From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
After Binge watching Hari's filmography, I found patterns in his songs, Characters, Scenes, Comedy Tracks!
So here's a Thread of My Kutty Observation 🏃🏻
@_MovieTamil And one more thing River Route Studio is not producing one film. Brown Mani announced and one more movie the complete shooting got over and post production in process. Rio anna making things well planned and going to position it perfectly 🤞
சிறந்த நகைச்சுவை நடிகர் - ஹர்ஷத் கான் (டிராகன், ஆரோமலே)
வாய் முழுக்கச் சவடால் பேச்சும், உடல் முழுக்க அதிகப்பிரசங்கித்தனமுமாய் உதார்விட்டுத் திரியும் நம் கல்லூரிக்கால ஜூனியரை அப்படியே நகலெடுத்து கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார் ‘குட்டி டிராகன்’ ஹர்ஷத் கான்.
தன் மலர் டீச்சருக்காக ஓயாமல் ஹார்ட்டின் பலூன்களைப் பறக்கவிட்டு மொக்கை வாங்குவதாகட்டும், இடம் பொருள் ஏவல் தெரியாமல் வாய்விட்டு சீனியர்களிடம் மொத்து வாங்குவதாகட்டும்… கேம்பஸில் இவர் அடித்த அத்தனை லூட்டிகளும் அரியரே இல்லாமல் ஆல் பாஸ் ஆகின.
'டிராக’னில் ஹீரோ முதுகில் தொங்கியபடி தொணதொணக்கும் வேடிக்கையான வேதாளம் என்றால் ‘ஆரோமலே’வில் கூடவே இருந்து நம் வாழ்க்கையில் கும்மியடிக்கும் ரகளையான நண்பன்.
ஆர்ப்பாட்டமான உடல்மொழியில் மட்டுமல்ல, சீனிப்பட்டாசாக வெடிக்கும் ஒன்லைனர்களாலும் இவரால் குலுங்கிச் சிரிக்கவைக்க முடியும் என்பதை எடுத்துச் சொன்னது ‘ஆரோமலே.’
டிஜிட்டல் இளைஞர்களுக்கு, கலையின் தீவிரத்தன்மை புரிவதில்லை எனும் கருத்தை மறுதலித்து காமெடிக்கு சீரியஸாகத் தன் உழைப்பைக் கொடுக்கும் ஹர்ஷத் கான், நம்பிக்கையூட்டும் நட்சத்திரம்.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #HarshathKhan | #Dragon | #Aaromaley | #BestComedian
சிறந்த அறிமுக இயக்குநர் - அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் ஃபேமிலி)
‘வீரமென்பது விரட்டியடிப்பது’ என வரலாறு நெடுக பேரினவாதம் நிறுவ முயலும் தர்க்கத்துக்கு, ‘வீரமென்பது அன்பின் பால் அனைவரும் வாழ வழிவிடுவது’ என எதிர்க்கருத்து எழுதியது ‘டூரிஸ்ட் ஃபேமிலி.’
‘எல்லாவற்றையும் இழந்தவரிடமும் கொடுப்பதற்கு இருக்கிறது கொஞ்சம் அன்பு’ என உலகப் பொதுமொழியான சினிமாவில் அபிஷன் ஜீவிந்த் பேச, வழக்கத்துக்கு மாறான குடியிருப்பில் பறந்தது சமத்துவக்கொடி!
காதலை மட்டுமே உற்றார் உறவினர்களாகக்கொண்டு வாழும் குணசேகர் - மங்கையர்க்கரசி, வெளியே கறார் கண்டிப்பும் உள்ளே கசியும் கனிவுமாய் ரிச்சர்ட், புற உலகின் அழுத்தங்களை மீறி தன் குடும்பத்தை நித்தமும் இலகுவாக்க முயலும் முள்ளி என இவர் வார்த்த கதாபாத்திரங்களால் கோடையிலும் திரையரங்குகளில் சூழ்ந்தது இதம்.
உணர்வைப் பகிர்தலே க்ரிஞ்ச் என உதாசீனப் படுத்தப்படும் இன்றைய சூழ்நிலையிலும் நல்லுணர்வுத் திரைப்படங்களுக்கென இருக்கும் வரவேற்பைக் கோடு போட்டுக்காட்டி நம்பிக்கையளித்த அபிஷன் ஜீவிந்த், தமிழ் சினிமாவின் நல்வரவு.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #AbishanJeevinth | #TouristFamily | #BestDebutDirector