தமிழ்த்தேசியம் எனும் உயர்ந்த ,உன்னதமான சித்தாந்ததிற்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி !
புதிய அரசியலை கண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில் வென்றவர்களுக்கும் , உண்மையாக உழைத்து வெற்றியை தவறவிட்டவர்களுக்கும் வாழ்த்துகள் !
மாற்று அரசியலுக்கான விதை முளைத்திருக்கிறது இனி அது விருட்சமாய் வளரும் ,அந்த களத்தில் முதன்மையாய் தமிழ்த்தேசியம் இருக்கும் !
இன்னும் பலமடங்கு வீரியத்தோடு நாம்தமிழர் மக்களுக்காக , மக்களுடன் நிற்கும் !
பெண்களுக்கு - 2500
இலவச மின்சாரம் - 200யூனிட்
குடும்பத்துக்கு ஆறு சிலிண்டர் இலவசம்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4500
கல்யாணம் செய்பவர்களுக்கு ஒரு பவுன்...
இதில் முதல் கையெழுத்து எதைப் போடப் போகிறார்....
5 வருடங்களில் இதெல்லாம் நடைமுறை படுத்தவில்லை என்றால் கூட கேட்க மாட்டார்கள்..
எங்க தளபதி முதலமைச்சர் ஆனதே போதும் என்பார்கள்..
பொருளாதார வளர்ச்சி அகலபாதளத்தில் போனாலும் கவலை இல்லை..
எங்க தலைவர் நடையைப் பார், உடையைப் பார் என்பார்கள்..
மொத்தத்தில் அரசியல் புரிதலற்ற ஒரு கூட்டம் தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளியதுதான் இந்த தேர்தல்...
ஒவ்வொன்னா அனுபவிக்கும் போது தெரியும்...
வெற்றிதான் அளவீடென்றால் சிறந்த தலைவன் ட்ரம்ப். ஆகச் சிறந்த கட்சி பிஜேபி. வெல்வதன் பக்கம் சாய்வதல்ல அரசியல், அதிகாரத்தை இழப்பினும் நம்பும் கருத்தியலின் பக்கம் நிற்பதே. அறம். வென்றாலும் தற்குறி தற்குறியே.
சீமான் பேசும் தற்சார்பு பொருளாதாரம், உலகமய வர்த்தக பொருளாதாரத்தில் கையெழுத்திட்ட எந்த நாட்டிலும் தடை செய்யப்பட்டதாகும். அதை பேசும் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டு வார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என்பது வரலாறு. இந்திராகாந்தி ராஜீவ்காந்தி சதாம்ஹூசைன் கடாஃபி பலியானவர்கள் இன்னும் பலர்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையை பார்த்த பிறகு என் மனைவி சொல்கிறாள்; நம் பிள்ளைகளை நாம்தமிழர்கட்சியின் மழலையர் பாசறையில் சேர்க்க வேண்டும். திரைக்கவர்ச்சிக்கு அடிமையாகாமல்; இன உணர்வுள்ள சமூகமாக நம் பிள்ளைகள் வளர வேண்டும்.
Once NTK
Till Death NTK.
1922 ல் ஒருவர் சொன்னது இப்போது உண்மையானது…
மக்கள் ஒரு போதும் அறிவுப்பூர்வமான தலைவர்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள், கவர்ச்சியை நோக்கி தான் ஓடுவார்கள் கவர்ச்சியால் உருவாகின்ற சமூகம் அறிவுப்பூர்வமான சமூகத்தை உருவாக்க முடியாது எனவே நான் அடிப்படையான ஜனநாயகத்தை அடிப்படையோடு வெறுக்கிறேன்…
-அடால்ப் ஹிட்லர்
அன்றும்... இன்றும் ...என்றும் ...
மக்கள் புரட்சியாளன் @Seeman4TN
உடனே.
வெற்றிக்காக கூட நிற்பவனுக்கும் இனத்திற்காக கூட நிற்பவனுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.
அது இப்போது புரியாது ...
புரட்சியாளர்கள் எப்போதும் ஒய்வெடுப்பதில்லை 💪
மாவீர்கள் ஆன்மா எங்களை வழி நடத்தும் ❤💛
தன்மானத் தமிழச்சி - கண்ணகி!
==============================
பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
நாளை தி.பி. 2057 சித்தரை 18, (01.05.2026) சித்திரை முழு நிலவு நாள்!
காப்பியத் தலைவி - தன்மானத் தமிழச்சி - கண்ணகி தெய்வத்தின் விண்ணுலக வெளிப்பாட்டு நாள் - நினைவு நாள்!
தமிழ்ச் சேர நாட்டின் முல்லைப் பெரியாறு என்று இன்று அழைக்கப்படும் பெரியாற்றின் அடைகரை அருகே மலைக் குன்றத்தின் உச்சியில் ஓங்கி நிற்கும் வேங்கை மரத்தின் கீழிருந்து - விண்ணுலகம் சென்றார் கண்ணகி என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். 'மலை வேங்கை நறுநிழலில் வள்ளிபோல் கண்ணகி நின்றதாக"க் கூறுகின்றார்.
அந்த சித்திரை முழுநிலவு நாளில் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்களும் பிற்காலத்தில் கேரளமாகப் பிரிந்துபோன பழைய சேர நாட்டிலிருந்து மலையாளிகளும் ஆண்களும் - பெண்களும் - குழந்தைகளும் வந்து ஆண்டுதோறும் "மங்கலதேவி" என்று சிறப்புப் பெயர் பெற்ற "கண்ணகி தேவி"யை வணங்கிச் செல்கின்றனர்.
தமிழ்த்தேசியர்கள் பலர், ஆண்டுதோறும் சென்று வழிபட்டு வருகின்றனர். நானும் கடந்த காலத்தில் சில ஆண்டுகள் சென்று வந்தேன்.
கண்ணகி, மதுரையில் வாதாடி - கோவலன் குற்றமற்றவன் என மெய்ப்பித்த பின் தலைவிரி கோலமாக - அறச்சீற்ற ஆவேசத்துடன் பயணம் செய்து, இறுதி நிலை அடைந்த இடம், தேனி மாவட்டத்தில் நம்முடைய பளியங்குடி அருகிலும் - குமுளி அருகிலும் உள்ள வேங்கை குன்றம்!
அங்கு சேரன் செங்குட்டுவன் நிறுவிய கண்ணகி கோயில் இருக்கிறது என்பதையும் அதன் வழித்தடத்தையும் சிலப்பதிகார வரிகளைக் கொண்டு, அடி எடுத்து நடந்துசென்று கண்டவர் தஞ்சை - கரந்தை, புலவர் - பேராசிரியர் சி. கோவிந்தராசனார், (சி. கோ ).
இப்பொழுது ஆண்டுதோறும் தமிழ் அன்பர்கள் சிலர் பூம்புகாரில் உள்ள 'பத்தினிக் கோட்டத்திலிருந்து' புனித நீர் எடுத்துக்கொண்டு குமுளிக்கு புனிதப் பயணம் செல்கின்றனர். வழிநெடுக அந்தப் புனித நீரை மக்கள் வழிபட்டு அனுப்பி வைக்கின்றனர். ஆண்டுதோறும் தஞ்சை நகரத்தில் புலவர் சி. கோவிந்தனார் மகன் பேராசிரியர் - முனைவர் கோ. தெய்வநாயகம் அவர்கள் இல்லத்தில் வைத்து பூசை நடத்தி அப் புனித நீரை வழியனுப்பும் நிகழ்வு நடக்கிறது. இவ்வாண்டு, நானும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை உள்ளிட்டோரும் அவ் வழியனுப்பு விழாவில் கலந்து கொண்டோம்.
சென்னையில் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரியாக உள்ள ஐயா இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் - கோவை சிவதர்சினி அம்மா உள்ளிட்டோர் மகிழுந்துகளில் அப் புனித நீரை எடுத்துவந்து தஞ்சையில் பூசை செய்து எடுத்துச் சென்றனர்.
தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்!
-------------------------------------------------
மேற்குத் தொடர்ச்சி மலையில் - தேனி மாவட்டத்தில் 'கண்ணகி தேவி கோயில்' உள்ள இடமும் அதைச் சுற்றியுள்ள மலைப் பகுதியும் தமிழ்நாட்டு எல்லைக்கு உட்பட்டவை. ஆனால் அதில் கண்ணகி தெய்வக் கோயிலுக்கு அருகே இருந்து மேல்புறம் உள்ள இடமெல்லாம் கேரளத்திற்குச் சொந்தம் என்று கடந்த சில ஆண்டுகளாக கேரளா அரசு, உரிமை கொண்டாடி, கேரளக் காவல் துறையினரை நிறுத்தி வந்தது. ஆனால் அண்மைக் காலமாகக் கண்ணகி கோயிலும் கேரள எல்லைக்குள் இருப்பதுபோல் கேரள அரசு, அம் மலைமுகடெங்கும் காவல் துறையை நிறுத்தி கெடுபிடி செய்கிறது.
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளோ கேரள அரசின் ஆக்கிரமிப்புகளுக்கு மறைமுகமாக ஒத்துழைப்பதுபோல் உள்ளது.
1. தமிழ்நாடு அரசு உடனடியாக தமிழ்நாட்டின் மேற்கு எல்லையை - ஆவணப்படி அளந்து எல்லைக் கற்கள் போட்டு காவல் காக்க வேண்டும்!
2. பளியங்குடி மலைப் பாதை முழுவதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தது. அதையும் இப்போது கேரள அரசின் வனத்துறை ஆக்கிரமித்து வருகிறது. தமிழ்நாடு அரசு, கேரள அரசுடன் பேசி, நம் எல்லையை மெய்ப்பித்து எல்லைக் கற்கள் நட வேண்டும்.
3. பளியங்குடி வழியாக முழுமையான மலைச் சாலை போட வேண்டும். கண்ணகி தேவியை ஆண்டு முழுவதும் மக்கள் சென்று, வணங்கி வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
சித்தரை முழு நிலவு நாளில் - அந்த ஒரு நாள் - அங்கு செல்ல, பாதை அனுமதிக்கு கேரளா அரசு போடும் கட்டுப்பாடுகள் - செய்யும் கெடுபிடிகள் கொடுமையானவை.
தமிழ்நாட்டிலிருந்து கண்ணகி கோயில் செல்வோர் உணவுப் பொருள் கொண்டு போகக் கூடாது என்று நிரந்தரத் தடை போடுவது தமிழர்களை இழிவுபடுத்தும் செயல்! மங்கலதேவி அறக்கட்டளை கடந்த ஆண்டு வழங்கிய உணவு கெட்டுப் போயிருந்ததால், மீண்டும் அவ்வாறு நிகழாமல் எச்சரிக்கையாக இருக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழ்நாட்டிலிருந்து உணவு கொண்டுபோகக் கூடாது என்று தடுப்பது தமிழர்களை இழிவுபடுத்தும் மலையாளி ஆதிக்கச் செயலாகும்!
அடுத்து, முதல் கட்டமாக சித்தரை முழு நிலவின் முதல் நாள், முழு நிலவு நாள், முழு நிலவின் மறுநாள் என மூன்று நாள், தமிழ்நாடு உள்ளிட்ட மக்கள் அனைவரும் கண்ணகி கோயில் சென்று வழிபடுமாறு கேரள அரசுடன் பேசி தமிழ்நாடு அரசு உடன்பாடு காண வேண்டும்.
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 98408 48594, புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
================================
நம் மண்ணில் பிறந்த பெரும் நம்பிக்கையை, வழிபாட்டை, நம் கடவுளை விட்டு கொடுக்கக் கூடாது.
கண்ணகிக் கோயில் தமிழர்களின் சொத்து, உரிமை🔥🔥🔥
#பெரும்பாட்டி_கண்ணகி
தமிழ்நாட்டின் கண்ணகி கோயில்
வழிபாட்டுக்குக் கேரள அரசின் அனுமதி எதற்கு?
==============================================
"தொல்சிலை" மற்றும் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் 29.04.2026 அன்று நடைபெற்ற தமிழ்த்தேசிய இனத் தலைமகள் கண்ணகி சிலை அறிமுக விழாவில் வரலாற்று ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் கேள்வி
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/3iSXUSCwPB
தமிழர் கண்ணோட்டம் / THAMIZHAR KANNOTTAM
சேனலை WhatsAppஇல் பின்தொடருங்கள் :
https://t.co/cNmSap30iT
தமிழர் கண்ணோட்டம்
நிதி பங்களிப்பு செய்ய உதவோர்
Google pay number - +91 76670 77075
(தமிழர் கண்ணோட்டம் - THAMIZHAR KANNOTTAM WEB VISION)
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
பன்மைவெளி நூல்கள்
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
https://t.co/GVu01jKxmP
=====================
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
https://t.co/NDG0xUhVcf
=====================
இணையத்தில்...
https://t.co/JXFUxmkbnp
========================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095
நாங்கள்
"மற்றவைகள்.."
⚫
நாம் தமிழர் கட்சி 2016 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலில் போட்டியிடுகிறது.
மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு பாராளுமன்றத் தேர்தல்கள், சில இடைத்தேர்தல்கள் என எந்த தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி வாக்குக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதில்லை.
கொள்கையை முன்னிறுத்துகிறோம். இரவு பகல் பாராது வீடு வீடாக அலைந்து வியர்வை சிந்தி வாக்குகள் கேட்கிறோம்.
தெருமுனை கூட்டமோ பொதுக்கூட்டமோ ஏதோ ஒன்று நடத்தி சாலையில் கடந்து கொண்டிருக்கின்ற மக்களை நிறுத்தி வைத்து தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் மனங்களில் விதைக்கிறோம்.
ஏறக்குறைய எல்லோருக்கும் ஒரே மாதிரியான பேச்சு மொழி. பெரும்பாலும் உரையாடல்களில் ஆங்கிலம் தவிர்த்த தமிழ் மட்டுமே மூச்சு மொழி.
அண்ணன் சீமான் வரும்போது கூட தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் மேதகு வாழ்க என்ற முழக்கம் மட்டுமே. மாலைகள் இல்லை. சால்வைகள் கிடையாது.
எந்தக் கூட்டமும் ஆபாச நடனங்கள் சினிமா பாடல்கள் போட்டு மக்களை திரட்டும் கூட்டம் அல்ல.
117 ஆண்கள் 117 பெண்கள் என 234 வேட்பாளர்களும் குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள்.
மக்களுக்காக போராடுகின்ற போராளிகள்.
எங்களைப் போல மற்ற யாரும் இல்லை.
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள் தான்".
🔸
எங்கள் அண்ணன் சீமான் தமிழ்நாட்டை முழுமையாகக் கடந்த ஒரே தலைவர். எல்லா தலைவர்களை தாண்டிலும் அதிக கூட்டங்களில் பேசியவர். மக்களின் போராட்டக் களங்களில் பங்கேற்பவர். ஊடகங்களை தினந்தோறும் சந்திப்பவர். எப்போதும் களத்திலே நின்று போராடுபவர்.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஆடு மாடு மாநாடு மலைகள் மாநாடு தண்ணீர் மாநாடு என தொடர்ச்சியாக மக்கள் விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தி சூழலியல் சார்ந்து இயங்கும் ஒரே தலைவர்.
கருணாநிதியின் பேனா சிலையை தனி ஒருவனாக நின்று போராடி தடுத்தவர்.
தஞ்சை பெருவுடையார் கோவில் உச்சியில் தமிழ் முழங்க காரணமாய் நின்றவர்.
அவரைப்போல உழைப்பவர் யார் உண்டு இங்கு..?
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்."
🔹
60 ஆண்டுகால திராவிட அரசியலின் சீர்கேடுகளை, தமிழ்நாடு அடைந்த பின்னடைவுகளை அம்பலப்படுத்தியதில் சீமானை போல வேறு யாருமில்லை.
இன்று அண்ணன் பேரறிவாளன் வழக்கறிஞராக மாறியதற்கு பின்னால்
சீமான் என்ற தனி மனிதனின் கைதும், வேலூர் சிறைவாசமும் இருக்கிறது. அந்த மனிதன் ஏழு தமிழர் விடுதலையே இனத்தின் விடுதலை என முழங்கிய போது அருகில் இருந்தவர் கூட ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தோம்.
ஆனாலும் சாதித்தார்.
கதிராமங்கலம் போராட்ட களத்தில், நெடுவாசல் போராட்டக் களத்தில், ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் என அவர் கால் படாத பூமி ஏதாவது உண்டா.. வேர்வைத் துளி சிந்தாத நிலம் எங்காவது உண்டா. ?
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்".
🔹
மக்களை நம்பி நம்பி மீண்டும் மீண்டும் தேர்தல் களத்தில் நிற்கிறோம்.
வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் உழைப்பை முன்னிறுத்தி உறுதியாக நிற்கிறோம்.
எங்களது களங்கமற்ற உழைப்பை கண்டு கலங்காதவர்கள் யாரும் இல்லை.
ஆனாலும் நாங்கள் சேர்ந்ததில்லை. இந்த இனத்தில் பிறந்தோம். தலைவரை நேசித்தோம். எனவே நம் வாழ்க்கை இப்படியே என்று எங்களை நாங்களே தேற்றி, தலைவரின் முகத்தை மனதில் ஏற்றி இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்".
🔹
நாளை காலை ஜனநாயகத் தீர்ப்பு எழுதப்பட இருக்கிற இந்த நொடியிலும் கூட என் உயிர் அண்ணன் சீமானை பெருமிதத்தோடு நினைத்துப் பார்க்கிறேன்.
அவனோடு நான் நிற்பது என் பிறப்பிற்கே பெருமை.
உழைப்பினால் உறுதி ஏறிய அவனது விழிகளில் எந்த நொடியும் சஞ்சலம் குடிபுகுந்ததில்லை.
ஆயிரமாயிரம் அவதூறுகள், பொய்மைகள் என அவனை நோக்கி எய்யப்பட்ட எல்லா அம்புகளும் அசைக்க முடியா அவனது மன உறுதிக்கு முன்னால் மடிந்து போயிருக்கின்றன.
அவனது படை போரைத் தொழிலாக செய்பவர்கள் அல்ல. வாழ்க்கையாக கொண்டவர்கள்.
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்."
🔹
நம்பிக்கையோடு நாளை
விடியலில் நாங்கள் விழித்திருப்போம்.
விவசாயி சின்னம் மிளிரும் போதெல்லாம்.. தமிழர் வாழ்வு ஒளிரும்.
🔹
ஊடக வியாபாரிகளின் வணிகத்தில் நாங்கள் "மற்றவைகளாக" இருந்து விட்டுப் போகிறோம்.
ஒருபோதும் அலட்சிய பார்வையால் ஊடகங்களை நாங்கள் கடந்ததில்லை.
மௌன கத்தியால் அவர்களை நாங்கள் அவமானப்படுத்தியதில்லை.
பதில் சொல்லாமல் நாங்கள் அவர்களை பதற வைத்ததில்லை.
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள் தான்"
எங்களது வெற்றிச் செய்தி கூட மற்றவைகளில் வரட்டும்.
ஆனால்.
இறுதியாக ஒன்று.
இந்த "மற்றவைகள்" தான்
உரிமைகள் மறுக்கப்பட்ட பொழுதில்
அவர்களுக்காகவும் போராட இருக்கும்
இறுதியான மனிதர்கள்.
🔹
மணி செந்தில்.