தமிழ் சினிமாவின் முதுகெலும்பு எழுத்தாளர்கள் சங்கம். கதைகள் இல்லாமல் போனால் எழுத்துக்கள் இல்லாமல் போனால் இங்கு உலகளாவிய சினிமா இல்லை. அப்படிப்பட்ட அடித்தளத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வெற்றி வாழ்த்துகள்!!
தலைவராக தேர்ந்தெடுக்கப்படுக்கப்பட்டுள்ள அண்ணன் சேரன் அவர்களுக்கும், @CheranDirector
துணைத்தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அன்புச் சகோதரர்கள்
சமுத்திரக்கனி @thondankani
பாடலாசிரியர் சினேகன் @KavingarSnekan அவர்களுக்கும்
செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அண்ணன்
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் @prabaka47900101 அவர்களுக்கும்...
பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அண்ணன் ஆர். சுந்தர ராஜன் அவர்களுக்கும்
இணைச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்
வி.பிரபாகர்
பாஸ்கர் சக்தி,
கவிஞர் அய்யா முத்துலிங்கம்
ரவி மரியா அனைவருக்கும் என் வாழ்த்துகள் ...
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் நம்ம கே.பாக்கியராஜ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் சேரன் வெற்றி..!
#Chennai | #Cheran | #Election | #PolimerNews
If you cannot give best actor for this performance - what’s the true purpose of the national award?
This is not about ideology - this is about sweat and blood !
#Thangalan
நீதியே முக்கியம்; நிதி இரண்டாம் பட்சம்.!
மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறைச்சாலை மரண வழக்கைச் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்.!
.................................................
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய சபரிவர்மன் என்பவர் சட்டவிரோதமாகக் குட்கா விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜூலை மாதம் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அம்மாவட்டத்திலுள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
அவருடைய பிரேதப் பரிசோதனையில் 19 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தது தெரிகிறது. கைதுக்கு முன் எந்தவிதமான வெளி மற்றும் உள் காயங்களும் இல்லாதபோது, 19 காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், அதை ஏற்படுத்தியவர்கள், ஒரு மாற்றுத்திறனாளி எனத் தெரிந்தும் அவ்வளவு கொடூரமாகத் தாக்க வேண்டிய அவசியம் என்ன, அதற்கான சூழ்நிலைகள் ஆகியவை குறித்து அக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, மனிதநேயமிக்க ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
காவல்துறை சித்திரவதைகள் மற்றும் மரணங்கள், சிறைச்சாலை மரணங்கள் முற்றாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இந்தச் சம்பவங்கள் தொடர் நிகழ்வுகளாகின்றன.
கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு மானாமதுரை கோவில் காவலர் அஜித் குமார் மரணம்; மூன்று மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் மரணம்; கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சாத்தான்குளம் ஜெயராஜ் & பென்னிக்ஸ் மரணங்கள் நடந்தும், இது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டிருந்தும் கூட, காவல் நிலைய அத்துமீறல்கள் மட்டும் குறைந்தபாடில்லை.
எனவே, இப்பொழுது அவருடைய குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாயும் தற்காலிக அரசு வேலையும் கொடுப்பதற்குச் சென்ற அமைச்சர்கள் கூட, அவருடைய குடும்பத்தால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். எனவே, சபரிவர்மனுடைய மரணத்திற்கு நீதி கிடைப்பதுதான் மிக முக்கியமே தவிர, நிதி இரண்டாம் பட்சமாகும்.
மரணமடைந்து நான்கு தினங்களாகியும், அவர் பலியானதற்குத் தலையாய காரணம் யார் என்பது வெளிவராத சூழலில், அவருடைய குடும்பத்தார் இன்னும் அவரது பிரேதத்தைக்கூட வாங்காமல் போராடி வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு, நீதி நிலைநாட்டப்படும் வகையில் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படக்கூடிய வகையில், இந்த விசாரணையைச் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
17.07.2026
புதிய தலைமுறையின் மூத்த ஊடகவியலாளர் விஜயன் அவர்களை, விசாரணை என்ற பெயரில் கடந்த இரண்டு தினங்களாகக் காவல் நிலையத்திற்கு அழைத்து அலைக்கழித்தது ஏற்புடையதல்ல.!
............................................
தவெக அரசைக் கவிழ்க்க, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா அவர்களிடம் ஆசைவார்த்தை காட்டி, திருநாவுக்கரசு என்பவர் விலை பேசினார் எனவும், மேலே குறிப்பிட்ட திருநாவுக்கரசு, விஜயன் அவர்களுடன் தொடர்பில் இருந்தார் எனவும் காவல்துறையால் காரணம் சொல்லப்படுவதாகத் தெரிகிறது.
பொதுவாக ஊடகவியலாளர்கள், உள்ளூர் மற்றும் உலக அரசியல் விவரங்களைத் தெரிந்துகொள்ளவும், கள நிலவரங்களை அறிந்துகொள்ளவும் எல்லா அரசியல்வாதிகளிடமும் பேசுவது புதியதல்ல. அந்த வகையில், ஊடகவியலாளர் என்ற ஸ்தானத்திலிருந்து பேசியிருந்தால் கிரிமினல் நோக்கமுடையதாகக் கருதக் கூடாது.
மேலும், விசாரணையின்போது அவருக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் நடத்தியதும், அவரது கைபேசியைப் பிடுங்கி வைத்துக்கொண்டதும் வரம்பு மிஞ்சிய செயலாகும்.
காவல்துறை ஊடகவியலாளர்களைக் கவனத்தோடும் கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் எனவும், விஜயன் அவர்களுக்குக் கடந்த இரண்டு தினங்களாகக் கொடுக்கப்பட்ட மன உளைச்சலுக்குக் காவல்துறை அவரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி சார்பாக
கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
16.07.2026
SHOCKING NEWS வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெருங்குடி, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நிலங்களை விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ, வங்கிகளில் கடன் வாங்கவோ உச்சநீதிமன்றமும், தேசிய பசுமை தீர்ப்பாயம் நிரந்தர தடை. இந்த அதிரடி தீர்ப்பால் சுமார் 1.5 லட்சம் மக்களின் சொத்துக்களின் உரிமை இழந்து விட்டனர் ( zero value) ஆனது. இதனால் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் அடியோடு முடங்கியது. பல லட்சம் மக்கள் கண்ணீருடன் வேதனை.. மக்களே இனியும் நீர் நிலைகள் அருகில் சொத்து வாங்கி உங்கள் பணத்தை இழக்கவேண்டாம்.*
ரஜினி கமலை வைத்து ₹1000 கோடி ரூபாய் பொருட்செலவில் லண்டன் ஹோட்டல் ஒன்றில் பார்ட் டைம் வேலை செய்து சம்பாதித்து படம் தயாரிக்கும் #இன்பன்உதயநிதி பற்றி ஒரு விழிப்புணர்வு காணொளி பதிவு உங்கள் பார்வைக்கு.
பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் நிலப் பத்திரப்பதிவு மோசடி!
உடந்தையாக இருந்த மேலிடப் புள்ளிகள் யார்?
.............................................
உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான, பழனியின் மையப்பகுதியில் கார் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்த ₹100 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை சட்ட விதிமுறைகளுக்கு மாறாக மூன்று தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்தது எப்படி?
இரவுகளில் கன்னக்கோல் போடுவதைப் பற்றியும், வீடு புகுந்து திருடுவதைப் பற்றியும், பிக்பாக்கெட் அடிப்பதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பட்டப்பகலில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையே பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று?
பழனி முருகன் கோவிலுக்கு அருகாமையில், பழனி நகராட்சியின் 3-ஆவது வார்டு, 25-ஆவது பிளாக்கில், சர்வே எண்கள் 998 மற்றும் 999-இல் உள்ள 1.40 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை, கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ், பழனி அருகே உள்ள பாப்பாங்குளம் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி அருகே உள்ள டி.கே.என் புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய மூவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதும்; இதற்கு உடந்தையாகச் சார்பதிவாளர் மணிகண்டன் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவருகிறது.
இந்த நிலம் ஆட்சேபனைக்குரியது என அறநிலையத்துறை ஆணை இருப்பது தெரிந்தும், யாருடைய தூண்டுதலின் பேரில் அல்லது ஆதரவின் பேரில் இந்த நில மோசடி நடந்துள்ளது என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.
இந்த குற்றச்சாட்டு வெளியானவுடன், அடிமட்ட அளவில் சார்பதிவாளர் உள்ளிட்ட ஒருசிலர் பெயரைக் குறிப்பிட்டு வெறுமனே ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்மை வெளிவராது.
ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு மாதத்தில், சட்டமன்றத்திற்கு உள்ளும், பொதுவெளியிலும் விஜய் அவர்கள் தூய ஆட்சியைப் பற்றி வலியுறுத்தி வருகிறார். ஆனால், பழனி முருகன் கோவில் சொந்தமான நிலம் சட்டவிரோதமாக சில தனிநபர்களின் பெயரில் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலிடப் புள்ளிகளின் ஆதரவு இல்லாமல் இந்த குற்றம் நடைபெற வாய்ப்பில்லை.
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆட்சி வந்த பிறகு எழுப்பப்பட்டிருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுவாகும். ஒரு அரசை வீழ்த்த 100 குற்றச்சாட்டுகள் தேவையில்லை; வலுவான ஒரு குற்றச்சாட்டே போதுமானது.
எனவே, விஜய் அரசு பழனி முருகன் கோவில் மோசடி நிலப்பத்திரபதிவு உண்மைத்தன்மையை நடுநிலையான, நேர்மையான, சுதந்திரமான விசாரணை, குறிப்பாக உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதியின் (Sitting Judge) கீழ் நடத்தப்பட்டு, அந்த மேலிடப்புள்ளி யார் என்பது ஆன்மீகப் பெரியோர்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டு சமந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.07.2026