மை டியர் மார்த்தாண்டன் திரைப்படத்தில், கவுண்டமணி சொல்வார். நான் ஒரு ஐடியா குடோன். அப்படியே லாரியை விட்டு அள்ளிக் கொள்ளலாம் என்பார். அப்படியாப்பட்ட Think tank உள்ள கட்சி தான் பாரதிய ஜனதா.
தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் என்பது, NEET தேர்வை இனி யாரும் எதிர்க்க முடியாதபடி, ஒரு சில சிறு திருத்தங்களை செய்துவிட்டு, அதை வலுவாக அமல்படுத்தத்தான்.
NEET தேர்வு வேண்டாம் என்று சொல்வது வேறு. அதை சிறப்பாக நடத்துங்கள் என்று சொல்வது வேறு.
நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். எங்களுக்கு கெட்டுப்போன சாப்பாடு வேண்டாம் என்று சொல்வது தமிழ்நாடு.
எங்களுக்கு எந்த சாப்பாடு என்றாலும் பரவாயில்லை. கொஞ்சம் சூடு படுத்தி கொடுங்கள் என்று கேட்பது இப்போதைய போராட்டம். சூடு படுத்தி கொடுத்து விட்டால் போராட்டம் முடிந்து விடும். எல்லோருக்கும் அதே சூடுபடுத்தப்பட்ட கெட்டுப்போன சாப்பாடு தான் இனி.
தொடர்ந்து இதே operating procedure பயன்படுத்தி, தேசிய கல்விக் கொள்கை வலுவாக எல்லா மாநிலங்களின் மீதும் திணிக்கப்படும்.
Soft Hinduta கொள்கைகள் கொண்ட காங்கிரஸ் இருக்கும் வரை தான், பிஜேபி வெற்றி பெற்று கொண்டே இருக்க முடியும். அதனால் அந்த கட்சியின் உயிரும் போகாமல் அவ்வப்போது பிஜேபி சிகிச்சை அளிக்கும். அது போன்ற ஒரு சிகிச்சையாகவும் ராகுல் காந்தி கைது இந்த போராட்டங்களை எடுத்துக் கொள்ளலாம்.
சிறப்பாக எழுதப்பட்ட திரைக்கதை. எல்லா நடிகர்களும் வேறு வழியில்லாமல் வந்து பெர்ஃபார்ம் செய்வதற்கான சூழல்.
சாணக்கியரை எல்லாம் விஞ்சியது BJP Think tank.
பிறந்த மண்ணில்
அடக்கம் செய்யப்பட்டார்
பாரதிராஜா
83 ஆண்டுகளுக்கு முன்னே
தமிழர்கள் பெற்ற
ஒரு புதையலைக்
குழிதோண்டி மீண்டும்
புதைத்துவிட்டோம் பூமிக்குள்
மேற்குத்தொடர்ச்சி மலைகளே
கள்ளிக்காடே கரடே நதியே
பச்சைத் தாவரங்களே
பாடும் பறவைகளே
வைகை அணைமீது மோதும்
வருசநாட்டுக் காற்றே
உங்கள் மகனை
உங்கள் மடியில்
ஒப்படைத்துவிட்டோம்
உடைந்த சொற்களின்
கதறல்கள்,
வட்டார வழக்கில் புலம்பல்கள்,
கண்ணாடிப் பெட்டியைக்
கட்டிக் கொண்டு
கண்ணீர் விட்ட மாதரார்,
ஒப்பாரியில் தாலாட்டுப் பாடியே
தங்கள் மகனைத்
தூங்க வைத்துவிட்டார்கள்
தாய்மார்கள்
நாங்கள் யாரும்
கோரிக்கை வைக்காமலே
அரசு மரியாதையளித்த
தமிழ்நாட்டு முதலமைச்சர்
விஜய் அவர்களுக்கு
எங்கள் மண்ணின் நன்றி
துணையிருந்த தோழர்களை
என்னால் மறக்க முடியாது
மாண்புமிகு அமைச்சர்கள்
நிர்மல் குமார், வன்னியரசு
ஆட்சியர் வைத்தியநாதன்,
காவல்துறை டி.ஐ.ஜி சசிமோகன்,
கண்காணிப்பாளர் சினேகப்பிரியா,
செந்தமிழன் சீமான்
மற்றும்
காலம் தூரம் பாராமல் ஓடிவந்த
கலைக் குடும்பத்தார்
அனைத்துக் கட்சித் தலைவர்கள்
இந்நாள் முன்னாள்
நாடாளுமன்ற, சட்டமன்ற
உறுப்பினர்கள்
சந்திரசேகர் ஐ.பி.எஸ்
சிவனாண்டி ஐ.பி.எஸ்
ராஜரத்தினம் ஐ.ஏ.எஸ்
தொழிலதிபர் வணங்காமுடி,
வெற்றி திரையரங்குகளின்
உரிமையாளர்
மதுரை ஐ.வெற்றிவேல்,
கல்வியாளர்
திண்டுக்கல் ரத்தினம்,
வசந்தபவன் ரவி,
பொறியாளர் பழனியப்பன்
போன்ற
நட்பு வட்டாரங்களுக்கும்
வெற்றித் தமிழர் பேரவை
உறவுகளுக்கும் நன்றி
அஞ்சலியில் விழுந்த
ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும்
நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்
இறுதி மரியாதையை
ராஜ மரியாதையாக்கிய
காவல் துறைக்கு
ஒரு கைகூப்பு
ஊடக நண்பர்கள்
அத்துணை பேருக்கும்
எங்கள் தலை வணக்கம்
ஓய்வுகொள் இமயமே!
உன் அடக்கம் முடிந்த
அதே தருணம்
தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப் பக்கம் வீசிச்
சிறு தூறலிட்டுச் சென்றது
ஏன் தெரியுமா?
உன் குழியில் தள்ளப்பட்ட
பச்சை மண்ணிலிருந்து
உனக்கு
மண்வாசனை வீசத்தான்
#பாரதிராஜா | #Bharathiraja
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
விஜய் CM ஆக வேண்டாம். வேற யாரு, எப்படினு இங்க அரசியல் தெரிஞ்சவங்க சொல்லுங்க.Circulate ஆகிட்டு இருக்க Watsapp இமேஜ் யாருக்கு யர் அனுப்பினது,அந்த மாதிரி விஷயம் confidential இல்லையா?
. அதுல IUML 1 mla னு இருக்கு
அந்த வீடியோ யாரு எடுத்தது. அந்த லெட்டர் pad வேறயா இருக்கு 🫠
‼️ In first place who said AMMK Kamraj’s name was in the list given to Governor?
TVK 107 + Cong 5 + CPI 2 + CPM 2 = 116
This is what given to Governor.
Whats all that drama being staged by @TTVDhinakaran and @EPSTamilNadu ?
மல்லிப்பூ எதற்காக?
மதுரையில் இன்று வாக்களிப்பதற்காக வந்த போது கையில் மல்லிப்பூ சரத்தை சுற்றியபடி வந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
``எப்போதும் இப்படி வரமாட்டீர்களே.. எதனால் இந்த கெட்டப்'' என செய்தியாளர்கள் கேட்ட போது, ``மதுரக்காரன்..'' என்று சொல்லி கையை உயர்த்தி காட்டிய பி.டி.ஆர்.
#Madurai #MaduraiMalli #JasmineFlower #PTR #PTRPalanivelThiagaRajan #ECI #Election2026 #Thanthitv