சுதந்திரப் போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து உழைத்த சிறந்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான, போற்றுதலுக்குரிய திரு. S.S. ராமசாமி படையாட்சியார் அவர்களின் 109-ஆவது பிறந்த நாளான இன்று, அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது மட்டுமின்றி அவரின்
திருஉருவப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் திறந்து வைத்ததும் மாண்புமிகு அம்மாவின் அரசு என்பதை பெருமையுடன் இந்நாளில் நினைவுகூர்கிறேன் .
சென்னை, கிண்டி, ஹால்டா அருகில் அமைந்துள்ள திரு. S.S. ராமசாமி படையாட்சியார் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எனது அறிவுறுத்தலின் படி, தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தும்; சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
@AIADMKOfficial
தமிழ்நாட்டுல ஏற்கனவே இருக்கிற நிறுவனங்கள் கூட ஒப்பந்தம் போட எதுக்கு வெளிநாட்டுக்கு போகணும்?
இதுக்கு மக்கள் வரிப்பணம் தான் வீணாய் போகுது..
முதல்வர் @actorvijay அவர்களின் வெளிநாட்டுப் பயணம் பற்றி,
-கழகப் பொருளாளர்,
முன்னாள் அமைச்சர் @Srinivasanoffl அவர்கள்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118-வது பிறந்தநாள் விழாவினையொட்டி, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகே அலங்கரிக்கப்பட்டுள்ள அவர்தம் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வின் போது தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்.
#CNAisourDNA
தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.
அதிகாரத்தை விட கொள்கையையும்,
பதவியை விட மக்களையும்,
தனிமனிதப் புகழை விட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும்
என்றும் வீற்றிருக்கும்
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை, அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன்.
மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் #அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம்!
வாழ்க அண்ணா நாமம்!
#CNAisourDNA
@AIADMKOfficial
தவெக அரசு அதன் சொந்தக்காலில் நிற்கவில்லை,
இரவல் காலில் நின்று கொண்டிருக்கிறது.
இது நிலையான ஆட்சி இல்லை..
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், #மதுராந்தகம் மற்றும் #தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலின் கழக வெற்றி வேட்பாளர்களான திருமதி. கணிதா சம்பத் அவர்களும், திருமதி. K பானுமதி அவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
#AIADMK #ByeElections #Madurantakam #Dharapuram
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவர் S. அலெக்சாண்டர், நீட் தேர்வில் 481 மதிப்பெண் பெற்று, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டதையொட்டி, நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.
இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியில் இருந்த காலங்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.
புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று @AIADMKOfficial கூறவில்லை. தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. அரசின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்-2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு
நடைபெற உள்ள மதுராந்தகம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருப்போம்!!
- தமிழக பாஜக தலைவர் திரு. @NainarBJP அவர்கள்
நடைபெற உள்ள மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருப்போம்!!
- அமமுக பொதுச்செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
திருவண்ணாமலை மத்திய மாவட்ட விவசாய அணி தி.மு.க. செயலாளரும், ஆரணி வடக்கு ஒன்றிய முன்னாள் செயலாளரும், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவரும், வடுகசாத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான திரு. G. வெங்கிடேசன் அவர்கள் நேரில் சந்தித்து, தன்னைக் கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
#JUSTNOW || "தினசரி பிரச்சனைகள் ஏற்பட்டதால் அவையில் மக்களின் பிரச்சனைகள் பேச முடியவில்லை.. நாள்தோறும் 10 மணி நேரம் நடக்கும் சட்டப்பேரவையில் 3 மணி நேரம் மட்டுமே மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசப்பட்டது.." - இபிஎஸ்
#EPS | #ADMK | #Politics | #PolimerNews
சட்டமன்ற இடைத்தேர்தல் - 2026
#மதுராந்தகம்#தாராபுரம்
சட்டமன்றத் தொகுதிகள்
விருப்ப மனு பெறுதல்- 08.09.2026 முதல் 10.09.2026 வரை
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#ByeElections#AIADMK