இன்று, தருமபுரி - அன்னசாகரம் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான சனத்குமார் நதியை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, செய்தியாளர்களை சந்தித்தபோது.!
#PMK#Dharmapuri#watermanagement
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், சேலத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாற்றிய போது.
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், சேலத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாற்றிய போது.
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் விழிப்புணர்வு பரப்பரை பயணத்தை, காவிரி ஆறு தமிழ் நாட்டில் நுழையும் இடமான பிலிகுண்டுவில் தொடங்கிய பின், ஆங்கில செய்தி நிறுவனங்களுக்கு நேர்காணல் அளித்தபோது.!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
காவிரி காக்க கைகோர்ப்போம்.... வாருங்கள் இளைஞர்களே!
தீமைகளைத் தடுக்கும் திறனும், உரிமைகளைக் காக்கும் உணர்வும் கொண்ட உங்களைத் தான் நான் நம்பியிருக்கிறேன்.
காவிரியில் கர்நாடகம் கட்டத் துடிக்கும் மேகதாது அணை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, கர்நாடகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும். 12500 ஏக்கர் வனப்பகுதிகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் என மேகதாது அணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எல்லையில்லாதவை.
சில லட்சம் பேரின் குடிநீருக்காக இவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
இந்தப் பேரழிவைத் தடுக்கும் முயற்சிகளுக்கு நான் வழிகாட்டுகிறேன்.... ஆனால், அதை தடுத்து நிறுத்தும் திறன் உங்களுக்குத் தான் உண்டு. உலக வரலாற்றில் இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளும் உண்டு.
அதனால் தான் உங்களை அழைக்கிறேன்..... வாருங்கள் இளைய தலைமுறையினரே, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடையை தகர்த்தைப் போல மேகதாது அணை சதியையும் தகர்ப்போம்!
உங்களுக்காக பிலிகுண்டுலுவில் காத்திருப்பேன்...!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு மனநலப் பிரிவு மற்றும் பச்சிளங்குழந்தை சிறப்பு பராமரிப்பு மையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது.!
#Dharmapuri | #GovernmentHospital | #pmk | #inspection | #sowmiyaanbumani
இன்று, தருமபுரி நகராட்சி - சந்தைப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில், போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்து விழிப்புணர்வு செய்த போது.!
#polio#Dharmapuri#PMK
எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைய தலைமுறையினரே வணக்கம்!
கடந்த கால ஒப்பந்தங்கள் எதையும் மதிக்காமல் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகளை கட்டிய கர்நாடகம், இப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் மேகதாது அணையைக் கட்டத் துடிக்கிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா வளமாக இருக்காது வறட்சியாக மாறும்.
வளமான டெல்டாவையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாக்கவே ஜூலை 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் காவிரி தொடங்கும் பிலிகுண்டுலு முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன்.
மாற்றங்களை ஏற்படுத்தும் இளைஞர்களே....
இந்தப் பயணத்தில் என்னுடன் இணையுங்கள்,
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளையும், தொழில் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் தருமபுரி சிப்காட் வளாகத்தில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கவும், புதிய தொழிற்சாலைகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் ச.கீர்த்தனா அவர்களை நேரில் சந்தித்து அதற்கான மனு அளித்த போது.!
#PMK | #SIPCOT | #Dharmapuri
முதலமைச்சர் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.
@TVKVijayHQ