#திருக்கோவிலூர்_திருவிக்கிரம_பெருமாள்_திருக்கோயில்
திருக்கோவிலூரில் அமைந்துள்ள திருவிக்கிரமர் / உலகளந்த பெருமாள் திருக்கோயில், 108 வைணவ திவ்யதேசங்களில் சிறப்பிடம் பெற்ற பழமையான திருத்தலமாகும்.
தல வரலாறு மற்றும் பெருமை:
மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்ட வாமனப் பெருமாள், பின்னர் திருவிக்கிரம அவதாரம் எடுத்து, தனது ஒரு திருவடியால் பூமியையும் மற்றொரு திருவடியால் விண்ணுலகையும் அளந்ததாக புராண மரபு கூறுகிறது. அந்த உலகளந்த திருக்கோலத்தின் பெருமையை எடுத்துரைக்கும் தலமாக திருக்கோவிலூர் விளங்குகிறது.
இத்தலத்தின் மற்றொரு முக்கிய சிறப்பு, முதலாழ்வார்கள் — பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் — தொடர்புடைய திருத்தலம் என்பதாகும். வைணவ பக்தி மரபில் திருக்கோவிலூர் முக்கிய இடம் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
முக்கிய திருவிழாக்கள்: இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் முக்கியமானவை:
பங்குனி பிரம்மோற்சவம் – 15 நாட்கள்
மாசி மகம்
புரட்டாசி பவித்திர உற்சவம்
நவராத்திரி
சித்திரை ஸ்ரீராமர் ஜெயந்தி
ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி
வைகாசி விசாக கருட சேவை
நம்மாழ்வார் சாற்றுமுறை
பெரியாழ்வார் சாற்றுமுறை
திருவாடிப்பூரம் மற்றும் ஆண்டாள் உற்சவம்
ஸ்ரீஜெயந்தி, உரியடி உற்சவம்
கைசிக ஏகாதசி
மார்கழி பகல்பத்து – இராப்பத்து
வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட பல உற்சவங்கள் நடைபெறுகின்றன.
குறிப்பாக பங்குனி பிரம்மோற்சவம் 15 நாட்கள் நடைபெறுவது இத்தலத்தின் முக்கிய ஆண்டு விழாக்களில் ஒன்றாகும்.
முக்கிய அம்சங்கள்: 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.
மூலவர் திருவிக்கிரமர் / உலகளந்த பெருமாள்.
தாயார் பூங்கோவல் நாச்சியார்.
திருவிக்கிரம அவதாரத்தின் மகிமையை எடுத்துரைக்கும் தலம்.
முதலாழ்வார்களின் வைணவ பக்தி மரபுடன் நெருங்கிய தொடர்புடையது.
புன்னை தலமரமாகும்.
பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், ஸ்ரீசக்ர தீர்த்தம் ஆகியவை தீர்த்தங்களாக குறிப்பிடப்படுகின்றன.
உற்சவராக வேணுகோபாலன் அருள்பாலிப்பதாக தமிழ் இணையக் கல்விக்கழகம் குறிப்பிடுகிறது.
சிறப்பு: திருக்கோவிலூர் திருவிக்கிரம பெருமாள் திருக்கோயில், உலகை அளந்த திருவிக்கிரமனை தரிசிக்கவும், முதலாழ்வார்களின் வைணவ பக்தி மரபை நினைவுகூரவும் சிறப்புமிக்க 108 திவ்யதேசத் திருத்தலமாக விளங்குகிறது.
முகவரி: திருவிக்கிரம சுவாமி (உலகளந்த பெருமாள்) திருக்கோயில்
திருக்கோவிலூர் – 605757,
கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு.
விழுப்புரத்திலிருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில் திருக்கோவிலூர் அமைந்துள்ளது.
தொலைபேசி: 94862 79990
தரிசன நேரம்: காலை: 6:30 மணி – மதியம் 12:00 மணி
மாலை: 4:00 மணி – இரவு 8:30 மணி
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
🛕🙏🏽🔥#இதுதான் நெல்லை! தாமிரபரணி நதிக்கரையை சுற்றியுள்ள கோவில்கள் !
🔥🙏🏽#தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.
🙏🏽🛕#அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம் திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.
1. காந்திமதி நெல்லையப்பர் கோவில்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்
இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பபெற்றதுக்கது.
இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
2. சபை சிவாலயங்கள்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
* சித்ர சபை - திருக்குற்றாலம்
* தாமிர சபை- திருநெல்வேலி
3. முப்பீட தலங்கள்
* அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்
* ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்
* வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).
4. பஞ்ச ஆசன தலங்கள்
* ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
* களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
* நான்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்
* விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்
* செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்
* தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்
* சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
* கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
* தாருகாபுரம் - நீர் தலம்
* தென்மலை- காற்று தலம்
* தேவதானம் - ஆகாய தலம்
5. காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்
* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்
* ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்
* கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்
* திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்
* பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்
6. ராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்
* களக்காடு- சத்யவாகீசர்
* பத்தை - குலசேகரநாதம்
* பதுமனேரி - நெல்லையப்பர்
* தேவநல்லூர் - சோமநாதம்
* சிங்கிகுளம் - கைலாசநாதம்
7. நவ சமுத்திர தலங்கள்
* அம்பாசமுத்திரம்
* ரவணசமுத்திரம்
* வீராசமுத்திரம்
* அரங்கசமுத்திரம்
* தளபதிசமுத்திரம்
* வாலசமுத்திரம்
* கோபாலசமுத்திரம்
* வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
* ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
8. பஞ்ச பீட தலங்கள்
பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.
* கூர்ம பீடம் - பிரம்மதேசம்
* சக்ர பீடம் - குற்றாலம்
* பத்ம பீடம் - தென்காசி
* காந்தி பீடம் - திருநெல்வேலி
* குமரி பீடம் - கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
9. சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)
* பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்
* அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்
* திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
* கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்
* முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்
* தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்)
* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்
* வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்
* கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்
* சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்
* மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்
தமிழக தொலைககாட்சிகளில் குழந்தைகளை ஆட வைத்து நிகழ்ச்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள். ஆனால் #இலங்கை தொலைகாட்சிகளில் என்ன நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்.
விநாயகர் சதுர்த்தி - இலவச மின்சாரம்
#vinayagarchaturthi#andhra#chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy