பேரன்பிற்குரிய அனைவருக்கும் வணக்கம்!
எதிர்வரும் மே 23,2026 அன்று தஞ்சை மண்ணை தலைநகராக கொண்டு ஆண்ட தகைசால் வேந்தன், தன் வாழ் நாளின் தான் எதிர்கொண்ட 14 பெரும்போர்களிலும் வெற்றி மட்டுமே கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 வது சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
தமிழ் நிலத்தில் மூன்று நூற்றாண்டுகளாக ஆட்சி தந்த முத்தரையர் பேரினத்தில், நமது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் ஆட்சி காலம் வரலாற்று ஆசிரியர்களால் "பொற்காலம்" என போற்றப்படுகிறது. போருக்கு செல்லும் மன்னர்களெல்லாம் வஞ்சிப் பூவை சூடி, போரில் வென்ற பின் வாகைப் பூ சூடுவது வழக்கம். அனால் நமது பெரும்பாட்டனார் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் போருக்கும் செல்லும் போதே வாகைப் பூ சூடி போரிட்டுள்ளார் என்பது வரலாற்றுப் பெருமை.
மேலும், தமிழர்களின் வீரத்தையும், கொடைத்திறனையும், கலைநயத்தையும், கட்டிடக்கலையையும், நீர்மேலாண்மையையும், நிலமேலாண்மையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசரின் புகழைப் போற்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நன்னாளில், பேரரசரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இவ்விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
தமிழ் மண்ணின் காவலனுக்கு, 23.05.2026 அன்று முதல் நிகழ்வாக, திருச்சி ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு, அதிகாலை 4.30 மணியளவில் காவிரி நீர் கொண்டு அரச முறைப்படி மங்கள அபிசேகமும், மலர் தூவி பெருவணக்கமும் செலுத்தப்படவுள்ளது. அதனை தொடர்ந்து தலைவர்கள் பேரரசருக்கு மரியாதை செய்கின்றனர்.
அதனை தொடர்ந்து, மாலை 5.00 மணியளவில் சிவகங்கை மண் அதிரும் வகையில், பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்கள் புடைசூழ, முழக்கங்கள் விண்ணைத் தொட, "சதயவிழா பேரணி” பையூர் தொடங்கி சிவகங்கை அரண்மனைவாசலில் நிறைவடைகிறது. பேரணியின் நிறைவாக, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் பேரரசரின் வீர வரலாற்றையும், நம் உரிமைகளையும் முழங்கும் பிரம்மாண்ட "பொதுக்கூட்டம்" நடைபெறுகிறது. அனைத்து தமிழ் சொந்தங்களும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, வீரத்தமிழ் பெருவேந்தனுக்கு தங்கள் புகழ்வணக்கத்தை செலுத்த வேண்டுமாய் பேரன்புடன் அழைக்கிறேன்!.. அலைகடலென திரண்டு வாரீர்!.. வாரீர்!..
எம் இனத்தின் அடையாளம், எங்களின் நம்பிக்கை நட்சத்திரம் தலைவர் கே.கே.செல்வகுமார் அவர்களின் பின்னால் ஒரு பெரும் படையாகத் திரள்வோம்! 🚩
@KKSelvakumaroff#முத்தரையர்மாநாடு
வீரமுத்தரையர் பேரினமே!
உரிமை முழக்கமிட்டு, நமது அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
காலம் காலமாய் உழைத்த நம் கைகள், இனி ஆளுகின்ற அதிகாரத்தை தீர்மானிக்க வேண்டும்!
நமது இனத்தின் பெருமையையும், உரிமையையும் நிலைநாட்ட... நமது சந்ததியினரின் அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்ய...
திருச்சி மண்ணில் இன்று மாலை நடைபெறும் "முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கு" அலைகடலெனத் திரண்டு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்!
நமது ஒற்றுமையே நமது பலம். அரசியல் களத்தில் நம் குரல் ஓங்கி ஒலிக்க, ஒருமித்த கருத்தோடு திரள்வோம்!
சொந்தங்கள் அனைவரும் அணி திரண்டு வாரீர்!
#முத்தரையர்மாநாடு
நாளைய தினம் 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை_ திருச்சி ஆலம்பட்டி புதூரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழை மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களிடம் வழங்கினேன்!
#முத்தரையர்மாநாடு
இன்றைய தினம் 10.11.2025, திங்கட்கிழமை - மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற, திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் திரு.மொ.பழனியாண்டி அவர்கள் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்!
மேலும், நான் பிறந்த முத்தரையர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளை தாயுள்ளத்தோடு நிறைவேற்றி தரவேண்டுமென நான் பேசுகையில் கோரிக்கை வைத்தேன், எனது கோரிக்கையை ஏற்று மேடையிலேயே நிறைவேற்றி தருவதாக உறுதியளித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி!
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது! பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவருவது பெரும் கவலையளிக்கிறது!!
கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு பின்புறம், முதலாமாண்டு படிக்கக்கூடிய 19 வயது கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கையில், மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் மாணவியின் நண்பரை தாக்கி, அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மாநகர பகுதிகளில், வெளிச்சம் குறைந்த இடங்களில் இரவில் காவல்துறை ரோந்து சென்று இருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அப்பகுதிக்கு யாரும் செல்லாமல் காவல்துறை தடுத்திருக்க வேண்டும். இது எதையுமே செய்யாமல், சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் தமிழக காவல்துறையின் செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடைபெற்று வருவது பெரும் கவலையளிக்கிறது. தமிழகம் பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக உருவாகிவருகிறது. இனிவரும் காலங்களில் மாநகர் பகுதிகளில் இருள் சூழ்ந்த இடங்களில், தனிமையில் சந்திப்பது மற்றும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மாணவி இரவு 11.00 மணிக்கு எதற்காக வந்தார், அவர் விடுதியில் தங்கியிருந்தால், அந்த விடுதி நிர்வாகத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
மேலும்,இந்த சம்பவத்தில் ஈடுபட்ட, சமூக விரோதிகளை காவல்துறை சுட்டு பிடித்திருப்பதை ஊடகங்களின் மூலம் அறியமுடிகிறது. குற்றங்கள் நடப்பதை முன்கூட்டியே தடுக்காமல், குற்றம் நடந்த பிறகு சுட்டு பிடிப்பதால் எந்த பயனும் இல்லை. எனவே, குற்றம் நடைபெறாமல் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென தமிழர் தேசம் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி, தமிழர் தேசம் கட்சியின் வாக்குச்சாவடி நிர்வாகிகள், முகவர்கள், உறுப்பினர்கள் பங்குபெற்ற வாக்குச்சாவடி நிலை குழு கூட்டம் அறந்தாங்கி நூர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தலைமையேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன்!
மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையில் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடி 'சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்' என ஒப்புதல் அளித்து அறிவித்திருப்பது தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி! மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று மாவீரன் முத்துப்பேட்டை ராஜேஷ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள கூடாது என்று தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழ்திரு.@KKSelvakumaroff அவர்களை தடுத்துநிறுத்திய தமிழக @tnpoliceoffl வன்மையாக கண்டிக்கின்றோம்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நமது முத்தரையர் (மீனவ மக்கள்) சமூக மக்களால் நடத்தப்படும் ஸ்ரீ மூகாம்பிகை தேவி கோவில் நிகழ்ச்சிக்கு சமநீதி போராளி அண்ணன் @KKSelvakumaroff அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
@CMOKerala
வேங்கைவயல் பிரச்சனைக்கு தூண்டுதலாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி "தமிழர் தேசம் கட்சி" சார்பாக நாளை புதுக்கோட்டையில் #கண்டன_ஆர்ப்பாட்டம்
நாள்:01-02-2025 சனிக்கிழமை
நேரம்: மாலை 3 மணி
நமது சொந்தங்களை பாதுகாத்திடவும், உரிய நீதியை நிலைநாட்டிடவும் புதுகை நோக்கி
வாரீர்..