மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களிடம் இன்று (23.10.2026) தலைமைச் செயலகத்தில், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பினால் அண்மையில் தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கும், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்ட நிதி மேலாண்மைக்கான முதல் பரிசுகள், செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சமூகப் பொறுப்பிற்கான விருது, கள்ளக்குறிச்சி-II கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சிறந்த செயல்திறனுக்கான விருது ஆகியவற்றை கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
#CMJosephVijay
கல்லூரிக் கட்டணம் செலுத்த உதவுமாறு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாணவி கோரிக்கை வைத்தார்.
மாணவியின் கோரிக்கையை ஏற்று, அவரது கல்வி தடையின்றித் தொடர கல்லூரிக் கட்டணம் செலுத்துவதற்கான தொகை���ை வழங்கினோம்.
#CMJosephVijay
#kumbakonam
பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்!
தமிழ்நாட்டில் பருத்தி சாகுபடியை அதிகரித்து, பருத்தி உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், 2026-27 ஆம் ஆண்டிற்காக ரூ.26.21 கோடி நிதி ஒதுக்கீட்டில் பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் செயல்படுத்தபடவுள்ளது.
#CMJosephVijay#agricultureandfarmerwelfare
கும்பகோணம் ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகள், முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவர்கள் மற்றும் இந்திய பள்ளிகள் விளையாட்டு கூ��்டமைப்பு சார்பில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்குத் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தங்களின் திறமையாலும் விடாமுயற்சியாலும் சாதனை படைத்து வரும் மாணவ, மாணவிகள், தேசிய அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்று கும்பகோணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்களை தெரிவித்தோம்!
#CMJosephVijay
#kumbakonam
கல்வி செழிக்கட்டும் !
தொழில்கள் வளரட்டும்!
விவசாயம் தழைக்கட்டும்!
மக்கள் வாழ்வு வளம் பெறட்டும்!
தீமைகள் நீங்கி, நன்மைகள் பெருகி, அனைவரின் வாழ்விலும் வெற்றியும் மகிழ்ச்சியும் நிலைத்திட
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி
திருநாள் நல்வாழ்த்துகள் !
கும்பகோணம் மோரி வாய்க்கால் தூர்வாரும் பணியினை நேற்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
#CMJosephVijay#kumbakonam
கும்பகோணம், கொரநாட்டுக்கருப்பூர் ஊராட்சி, நத்தம் பகுதியில் வயல்களில் களப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடி நலம் விசாரித்தார். அவர்களுக்கு வழங்கப்படும் கூலி விவரங்கள், வேலை நேரம் மற்றும் ஏதேனும் குறைகள் உள்ளதா என்பது குறித்து அவர்களிடம் நேரடியாகக் கேட்டறிந்தோம் .
இதனைத் தொடர்ந்து, அப்பகுதிய���க் கடந்து சென்றபோது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் (100 நாள் வேலை) திட்டத்தின் கீழ் வாய்க்கால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களைச் சந்தித்தோம். அவர்களிடம் சென்று, வேலை சரியாக வழங்கப்படுகிறதா, உரிய முறையில் கூலி வழங்கப்படுகிறதா மற்றும் திட்டத்தில் ஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதா என்பது குறித்துக் கேட்டறிந்து. குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுத்தினோம்.
#CMJosephVijay
#kumbakonam
ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று!
ராமேஸ்வரத்தின் சிறு தெருக்களில் செய்தித்தாள் விற்ற சிறுவன், இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆய்வின் முகமாக உயர்ந்தார்.
வறுமை அவரது கனவுகளைத் தடுக்கவில்லை. கல்வியும் உழைப்பும் விடாமுயற்சியுமே அவரது ஏணிகள். இஸ்ரோவில் எஸ்.எல்.வி-III திட்டத்தை வழிநடத்தினார். டி.ஆர்.டி.ஓ-வில் அக்னி, பிருத்வி ஏவுகணைகளை உருவாக்கினார்.
குடியரசுத் தலைவராக இருந்தபோதும் பதவியின் பெருமையை விட மக்களின் அன்பையே பெரிதாகக் கருதினார்.
அதனால்தான் "மக்களின் குடியரசுத் தலைவர்".
"கனவு காணுங்கள்; அந்தக் கனவு உங்களை உறங்க விடாமல் செய்யும் வரை உழையுங்கள்" என்று அறிவுறுத்தி,
இளைய தலைம���றைக்கு வழிகாட்டினார்.
இறுதிவரை ஆசிரியராகவே வாழ்ந்த அந்த மாமனிதரின் நினைவைப் போற்றுவோம். அவர் கண்ட கனவை நனவாக்க நம் பங்கை ஆற்றுவோம்.
சென்னை, வேளாண்மை இயக்குநரகத்தில் மகளிர் விவசாயிகள் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அவர்கள் தலைமை உரையாற்றி, வேளாண்மையில் மகளிரின் பங்களிப்பு, அவர்களின் உழைப்பு மற்றும் விவசாய வளர்ச்சியில் பெண்களின் முக்கியத���துவம் குறித்து எடுத்துரைத்தோம் .
#CMJosephVijay
#chennai
தஞ்சாவூர் லாங்வல் மா���ில், INDIAN ACADEMY, INDIAN ABACUS சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மாணவ, மாணவிகள் சாதனைகளைப் பாராட்டி, அவர்களின் எதிர்காலம் மேலும் சிறக்கவும், ப��்வேறு துறைகளில் சாதனைகள் படைக்கவும் வாழ்த்துகளைத் தெரிவித்தோம் .
#CMJosephVijay
#kumbakonam
ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான TAMILNADU MASTERS ATHLETICS CHAMPIONSHIPS 2026 போட்டியில் கலந்து கொண்டு திரு. ராமமூர்த்தி அவர்கள் 100 மீட்டர், 200மீட்டர் மற்றும் Triple Jump ல் முதல் இடம் பெற்று ��ேசிய அளவில் உத்திரபிரதேசத்தில் நடைபெறும் தடகளப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
#kumbakonam
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்கள் & பள்ளி மாணவர்கள் ஒரு சில பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்வதாக புகார் தெரிவித்தனர்.
அதைதொடர்ந்து கும்பகோணம் புறநகர் மற்றும் நகர பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது பள்ளி & கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் வெற்றிப���பயணம் திட்டம் குறித்தும், எந்தெந்த பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்கின்றன என்றும் கேட்டறிந்து பேருந்து ஒட்டுனர் & நடத்துனரிடம் அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தினோம்.
#CMJosephVijay
#kumbakonam
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி,
இன்று (01.10.2026) வியாழக்கிழமை,
மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திருமதி. K. மரகதம் குமரவே���் அவர்களுடன் இணைந்து மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் உள்ள குமரவாடி கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து பிரச்சார��் மேற்கொண்டோம்.
#CMJosephVijay #maduranthakam
மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் அவர்கள் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் உள்ள தண்டரை புதுச்சேரி ஊராட்சியில் பூத் எண் 55 -ல் பொதுமக்களை சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் மதுராந்���கம் .