திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி கேள்வி கேட்டால் பீகாரை பாரி, உத்தரப்பிரதேசத்தை பார் என்று கை காட்டி தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் உண்மையாக அவர்கள் ஒப்பீடு செய்ய வேண்டியது கடந்த அதிமுக ஆட்சியோடு தான். மற்ற விவகாரங்களில் கடந்த அதிமுக ஆட்சியை மேற்கோள் ��ாட்டும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர், தங்களுக்கு பாதகமான இடங்களில் வடமாநிலங்களுக்கு ஓடிவிடுவார்கள்.
எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறிப்பாக பட்டியிலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்ஸோ வழக்குகள், கஞ்சா மற்றும் போதை மருந்த�� கடத்தல் தொடர்பான வழக்குகள், இந்த குற்றங்களை அதிமுக ஆட்சி vs திமுக ஆட்சி என்று வருட வாரியாக டேட்டா கொடுத்திருக்கிறேன். அனைத்தும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் இருந்து எடுக்கப்பட்ட டேட்டா. தமிழக காவல்துறை பதிவு செய்த எப் ஐ ஆரின் அடிப்படையில் NCRB வெளியிட்ட தரவுகள் என்பதால், தாராளமாக வெறுப்பை செய்து கொள்ளலாம். அதாவது திராவிட மாடல் ஆட்சியின் பெருமை பேசும்போதெல்லாம், "ஒன்றிய அரசு கொட���த்த புள்ளிவிபரத்திலேயே" தமிழகம் நம்பர் ஒன் என்று பீற்றிக்கொள்கிறார்களே, அதே போல் இதுவும் மத்திய அரசுடைய புள்ளிவிபரம் தான்.
முக்கியமாக மத்திய அரசு நேரடியாக தமிழகத்தில் ஆய்வு செய்து எந்த டேட்டாவையும் எடுப்பதில்லை. மாநில அரசுகள் தரும் தரவுகளை ஒருங்கிணைத்து வெளியிடுவது மட்டுமே மத்திய அரசின் பணி. அதனால் இந்த தரவுகளும் தமிழக காவல்துறையில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் தான�� எடுக்கப்பட்டது.
பட்டியிலினத்தை சேர்ந்தவர்கள் மீதான வன்கொடுமை வழக்குகள்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பட்டியிலினத்தை சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்��ள் அதிகரித்திருக்கிறது என்று எவிடென்ஸ் கதிர் உள்ளிட்ட பல சமூக செயல்பாட்டாளர்களும் கதறி வருகிறார்கள். ஆனாலும் ஆட்சியாளர்கள் காதில் விழவில்லை. அதிமுக ஆட்சி என்றால் பட்டியலின காவலர்கள் என்று வேஷம் போடும் போலி சமூக நீதி போராளிகள், திமுக ஆட்சியில் காணாமல் போய் விட்டார்கள். பட்டியலின மக்களுக்காக படம் எடுக்கும் புரட்சி இயக்குனர்கள் கூட இதை பற்றியெல்லாம் பேசாமல், ஆட்சியாளர்களிட���் நெருக்கமாக இருப்பதற்கே விரும்புகிறார்கள். பட்டியலின மக்களின் தலைவன் என்று சொல்லக்கூடிய திருமா போன்றவர்களுக்கு, இதை பற்றியெல்லாம் பேசவே நேரம் கிடைப்பதில்லை.
இதில் மிகக்கொடுமையான விஷயம், சாதிய வன்கொடுமை வழக்குகள் கூட சாதாரண வழக்காக பதிவு செய்யப்படுகிறது. திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடும் என்பதற்காக, வழக்கு பிரிவையே மாற்றி பதிவு செய்கிறார்கள். அல்லது பல இடங்களில் ���ழக்கே பதிவு செய்வதில்லை.
அப்படி இருந்தும் 2024 ஆண்டில் 1939 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதிமுகவின் கடைசி ஆண்டில் 1297 ஆக இருந்த வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50% அதிகரித்திருக்கிறது. சமூகநீதி காவலர்கள் என்று தங்களை பறைசாற்றிக்கொள்ளும் திமுகவின் ஆட்சியில் ��ான் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பே இல்லை. அவர்கள் உரிமைகள் பறிக்கப்படுகிறது. திமுக ஆட்சியில் நடந்த லாக்கப் டெத் மரணங்களில் பெரும்பாலும் இறந்தது பட்டியலின மக்கள் தான். இவ்வளவு ஏன் விடுதலை சிறுத்தைகள் கொடிக்கம்பங்களை கூட நட முடியவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது விசிக கொடியை கூட அனுமதிக்கமாட்டார்கள் என்பது தான் திமுகவின் உண்மையான சமூகநீதி. ஆனால் திருமா இதைத்தான் விரும்���ுகிறார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொன்னால் குரல்வளையை கடிக்க வரும் ஜோம்பிக்கள், குற்றங்களின் எண்ணிக்கையை பார்க்கட்டும். சராசரியாக வருடத்திற்கு 2000 எண்ணிக்கையில் நடந்த குற்றங்கள் 2023-ல் 9000 என்ற எண்ணிக்கையை தொட்டிருக்கிறது. கூகிளிடம் கணக்கு கேட்டால் 341% குற்றங்கள் உயர்ந்திருக்கிறது என்கிறான். அதிலும் 2024 டேட்டா கிடைக்கவில���லை. தமிழக அரசு தான் சொல்லவேண்டும். இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது திமுக. உடனே பீஹார், உபி என்று ஓடுவார்கள். தமிழகத்திற்கான ஒப்பீடு என்பது கடந்த ஆட்சியும் இந்த ஆட்சியும் தான். இது 5 வருட டேட்டா கூட இல்லை. 3 வருட டேட்டா, திமுக ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்திருக்கிறது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்.
நினைத்துப் ப��ர்க்க முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை. இங்கும் 2024ம் ஆண்டுக்கான டேட்டா இல்லை. குற்ற எண்ணிக்கையை மறைத்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் ஒரு அரசு எப்படி குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும். வெறும் வாய்ச்சவடால் முதல்வருக்கு இந்த புள்ளிவிபரம் தெரியுமா? குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 538% அதிகரித்திருக்கிறது. இதற்கு ய��ர் பொறுப்பு.? வழக்கம் போல் பாஜகவை காரணம் காட்டி தப்பித்துக்கொள்வதை தவிர இந்த ஆட்சியாளர்களுக்கு வேறென்ன தெரியப்போகிறது.
போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கையை பாருங்கள். 2024-ல் 7000 எண்ணிக்கையை தொட்டு நிற்கிறது. அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் 3090. 225% அதிகரித்திருக்கிறது.
இதெற்கெல்லாம் அடிப்படை காரணம் கஞ்சா, போதை. வகைதொகையில்லாமல் திறக்கப்பட்ட மதுக்கடைகள். 24 மணி நேரமும் தங்குதடையில்லாம��் கிடைக்கும் மது. இதைவிட வேறு காரணம் இருக்க முடியுமா? ஏன் இவற்றை எல்லாம் தடுக்க முடியவில்லை. ஏனென்றால் இவையெல்லாமே ஆளும்கட்சியின் ஆசிர்வாதத்தோடு நடக்கிறது. சம்பந்தப்பட்டவர்களே ஆளும்கட்சி ஆட்கள் என்றால் காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த ஆட்சியில் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்பதை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறோம். தடியெடுத்தவன் தண��டல்காரன். திமுக ஆட்சி எப்போது வந்தாலும் இதுதான் நிலைமை. அந்தந்த மாவட்ட செயலாளர்களை மீறி கருணாநிதியாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. அவருக்காவது நடப்பது தெரியும். வேறுவழியில்லாமல் வேடிக்கை பார்த்தார். ஸ்டாலினுக்கு அதுவும் தெரியாது. தன்னுடைய ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடிக்கொண்டிருக்கிறது என்று உண்மையிலேயே கனவுலகத்தில் இருக்கும் முதல்வருக்கு இந்த புள்ளிவிபரங்கள் தெரிய வாய்ப்பே இல்லை.
கஞ்சா போதை மருந்து தொடர்பான குற்றங்கள் எண்ணிக்கையும் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்று பாருங்கள்.
அதிமுக ஆட்சியில் 2397 ஆக இருந்த எண்ணிக்கை திமுக ஆட்சியின் மூன்றே வருடங்களில் 10126. அதுவும் இந்த எண்ணிக்கை NCRB டேட்டாவில் இல்லை. பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட எண்ணிக்கை. திமுக ஆட்சியில் மொத்தமாக மறைக்கப்பட்டிருக்கிறது. கஞ்சா, போதை மருந்து கடத்தல் குற்றங்களை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு யார் பொறுப்பு. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று நினைக்கிறது திமுக.
விளைவு சாதிய வன்கொடுமைகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணமே கஞ்சா மற்றும் போதை தான். அந்த குற்றங்களும் வகை தொகையில்லாமல் அதிகரித்திருக்கிறது.
சரி இவையெல்லாம் குற்றங்கள். ஆனால் சமூகத்தில் நடக்கும் குழந்தை திருமணங்���ளை கூட இந்த ஆட்சியால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பது எவ்வளவு அவல��்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2015-2020 காலகட்டத்தில் மொத்தமாக 11553 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. 586 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
திமுக ஆட்சி வந்த பிறகு குழந்தை திருமணங்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. அதை தடுத்து நிறுத்துவதும் குறைந்திருக்கிறது. 2022-ல் 70% குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதுவே 2024-ல் 54% திருமணங்கள் தான் தடுக்��ப்பட்டிருக்கிறது. 2024-ல் மட்டும் 1640 குழந்தை திருமணங்கள் நடந்திருக்கிறது என்கிறது புள்ளிவிபரம். அதுவும் ஜனவரி முதல் நவம்பர் வரை மட்டுமே.
இந்த அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டது என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் தேவையா? கல்வியில் சிறந்த தமிழ்நாடு, வெல்லும் தமிழ் பெண்கள் என்று நண்டராக படிப்பவர்களை, வாழ்க்கையில் போராடி முன்னேறியவர்களையும் மேடையேற்றி அதற்கு நாங்கள் தான் காரணம் என்று ��ெருமைப்படுகிறார் முதல்வர். சரி, அதற்கு நீங்கள் தான் காரணம். இத்தனை குழந்தை திருமணங்கள் நடந்ததற்கு யார் காரணம்? இதையும் பாஜக மீதே எழுதிவிடலாமா?
நல்லது நடந்தால் நாங்கள் தான், எங்கள் மாடல் தான் என்று பீற்றிக்கொள்ள மட்டுமே முன்வரும் முதல்வர் இருக்கும் வரை, இந்த குற்றங்கள் குறையப்போவதில்லை. கெட்டது நடந்தாலும் பொறுப்பேற்க வேண்டும். அப்போது தான் தீர்வை நோக்கி நகர முடியும். ஆனால் இ��்த குற்றக்கணக்கை எப்படி மறைக்கலாம் என்று தான் திமுக யோசிக்கிறது. இதற்கு யார் மே��் பழி போடலாம் என்று காத்திருக்கிறது. அல்லது இது பற்றிய பேச்சை எப்படி மடை மாற்றலாம் என்று திட்டம் போட்டு செயல்படுகிறது. இதுவா ஒரு அரசுக்கு அழகு.
திமுக ஆட்சி என்பது ஒரு மாயை. எல்லாமே நல்லதே நடப்பது போல் கட்டமைக்கிறார்கள். மீடியா முழுவதையும் கைப்பற்றி வைத்துக் கொண்டு, ஆட்சியை பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமே மக்களிடம் சென்று சேர வேண்டும் என்ற திட்டம் போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ஏற்கனவே ஒருமுறை மக்கள் ஏமாந்தது போதும். இனியொருமுறை திமுக ஆட்சிக்கு வந்தால், இப்போது நமக்கு தெரிந்த தகவல்கள் கூட தெரியாது. ஏற்கனவே 2024,2025 டேட்டா கிடைக்கவில்லை.
திமுகவுக்கு ஓட்டு போட தயாரானவர்கள், திமுக தான் பெஸ்ட் சாய்ஸ் என்று முட்டு கொடுப்பவர்கள், மேற்கண்ட ஒப்பீடுக்கு பதில் சொல்லட்டும். இவையனைத்துமே உண்மை தரவுகள். சட்டம் ஒழுங்கில், பெண்கள் பாதுகாப்பில், குழந்தைகள் பாதுகாப்���ில் அதிமுக ஆட்சியை விடவும் திமுக ஆட்சி பின்தங்கி இருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் வைத்திருக்கிறேன். கஞ்சா, போதை மருந்து புழக்கத்திற்கு எந்த வித ஆதாரமும் தேவையில்லை என்றாலும், அதற்கு இங்கே ஆதாரம் இருக்கிறது.
திமுகவுக்கு ஆதரவளிப்பவர்கள் வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள், குழந்தைகள் இருக்கிறார்கள். நேர்மையாக மனசாட்சியுடன் ப���ில் சொல்லட்டும்.
மேற்கொண்ட தரவுகள் அனைத்தும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஏற்கனவே சொன்னது போல் NCRB க்கு டேட்டா கொடுப்பது மாநில காவல்துறை தான். தகவல்கள் அனைத்தும் chatgpt மூலம் சரிபார்க்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள். தாராளமாக வெரிபை செய்து கொள்ளலாம். தரவுகளில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் ஆதாரத்துடன் தெரிவிக்கும் பட்சத்தில் மாற்றிக்கொள்ள தயார��க இருக்கிறேன்.
படங்கள் உருவாக்கம் - Chatgpt
சன் டிவியில் சமீப���்தில் நடந்த ஒரு விவாதம். தமிழகத்தின் கடன் பற்றி பேச்சு வந்த போது, உடனடியாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று வாதம் செய்யப்பட்டது. இதை கேட்ட சுமந்த ராமன் "அப்படி எவ்வளவு தான் நிதி கொடுக்கனும், எத்தனை நாளைக்கு பொத்தாம் பொதுவா பேசிட்டு இருப்பிங்க, எவ்வளவு நிதி கொடுக்கணும், எந்தெந்த திட்டங்களுக்கு கொடுக்கணும்னு ஒரு லிஸ்ட் கொடுங்க" என்று கேட்டார்.
இந்த கேள்வியை தான் நான் நீண்ட க��லமாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த கேள்வியைத்தான் திமுகவை பார்த்து கேட்கவேண்டும். மத்திய அரசு எவ்வளவு தான்யா நிதி தரணும் என்று ஒரு அமவுண்டை திமுக சொல்ல வேண்டும்.
இதற்கு பதில் சொல்ல குறுக்கே புகுந்த ராஜீவகாந்தி வழக்கம் போல, கல்வி நிதி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், என வரிசையாக பட்டியல் போட்டாரே தவிர எவ்வளவு என்று சொல்லவில்லை. ஆனால் சுமந்த "எவ்வளவு கொடுக்கனு, ஒரு நம்பரை சொல்ல��ங்க " என்ற அந்த கேள்வியில் விடாப்பிடியாக இருந்தார். உடனே ராஜீவகாந்தி மெட்ரோ திட்டம், கோவை மெட்ரோ என உளற ஆரம்பித்தார். ராஜீவகாந்தி சொன்னதில் நாம் கவனிக்க வேண்டிய பாயிண்ட், " பட்ஜெட் மேனேஜ்மேண்ட் சட்டப்படி ��ீஹார், உத்தரப்பிரதேசத்துக்கு அதிகமாக கொடுக்கிறார்கள், தமிழகத்துக்கு குறைவாக கொடுக்கிறார்கள்" என்று உளறினார். அதுவும் பொய். காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் பீஹார், உத்தரப்பிரதேசங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
சுமந்த் விடாப்பிடியாக இந்த கேள்வியை கேட்டுக் கொண்டே இருந்த போது, அரங்கில் இருந்த ராமசுப்பிரமணியன் பதில் சொல்ல வந்தார். "தமிழக நிதியமைச்சர் 3 லட்சம் கோடி ரூபாய் மத��திய அரசிடம் இருந்து வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மேலும் ஜி எஸ் டி இழப்பு 20000 கோடி என்று சொல்லியிருக்கிறார் " இதை வாங்கி கொடுங்கள் என்று எகத்தாளமாக பேசினார். விவாதத்தை இங்கேயே கட் செய்வோம்.
சரி தங்கம் தென்னரசு இந்த தொகையை குறிப்பிட்டாரா என்றால், ஆமாம், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடன் சம்பந்தமாக கேள்விகள் எழுந்த போது பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதி பங்கீட்டு கணக்கில் மாற்றம் ஏற்பட்டதால் தமிழகம் இழந்த தொகை 2.63 லட்சம் கோடி என குறிப்பிட்டார். அதையும் ராமசுப்ரமணியம் தவறாகவே குறிப்பிட்டார்.
இந்த 2.63 லட்சம் கோடி என்ன கணக்கு? தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இவ்வளவு பெரிய தொகையை மத்திய அரசு கொடுக்கவில்லையா என்றால் அங்கே தான் சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன.
இந்த தொகை வராமல் போவதற்கு தங்கம் தென்னரசு சொன்ன கா��ணம் " 9வது நிதிகமிஷனில் 7.9%மாக இருந்த தமிழகத்துக்கான நிதிப்பகிர்வு, 15வது நிதிகமிஷனில் 4.08%மாக குறைந்து விட்டது" என்றார். அந்த குறைக்கப்பட்ட சதவிகிதத்தை தொகையாக மாற்றினால் வருவது தான் 2.63 லட்சம் கோடி. (சரி இதென்ன 7% 4% கணக்கு என்றால் அதற்கான விளக்கம் கீழே இருக்கிறது. )
9வது நிதிகமிஷன் இருந்த ஆண்டு 1989-1995
15வது நிதிகமிஷன் இருந்த ஆண்டு 2021-2026 (பார்க்க படம்)
8% ஆக இருந்த தமிழகத்தின் நிதிப்பகிர்வை 4%ம���க குறைத்து பாஜகவா? பாஜக ஆட்சிப்பொறுப்பில் வந்த பிறகா குறைக்கப்பட்டது. இல்லவே இல்லை. 2014- காங்கிரஸ் திமுக கூட்டணியில் தமிழகத்துக்கான நிதிப்பகிர்வு 4.9%மாக இருந்தது. 8% தில் இருந்து 5% ஆக குறைந்து போது மத்தியில் திமுக தான் ஆட்சியில் பங்கில் இருந்தது. அப்போதெல்லாம் இதைப்பற்றி திமுக வாய் திறந்து பேசியதே இல்லையே. தமிழகத்தின் நிதிப்பகிர்வை 3% குறைத்த போது மந்திரி பதவிக்காக காங்கிரசை மிரட���டி கொண்டிருந்ததே தவிர தமிழகத்தின் உரிமை என்று பேசியதே இல்லை.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 4.9%த்தில் இருந்து 4.08%மாக குறைந்திருக்கிறது. பாஜக அரசில் 1% மட்டுமே குறைந்திருக்கிறது. ஆனால் தங்கம் தென்னரசு மொத்த பழியையும் பாஜக மீது போடுகிறார்.
இன்றைய கேள்வி என்ன? தமிழகம் ஏன் இவ்வளவு கடன் வாங்குகிறது? இவ்வளவு கடன் வாங்கி என்ன செய்கிறீர்கள்? கடன் வாங்கி வட்டி கட்டினால், அது என்ன மாதிரியான நிதி நிர்வாகம்? என்பது தான் கேள்வி. ஆனால் தங்களுடைய கையாலாகாத்தனத்தை மறைத்துக்கொள்ள மத்திய அரசின் மீது பழி போடுகிறார் நிதியமைச்சர்.
அதுவும் எப்படி? நிதிகமிஷன் நிதிப்பகிர்வை குறைத்தால் தான் தமிழகம் கடன் வாங்க வேண்டியிருக்கிறது என்று சப்பை கட்டு காட்டுகிறார். அந்த வாதத்தை எடுத்து வைத்த ராமசுப்ரமணியனும், ராஜீவகாந்தியும், மத்திய அரசிடம் இதை வாங்கித்தர சுமந்த் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நக்கல் அடிக்கிறார்கள்.
1989-ல் இருந்து படிப்படியாக குறைந்து கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே 4%மாக நிலைபெற்றுவிட்டது. ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த திமுகவிடம் ஏனய்யா இவ்வளவு கடன் வாங்குகிறீர்கள் என்று கேட்டால் 30 வருட கதையை சொல்கிறார்கள். திமுகவே சொல்வது போல் தமிழகத்தின் நிதி உரிமையை காங்கிரஸ் அரசாங்கம் பறித்த போது, வாய் மூடி மவுனமாக உடன் இருந்தது திமுக தான். க��்சத்தீவு, மீத்தேன், மீனவர் பிரச்சினை, நீட் போல தமிழகத்திற்கு உரிய நிதி வராமல் போனதற்கும் காரணம் இதே காங்கிரஸ்+திமுக தான்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் கவனிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது மாநிலங்களுக்கான நிதிப்பங்கீடு (devoultion) 31% தான்.
Devoultion , Divisible pool போன்ற வார்த்தைகளை பற்றி தெ��ிந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசுக்கு கிடைக்கும் அனைத்து வரி வருமானங்களை ஒன்றாக இணைத்து, வருமான வரி, கார்ப்ரேட் வரி, எக்ஸைஸ் வரி, சிஜிஎஸ்டி என அனைத்து வரி வருமானத்தையும் இணைத்து அதில் மாநிலங்களுக்கு பங்கு தரவேண்டும். இதைத்தான் நிதிகமிஷன் செய்கிறது. இதற்கு பெயர் தான் Divisible Pool. பார்க்க படம்.
குஜராத் முதல்வராக மோடி அவர்கள் இருந்த போது, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் பிரதமரான பிறகு 31% என்பதை 42%மாக உயர்த்தியும் கொடுத்தார். எல்லாவற்றிலும் மோடியை பின்பற்றும் ஸ்டாலினும், நிதிப்பகிர்வை 50%மாக உயர்த்த வேண்டும் என்று சமீபத்தில் நடந்த 16வது நிதிகமிஷன் கூட்டத்தில் பேசினார் என்பது உப தகவல்.
Devolution Formula - சரி மாநிலங்களுக்கு 42% என்று முடிவாகி விட்டது. இதை எப்படி எல்லா மாநிலங்களுக்கும் பிரித்து கொடுப்பது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள்தொகை மாறுகிறது, நிலப்பரப்பு மாறுகிறது, இதையெல்லாம் கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டது தான் devoultion formula . (பார்க்க படம் ). ஒவ்வொரு மாநிலத்தில் மக்கள் தொகை, மக்களின் வருமானம், சூழலியல், நிலப்பரப்பு, வரிவிகிதம் இவற்றை கணக்கில் கொண்டு, எந்தெந்த மாநிலத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கலாம் என்பதையும் நிதிகமிஷனே முடிவு செய்யும். இதில் தான் தமிழகத்துக்கு 8%மாக இருந்த வரிப்பகிர்வு, 4%மாக குறைந்திருக்கிறது. பீஹாருக்கும், உபிக்கும் அதிகமான நிதிப்பகிர்வு கிடைக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இதே பார்முலா தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
என்னைப்போல கணக்கில் வீக்கானவர்களுக்கு இன்னும் கொஞ்சம் புரியும்படியாக விளக்கம்.
மத்திய அரசுக்கு 100 ரூபாய் வரி வருமானம் என்றால் அதில் 42 ரூபாயை மாநிலங்களுக்கு பிரித்தளிக்க வேண்டும் என்பது தான் Divisible pool . அந்த 42 ரூபாயிலிருந்து ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது தான் Devoultion Formula . மத்திய அரசுக்கு 100 ரூபாய் வரி வருவாய் என்றால் அதில் 58 ரூபாய் தான் அவர்களுக்கு. அதில் தான் இராணுவம், கடற்படை, விமானப்படை, இஸ்ரோ, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், சம்பளம் என அனைத்தையும் செய்கிறது. அது மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் சமூக நல திட்டங்களுக்கு��் பங்களிப்பு செய்கிறது என்பதையும் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.
மாநிலங்களை பொறுத்தவரை மாநிலத்துக்கென்று தனி வரி வருவாய் இருக்கிறது. அதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சரி இப்போது மீண்டும் தமிழக அரசின் கடன் மற்றும் வஞ்சிப்பு பிரச்சாரத்திற்கு வருவோம்.
மத்திய அரசுக்கு 30 லட்சம் கோடி வரி வருவாய் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் 41% (தற்போதைய வரிப்பகிர்வு ) 9.3 லட்சம் கோடி மாநிலங்களுக்கு பிரித்து தர வேண்டும். அந்த 9.3 லட்சம் கோடியில் தமிழகத்துக்கான பங்கு 49,200 கோடி ரூபாய். இதுவே காங்கிரஸ் ஆட்சி காலத்தி��் பார்முலாவாக இருந்தால், வரிப்பகிர்வு 5% ஆக இருந்த போதிலும் 46200 கோடி ரூபாய் தான் கிடைக்கும்.
ஆக காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தை விடவும் மாநிலங்களுக்கு அதிக நிதி கொடுப்பது மோடி தான் என்பது அப்பட்டமான உண்மை.
அப்படியிருக்க மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது, நிதி தர மறுக்கிறது, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்று திமுகவின் பிரச்சாரமெல்லாம் பாஜக வெறுப்பை இங்கே விதைப்பதற்காக செய்யப்படும் நாடகம் தான். மேலும் நிதி மேலாண்மையில், அரசு நிர்வாகத்தில் தங்களுடைய கையாலாகாத்தனத்தை மறைத்துக் கொள்வதற்காகவும் மத்திய அரசின் மீது பழி போடுகிறார்கள் என்பது தான் உண்மை.
இந்த கணக்குகள் பாமர மக்களுக்கு தெரியப்போவதில்லை என்பதால், மக்களின் அறியாமையை பயன்படுத்தி பொய்களை சொல்லி ஏமாற்றுகிறார்கள்.
இந்தியாவின் முன்னணி மாநிலங்கள் அனைத்திற்கும் மிகக்குறைவான வரிபகிர்வே தரப்படுகிறது. (பார்க்க படம் )
குஜராத் - 3.4%
மஹாராஷ்டிரா - 6.3%
கர்நாடகா - 3.6%
இந்தியாவில் பீஹாரும், உத்தரப்பிரதேசமும் தான் அதிக நிதிப்பகிர்வு மாநிலங்கள்.
பீஹார் - 10%
உத்தரபிரதேசம் - 18%
இது தான் இவர்கள் கண்ணை உறுத்துகிறது. இரண்டுமே பாஜக ஆட்சி என்பதால் திரும்ப திரும்ப உத்தரப்பிரதேசத்தை பார், பீஹாரை பார் என்று உதாரணம் காட்டுகிறார்கள். ஆனால் உண்மை என்ன. காங்கிரஸ் ஆட்சியிலும் பீஹ��ருக்கும், உத்தரப்பிரதேசத்துக்கும் அதிக நிதி வழங்கப்பட்டு வந்தது. அப்போதெல்லாம் திமுக வாயை திறக்கவே இல்லையே. நடந்து முடிந்த பீஹார் தேர்தலில் ஒருவேளை பாஜக தோற்று, இந்தி கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தாலும் பீஹாருக்கு 10% கிடைக்கும். வருகிற உபி தேர்தலில் இந்தி கூட்டணி ஜெயித்தாலும் அதே 18% தான் கிடைக்கும்.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதிபகிர்வு கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டு பொய்யானது. மேற்குவங்காளம் 7.5 % பெறுகிறது.
அதே சமய��் மத்திய அரசு தன்னுடைய நிதியை எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் செலவு செய்யும். இவர்கள் அதையும் குற்றம் சொல்கிறார்கள். மேலும் மத்திய அரசு தன்னுடைய நிதி ஆதாரத்துக்காக Cess , Surcharge வசூலிக்கிறது. அதிலும் மாநிலங்களுக்கு பங்கு வேண்டும் என்று எதிர்க்கட்சி மாநிலங்கள் கேட்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வரிப்பகிர்வு மட்டும் அல்லாமல் Grant in-aids என்ற பெயரில் எல்லா மாநிலங்களுக்கும் ந���தி ஆதாரத்திற்கு சப்போர்ட் செய்கிறது மத்திய அரசு. இவையில்லாமல் மத்திய அரசு திட்டங்களுக்கான தொகை தனி.
தமிழக அரசின் பட்ஜெட் டாக்குமென்ட படி சென்ற நிதி ஆண்டில் 2024-2025 நிதி ஆண்டில் மத்திய அரசு கொடுத்த நிதி மொத்தமாக 73,109 கோடி.
Grant in-aids - 23,354 கோடி
Central ஷேர் - 49755 கோடி.
அதுவே 2025-2026 நிதி ஆண்டில் 81,856 கோடி மத்திய அரசு கொடு��்கிறது.
Grant in-aids - 23,834 கோடி
Central ஷேர் - 58022 கோடி.
மோடி அவர்களின் வளர்ச்சி கொள்கைகளாலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் சிறப்பான நிதி நிர்வாகத்தாலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாநிலங்களுக்கு அதிக நிதி கிடைக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்துக்கு 1,54, 965 கோடி நிதியை மத்திய அரசு கொடுத்திருக்கிறது என்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டே சொல்கிறது.
இவ்வளவையு��் வாங்கி கொண்டு மத்திய அரசு நிதியே தரவில்லை என்று ஒப்பாரி வைக்கிறது திமுக. தங்களின் மோசமான நிர்வாகத்தை பாஜக மேல் பழி போட்டு மறைத்துக் கொள்கிறது திமுக. தங்களை நோக்கி வரும் கேள்விகளை தவிர்ப்பதற்காக பொய்களை மட்டுமே சொல்கிறது திமுக.
மக்களுக்கு இந்த உண்மைகளை கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால் பூனைக்கு மணி கட்ட போவது யார்.
இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் விபரங்களை chatgpt யிடம் கேட்டு பெறப்பட்டு வெரிஃபை செய்யப்பட்டவை. படங்கள் chatgpt மூலம் உருவாக்கப்பட்டவை. நீங்களே நேரடியாக chatgpt இடம் கேட்டு verify செய்து கொள்ளலாம்.
அதிமுகவின் பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 41% வாக்குகள் இருக்கிறது, 210 சீட் ஜெயிப்பது உறுதி என்று பேசியிருக்கிறார். தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசினார் என்றாலும் அதில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண்டும். எடப்பாடி பேசியதை பார்க்கும் போது அவர் ஏதோ ஒரு கற்பனை கோட்டையில் இருக்கிறாரோ என்ற சந்தேகம் தான் வருகிறது.
இந்த 41% கணக்கை அதிமுக பாஜக ���ூட்டணி முடிவான பிறகு சென்னை வந்த போது அமித்ஷா பேசினார். அன்றைய நிலையில் அது பொருத்தமாக இருந்தது. அதன் பிறகு இந்த கூட்டணியை தக்க வைக்க, பலப்படுத்த எடப்பாடியோ, அதிமுகவோ எதையுமே செய்யாமல் விட்டதால், ��பிஎஸ், டிடிவி இல்லை, இவர்களுக்கு வாக்கு வங்கியே இல்லை என்று தன்னை தானே தேற்றிக்கொண்டிருக்கிறது அதிமுக. ஆளுக்கு 1% என்று வைத்துக் கொண்டால் கூட 2% குறையும். தேமுதிக திரிசங்கு நிலையில் இருக்கிறது. இன்னொரு 2% குறையும். பாமக ரெண்டாக பிளந்து நிற்கிறது. அன்புமணி இந்த பக்கம் தான் வருவார் என்றாலும், விஜய் அவருக்கு ஒரு ஆப்ஷன். முன்னைப்போல 5% வாக்குகள் அப்படியே வருமா என்பது கேள்விக்குறி. பாமக��ுக்கு 1% வாக்குகள் குறைகிறது என்றே வைத்துக் கொண்டாலும், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக + பாஜக கூட்டணியாக வாங்கிய வாக்குகளில் இப்போதே 5% காணோம்.
மேலும் இந்த வாக்குவங்கியில் ஓட்டை போட விஜய் வந்து நிற்கிறார். அவர் அதிகமாக அதிமுக வாக்கு வங்கியை தான் குறி வைக்கிறார். விஜயின் வருகையால் அதிமுகவுக்கு தான் அதிக சேதாரம் என்பதை ஆரம்பம் முதலே சொல்லிக்கொண்டு வருகிறேன்.
ஆனால் இந்த கருத்துக்கு நேர்மாறாக விஜயால் திமுகவுக்கு தான் அதிக பாதிப்பு என்று சொல்வது தேர்தல் கருத்துக்கணிப்பாளர் ஜே வி சி ஸ்ரீராம். அவர் தான் அதிமுகவுக்கு அதிக வாய்ப்பு என்றும், அதிமுக முன்னிலை எடுக்கிறது என்றும் பேசி வருகிறார். கிட்டத்தட்ட அதே எண்ணத்தை எடப்பாடியும் பிரதிபலிக்கிறார் என்பதில் இருந்து, ஸ்ரீராம் டீமின் கருத்துக்கணிப்பை தான் எடப்பாடி நம்புகிறார் என்பது வெளிப்படை.
ஆனால் அவர் சொல்வது நடக்க வாய்ப்பில்லை என்பது என் கருத்து. இந்த கருத்தை தான் துக்ளக் இதயா அவர்களும் பிரதிபலிக்கிறார். விஜய் திமுக +அதிமுக என இரண்டு கட்சிகளில் இருந்தும் வாக்குகளை எடுத்தாலும் அதிக சேதாரம் அதிமுகவுக்கு தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார் இதயா.
அந்த வகையில் விஜயின் வருகையால் 5% அதிமுக இழக்���ிறது என்று வைத்துக்கொண்டாலும், எடப்பாடி சொன்ன கணக்கில் இருந்து 10% வாக்குகள் இப்போதே இல்லை. இன்றைய தேதியில் 41%-10% = 31% தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மையான பலம்.
இதை வைத்து 210 தொகுதிகளை அதிமுக வெல்லும் என்பதெல்லாம் பகல் கனவு. இதையெல்லாம் சொன்ன எடப்பாடி, இன்னும் வலிமையான கூட்டணி அமைப்போம் என்கிறார். கையில் இருக்கும் கூட்டணியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இனி கூட்டணிக்கு வர யார் இ��ுக்கிறார்கள்?
எடப்பாடியின் கணக்கை அப்படியே திமுக கூட்டணிக்கு பொருத்தி பார்த்தால், நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் 47% வாக்குகளை வாங்கினார்கள். இன்றும் அந்த வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது. அந்த கூட்டணியில் மேலும் யாரையாவது சேர்க்கலாமா என்று சிந்திக்கிறார் ஸ்டாலின்.
ஆண்டி இன்கம்பன்சி என்ற வகையில் 5% வாக்குகளை திமுக இழக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அதிமுகவை போலவே திமுகவில் ��ருந்தும் 5% வாக்குகளை விஜய் எடுத்துக்கொள்கிறார் என்று கணக்கு போட்டால், திமுக கூட்டணி 37% வாக்குகள���ல் இருக்கிறது. அப்போதும் அதிமுகவை விட 6% அதிகம். விஜயின் வாக்கு பிரிப்பால் 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்க 35-38% வாக்குகளை பெற்றாலே போதும் என்கிற நிலையில் திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெறும்.
எப்படி கணக்கு போட்டாலும் திமுக கூட்டணிக்கு அருகில் கூட அதிமுக வரவில்லை. எப்படி திமுக கூட்டணியை முந்துவது?
1996ம் ஆண்டு அதிமுகவுக்கு இருந்த ஆண்டி இன்கம்பன்சியை போல திமுகவுக்கு இருக்கிறது என்று ச��ல்கிறார் எடப்பாடி. களம் அப்படியில்லை என்பது உண்மை. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது என்கிற எண்ணம் மக்களிடம் இல்லை. மக்கள் இன்னுமே குழப்பத்தில் தான் இருக்கிறார்கள் என்பது திமுகவுக்கு அட்வான்டேஜ்.
திமுகவை தோற்கடிக்க முதலில் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும். அதுவும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து அரசியல் செய்ய வேண்டும். நான் தான் ஜெயலலிதா, ஒற்றை மனிதனாக நான��� திமுகவை வீழ்த்துவேன், எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்ற மனநிலையில் தான் எடப்பாடி இருக்கிறார்.
அதிமுக கூட்டணி அமைந்து 8 மாதங்கள் ஆகியும், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்து திமுகவுக்கு எதிராக ஒரு போராட்டமோ, ஆர்பாட்டமோ இதுவரை செய்யவில்லை. ஆனால் திமுக கூட்டணி வாரத்திற்கு ஒன்று செய்கிறது.
எத்தனை பிரச்சினைகள் இருக்கிறது. இந்நேரம் திமுக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் ஆளும்கட்சியை மண்டியிட வைத்திருக்கும். ஆனால் இங்கே எதிர்க்கட்சிகளின் குரல் கூட கேட்பதில்லை. இந்த லட்சணத்தில் 210 சீட் ஜெயிப்பார்களாம்.
எடப்பாடி தனியாக பிரச்சாரம் செய்கிறார், நயினார் தனி பிரச்சாரம், பிரேமலதா தனி, அன்புமணி தனி, ஓபிஸ் தனி, டிடிவி தனி, இவர்கள் தனித்தனியாக சுற்றுவார்களாம், தேர்தல் வரும் போது மக்கள் இவர்களுக்கு ஒற்றுமையாக ஒட்டு போட வேண்டுமாம்.
மக்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல.
உண்மையை நிலையை எடுத்துச்சொன்னால் அதிமுகவினரும் கோபம் வேறு வந்து விடும். எடப்பாடியை விமர்சிப்பதா என்று நம்ம திட்டுவார்கள்.
ஒருவேளை தேர்தலில் தோற்றுவிட்டால் பழிபோட அண்ணாமலை இருக்கிறார், பாஜக இருக்கிறது. அதற்கு இப்போதே தயாராக இருக்கிறது அதிமுக.
சிறுபான்மையினர் அப்பிஸ்மெண்ட் அரசியலை திராவிட இடது சாரிகள் ஓட்டுக்காக செய்கிறார்கள் என்று சொன்னாலும், ��ந்த தாஜா அரசியலை கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் விரும்புகிறார்கள் என்பது தான் உண்மை. ஒட்டுமொத்த அரசியலும் தங்களை சுற்றி நடக்க வேண்டும் என்று வெறியே அவர்களுக்கு இருக்கிறது. அதனால் தான் தங்கள் வாக்குகளை கிட்டத்தட்ட ஆயுதம் போல பயன்படுத்துகிறார்கள்.
எண்ணிக்கை அடிப்படையில் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி 6-8% மட்டுமே. கிறிஸ்துவர்களும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை தான். 2011 மக்கள் ��ொகை கணக்கெடுப்பின் படி சிறுபான்மையினர்கள் 13% தான். ஆனால் இங்கு அரசியலே அந்த 13% தை முன்வைத்து தான் நடைபெறுகிறது. இதைத்தான் சிறுபான்மையினரும் விரும்புகிறார்கள்.
அதிமுக ஆட்சியாக இருந்தாலும் அவர்களும் இஸ்லாமிய, கிறிஸ்துவ தாஜா அரசியலை தான் செய்கிறார்கள். ஆனாலும் இவர்கள் ஏன் திமுகவுக்கு மட்டும் வாக்களிக்கிறார்கள். திமுக ஆட்சி தான் வேண்டும் என்று போராடுகிறார்கள். ஏனென்றால் திமுக இந்து மதத்தை எதிர்க்கிறது, தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்கிறது. அதுவே கிறிஸ்துவர்களை, முஸ்லீம்களையும் தமிழர்கள் என்கிறது. தமிழன் வேறு வடக்கு வேறு என்கிறது. தொடர்ச்சியாக பிரிவினை பேசுகிறது. இன்று திமுகவோடு இருக்கும் அனைத்து கட்சிகளும் இதையெல்லாம் செய்கிறார்கள். அதற்காக தான் ஒட்டுமொத்த கிறிஸ்துவ, இஸ்லாமியர்களும் திமுகவுக்கு மட்டுமே ஓட்டு போட வேண்டும் என்று தெளிவாக இருக்கி���ார்கள்.
இதே தமிழகத்தில் பட்டியிலனத்தவர்களின் ஓட்டு வாங்கி 18%. இஸ்லாமியர்களுக்காகவும், கிறிஸ்துவர்களுக்காகவும் பதறி துடிக்கும் திராவிட இடது சாரி கட்சிகள் , ஒருநாளும் பட்டியிலனத்தவர்களுக்காக துடிப்பதில்லையே. தலித்துகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று கேட்பதில்லையே. வெறும் 6-8% இருக்கும் கிறிஸ்துவர்களின் விழாக்களில் கலந்து கொண்டு, அவர்களை தங்கள் கட்சியின் விழாக்களில் மேடையேற்றி, அவர்கள் கேட்பதற்கு முன்பே அனைத்தையும் கொடுத்து, நினைப்பதை எல்லாம் நிறைவேற்றி தந்து, இந்த ஆட்சியே நீங்கள் போட்ட பிச்சை என்று காலில் விழும் கட்சிகள், பட்டியிலினத்தவர்களை காலில் போட்டு மிதிக்கின்றனர்.
பட்டியினத்தவர்களை விடவும் குறைவான எண்ணிக்கை கொண்ட சமுதாயமான வன்னியர் சமூகத்துக்கு கிடைத்த, கிடைக்கின்ற முக்கியத்துவம், அரசியல் அதிகாரம் கூட இதுவரை பட்டியிலனத்தவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதில் இருந்தே இதில் உள்ள அரசியலை தெரிந்து கொள்ளலாம்.
5% வாக்கு வாங்கி கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற தேர்தலில் 25 இடங்களை கேட்டு பெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் 6 இடங்களை பெறுகிறது. ஆளும்கட்சியில் இருந்தால் கூட்டணி அமைச்சரவையில் கேபினெட் அந்தஸ்து அமைச்சர் பொறுப்பு பெறுகிறது. அதைவிட குறைவான எண்ணிக்கை கொண்ட சமூகங்கள் கூட அரசியல் அதிகாரம் பெற தவறுவதில்லை.
ஆனால் பெரும் எண்ணிக்கையிலான பட்டியலின சமூகத்தின் தலைவரான திருமா இதில் பாதியை கூட கேட்டு பெறுவதில்லை. இன்னும் கொடி ஏற்றுவதற்கு போராடுவதாக சொல்கிறார் என்றால் தவறு யார் மீது. பட்டியலின மக்களின் ஓட்டுகள் சிதறுகின்றன என்பது உண்மை தான். இது எல்லா சமூகத்துக்கும் பொருந்தும்.
இன்று பெரும் எண்ணிக்கையிலான பட்டியலின மக்கள் திமுகவை ஆதரிக்க, திமுகவுக்கு ஓட்டு போட திருமா தான் ஒரே காரணம். ஆனால் பட்டியலின மக்கள் எந்த அதிகாரத்தையும் பெற்று விடக்கூடாது என்பதில் தான் திருமா கவனமாக இருக்கிறார்.
அப்படியா��ால் இந்த கட்சிகளின் எண்ணம் ஒன்று தான். எந்த காரணம் கொண்டும் பட்டியிலினத்தவர்கள் அரசியல் அதிகாரம் பெற்றுவிடக்கூடாது என்பது தான் அது. அதற்காக தான் சிறுபான்மையினத்தவர்களை காண்பித்து அவர்களுக்கு ஏதோ மிகப்பெரிய பிரச்சினை இருப்பதை போல காண்பித்து ஒட்டுமொத்த கவனத்தையும் அவர்கள் மீது திருப்பி, பட்டியிலினத்தவர்களை எந்த வித அரசியல் அதிகாரமும் கிடைக்காமல் வைத்திருக்கிறார்கள். எந��த விதத்திலும் அவர்களை முன்னேறாமல் பார்த்துக் கொள்வது தான் இவர்களது திட்டம். அதற்கு வசதியாக தலித் எதிரியாக இங்குள்ள பெரும்பான்மை சமூகங்களையே கட்டமைத்து விடுகிறது. மேலும் இந்து மதமும், இந்துக்களும் தான் பட்டியிலினத்தவர்களின் எதிரி என்று தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்கிறார்கள்.
காரணம் அந்த 18% தலித் மக்கள் தான் மதம் மாற்ற கும்பலின் டார்கெட். அவர்கள் எப்போதும் ஏழ்மை நிலையில் இருந்தால் தான், இவர்களின் நோக்கம் நிறைவேறும். அவர்களுக்கு என்றுமே அரசியல் அதிகாரம் கிடைக்காமல் இருந்தால் தான் அவர்கள் மதம் மாறுவார்கள். இந்து மதம் தான் அவர்கள���ன் எதிரி என்று தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்தால் தான், அவர்கள் மாற்று மதங்களுக்கு செல்வார்கள்.
இன்று திருமாவளவனை கிறிஸ்துவ இஸ்லாமிய இயக்கங்கள் தூக்கி பிடிக்க காரணம், பட்டியலின மக்களை இந்து மதத்திலிருந்து வெளியேற்றும் வேலையை திருமா தலைமையேற்று நடத்துகிறார். இந்து மதத்தை, சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று வெளிப்படையாக சொல்கிறார்.
எல்லா புள்ளிகளையும் இணைத்து பார்த்தால் இவர்���ளின் பிரம்மாண்ட திட்டத்தை புரிந்து கொள்ளலாம்.
சிறுபான்மையினர் தாஜா அரசியல் என்பது வெறும் ஓட்டுக்காக மட்டும் அல்ல.
சிறுபான்மையினருக்கான தலித் மக்களும், தலித் செயல்பாட்டாளர்களும் குரல் கொடுப்பார்கள். ஆனால் அதுவே பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்டால் எந்த சிறுபான்மை சமூகமும் வரமாட்டார்கள். ஏனென்றால் தலித் மக்கள் பாதிக்கப்படுவதே திராவிட அரசியலால் தான். அவர்கள் பாதிக்கப்படவேண்டும், ஒடுக்கப்படவேண்டும், அவர்கள் உரிமைகள் பறிக்கப்படவேண்டும் அப்போது தான் அவர்களை மாற்று மதம் நோக்கி திருப்ப முடியும்.
இந்த அரசியல் தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. யாரெல்லாம் இங்கே இந்து மத எதிர்ப்பு பேசுகிறார்களோ அவர்கள் அனைவரும் பட்டியலின மக்களின் எதிரியாக தான் இங்கே பார்க்கப்பட வேண்டும்.
பாஜகவை பட்டியலின மக்களின் எதிரியாக கட்டமைக்க இங்கு தீவிர முயற்சிகள் நடக்கிறது. ஆனால் இந்தியா முழுவதிலும் பட்டியலின மக்கள் அரசியல் அதிகாரம் பெறுவது பாஜக ஆட்சியில் தான். சமூகநீதிக்கே பிறப்பிடம் என்று சொல்��க்கூடிய தமிழகத்தில் பட்டியலின தலைவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவி கூட கிடைப்பதில்லை. ஆனால் பாஜக பட்டியிலினத்தை சேர்ந்தவர்களை முதல்வர்களாகவே ஆக்கிவிட்டது. தமிழகத்திலும் பட்டியிலினத்தவர்களுக்கு அதிகாரம் கிடைக்கவும், பட்டியிலினத்தை சேர்ந்தவர் முதல்வர் ஆகவும் முடியும் என்றால் அது பாஜக ஆட்சியில் தான் சாத்தியமாகும். இது அப்பட்டமான உண்மை.
இடைநிலை சாதிகளும், பட்டியிலான வாக்குகளும் ஒன்று சேர்ந்தால் சிறுபான்மை வாக்கு வங்கி இல்லாமலே ஆட்சிக்கு வர முடியும் என்பதை ஜெயலிலதா சாதித்து காட்டியிருக்கிறார். தேசிய அளவில் உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த பார்முலா ஜெயித்திருக்கிறது. ஜெ அவர்கள் பட்டியிலன தலைவர்களுக்கு கொடுத்த அரசியல் அதிகாரத்தை கூட திமுகவால் தரமுடியவில்லை என்பது தான் இங்கே நாம் புரிந்து கொள்ளவேண்டியது.
மேலும் தலித் மக்கள் அ��சியல் அதிகாரம் பற்றி எந்த கேள்வியும் கேட்காமல் இருப்பதற்கு தான், கருவறையில் உள்ளே விடுவார்களா என்று கேள்வி கேட்டு மடை மாற்றுகிறார்கள். அதாவது அமைச்சர், துணை முதல்வர், முதலமைச்சர் பதவியை விடவும், கோயில் கருவறையில் நுழைவது தான் முக்கியம் என்று பட்டியலின மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்து விடக்கூடாது என்பதால் தான்.
எனவே சிறு���ான்மையினருக்கு முக்கியத்துவம் அளித்து நடக்கும் இந்த அரசியல் முழுக்க முழுக்க பட்டியலின மக்களுக்கு எதிரானது என்பது தான் உண்மை.
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளில் படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆவதை ஒட்டிய தலைவரின் ப்ரோமோ வீடியோ வழக்கம் போல் அடிப்பொலி. படம் தொடர்பாக ஒளிவு மறைவு இல���லாமல் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதில் பல விஷயங்கள் ஏற்கனவே தெரிந்தவை என்றாலும், தலைவரின் குரலில் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
அதில் முக்கியமாக சிவாஜி அவர்களை பற்றிய போர்ஷன். அவருக்கு பிளாங்க் செக் கொடுத்ததாக செய்திகள் படித்த ஞாபகம். ஆனால் அவர் கேட்ட பணத்தை கொடுத்திருக்கிறார் என்பது புதிய தகவல்.
சிவாஜி அவர்களின் டெடிகேஷன். எவ்வளவு வயதானாலும் தனக்கு பிடித்த சினிமாவுக்காக எவ்வளவு உண்மையாக இருந்திருக்கிறார். சக நடிகர்களுக்கு முன்னால் நாம் சோடை போய் விடக்கூடாது என்பதற்��ாக மெனக்கெடுவது எல்லாம் நம் அனைவருக்குமான பாடம். 2-3 வருட அனும்பவம் இருந்தாலே நாம தாண்டா எல்லாம் என்ற மிதப்பு வந்து விடுகிறது. ஆனால் சிவாஜி ப்ராக்டிஸ் செய்கிறார். நன்றாக நடிக்க வேண்டும் என்று மெனக்கெடுகிறார். சொதப்பாமல் இருக்க வேண்டும் என்று பயப்படுகிறார். அந்த பயம் இருக்கணும்.
சிவாஜியை போன்று நீண்டகாலம் காதலுடன் ஒரு வேலையை செய்து வந்தவர்களுக்கு, திடீரென்று அந்த வேலை நின்று போனால், அவர்களின் உலகமே நின்று போனது போலத்தான். ஏனென்றால் சினிமாவும், நடிப்பும் தான் அவர்களது உலகம். இனிமே வேலையில்லை என்று தெரிந்தவுடன் அதுவரை அவர்களை தாங்கிப்பிடித்து கொண்டிரு��்த சக்தி உறைந்து விடுகிறது. வயது மூப்பு, உடல் கோளாறுகள் எல்லாமே அப்போது தான் தெரிகிறது. மற்றவர்கள் பார்வையில் ஒய்வு என்பது தெரிந்தாலும், அந்த ஒய்வு அவர்களை பொறுத்தவரை தண்டனை. ஏனென்றால் அவர்களுக்கு சினிமாவை தவிர, நடிப்பை தவிர வேறெதுவும் தெரியாது. அதனால் தான் அப்படியே தளர்ந்து போய், மறைந்தும் விடுகிறார்கள்.
அந்த வகையில் வருடத்துக்கு ஒரு படம், இடைவெளி விட்டு ஒரு படம், படம் முடிந���த உடன் இமயமலை பயணம், அமெரிக்கா பயணம், என ரஜினியின் செயல்கள் சிவாஜிக்கு அர்த்தத்தை கொடுத்திருக்கிறது.
ஆங்கிலத்தில் Detachment என்று சொல்வார்கள். இன்றைய இயந்திர உலகில் பரவலாக புழக்கத்தில் உள்ள சொல். அழகான தமிழில் "பற்றின்மை" என்று சொல்லலாம்.
எந்த விஷயத்துடனும் ஒட்டாமல், தள்ளியிருந்த அதை பார்ப்பது.
வெற்றியோ தோல்வியோ, அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை எனும் நிலை.
ஒன்றில்லாமல் இருக்��வே முடியாது என்பதை போல, உலகின் எந்த ஒரு விஷயமும் நம் மீது ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்து கொள்வது.
பற்றின்மை பற்றி திருக்குறளில் பேசியிருக்கிறார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
பற்றற்ற இறைவனின் பற்றை மட்டுமே பற்றிக்கொள்; அந்தப் பற்றைப் பற்றுவதன் மூலமாகவே, மற்ற உலகப் பற்றுகளை நீக்க முடியும்.
ரஜினி பற்றில்லாமல் வாழ்ந்து காட்டியிருக்கிறார். எந்த வெற்றியையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல், தோல்வியில் நிலைகுலைந்து போகாமல், அனைத்தும் இறைவன் செயல் என்று மேலே கைகாட்டியபடி கடந்து செல்கிறார். வேலை என்று வரும்போது விருப்பத்துடன், காதலுடன் உண்மையாக செய்கிறார். வேலை முடிந்த உடன் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார். கீதையும் அதைத்தான் சொல்கிறது. கடமையை செய் பலனை எதிர்பாராதே.
ரஜினி அதன்படி வாழ்ந்து காட்டுபவர்.
எல்லோருமே கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
#superstar #SuperstarRajinikanth #padaiyappa
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத தமிழக அரசிற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசிற்கு எதிராக எந்த ஒரு உத்தரவும் போடக்கூடாது என்பதற்காக தான் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் செய்கிறது திமுக.
வெளிப்படையாக நீதிபதியை மிரட்டுகிறது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நீதிபதியை கடுமையாக விமர்சிக்கிறார்கள், நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டு வர முயற்சி என்று செய்தியை கசிய விடுகிறார்கள். அது பற்றி விவாதிக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் நீதிபதியை எவ்வளவு கேவலப்படுத்தமுடியுமோ அவ்வளவு செய்கிறார்கள்.
இவ்வளவும் செய்வதன் மூலம் நீதிபதியை மிரட்டி அடிபணியவைக்க பார்க்கிறார்கள். நீதித்துறைக்கு, சட்டத்திற்கும் இவர்கள் கொடுக்கும் மரியாதை அவ்வளவு தான்.
இந்த மிரட்டல் ஜி ஆர் ஸ்வாமிநாதனுக்கானது மட்டும் அல��ல. திமுகவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் அனைத்து நீதிபதிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை.
திமுகவுக்கு எதிராக, தமிழக அரசுக்கு எதிராக யாராவது வாய்திறந்தால், ஜி ஆர் சுவாமிநாதன் கதி தான் என்று வெளிப்படையாக மிரட்டுகிறது திமுக.
ஜி ஆர் எஸ்ஸுக்கு எதிராக திமுக செயல்படுவது இது முதன்முறையல்ல. பல்கலைக்கழக வழக்கிலேயே ��வர் தமிழக அரசுக்கு எதிராக தீர்ப்பு கொடுத்தார் என்பதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தொடர்ச்சியாக திமுகவுக்கு எதிராக தீர்ப்புகள் கொடுக்கிறார் என்பதற்காக பழிவாங்கப்படுகிறார் ஜி ஆர் எஸ்.
நீதித்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது திமுக.
சிப் முதல் ஷிப் வரை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம் என்று பிரதமர் மோடி பேசியதை, அப்படியே முதல்வர் ஸ்டாலின் காப்பி அடித்து பேசியிருக்கிறார். கொத்தடிமைகளும் இதற்கு பயர் விடுவது வேறு விஷயம். ஆனால் இதை கூத்து என்னவென்றால் மோடி சொன்னதை அப்படியே சொல்லும் முதல்வரை பாராட்டுபவர்கள், மோடியை விமர்சனம் செய்வது தான்.
முதல்வர் ஸ்டாலின் மோ��ியை காப்பி அடிப்பது இது ஒன்று முதன்முறையல்ல. ஆரம்பம் முதலே மோடியை மட்டும் தான் பின்பற்றுகிறார் ஸ்டாலின்.
இன்னும் சொல்லப்போனால் ஸ்டாலினுக்கு மோடி தான் ரோல்மாடல். மோடி குஜராத் முதல்வராக இருந்த போது என்னவெல்லாம் செய்தாரோ, பிரதமராக என்னவெல்லாம் செய்கிறாரோ அதை அப்படியே பின்பற்றுபவர் தான் ஸ்டாலினும் திமுகவும்.
ஸ்டாலின் அடித்த காப்பிகளில் சில.
இன்று வார்த்தைக்கு வார்த்தை திராவிட மாடல் என்று சொல்கிறார்களே அது மோடி அவர்கள் முன்வைத்த குஜராத் மாடலை பின்பற்றி உருவானது தான்.
ஸ்டாலின் முன்வைக்கும் கோஷமான எல்லோருக்கும் எல்லாம் என்பதே பிரதமர் மோடியை அவர்கள் முன்வைத்த சப் கா சாத் சப் கா விகாஸ் என்பதில் இருந்து அப்படியே சுட்டது தான். தமிழ்நாட்டில் இந்தி தெரியவிடாமல் பார்த்துக்கொண்டதன் பலன்.
எல்லோருடனும் எல்லா வளங்களும் என்று சொன்ன மோடி, அடுத்து
சப் கா சாத் சப் கா விஷவாஸ் என்றார்,
எல்லோருடனும் எல்லோருடைய நம்பிக்கையுடன் என்று பொருள்.
சப் கா பிராயஸ் என்றார்
எல்லோருடைய முயற்சியுடன் என்று பொருள்.
sap ka saath sap ka vikas
sap ka saath sab ka vishwas
sap ka saath sabka prayas
எல்லோருக்கும் எல்லாம் என்று சொன்ன ஸ்டாலின் சமூக நீதி சமத்துவ காவலன். அதையே இந்தியில் சொன்ன மோடி இங்கு வில்லன். சமூகநீதிக்கு எதிரானவர் என்று பிரச்சாரம் செய்ய��்படுகிறது.
மோடி முதல்வராக இருந்த போதும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போனார். பிரதமரான பிறகு கேட்கவே வேண்டாம்.
ஒருபக்கம் மோடி வெளிநாடு செல்வதை விமர்சனம் செய்து கொண்டே, மோடியை போலவே ஸ்டாலினும் வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டார். முதலீடு வந்ததோ இல்லையோ விதவிதமாக ப���ட்டோஷூட் செய்து கொண்டார். இதே காரணத்திற்காக மோடியை விமர்சிப்பவர்களும் உண்டு.
மோடி முதல்வராக இருக்கும் போது மாநிலங்களுக்கு அதிக நிதிப்பங்கீடு என்று பேசினார், ஸ்டாலினும் அதே பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறார். ஆனால் மோடி காங்கிரஸ் குஜராத்தை வஞ்சிக்கிறது என்றெல்லாம் பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் ஸ்டாலினுக்கு கையில் இருக்கும் பிரச்சாரமே அது மட்டும் தான்.
மோடி அனைத்து ���ாநிலங்களுக்கும் சேர்த்து தான் குரல் கொடுத்தார். அவர் பிரதமரான பின்பு மாநிலங்களுக்கான நிதிபங்கீடை அதிகரித்தும் கொடுத்தார். 31% இருந்த மாநில நிதிபங்கீடை 42% ஆக உயர்த்தியது மோடி.
இன்று அதை 50% ஆக உயர்த்தவேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஸ்டாலின். அதே மோடி ஸ்டைல்.
இந்தியாவெங்கும் மோடி ரோட் ஷோ போக ஆரம்பித்தார், உடனடியாக தமிழகத்தில் அதை செயல்படுத்தினார் ஸ்டாலின்.
மோடியின் செயல்பாடுகள் மட்டுமல்ல அவரது திட்டங்களையும் சங்கடம் இல்லாமல் காப்பி அடித்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
திமுக ஆட்சியில் இன்று கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் மோடி. 2014 ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் உயர்கல்வி பெரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறார் மோடி. நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் என அனைத்து கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறார். உச்சகட்டமாக தேசிய கல்வி கொள்கை கொண்டு வந்து ஒட்டுமொத்த இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்தி வருகிறார்.
இதை அப்படியே ஸ்டாலின் பாலோ செய்கிறார். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது உண்மை. ஆனால் என்ன மோடியை வில்லனாக காண்பித்து, மோடி படிக்க விடமாட்டார் என்று பிரச்சாரமும் ச��ர்த்து செய்கிறது திமுக. ஏனென்றால் தமிழகத்தில் யாரும் படித்தால் அது திமுக போட்ட பிச்சையாகவே இருக்கவேண்டும் என்பது திமுகவின் நோக்கம். அப்போது தான் அதை சொல்லி இன்னும் 2 தலைமுறைகள் ஆளமுடியும். அதற்காக தான் மோடியின் எந்த திட்டமும் வரவிடாமல் பார்த்து கொள்கிறது திமுக.
தேசிய கல்வி கொள்கையின் பல அம்சங்கள் சத்தமே இல்லாமல் தமிழக பள்ளிகளில் அமுலாகி விட்டது. இல்லம் தேடி கல்வி என்ற திட்���ம் வந்த போது முதலில் எதிர்த்தார் வீரமணி. ஒன்றிய அரசின் திட்டத்தை அனுமதிப்பதா என்று குதித்தவரிடம், "இது டி நகரில் இருக்கும் வடபழனி பிரான்ச்" என்று சொன்னவுடன் சமாதானமாகிவிட்டார். இது ஒரு உதாரணம். ஆனாலும் தேசிய கல்வி கொள்கையை வரவிடமாட்டோம் என்று வீண் பிடிவாதம் பிடித்து கொண்டிருப்பது, மோடியின் பெயரில் எந்த திட்டமும் வரக்கூடாது என்பதால் த��ன்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் இங்கே கலைஞர் கனவு இல்லம் என்று மாறிவிட்டது.
கைவினைக்கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக கொண்டு வந்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை குலத்தொழில் திட்டம் என்று தடுத்து நிறுத்தி விட்டு, கலைஞரின் கைவினை திட்டம் என்று பெயர் மாற்றி விட்டார் ஸ்டாலின்.
ஒரே காரணம் கைவினை கலைஞர்கள் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மோடியின் திட்டம் சென்று ச��ர்ந்தால் ஓட்டும் மோடிக்கு போகும். அதை தடுப்பது தான் ஒரே நோக்கம்.
தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடு, முதலீட்டாளர்கள் மாநாடு, புரிந்துணர்வு ஒப்பந்தம், வேலை வாய்ப்பு என அனைத்தும் மோடி முதல்வராக இருந்த போதிலிருந்து முன்னெடுக்கும் திட்டங்கள், வளர்ச்சி பணிகள். ஸ்டாலின் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் அனைத்து மாநில முதல்வர்களும் காப்பி அடிப்பது மோடியின் செயல்பாடுகளைத்தான்.
skill india mission என்று மோடி செயல்படுத்திய திட்டம் இங்கே திறன் மேம்பாட்டு பயிற்சி ஆனது. அதை நான் முதல்வன் திட்டத்துடன் இணைத்து, பிளம்பர் வேலை முதல் கலெக்டர் வேலை வரை யாருக்கு என்ன வேலை கிடைத்தாலும் அதில் ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறது திமுக.
எல்லா தரப்பு மக்களுக்குமான திட்டங்களை கொண்டு வருபவர் மோடி. ஒவ��வொரு பிரிவினருக்கும், ஒவ்வொரு வயதினருக்கும், ஒவ்வொரு தொழில் செய்பவர்களுக்கும் தனித்தனியாக திட்டங்கள் இருக்கிறது. அவை செயல்பாட்டிலும் இருக்கிறது.
மோடி என்னவெல்லாம் செய்கிறாரோ அதை அப்படியே பாலோ செய்கிறார் ஸ்டாலின்.
வெற்றிகரமான மாடலை அப்படியே காப்பி அடித்து பின்பற்றுவது மேனேஜ்மேண்ட் பாடங்களில் ஒன்று.
பாஜக இங்கே காலூன்றினால் தங்களது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் எ��்பதால் மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு மிகத்தீவிரமாக திமுகவால் முன்னெடுக்கப்படுகிறது. ஒருவேளை காங்கிரசை போல், மாநிலங்களை பிடிக்கும் ஆசை இல்லாமல் பாஜகவும் செயல்பட்டால், ஸ்டாலினே பாஜகவுடன் கூட்டணி வைத்து, தமிழகத்தில் மோடியை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்த்து விடுவார்.
மோடி தான் ஸ்டாலினின் ரோல்மாடல்.
வாயை திறந்தா பொய்யை மட்டும் சொல்றதுக்குனே ஐடி வச்சுருக்கானுக.
எப்ப பாரு பிரிவினை.
அவ்வளவு வியாக்கியானம் பேசறவனுக திமுக காங்கிரஸ் ஆட்சி காலத்துல தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பை��ா கிடைச்சதுனு சொல்லணும்.
அப்போ உப்பி, பீஹாருக்கு எவ்வளவு கொடுத்தாங்கனு ஆதாரத்தோடு சொல்லணும்.
அதை சொல்ல வக்கிருக்கா?
ஏன்னா அப்பவும் இதே மாதிரி தான் இருந்தது. அபூலாம் எவனுதை வாய்ல வச்சுருதிங்க.
காங்கிரசை ஆட்சியை விடவும் மிக அதிகமாக மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வு கொடுக்கப்படுகிறது என்பதற்கு தமிழக பட்ஜெட்டே சாட்சி.
கொடுக்கற காசையெல்லாம் கொள்ளையடிச்சுட்டு, இங்க வந்து ஒப்பாரி வச்சு மக்களை ஏமாத்தறியே வெக்கமா இல்லை. சோறு தான் திங்கறிங்களா இல்லை...