மனப்பான்மையை மூலதனமாக வைத்து தமிழக ஆட்சி பீடத்தை பிடித்தது என்பது நம் தலைமுறையில் நிகழ்ந்துவிட்ட, அண்ணன் சீமான் சொல்வது போல அரசியல் பேரிடர்.
உண்மையில் தத்துவங்களும் இசங்களும் பொய்யாக்கப்பட்டு , வெறும் கவர்ச்சி மேலோங்குவது என்பது மிகப்பெரிய ஆபத்தான எதிர்காலத்தை உருவாக்கும்.
இந்த விபரங்கள் எல்லாம் தோழருக்கு சொல்லி புரிய வேண்டியவை அல்ல. அவருக்கு நன்றாக தெரியும். ஆனாலும் அவர் எடுத்த இந்த முடிவு அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய பிம்ப அழிப்பு. ஒரு வகையான தற்கொலை.
ஏன் இந்த தற்கொலை நடந்திருக்கிறது என யோசித்துப் பார்த்தால்.. உண்மையில் பல்வேறு காரணங்கள். இனி கொள்கை அரசியல் இந்த மண்ணில் எடுபடாது என அசலான கொள்கைகளை வாழ்க்கை முறையாக கொண்டவர்களே சிந்திக்க தொடங்கி விட்டார்கள் என பார்க்கும் போது அச்சமாக இருக்கிறது.
உதிரிக் கூட்டமாக மாறிவிட்ட தமிழ்ச் சமூகத்தில் இனி தத்துவங்களையோ கொள்கைகளையோ நம்பி பயணிக்க முடியாது என தோழர் மகேந்திரன் முடிவு எடுத்தது அவரையெல்லாம் முன்மாதிரியாக கொண்டு பயணிக்க துடிக்கிற எனக்கு எல்லாம் பெரும் அதிர்ச்சி.
மக்களுக்கு நல்லது செய்வது தானே கொள்கை.. எனப் போகிற போக்கில் அடித்து விடுவதற்கு அங்கே ஏற்கனவே ஏராளம் பேர் இருக்கிறார்கள். ஆனால் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் ஆழப் பயின்ற தோழர் சி மகேந்திரன் அந்தக் கூட்டத்தின் நடுவே என்ன செய்யப் போகிறார் என்று நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது.
என்னுடைய முகம் மட்டும் தான் என்னுடைய மூலதனம் என்று வெளிப்படையாகவே கவர்ச்சியை சொல்லி அரசியலில் நிற்கிற
விஜய்க்கு எதிர் முனையில் தான் தோழர் எல்லாம் நின்று இருக்க வேண்டும்.
ஆனால் காலம் கருணையற்ற கொலைகாரன் அல்லவா..
இறுதியாக எங்கள் தோழரையும் அந்தக் காலம் கொன்றுவிட்டது.
ஒரு வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது எனக்கு கடுமையான வருத்தம். இப்படிப்பட்ட மனிதர்களை எல்லாம் ஜனநாயகம் அற்ற , குழு அரசியலை சார்ந்த உட்கட்சி அரசியலால் வெளியேற்றியதன் விளைவு, கொள்கையை பார்க்காமல் போகிற போக்கில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டதன் பலன்.. தோழர் சி மகேந்திரன் போன்றவர்கள் இடம் மாற தொடங்கி இருக்கிறார்கள்.
எனக்கு அதிமுக விஜயபாஸ்கர் போன்றவர்கள் இடம் மாறுவது குறித்து எந்த விதமான அதிர்ச்சி மதிப்பீடும் இல்லை. ஆனால் தோழர் சி மகேந்திரன்
மாறியது உண்மையில் எனது தலைசிறந்த ஆசிரியரை எவ்விதமான அறமும் இல்லாத இந்த கும்பல் மனப்பான்மை சமூகத்தின் முன்பாக வைத்து பலி கொடுத்து விட்டது போல உணர்ச்சி.
இப்படி எல்லாம் கீழே உருண்டு பிரண்டு தத்துவமற்ற நிலையில் தன்னை தள்ளிக் கொண்டு ஒருவகையில் தற்கொலை செய்து கொண்டு எதற்காக இந்தக் கேடுகெட்ட அரசியலில் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் மனது யோசிக்க தோன்றுகிறது.
தோழர் நல்லகண்ணு அவர்களின் மனதிற்கு மிக நெருக்கமான அவரது மாணவரான தோழர் சி மகேந்திரன் இன்று இடம் மாறி இருக்கும் காட்சி.. நல்ல வேளை, மாமனிதர் நல்லகண்ணு உயிருடன் இல்லை என்பதை நமக்கு ஆறுதலாக தெரிவிக்கிறது.
ஆழ்ந்த இரங்கல் தோழர்.
வருத்தத்துடன்..
மணி செந்தில்.
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 1000 வாக்குகள் கூட இல்லாத ம.தி.மு.க.எனும் நொண்டி குதிரையை தூக்கி சுமக்கும் நிலை இனி தி.மு.க.தொண்டனுக்கு இல்லை என்பதே எங்களுக்கு மகிழ்ச்சி.
The DMK has announced that it will not participate in the INDIA bloc meeting in New Delhi on June 8, marking a setback for the opposition alliance.
#DMK#INDIABloc
தி.மு.க கற்றுக்கொள்ள வேண்டிய ஒட்டன்சத்திரம் மாடல்!
தி.மு.க ஒரு CASE STUDY செய்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அது ஒட்டன்சத்திரம் அர. சக்கரபாணியிடம்தான்.
"அமைச்சராக இருந்ததால் ஜெயித்தார்" என்று இதை எளிதாகக் கடந்து போக முடியாது. ஏனென்றால் அதே அரசாங்கம், அதே அமைச்சரவை, அதே கட்சி, அதே தலைமை இருந்தபோதும் பல இடங்களில் கடுமையான போட்டிகள் உருவாகின. சில இடங்களில் எதிர்பாராத பின்னடைவுகளும் ஏற்பட்டன. ஆனால் ஒட்டன்சத்திரத்தில் மட்டும் அர. சக்கரபாணி 43,249 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு சுற்று கூட பின்னடையாமல் வெற்றி பெற்றிருக்கிறார்.
இதில்தான் அரசியலின் மிகப்பெரிய பாடம் இருக்கிறது.
"அப்படியென்றால் முதல்வர் ஸ்டாலின் ஏன் தோற்றார்? தன் கட்சியை தக்கவைக்கவில்லையா?" என்று சிலர் கேட்கலாம்.
அதற்கு பதில் மிகவும் எளிமையானது.
ஒரு கட்சித் தலைவரின் பொறுப்பு மாநிலம் முழுவதையும் வழிநடத்துவது. ஆனால் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் முதல் பொறுப்பு தனது தொகுதி மக்களின் நம்பிக்கையை வெல்வது.
ஒரு தலைவர் மாநிலம் முழுவதும் சுற்றி வேலை செய்கிறார். ஒரு அமைச்சர் தன் துறையையும் கவனிக்கிறார். ஆனால் ஒரு தொகுதியின் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் தனது இருப்பை உணர வைப்பது அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வின் கடமை.
அதனால்தான் சில நேரங்களில் பெரிய அரசியல் அலைகள் உருவாகலாம். பிரபலங்கள் வரலாம். புதிய அரசியல் சக்திகள் எழலாம். ஆனால் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சிலர் மட்டும் அசையாமல் நிற்பார்கள்.
அர. சக்கரபாணியின் வெற்றி அப்படிப்பட்ட ஒன்று.
1996முதல் தொடங்கி தொடர்ந்து ஏழு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது சாதாரண அரசியல் சாதனை அல்ல. ஒரு முறை வெற்றி பெறலாம். இரண்டு முறை வெற்றி பெறலாம். ஆனால் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மக்கள் மீண்டும் மீண்டும் வாய்ப்பு தருகிறார்கள் என்றால் அது கட்சியின் வெற்றி மட்டும் அல்ல; அவர் சம்பாதித்த மக்கள் நம்பிக்கையின் வெற்றி.
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் உண்மையான பலம் தேர்தல் நேரத்தில் தெரியாது. தேர்தல் முடிந்த பிறகு ஐந்து ஆண்டுகள் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதில்தான் தெரியும்.
தொகுதி மக்களுடன் தொடர்ச்சியான தொடர்பு, அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி கவனம், அரசு திட்டங்களை கொண்டு சேர்ப்பது, அணுகக்கூடிய தன்மை, எளிமை, நிர்வாக திறன் — இவை அனைத்தும் சேர்ந்தால்தான் ஒரு தொகுதி கோட்டையாக மாறும்.
ஒட்டன்சத்திரம் இன்று அப்படிப்பட்ட ஒரு அரசியல் கோட்டையாக இருக்கிறது.
எதிர்க்கட்சியினர் அரசியலை விமர்சிக்கலாம். கொள்கைகளை எதிர்க்கலாம். ஆனால் "இந்த மனிதர் தனது தொகுதிக்காக உழைக்கவில்லை" என்று சொல்ல முடியாத நிலையை உருவாக்கியிருப்பதே அர. சக்கரபாணியின் மிகப்பெரிய பலம்.
அதனால்தான் இது ஒரு தனிநபரின் வெற்றி அல்ல.
இது ஒரு அரசியல் பாடம்.
மேகதாது அணை கட்ட எந்த தடையும் இல்லை. கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel