'மாமனிதன்' திரைப்படத்தின் கதையை அவருக்கு நான் சொல்வதற்கு உதவியவர் என் நண்பர் இயக்குநர் ராம். அப்பொழுது அவர் நோன்பில் இருந்தார்.
ஒரு ஈசிச்சேரில் சாய்ந்தபடியே முழுக்கதையையும் கேட்டார். அவ்வளவுதான் எனக்கும் அவருக்குமான சந்திப்பு.
அந்தப் படத்தை அவரை வைத்து என்னால் எடுக்க முடியவில்லை.
அதன் பிறகு, கேரளாவில் நடந்த ஒரு திருமண விழாவில் கூட்ட நெரிசலால் அருகில் செல்ல முடியவில்லை. ஆயினும் என்னைக் கடந்து சென்றவரிடம், "வணக்கம் சார் " என்றேன்.
சென்றவர் நின்று, இரண்டடி பின்னோக்கி வந்து என் கைகளைப் பற்றிச் சிரித்துவிட்டுச் சென்றார். அந்த அங்கீகாரம் என் மனதை மிகவும் தொட்டது.
எனக்காக அவர் பின்னோக்கி வந்த அந்த இரண்டடி எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. என் அருகில் இருந்த உதவியாளரிடம் சொன்னேன்: "இந்த இரண்டடிதான் சினிமாவில் நான் பெற்ற ஆசீர்வாதம்!"
உங்கள் பணிகள் தொடர வாழ்த்துகள். 🌺
#Mammootty #Cinema
இப்போலாம் ராமர் அடிக்கிற கவுண்டர் எல்லாம் பயங்கரமா இருக்கு 😂
மாகாப ஆனந்தை வச்சு செஞ்சு விட்டுடறார் ராமர் 😂
அதுவும் God Uh mode uh -னு சார்ஜ் ஏத்திட்டு போடுற கவுண்டர் இருக்குல்ல அதுல ஒவ்வொரு கவுண்டர்லயும் மாகாப ஆனந்த செய்யோ செய்யுன்னு செஞ்சுடறாப்ல...
அதுவும் Core கன்டென்ட் என்னவோ ஒன்னு தான். ஆனா அதுல பல மாதிரியா யோசிச்சு தெறிக்க விடுறார்.
போன வாரம் சாவி கன்டென்ட் இந்த வாரம் தண்ணி டேங்க் கன்டென்ட், தொப்புள் கவுண்டர் இருக்குல்ல 😂😂😂
இதுல எல்லோரையும் காலி பண்றேன்னு கொஞ்சம் கிரிஞ்சா காமெடி பண்ற மாகாப ஆனந்தை இவர் தூக்கி சொருவிட்டு போயிட்டு இருக்காப்லனு தான் சொல்லனும்😂😜
இதுல பாசிட்டிவ் என்னன்னா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கலாய்ச்சுட்டு நின்னாலும் அதை ரொம்ப பாசிட்டிவா ஜாலியா எடுத்துட்டு இருக்க அந்த Bonding தான் நாம பார்க்க வேண்டியது...
இது பாக்க நல்லா இருக்கு 👌
#Vadhandhi : Season 2 கதைச் சுருக்கம் :
மதுரையின் வறண்ட புறநகர்ப் பகுதிக்கு தண்டனையாக டிரான்ஸ்ஃபர் ஆகிறார் SI மூச ராசா. அங்கே ஒரு பெரிய அரசியல் வழக்கை முடிச்சு அவிழ்த்து கேஸை முடிக்கிறார்.
ஆனால், தான் செய்த விசாரணையால் ஒரு அப்பாவி ஆள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பதை பிறகு தெரிஞ்சுக்கிறார்.
தன்னால நடந்த அந்தத் தவறை சரி செய்ய, அரசாங்கத்தையே எதிர்த்து நிற்க வேண்டிய நிலை ராசாவுக்கு வருகிறது.
புதைந்து கிடக்கும் பல ரகசியங்களுக்குள் மீண்டும் இறங்கி, தான் செய்யாத குற்றத்துக்காக சிறையில் இருக்கும் அந்த அப்பாவியை காப்பாற்ற அவர் போராடுகிறார்.
16:9 Aspect Ratio,110 Inches Diagonal
Projector Curtain
நிறைய பேர் இந்த வீடியோ ல tag செஞ்சிருந்தீங்க.
வீட்ல தியேட்டர் Experience வேணும்னு ஆசைப்பட்டு Projector வாங்கிடுவோம். ஆனா அதில் Play செய்ய ஒன்னு வெள்ளை சுவரைத் தேடுவோம், இல்லனா பெட்ஷீட்டைத் தொங்கவிடுவோம். சுவத்துல சின்ன சின்ன மேடு பள்ளம் இருந்தாலும் சரி, இல்ல சுவரோட கலர் மாறுபட்டாலும் சரி... எவ்வளவு costly Projector வச்சிருந்தாலும் அந்த 4K/HD கிளாரிட்டி கிடைக்கவே கிடைக்காது.
வீட்லயே ஒரு பக்காவான மினி தியேட்டர் செட்டப் உருவாக்க நினைக்கிறவங்களுக்கு உதவக்கூடிய ஒரு செம useful gadget தான் இந்த '110 inch Foldable Anti Crease Projector Screen
True Cinema Experience (110 Inches & 16:9 Aspect Ratio)
இது 96x54 இன்ச் அளவில், கச்சிதமான 16:9 சினிமா Ratio ல வருது. 110 இன்ச் பெரிய ஸ்கிரீன் என்பதால், வீட்டின் ஹால் அல்லது மொட்டை மாடியில பிரண்ட்ஸோட சேர்ந்து மேட்ச் பார்க்கவோ அல்லது சினிமா பார்க்கவோ கிராண்டான feel தரும்.
4K Support & Black Back Coating
இது சாதாரண துணி கிடையாது; 1.2 Gain சப்போர்ட் கொண்ட special material. இதோட பின்புறம் பிளாக் கோடிங் (Black Coated) கொடுத்திருக்காங்க. இதனால ப்ரொஜெக்டர் லைட் பின்னாடி ஊடுருவி வீணாகாம, கலர்ஸ் மற்றும் பிரைட்னஸ் 4K அளவுக்கு செம Sharp ஆகவும் துல்லியமாகவும் கண்ணுக்குத் தெரியும்.
Anti-Crease & Foldable (மடிச்சு வச்சா சுருக்கம் விழாது)
பொதுவா துணியை மடிச்சு வச்சா சுருக்கம் (Crease) விழுந்து படம் பார்க்கும்போது கோடு கோடா தெரியும். ஆனா இது ஆன்டி-க்ரீஸ் மெட்டீரியல் என்பதால், எவ்வளவு நாள் மடிச்சு பேக்ல வச்சு எடுத்து விரிச்சாலும் சுருக்கம் எதுவும் இல்லாம ஸ்மூத்தா இருக்கும்.
Eyelets Type & Easy Setup
சுவத்துல மாட்ட வசதியா ஓரங்கள்ல ஐலெட்ஸ் (Eyelets/Rings) கொடுத்திருக்காங்க. இதனால கயிறு, Hook அல்லது டபுள் சைட் டேப் வச்சு ரொம்ப சுலபமா சுவத்துல மாட்டிடலாம். டிராவல் பண்ணும்போது கூட கைக்குள்ள மடிச்சு எடுத்துட்டு போய்க்கலாம்.
💡 Quick Tip: இதை சுவத்துல மாட்டும்போது நாலு பக்கமும் நல்லா இழுத்து டைட்டா (Tightly stretched) மாட்டுங்க. எவ்வளவு தூரம் screen டைட்டா இருக்கோ, அவ்வளவு தூரம் ப்ரொஜெக்டர் பிக்சர் கிளாரிட்டி செம Blurriness இல்லாம, தியேட்டர் screen மாதிரியே கச்சிதமா இருக்கும்!
வீட்ல Movie Lovers யாராச்சும் இருந்தா கண்டிப்பா Try பண்ணி பாருங்க. அதிக காசு கொடுத்து home cinema செய்ய முடியாதவங்க இந்த Budget screen முயற்சி செய்யலாம். தேவைப்படும் நண்பர்கள் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹. 1102
Reviews : 4.0* | 64 Ratings
Get it Here : https://t.co/AWHhZvkMfB
* To Get this Product in USA *
Price: $. 14.99
Reviews : 4.3* | 1511 Ratings
Get it Here : https://t.co/0oXE4YBkIJ
#Nagabandham
ஊரான் வீட்டு பிள்ளை பாதாம், முந்திரியா தின்னு நல்லா புசு புசுன்னு இருக்கு.
அதுனால நம்ம புள்ளைக்கும் முந்திரியா குடுப்போம்னு தினமும் சோத்துக்கு பதிலா அதையே குடுத்து கடைசியில அந்த பையன் வெடிச்சே செத்து போனான்னு சொல்ற மாதிரி...
தெலுங்கு பக்கம் Mythological & mystery படங்கள் ஒரு புத்தகத்தை அல்லது இடத்தை மையமா வச்சு, கூட சிவனை கூட்டிக்கிட்டு போனா நல்லா ஒடுதுன்னு
இவங்களும் அதே வேலைய பாத்து விட்டிருக்காங்க.
ஆனா அதுல ஒன்னு கூட உருப்படியா வரலைங்குறது தான் சோகம்.
வீக்கான நடிகர்களின் நடிப்பு, அதைவிட வீக்கான திரைக்கதை சுவாரஷ்யமே இல்லாம நகருது.
எந்த கனெக்ட்டும் இல்லாம, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத முழுக்க முழுக்கவே படம் நகருது.
படத்தோட பட்ஜெட் அதிகம்னு சொன்னாங்க ஆனா அது ரிசல்ட்ல தெரியல.
பல இடங்கள்ல செட் & VFX பல்லைக் காட்டுது...
இதுல சோதிக்கிற விஷயம் படத்தோட நீளம் , அதைவிட சோதிக்கிற இன்னொரு விஷயம் இதுக்கு இவங்க 2nd பார்ட் லீட் விட்டது தான்...
நாகபந்தம் - பாம்பு கொத்த வேண்டியது வில்லன்களை, ஆனா இங்க கொத்தினது என்னவோ பாக்குற நம்மளை தான் 🚶
உலக சினிமாவில் இருந்து உள்ளூர் சினிமா வரைக்கும் அவன் அவன் பேயை வச்சு பயம் காட்டும் போது சேட்டன்ஸ் நாயை வைச்சு பயம் காட்டுன படம்...
அவ(ள்)ன் உங்ககிட்ட மாட்டல... நீங்கள் தான் அவ(ள்)ன் மாட்டிருக்கீங்க னு அந்த அம்மா ஒரு பார்வை பார்க்கும் பாருங்கள்...சாந்தமான பார்வையிலே சம்பவம் 🥵
இந்த டீம்-க்கு இப்போ தான் சரியான நேரம் அமைஞ்சுருக்கு 👌
மூனு பேரும் பக்காவா சினிமாவுக்குள்ள அடியெடுத்து வச்சு இருக்காங்க...
முதல்ல வந்த #IdhayamMurali படத்துல டிராவிட் காமெடி மட்டுமில்லாம வசனமும் எழுதி இருக்காப்ல. அதோட அடுத்து ஒரு முன்னணி ஹீரோ படத்துலயும் அவர் தான் வசனம் ✌️
சுதாகர் தான் இதயம் முரளி படத்துல பாதிக்கும் மேல ஆடியன்ஸ் இதயத்தைக் காப்பாத்தின ஆள்.
அவரோட காமெடி கவுண்டர் எல்லாமே செம்மையா ஒர்க் ஆச்சு..அதோட அவரை இன்னும் கொஞ்சம் கூட யூஸ் பண்ணி இருக்கலாம்னு தோன வச்சது.
அப்படியே இந்த வாரம் #AnbeDiana பக்கம் வந்தா கோபி @AravindhrajaG . மனுசன் அந்த பெங்களூர் slang ல கச்சிதமா உட்கார்ந்து அதகளம் பண்ணி விட்டாப்ல.
அதுவும் @PariElavazaghan ப்ரோ-க்கு குடுக்குற ஒவ்வொரு கமெண்ட்-ம் நம்ம வயிறை பதம் பார்க்கும். அதுவும் அதுக்கு ஏன்டா மூஞ்சி மேல உச்சா போற-ன்னு பார்ல ஆரம்பிச்சு, கிளைமேக்ஸ் டிவிஸ்ட்ல அடிக்கிற ஸ்டன்ட் வரைக்கும் ரியாக்சன் உட்பட எல்லாமே கலகலப்பு 👌
மூனு பேரும் சரியான நேரத்துல ஒன்னா அதுவும் சரியான கேரக்டர்லயே லேண்ட் ஆயிருக்காங்க.
இதைச் சரியா யூஸ் பண்ணி கிடைக்கிற எல்லா வாய்ப்பையும் தூக்கி உள்ள போட்டுக்காம, scope உள்ள கதையையும், கேரக்டரையும் தேர்வு பண்ணி நடிச்சா கண்டிப்பா கொஞ்சம் வெற்றிடமா கெடக்குற காமெடியன்கள் பஞ்சத்தை நிவர்த்தி செய்யலாம் ✌️
டெல்லியிடம் சிக்கலில் அமைச்சர்கள் :
அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ராஜ்மோகன் ரெண்டு பேரும் அரசுமுறைப் பயணமா வெளிநாடு போயிட்டு வந்ததுக்கு சொந்த பாஸ்போர்ட் பயன்படுத்தி இருக்காங்களாம்.
அது மிகப்பெரிய விதிமீறல்னு சொல்றாங்க.
ஏன்னா ஒரு மாநிலத்தின் அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அதற்கு மத்திய வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதியைப் பெற வேண்டும் என்பது கட்டாய விதியாம்.
அதோட இத்தகைய பயணங்களின் போது அவர்கள் Diplomatic Passport மூலமாகவே பயணிக்க வேண்டுமாம்.
ஆனா இந்த விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனா மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகிய இருவருமே மத்திய அரசின் எவ்வித முன் அனுமதியும் பெறவில்லைன்னு சொல்லி
விதிமீறலைக் கடுமையான குற்றச்சாட்டாகக் கையில் எடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், தற்போது தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு அதிரடியாக 'ஷோ காஸ்' நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் எப்படி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்றும், அரசை முறையாக அவர்கள் வழிநடத்தத் தவறிவிட்டனர் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளதாம்.
அமைச்சர்களுடன் சென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களும் மத்திய அரசின் அனுமதியைப் பெறத் தவறியதால், அவர்கள் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்றாங்களாம்...
Source : One India Tamil
_____
இப்போ இவங்களுக்கு தேவை சரியான வழிகாட்டி தான்...
செங்கோட்டையன் எல்லாம் ஒரு அமைச்சருக்கு உள்ள அதிகாரம், பயன்படுத்த வேண்டிய விதிமுறைகள், நடைமுறைகள்னு எல்லாத்தையும் எடுத்து சொல்லலாமே 🙄
ஏன் இப்படி ஒரு சொதப்பல்.
அதுவும் கீர்த்தனா வைக்கிற ஒவ்வொரு அடியும் இடியா தான் இறங்கி கெடக்கு அவங்களுக்கே 🏃
ஏற்கனவே ஒன்ன கெடுத்துட்டேம் இனி அந்த பக்கமே கை வைக்க மாட்டேன் - லிங்குசாமி
ரன் படம் 2ம் பாகம் கண்டிப்பாக வரவே வராது. என்னுடைய வாழ்க்கையில் நான் அந்த தப்பை மட்டும் பண்ணவே மாட்டேன்.
ஒரு தடவைதான் அந்த மேஜிக் எல்லாம். அதை வந்து நாம் கெடுத்துடவே கூடாது. அதை வந்து நம்மளே கெடுக்கற மாதிரி ஆயிடும்.
ஒரு தடவை நானே கெடுத்துட்டேன். சண்டக்கோழி 2 படம் எடுத்து கெடுத்துட்டேன்.
இன்னொரு வாட்டி அந்த தப்பை நான் பண்ணக் கூடாது. அய்யோ அந்த பக்கம் கையே வைக்க கூடாது
கூடவே உத்தம வில்லன் படத்தின் சில காட்சிகளை மட்டும் மாற்றியிருந்தால் அந்த படமும் பெரிய வெற்றியை பெற்றிருக்கும்னும் சொல்லிருக்காப்ல...
---
அதென்னவோ உண்மை தான்.
பார்ட் 2 கதையெல்லாம் விட்டுட்டு திரும்ப பக்கா மாஸான கதையோடு வாங்க சார் ✌️
உங்க படங்களுக்குன்னே ஒரு ரசிகர் வட்டம் இருக்கு...
அப்புறம் இந்த சண்டக்கோழி 2 பாதி படத்துக்கும் மேல எங்க ஊர்ல தான் எடுத்தாங்க 😐
தளபதிக்கு வேறு மாதிரி கிளைமேக்ஸ் யோசிச்ச பாக்யராஜ் ✌️
ரஜினி : எப்படி உங்களுக்கு இந்த thought வந்தது...
பாக்யராஜ் : படம் பாக்கும்போது வந்தது வேறென்ன 😂
இதுனால தான் இவர் திரைக்கதை மன்னன் 🔥
#Lingam - Watchable ⭐️⭐️⭐️ (3/5)
OTT: Jio Hotstar
Language: Tamil
நாகர்கோயில் லிங்கம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இந்தக் கதை குறித்து நிறைய Blog-கள் இருக்கின்றன. இல்லையென்றால் இந்த தொடரைப் பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.
ஒரு Blog படிப்பதற்கும், அதை காட்சிகளாக பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
சரி, தொடரைப் பற்றி பார்ப்போம்…
இந்த தொடரின் கதையை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு கபடி வீரர் எப்படி ஒரு ரவுடியாக மாறினார் என்பதுதான்.
80-90களின் காலகட்டத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அந்தக் காலத்திற்கேற்ற உடை, தோற்றம் மற்றும் சூழலை நன்றாக உருவாக்கியிருக்கிறார்கள்.
Nivas K. Prasanna-வின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது.
கதாபாத்திரத்திற்கு கதிர் மிகவும் பொருத்தமாக இருக்கிறார். 🤝
இந்த தொடரின் மிகப்பெரிய பலவீனம் அதன் திரைக்கதை.
இது லிங்கத்தின் உண்மைக் கதையாக இருந்தாலும், இதே மாதிரியான கதைக்களத்தை பல படங்களில் ஏற்கனவே பார்த்த அனுபவம் இருப்பதால், பல இடங்களில் புதுமை குறைவாக உணரப்படுகிறது. அதுவே தொடரை சற்று சலிப்படைய வைக்கிறது.
திவ்யா பாரதி அழகாக இருக்கிறார். ஆனால், கதாபாத்திரத்திற்கு அவர் முழுமையாக பொருந்தியிருக்கிறாரா என்ற சந்தேகம் இருக்கிறது.
காதல் காட்சிகள் தொடரின் ஓட்டத்தை பல இடங்களில் தடை செய்கின்றன.
பூர்ணிமா ரவி கதாபாத்திரம் ஏன் வந்தது, எங்கு சென்றது என்ற குழப்பம் இறுதிவரை நீடிக்கிறது.
மேலும், பல காட்சிகளை இன்னும் சுருக்கமாக வைத்திருக்கலாம்.
தொடரில் அதிகளவில் இரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளும், ஆபாச வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. அதனால், தனியாக பார்ப்பது நல்லது.
கடைசியில், எந்த முடிவும் கொடுக்காமல் தொடரை அப்படியே நிறுத்திவிட்டார்கள். இது அடுத்த சீசனுக்கான வணிக நோக்கத்திற்காகவே என்பது தெளிவாக தெரிகிறது.
ஆனால், லிங்கத்தின் உண்மைக் கதை தெரிந்தவர்களுக்கு இந்தத் தொடர் எப்படி முடியும் என்பதும் தெரிந்திருக்கும்.
அதிக எதிர்பார்ப்புடன் பார்க்க வேண்டாம் மக்கா. அந்த எதிர்பார்ப்பை இந்த தொடர் முழுமையாக பூர்த்தி செய்யாமல் ஏமாற்ற வாய்ப்புகள் அதிகம்.
முந்தானை முடிச்சு நடக்குறப்ப பாண்டியராஜனுக்கு படம் இயக்குற வாய்ப்பு கிடைச்சதால பாதில போய்ட்டாரு கூடவே லிவிங்ஸ்டன் , GM Kumar Um போய்ட்டாங்க அதுக்காகவே வச்ச சீன்😂
தவக்களைய பாண்டியராஜன் மாதிரி கண் உருட்ட வச்சதெல்லாம் 😂
பாக்யராஜ் படங்கள்ல பலருக்கும் பல படங்கள் பிடிச்சதா இருக்கும்.
ஆனா எனக்கு இந்த ராசுக்குட்டி எப்பவுமே தனி ஸ்பெஷல்...
இதுவரை எத்தனை முறை பாத்தேன்னு கூட தெரியல...
அதுவும் அடி நான் புடிச்ச குயிலே பாட்டு இருக்குல்ல...
வேற மாதிரி பீல் இப்பவும் குடுக்கும் சாரே 😥
ஹீரோவை தாண்டி ஒரு சில படங்களில் மட்டும் தான் வில்லனை ரசிக்க முடியும்..
அப்படியான படங்களில் ஒன்னு இது ✌️
அதுவும் வில்லனுக்கு நடிகரா இது தான் முதல் படம் 😎
#WATCH | உங்களுக்கு திருஷ்டி தான் அதிகமா இருக்கு..சுத்தி போட்டா சரி ஆகிடும்..இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்த வீடியோவை பகிர்ந்து கவிஞர் சினேகனின் மனைவி கன்னிகா அஞ்சலி
#RIPBharathiraja#snehan#News18TamilNadu
ஒரு பாடலாசிரியருக்கு தன் வரிகளை ஒருவன் இன்ச் பை இன்ச் ரசித்து அதை தன்னிடமே விளக்கும் போது கிடைக்கிற சந்தோஷமே தனி...
அதுவும் இந்த பையன் விளக்கி சொல்ற விதமே நம்மை அந்த பாட்டை திரும்ப கேட்க வச்சுடும் ❤️❤️❤️