லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, லட்சிய ஜனநாயக கட்சி, முத்தூட் அன்பின் நிழல் மற்றும் ஜோதி ஐ கேர் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் (இரத்தம் & கண் பரிசோதனை ) காமராஜ் நகர் தொகுதியில் உள்ள புதுவை தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
#FreeMedicalCamp #BloodTest #EyeCheckup #CommunityService #Puducherry
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி, கிருஷ்ணா நகர் முதல் குறுக்கு விரிவாக்கப் பகுதியில் வாய்க்கால் குப்பையால் அடைப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் பூத் பொறுப்பாளர் திரு. அருள் பப்பு அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் உடனடி நடவடிக்கையால் வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டு பிரச்னை தீர்க்கப்பட்டது.
#PublicService #CleanPuducherry #DrainageCleaning #PeopleFirst #TeamJCM
காமராஜ் நகர் தொகுதி கிருஷ்ணா நகர் 7வது தெருவில், 25 ஆண்டுகளாக நிலவி வந்த தெருவிளக்கு பிரச்னை குறித்து பொதுமக்கள் அளித்த கோரிக்கையைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு 2 புதிய எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன.
விரைவான நடவடிக்கைக்காக அப்பகுதி மக்கள் தங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
#PublicService #StreetLightProject #PeopleFirst #TeamJCM #KamarajNagar
காமராஜ் நகர் தொகுதி ரெயின்போ நகர் 8-வது குறுக்குத் தெருவில் உள்ள பெரிய வாய்க்காலில் தேங்கியிருந்த குப்பைகள், வார்டு பொறுப்பாளர் திரு. என்.ஆர். சுரேஷ் அவர்கள் அளித்த புகாரின் பேரில், நமது தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அகற்றப்பட்டன.
#CleanKamarajNagar #SwachhPuducherry #PublicService #CommunityDevelopment #TeamJCM
புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழை - எளிய பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர்கள் 80-க்கும் மேற்பட்டோருக்கு, மார்டின் அறக்கட்டளை சார்பில் ரூ.32 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில், கல்வி உதவித்தொகையை லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் காமராஜ் நகர் தொகுதியின் MLA திரு.ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார். அதைப்பெற்றவர்கள் சேவையின் நாயகன் திரு.ஜோஸ் சார்லஸ் மார்டின் MLA-க்கு நன்றி தெரிவித்தனர்.
#EducationForAll #scholarshipprogram #empoweringstudents #martinfoundation
#teamjcm
புதுச்சேரி - இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் உடற்தகுதி தேர்வின்போது மயங்கி விழுந்து துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்,
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்.
அதன்பின், அவரது பெற்றோர்கள் இத்தகைய இக்கட்டான சூழலிலும் அவரது இரண்டு கண்களைத் தானம் வழங்கினர். இதன்மூலம், நான்கு பேர் வரை பார்வை பெற முடியும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது, கோகுலின் உடலை ஊருக்குக்கொண்டு செல்ல,எந்தவொரு உதவியும் இன்றி பெற்றோர் தவித்ததாக செய்தி கிடைத்த நிலையில், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் காமராஜ் நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களது
அறிவுறுத்தலின்பேரில், பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி களத்தில் இறங்கி, ஆம்புலன்ஸ் உதவிக்கு
ஏற்பாடு செய்து, கோகுலின் உடல் ஊர்செல்ல வழிவகை செய்துகொடுத்தார்.
#HumanityFirst #OrganDonation #GiftOfSight #TeamJCM #CompassionInAction
நீண்ட காலமாக உப்புநீர் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த காமராஜ் நகர் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய RO குடிநீர் மையங்களை அமைத்து தூய்மையான குடிநீர் வழங்கிய நமது தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
#SafeDrinkingWater #PeopleFirst #PublicService #puducherry #puducherrynews
பல ஆண்டுகளாக உப்புநீர் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கு, RO குடிநீர் மையம் அமைத்து தூய்மையான குடிநீர் வழங்கிய நமது தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர். மேலும், இந்தத் திட்டத்தை அடுத்த கட்டமாக அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் விரிவுபடுத்த வேண்டும் என்ற தங்களது கோரிக்கையையும் முன்வைத்தனர்.
#SafeDrinkingWater #PeopleFirst #PublicService #puducherry #puducherrynews
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி கிருஷ்ணா நகர் B4, 14வது குறுக்கு வீதியில் வாய்க்கால் அடைப்பால் கழிவுநீர் தேங்குவதாக பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, நமது தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி உடனடியாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரச்னைக்கு விரைந்து தீர்வு கிடைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் நமது தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.
இப்பணியின்போது பூத் தலைவி திருமதி உமா அவர்கள் உடனிருந்தார்.
#CommunityService #PublicService #KamarajNagar #Puducherry #JoseCharlesMartin
புதுச்சேரி - லாபோர்த் வீதியில் உள்ள ஓஸ் பீஸ் முதியோர் இல்லத்தில் 110 முதியோர்களுக்கு
டயபர்ஸ் தந்து உதவுமாறு லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும்
காமராஜ் நகர் தொகுதியின் MLA-வுமான திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர். உடனடியாக அவர்களுக்கு
டயபர்ஸ் இன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரபாகரன், இளைஞர் அணி துணைத்தலைவர் ஜாகீர் உசேன், காமராஜ் நகர் குறை தீர்க்கும் குழு தலைவர் ஷாஜிதா ஆகியோர் கலந்துகொண்டு, முதியோர்களுக்கு டயபர்ஸ் வழங்கினர். அதனை மாதமாதம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோரிக்கை அளித்த மறுநாளே உடனடியாக இந்த சொந்த செலவில் செய்து உதவிய திரு.ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கு,இந்நிறுவனத்தின் முதியோர்கள் மற்றும் காப்பாளர்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
#JoseCharlesMartin #Puducherry #ElderCare #CommunityService #CompassionInAction
புதுவை காமராஜ் நகர் தொகுதியில், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினரும் நமது தலைவருமான திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வாய்க்கால்களும் தொடர்ந்து தூர்வாரப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, 45 அடி சாலையில் உள்ள பழமுதிர் நிலையம் அருகிலுள்ள வாய்க்காலும் தூர்வாரப்பட்டு, மழைநீர் சீராக வடிந்தோட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
#JoseCharlesMartinmla #KamarajNagar #Puducherry #PublicService #CivicDevelopment
மூளைவாத நோயால், பாதிக்கப்பட்ட சகோதரர் தமிழ்ச்செல்வத்திற்கு, அவரது கோரிக்கையை ஏற்று, சொந்த செலவில் மருத்துவ கட்டில் வழங்கி உதவினார், காமராஜ் நகர் தொகுதியின் MLA-வும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள். அவரது சேவையால் நெகிழ்ச்சியடைந்த சகோதரர் தமிழ்ச்செல்வத்தின் குடும்பத்தினர் திரு.ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கு நன்றியைப் பகிர்ந்தனர்.
#PublicService #Healthcare #PeopleFirst #Puducherry #PuducherryNews
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் உள்ள ஞானபிரகாசம் 7-வது தெருவில் மூட்டுத்தேய்மானம் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார், திரு.துரைவேல். இந்நிலையில் போதிய உதவியின்றி, அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் தவித்து வந்தவர், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜர் நகர் தொகுதியின் MLA-வுமான திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களிடத்தில் உதவியை நாடினார். அதன்பின், LJK தலைவரின் அறிவுறுத்தலின்பேரில், பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி அவர்கள், அரசு பொதுமருத்துவமனையில் உயர் மருத்துவர்களிடம் உதவியை நாடி, பரிசோதனை செய்து, திரு.துரைவேல் அவர்களுக்கு, சிறப்பான அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தார். பின்பு திரு.துரைவேல் அவர்கள், காமராஜ் நகர் தொகுதியின் MLA திரு.ஜோஸ் சார்லஸ் மார்டின்(JCM) அவர்களுடைய சொந்த ஆம்புலன்ஸில் வீடு திரும்பினார். அதன்பின், லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி அவர்கள், திரு. துரைவேல் அவர்கள் இல்லத்திற்குச் சென்று, அறுவை சிகிச்சைக்குப் பின்பு உடல் நலம் விசாரித்தார். அப்போது, துரைவேல் குடும்பத்தினர் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜ் நகர் தொகுதி MLA-வுமான திரு.ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
#PublicService #Healthcare #PeopleFirst #Puducherry #PuducherryNews
புதுச்சேரி - லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் காமராஜ் நகர் தொகுதியின் எம்.எல்.ஏ., திரு.ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் சொந்த செலவில், சமீபத்தில் காமராஜ் நகர் தொகுதியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் குறைகேட்பு முகாம் நடைபெற்றது. அதில் திரளான முதியோர், மகளிர் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு நீரிழிவு, பிபி பரிசோதனை, பிசியோதெரபி ஆலோசனைகளைப் பெற்றனர். அதில் பலன் பெற்றவர்கள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்துவதற்கு ஜோஸ் சார்லஸ் MLA-க்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
#JoseCharlesMartinmla #FreeMedicalCamp #HealthcareForAll #PublicService #KamarajNagar
புதுவை காமராஜ் நகர் தொகுதி வெங்கடா நகரில் வாய்க்கால் அடைப்பால் நீர் சாலையில் தேங்குவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வாய்க்காலை சீரமைக்கச் செய்தார். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் தலைவர் JCM அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
#KamarajNagar #Puducherry #PublicService #PeopleFirst #PuducherryNews
லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் காமராஜ் நகர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ரெயின்போ நகர் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதிகளை இணைக்கும் வாய்க்கால்களில் குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரை அடைத்திருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், உடனடியாக சுத்தம் செய்து சரிசெய்யப்பட்டது.
#JoseCharlesMartinmla #KamarajNagar #PublicService #CleanPuducherry #PeopleFirst