#BiggBoss10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவ��னர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்?
மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்?
தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா?
இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா?
இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா?
இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?
ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர��கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம்; எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல.
அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆ�� வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல; விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.
எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பத��ல் சொல்வதுதான் ஜனநாயகம்!
ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும்.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்!
கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்!
வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@VijaySethuOffl
சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர்கள் அறிவிப்பு
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்க்காணும் வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
35. மதுராந்தகம்
கோ.ஜானகிராமன் B.E.,M.B.A.
இளநிலை பொறியியல், முதுகலை வணிக மேலாண்மை
101. தாராபுரம்
மு.கார்த்திகா B.E.
இளநிலை பொறியியல்
09. தட்டாஞ்சாவடி (புதுச்சேரி)
ச.கார்த்திக் குமாரி
அழகுக்கலை வல்லுநர்
சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவு���ளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
போராடும் MRF தொழிலாளர்கள் இன்று பெரம்பலூர் தவ��க எம்எல்ஏ சிவகுமார் அவர்களை சந்திக்க சென்ற பொழுது 3 மணி நேரம் காக்க வைத்து பிறகு சந்தித்த பொழுது எதற்கு நிர்வாகத்தை எதிர்க்கிறீர்கள்? என போராடுபவர்களை நோகடித்து பேசி அவர்கள் பாதியில் திரும்பியிருக்கிறார்கள்..
தவெக கட்சி முதலாளித்துவத்தின் அடியாள் என்று இப்பொழுது தான் பலருக்கு புரியத்துவங்கியிருக்கிறது…
நீட் தேர்வில் முறைகேடு செய்த குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல், நீதிவிசாரணை கோரிப் போராடும் இளைஞர் கூட்டத்தின் மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதா?
நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கெதிராக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பின் சார்பாக டெல்லி, ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அப்போராட்டத்தின் நீட்சியாக, நேற்றையதினம் அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என யாவரும் நாடாளுமன்றம் நோக்கிப் ப��ரணியாய் செல்ல முயன்ற நிலையில், அவர்கள் மீது கொடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, காவல்துறையின் மூலம் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்காமல், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, கைதுசெய்யாமல், முறைகேட்டுக்கு நீதிவிசாரணை கோரி, அறவழியில் ப���ராடும் இளைய தலைமுறையினர் மீது தாக்குதல் தொடுப்பது ஏற்கவே முடியாத பேரவலம்; சகித்துக் கொள்ள முடியாத அரச வன்முறையாகும். மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பிருந்தும் பாபர் மசூதியை நோக்கிச் செல்ல மதவெறியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இதே நாட்டில், நாடாளுமன்றம் நோக்கி அறவழியில் பேரணியாய் செல்லக்கூட இளைஞர் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாதது கேலிக்கூத்தானது. நாடாளுமன்றம் என்பது நாட்டி��் குடிமக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களின் அவை. அந்த அவை மக்களுக்கான நீதியையும், சமவாய்ப்பையும் நிலைநாட்டாதபோது, அந்த அவையை நோக்கிச் சென்று, நீதிகேட்பதைத் தவிர, எளிய மக்களுக்கு வேறு வழியென்ன இருக்கிறது? மன்னராட்சிக்காலத்தில்கூட மன்னனின் அரசவைக்குள்ளேயே சென்று, சாதாரண குடிமக்களால் நீதிகேட்க முடிந்தது; அரசனை நோக்கி விரல்நீட்டிக் கேள்வியெழுப்ப முடிந்தது. ஆனால், மக்களாட்சிக���காலத்தில் பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய்கூட செல்ல முடியவில்லை என்பது வெட்கக்கேடானது இல்லையா? வெள்ளையர்களுக்கு எதிராக, பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் குண்டுவீசி, ‘புரட்சி ஓங்குக’ என வீரமுழக்கமிட்ட இளையப் புரட்சியாளர் பகத் சிங்கைக் கொண்டாடும் த���ருநாட்டில், பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய் செல்வதற்குக்கூட ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தடைவிதித்து, போராடுவோர் மீது ஒடுக்குமுறையைப் பாய்ச்சுமென்றால், இது சனநாயகப்பேரவலம் இல்லையா? இவ்வளவு நடந்தும் நாட்டின் நிர்வாகத் தலைவரான பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய்மூடி மௌனமாக இருப்பது அதிகாரத்திமிர் இல்லையா? நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராகப் போராடும் இளையோர் கூட்டத்தின் அறச்சீற்றம் நியாயமானது. அதேசமயம், நீட் தேர்வு என்பதே மிகப்பெரும் முறைகேடு; மோசடி. அதனை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும் என்பதற்காகவே தமிழர் நிலத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, நீட் தேர்வுக்குரிய வினாத்தாள்கள் கசிவு எனும் கல்வித்துறையின் முறைகேடுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் ��தவிவிலக வேண்டும் எனும் கோரிக்கை முழக்கம் மிகச் சரியானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக வரவேற்கிறது.
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டுக்கு எதிராகப் போராடும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் மீது ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அரசப்பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, போராட்டக்களத்தை வன்முறைக்களமாக மாற்றியது ஒட்டுமொத்த நாட்டுக்குமானப் பேரவமான��்; வரலாற்றில் கறுப்புப்பக்கங்களாகப் பதிவுசெய்யப்படும் கோர நிகழ்வாகும்.
ஆகவே, நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் முறையான நீதிவிசாரணை செய்ய வேண்டுமெனவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமா���்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாடறியப்பட்ட ஊடகவ��யலாளர் விஜயனை வழக்கு விசாரணை எனும் பெயரில் அச்சுறுத்துவதா? அலைபேசியைப் பிடுங்கிக் கொண்டு, அலைக்கழிப்பு செய்து, மிக மோசமாக நடத்துவதா?
@CMOTamilnadu
@TVKVijayHQ
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அரசியல் விவாதங்களையும், நேர்காணல்களையும் திறம்பட நடத்தி, நெறியாளுகை செய்து வரும் ஊடகவியலாளர் அன்பிற்கினிய த��்பி விஜயன் அவர்களை விசாரணை எனும் பெயரில் தவெக அரசின் காவல்துறை அழைக்கழிப்பு செய்வதும், அச்சுறுத்துவதுமான போக்கு அதிர்ச்சியளிக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டவரை நேர்காணல் செய்தாரென்பதற்காகவே தம்பி விஜயனைக் காவல்நிலையத்துக்கு அழைத்து மிக மோசமாக நடத்துவதும், அவரது அலைபேசியைக் பிடுங்கி வைத்துக் கொள்வதும், கண்ணியக்குறைவாக நடத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
நாடறியப்பட்ட ஊடகவியலாளரான தம்பி விஜயன் மீது விசாரணை எனும் பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறை மற்ற ஊடகவியலாளர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டல். 60 நாட்களிலேயே தவெக அரசின் நிர்வாகச்சீர்கேடு வெட்ட வெளிச்சமாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், அதனைப் பேசுபொருளாக மாற்றும் ஊடகவியலாளர்கள் யாவரும் குறிவைக்கப்படுவதும��, அரசின் கம்பிவடத் தொலைக்காட்சியிலிருந்து காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதுமானப் போக்குகள் கருத்துரிமையின் மீது தொடுக்கப்படும் கோரத்தாக்குதலாகும்.
திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு தனது ஆட்சி மாற்றென நாளும் அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய் அவர்கள், இதுவரை இல்லாத அளவுக்கு தொலைக்காட்சியின் நெறியாளரையே குறிவைத்து ஒடுக்குவதெல்லாம் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பே��வலம்! பெருந்தலைவர் காமராச��், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்ற ஆளுமைமிக்கப் பெருந்தலைவர்களின் பெயர்களையெல்லாம் கூறிக்கொண்டு, ஆட்சி நிர்வாகத்தின் மீதான விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவமும், சகிப்புத்தன்மையும் இன்றி, காட்டாட்சியை ஏவிவிடுவது பாசிச வெறியாட்டமாகும். தவெக அரசின் இந்தக் கொடுங்கோல் போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ளாவிடில், சனநாயக ஆற்றல்கள் மூலம் மிகப்பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடு��ென எச்சரிக்கிறேன்.
ஆகவே, தம்பி விஜயன் அவர்களுக்கு காவல்துறையின் மூலம் விசாரணை எனும் பெயரில் எவ்வித நெருக்கடியும் தராது, உடனடியாக அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்!
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து
இலவச மதிய உணவு கொடுத்து
தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி,
வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு
33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து
வேளாண்மை செழிக்க வழி செய்த
ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை,
சேலம் உருக்கு ஆலை,
நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை,
திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்��ட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட
புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த
9 ஆண்டுகால ஆட்சியில்,
மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து
மக்களை ஏமாற்றவில்லை.
6 முறை கைது செய்யப்பட்டு
9 ஆண்டுகள் சிறைவாசம்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,
8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய
காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய
ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும்
ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக
சொத்து சேர்க்கவில்லை..!
கு��ும்பத்து வாரிசுகளுக்குப்
பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான
ஒப்பற்ற தூய ஆட்சி தந்து
தமிழ்நாட்டினை முன்னேற்றிய
தன்னிகரில்லாத் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காகப் போராடி
3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே
வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய
நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத்தறிவித்த இறைவன்!
நம்முடைய தாத்தா
பெருந்தலைவர்
காமராசர் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
தமிழினம் தன்னை மறந்து,
தன் அன்னை மொழியை, அழகிய பண்பாட்டை, உயர்ந்த நாகரீகத்தைப் பற்றியெல்லாம் எண்ணாத காலம். தாய்மொழியில் பேசுவது, எழுதுவது இழிவு எண்ணினர் தமிழர்.
அந்நியர் மொழியாம் ஆங்கிலத்தில் பேசுவது சிறப்பு, பெருமையென்று நினைத்தனர்.
இத்தகைய இருண்டகாலத்தே இருள்கிழித்து எழும் கதிரவனாய்த் தோன்றினார் நமது ஐயா 'தமிழ்க்கடல்' மறைமலையடிகள் அவர்கள்.
தமிழகமெங்கும் சென்று, செந்தமிழின் சி���ப்பு, தமிழர்ப் பண்பாடு, சைவச் சமயத்தின் உயர்வு போன்ற பலவகைப் பொருள்பற்றிப் பாங்குறப் பேசி, தமிழரிடையே ஒரு பெரும் விழிப்பினை ஏற்படுத்திய பெருந்தகை.
திருக்குறளே தமிழர்த் திருமறை, தமிழர் மறை நூல் அதுவே தமிழர் அறநூல் அதனைத் தமிழர் அனைவரும் கற்கவேண்டும், வாழ்வில் ஏற்றுப்போற்றவேண்டும், திருக்குறள் தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டும் என்றார்.
திருவள்ளுவர் ஆண்டைத் தமிழர் வாழ்வில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.
���மிழுக்காகவே, தமிழர் நலத்திற்காகவே, தண்டமிழ் நாட்டிற்காகவே வாழ்ந்த பெருந்தமிழர்!
தனித்தமிழ் அறிஞர் நம்முடைய ஐயா மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்தே கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா? முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
கன்னியாக��மரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே மரணித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கைதுசெய்யப்பட்டபோது எவ்வித உடல்நலக்குறைபாடுமில்லாது, முழு நலத்தோடு இருந்த சபரிவர்மன் விசாரணைக்குப் பிறகு, இறந்துபோகிறாரென்றால், இது காவல்துறை செய்திருக்கும் பச்சைப்படுகொலையாகும். எ���்தக் குற்றமிழைத்தவராக இருந்தாலும், அவரைச் சட்டத்தின்படிதான் தண்டிக்க வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்வது என்பதை எதன்பொருட்டும் ஏற்க முடியாது.
முந்தைய திமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்த காவல் மரணங்களுக்கு எதிராகப் பேசிய இன்றைய முதல்வர் விஜய் அவர்கள், தற்போதைய தவெகவின் ஆட்சியில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை செய்திருக்கும் இந்த��் படுகொலைக்கு என்ன செய்யப் போகிறார்? தார்மீகப் பொறுப்பேற்று, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்தப் போகிறாரா? இல்லை! முந்தைய திமுக, அதிமுகவின் ஆட்சிக்காலங்களைப் போலவே, சிறைவாசிக் உடல்நலக் குற��பாட்டால் இறந்ததாகக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு காவல்துறையினரைக் காப்பாற்றிச் சிக்கலைக் கடத்திவிடப் போகிறாரா? திமுக, அதிமுக செய்த நிர்வாக அணுகுமுறைகளைத்தான் முதல்வர் விஜய்யும் கடைப்பிடிப்பாரென்றால் இதிலென்ன மாற்று இருக்கிறது? இதிலென்ன எளிய மக்களுக்கான அரசியல் இருக்கிறது? சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்களைப் பாதுகாத்து, முதல்வர் விஜய் இதுவரை வாய்த��றக்க மறுத்து வருவது அதிகாரத்திமிர் இல்லையா? திமுகவின் ஆட்சியில் நடந்த காவல் மரணங்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவோம் எனத் தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, தம்பி ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கான நீதியைப் பெற்றுத் தராது தவெக அரசு வஞ்சித்த நிலையில், தற்போதைய சபரிவர்மன் மரணத்துக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகவே, விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மதுக்கடைகளை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை!
@CMOTamilnadu@TVKVijayHQ
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் பள்ளி செல்லும் வழியில் மாணவச்செல்வங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகளின் கையைக் கிழித்து தவெக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்க���டங்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் மூடிவிட்டதாகக் கூறும் தவெக அரசின் பட்டியலில் அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் இயங்கிய மதுக்கடை இடம்பெறாமல் போனது எப்படி? தமிழ்நாடு முழுவதும் இதுபோல் இயங்கிவரும் மற்ற மதுக்கடைகளை தவெக அரசு மூடப்போவது எப்போது? பள்ளி செல்வதற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? கல்வி கற்பதை விட்டுவிட்டு, மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாணவக் கண்மணிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு ஆளாக்கியது மனிதப் பேரவலம் இல்லையா? மாணவிகள் போராடும் வரை மதுக்கடைகளை மூடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? மாணவிகள் போராடிய பிறகும், மதுக்கடைகளை மூடாமல் காவல்துறையை ஏவித் தாக்குதல் நடத்தியிருப்பது கொடுங்கோன்மை இல்லையா?
பிஞ்சு குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளைக் காயப்படுத்த தவெக காவல் துறைக்கு எப்படி மனசு வந்தது? இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா? இக்கொடுமைகளை நிகழ்��்தத்தான் மக்கள் உங்களை ஆட்சியில் அமர்த்தினார்களா? பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண்கள் காவல் படையை உருவாக்கிய தவெக அரசு, காவல்துறையிடமிருந்து மாணவிகளைப் பாதுகாக்க என்ன படையை உருவாக்கப்போகிறது?
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் முற்று முழுவதுமாக மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நீண்டகால முதன்மையான கோரிக��கையாகும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்போம் என்று கூறும் தவெக அரசு, டாஸ்மாக் கடைகளில் விற்பது போதைப்பொருள் அல்லாமல் புனிதத் தீர்த்தமா? அதனை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? முந்தைய திமுக, அதிமுக அரசுகள் செய்த டாஸ்மாக் மது விற்பனையை தவெக அரசும் தொடர்வது வெட்கக்கேடானது. போதைப்பொருள் ஒழிப்பு நாளில் உறுதிமொழி எடுத்தால் மட்டுமே ஒழிந்துவிடாது முதல்வர் அவர்களே! டாஸ்ம���க் கடைகளை முழுவதுமாக மூடுவதற்கான உறுதியான நடவடிக்கையை எப்போது எடுப்பீர்கள்? சட்டம் ஒழுங்கை சீரழித்து, சமூகத்தின் அனைத்து குற்றச்செயலுக்கும் காரணமான மதுக்கடைகளை மூடுவதே போதைப்பொருளை ஒழிப்பதற்கான முதற்படியாகும்.
ஆகவே, அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிய மாணவிகளைத் தாக்கிய காவல்துறையினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாணவிகளின் அறப்போராட்டத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமெனவும், முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தவெக அரசின் காவல்துறை தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்பு பிள்ளைகள் விரைந்து நலம்பெற விழைகிறேன். கண் முன்னே நடக்கும் அநீதிக்கு எதிராகச் சிறிய வயதிலும் சமூகப் பொறுப்புணர்வோடு தீரத்துடன் போராடிய அரியலூர் மண்ணின் வீரமகள்களுக்கு என்னுடைய அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
க���ட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா? வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், 50 நாட்கள்வரை கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர் விஜய் அவர்கள், அதிமுகவைச் சேர்ந்த சட்டமன் உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவி விலகி, தவெகவில் சேர்ந்ததையடுத்து, உடனடியாக கரூருக்குச் செல்ல முற்படுவதும், மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கத் திட்டமிடுவதும் மலினமான வாக்கரசியலாகும். கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 35 இலட்சம்வரை துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அரசு வேலை என அறிவிப்பது இடைத்தேர்தலுக்காகச் செய்யப்படும் அற்பத்தனமாகும்.
கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரைக்கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் மரணித்தது ஏற்கவே ம���டியாத பேரவலம். சமகாலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய துயரம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி. அதில் உறவுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டியது தார்மீகக் கடமை. அது முழுமையாக வழங்கப்பட்டுவிட்டப் பிறகு, கரூர் இடைத்தேர்தலுக்காக அரசு வேலை என அறிவிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகும். அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசு அலுவலகத்தில் பதிவுசெ���்துவிட்டு, வேலைக்காக பல இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குரிய வேலைவாய்ப்பினைத் தராது, இடைத்தேர்தல் அரசியல் இலாபத்துக்காக அரசு வேலையைத் தாரைவார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் நின்று உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கோ, சுகாதாரத்தைப் பேணிகாக்க தூய்மைப்பணியாளர்களாகப் பணிசெய்து, நச்சு வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கோ, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று, சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கோ கிடைக்காத அரசுப்பணி, திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்குமென்றால், இது எந்தவிதத்தில் சரியானது?
கரூரில் உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு தவெகவும், இன்றைக்கு முதல்வர் விஜய்யும்தான் முழுமுதற் காரணம் என்பதை நாடறியும். ஆனால், இந்தநொடிவரை அந்த மரணங்களுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது, தன் மீது பழிபோடுவதாகச் சொல்லி, அரசியல் செய்து வருவது மிகக் கீழ்த்தரமானது. அதனைத் தாண்டி, கரூர் இடைத்தேர்தலுக்காக அப்பேரவலத்தைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாட முனைவது குரூரத்தின் உச்சம். கரூரில் உயிரிழப்புகள் நிகழ்ந்தபோது களத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காது, வி���ைந்து வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களுடைய வீட்டுக்குச் சென்று பார்க்காது, ஒரு மாதம் கழித்து மாமல்லபுரத்திலுள்ள விடுதிக்கு அழைத்துப் பார்த்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீது இப்போது கொள்ளும் பரிவெல்லாம் இடைத்தேர்தலை மனதிற்கொண்டே நடக்கும் கேலிக்கூத்து. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பதிலும், அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதிலும் பொதிந்திருப்பது மனிதநேயமோ, தார்மீக உணர்வோ இல்லை; முழுக்க முழுக்க அரசியல் இலாப நட்டக்கணக்குதான்! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் கடந்த காலத்தில் துயர்துடைப்பு நிதி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், கூடுதலாக அவர்களுக்கு உதவ விரும்பினால் அதனை தவெகவின் சார்பாகவோ, முதல்வர் விஜய் தனிப்பட்ட முறையிலோ செய்யட்டும். அதனைவிடுத்��ு, அரசு வேலை என்பதனை இடைத்தேர்தலுக்கான கேடயமாகப் பயன்படுத்துவது முறையானதல்ல.
அரசு வேலைக்காக இரவு பகலாகப் படித்துவிட்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். தகுதித் தேர்வு எழுதிவிட்டு இன்றளவும் பணி ஆணை கிடைக்காமல் ஆசிரியர் பெருமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல ஆண்டுகள் பணி செய்துவிட்டு முறையான ஓய்வூதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பல்லாயிரம��� செவிலியர்களும், ஆசிரியர்களும், கௌரவ விரிவுரையாளர்களும், டாஸ்மாக் ஊழியர்களும், மின்துறை மற்றும் போக்குவரத்துப் பணியாளர்களும், தூய்மைப்பணியாளர்களும் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தவெக அரசு, இடைத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு கரூரில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவது மிகத் தவறானப் போக்காகும்.
ஆகவே, ��ரூர் இடைத்தேர்தலில் தன் அரசியல் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தவறான முடிவைக் கைவிட வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்த���ல் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவ���ல்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான ம���சமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? அல்லது அரசுப்பள்ளிகளுக்கும் அமைச்சரா? தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத்தவறுவது ஏன்?
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
"தனியார் பள்ளிகளுக்கான உரிமங்கள் ஜூலை மாதம் முதல் 100 விழுக்காடு இணையதளம் வாயிலாகப் பெறலாம்; நகைகள�� அடமானம் வைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். பள்ளிகளை நடத்துவது இலாப கணக்கு அல்ல; புண்ணியக் கணக்கு” என்று தனியார் பள்ளி நிறுவனங்கள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்ணீர் வடித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தா���ா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குத்தான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இ��ுக்கிறதா? தனியார் பள்ளிகள் எந்த அளவிற்குப் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா? உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தனியார் பள்ளிகள் நடத்துவது பு���்ணியக் கணக்கு என்றால் அரசுப்பள்ளிகள் நடத்துவது பாவ கணக்கா? அரசுக்கு அந்தப் புண்ணியம் சேர அமைச்சர் ராஜ்மோகன் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாவ புண்ணியக் கணக்கு பேசும் அமைச்சர் எத்தனை தனியார் பள்ளிகள் தத்தம் பள்ளிகளில் எத்தனை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாய் கல்வி தருகின்றன என்று கூற முடியுமா? தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?
தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகள் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயின்று வருகின்றனர். முறையான கழிப்பறை, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படாத பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. பல்லாயிரம் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் ச��வர்கள் இல்லை. போதிய ஆய்வகங்களோ, விளையாட்டு திடலோ, உபகரணங்களோ இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகள் குறித்த தினம் தினம் கண்ணீர் விடும் அமைச்சர் ராஜ்மோகன் அந்த அக்கறையில் சிறிதளவாவது அரசுப்பள்ளிகளைச் சீர்படுத்தி அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த காட்டாதது ஏன்?
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,554 அரசுப் பள்ளிகளில் 52 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், வெறும் 11,890 தனியார் பள்ளிகளில் 53 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அவர்களின் துயர் துடைத்து அரசுப்��ள்ளிகளின் கல்வித்தரம் உயர எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு தனியார் பள்ளிகள் குறித்துக் கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்துவதற்கு வெட்கமாக இல்லையா? தனியார் பள்ளிகள் குறித்து தவெக அரசு உள்ளம் உருகுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தவெக அரசை உச்சி முகர்வதும் இந்த அரசு யாருக்கானது, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கானதா? அல்லது தனியார் பள்ளி முதலாளிகளுக்கானதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
��கவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இனியாவது, தான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்பதை நினைவில்கொண்டு, தனியார் பள்ளிகளை மீதான அக்கறையில் சிறிதளவேனும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்��்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ
மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து!
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவாகும். நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அர���ுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது. இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய்யும் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளி��்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால், அது தற்போதிருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்தாக முடியும் எனும் குறைந்தபட்சப் பார்வையும், தொலைநோக்குச் சிந்தனையும்கூட இல்லாது, முன்வைக்கப்படும் நடுவர் மன்றக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்.
கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாது, மேல்பாசன மாநிலங்கள் அணை உள்ளிட்ட க��்டுப்பானப்பணிகள் ம��ற்கொள்ளக்கூடாது என்பது மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ச்சிக்கலில் பின்பற்ற வேண்டிய விதி; சட்டம். இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டல்களும் உறுதிசெய்கின்றன. கர்நாடகத்தைப் பொறுத்தவரை எல்லா விதிகளையும், சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு அடாவடித்தனம் செய்வதும், முழுக்கத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதுமானப் போக்குகளில்தான் த��டர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை உள்ளிட்டவை யாவும் விதிகளுக்கும், சட்டத்திற்கும் புறம்பாகவே கட்டப்பட்டது. விதிகளுக்கு மாறாகவே கர்நாடகத்தின் பாசனப்பரப்பும் விரிவுப்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாகவே, தற்போது மேகதாதுவிலும் அணை கட்டி, காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது கர்நாடக அரசு. மொத்தத்தில், தமிழ்நாட்டை மாறி ஆண்ட ஆண்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் காவிரி உரிமை காவு கொடுக்கப்பட்டது என்றே கூறலாம்.
தமிழ்நாட்டு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்கனவே இருக்கும் விதிகளின்படியே சட்ட விரோத��்தான் எனும்போது புதிய நடுவர் மன்றம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒருவேளை, நடுவர் மன்றம் புதிதாக அமைக்கப்பட்டால் சிக்கலை மேலும் நீட்டிக்கவும், இன்னும் பல காலம் அதனை இழுத்துக்கொண்டே போகவும் வழிவகை செய்திடும். ஒருவேளை, அந்நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி வாய்ப்பையும் தமிழ்நாடு இழக்க நேரிடும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில், காவிரி நதிநீர் உரிமைகளுக்கென நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித்தீர்ப்பு, தீர்ப்பு அரசிதழில் வெளியிடு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆணையம் எனப் பலகட்டப் படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, 177.25 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தர வேண்டும். அதனைத் தர மறுத்த�� சண்டித்தனம் செய்து வரும் கர்நாடக அரசு மழை, வெள்ளக் காலங்களில் பெய்யும் மழைநீரை வெளியேற்றும் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டை இதுவரைப் பயன்படுத்தி வருகிறது. மற்றபடி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நடுவர் மன்றத் தீர்ப்பு என எல்லாமிருந்தும் கர்நாடக அரசு அவற்றை ஏற்க மறுத்து அட்டூழியம் செய்கிறது.
காவிரியாற்றின் `குறுக்கே அணை கட்டுவதையும் தடுக்கவும், தமிழ்நாட்டுக்கு உரிய நதிநீர் பங்கீட்டைத் தரவும் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன. இருந்தபோதிலும், அவற்றைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப்போக்கோடு நடந்துகொள்கிறது கர்நாடக அரசு. தமிழ்நாட்டுக்கான உரிய நதிநீர் பங்கீட்டையும், நீதியையும் உறுதிசெய்ய சட்டப்பூர்வக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைக் கர்நாடக அரசு ஒருநாளும் மதித்து ஏற்பதில்லை என்பதுதான் இங்கிருக்கும் முதன்மைச்சிக்கல். உண்மை இவ்வாறிருக்க, மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் கோரிக்கை என்பது துளியும் ஏற்புடையதல்ல; அது தேவையற்ற சிக்கலையே புதிதாய் உருவாக்கும். நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். ���தனைக் கண்டித்து வரும் 27.06.2026 அன்று தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது எனப் பேரறிவிப்புச் செய்கிறேன்.
ஆகவே, காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் முடிவைக் கைவிட்டு, அத்தீர்மானத்தைப் பின்வாங்கி, புதிய தீர்மானத்தை இயற்ற வேண்டுமெனவும், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை உறுதிசெய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்டப்போராட்டங்களையும், ஆக்கப்பூர்வப் பணிகளையும் தொடங்கிட வேண்டுமெனவும் தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு : தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா நச்சுக்காற்று கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிப்பு; 60க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனும் துயரச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனர் பெண்கள் என்பது துயரத்தை மேலும் அதி���ரிக்கிறது. உயிரிழந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
ஏற்கனவே, வடசென்னை பகுதியில் அவ்வப்போது நிகழும் நச்சுக்காற்று கசிவால் அப்பகுதி மக்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த சூன் 2 அன்று துறைமுகம் பகுதியிலிருந்து கசிந்த நச்சுப்புகை���ால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்தவர்களே மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதும் நிகழ்ந்தேறியது. அதன்பிறகாவது, தவெக அரசு தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய உரிய நடவடிக்கை எடு��்திருந்தால் தற்போது திருவள்ளூரில் இத்தகைய கொடும் விபத்து நிகழ்ந்திருக்காது. தொழிற்சாலைகளில் அரசு தொடர்ச்சியாக முறையான ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இதுபோன்ற கொடும் விபத்துகள் நிகழ்வைத் தவிர்க்க முடியும்.
சூழலியல் சீர்கேடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், வளர்ச்சி என்ற பெயரில், வேலைவாய்ப்புகளைக் காரணமாகக் காட்டி, பன்னாட்டு, உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகளுக்கு சிவப்��ுக்கம்பளம் விரித்து வரவேற்கும் அரசுகள், இதுபோன்ற தொழிற்சாலைகள் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றவா? என ஒருநாளும் கண்காணிப்பதுமில்லை; சோதிப்பதுமில்லை. அதன் விளைவாகவே, இதுபோன்ற கோரவிபத்துகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆகவே, தவெக அரசு இனியேனும் தமிழ்நாடு முழுவதுமுள்ள தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து தொழிலாளர்களின் பாதுகாப்பினையும், சூழலியல் நலத்தினையும் உறுதி செய்திட வேண்டும். ம��லும், இவ்விபத்து நடந்தேறிய கன்னிகைப்பேர் பகுதியில் வாழும் மக்களுக்கு எவ்வித உடல்நலக்குறைபாடும் ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆகவே, உழைக்கும் தொழிலாளர்களின் உயிர்களைப் போக்கிய இக்கோர விபத்துக்கானப் பின்புலமும், பின்னணியும் கண்டறிய��்பட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தான் பார்க்காத உ��கத்தையும், தன்னை பார்க்காத உலகத்தையும் தம் குழந்தைகள் கண்டுவிட வேண்டுமென்ற உயர்ந்த இலட்சிய வேட்கையுடன் பெற்ற பிள்ளையை தம் தோளில் தூக்கி உயர்த்தி உலகை காட்டும் உன்னத வழிகாட்டிகள்..!
தம் குழந்தைகள் நிம்மதியாக நிமிர்ந்து நடக்க,
தான் படும் துயரங்கள் தம் குழந்தைகள் பட்டுவிடக் கூடாதென்று, கைகளில் காயங்களுடனும் கண்களில் சிரிப்புடனும்
தான் குனிந்து, வளைந்து உழைத்து
நம் கண் முன்னே நடமாடும் ஒப்பற்ற தெய்வங்கள்..!
கண்டிக்கும் நேரத்தில் காவலனாய்..
கற்பிக்கும் நேரத்தில் ஆசானாய்..
அரவணைக்கும் நேரத்தில் அன்னையாய்..
தவிக்கும் நேரத்தில் தோழனாய்.. ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையை கற்றுத்தரும் உலகின் முதல் நாயகர்கள்..!
'கண்டிப்பிலும் தண்டிப்பிலும்
கொதித்திடும் அவரின் முகம் ..
காய்ச்சல் வந்து படுக்கையில்
துடிப்பதும் அவரின் முகம் ..
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே ..!
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் ..
தந்தை அன்பின் பின்னே ..!'
என்ற என்னுயிர்த் தம்பி நா.முத்துக்குமாரின் உள்ளத்தை நெகிழச்செய்யும் பாடல் வரிகளுக்கு ஏற்ப
தம் குழந்தைகளின் வெற்றியையே தன்னுடைய வெற்றியாக கருதி
வாழும் நாள் வரை குழந்தைகளை உள்ளத்தில் சுமந்து, குடு��்பத்தின் உயர்வுக்காக உழைத்து உழைத்து ஓடாய் தேயும் உன்னத அப்பாக்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த தந்தையர் நாள் நல்வாழ்த்துகள்!
கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளியால் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை! என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இச��� வாசித்துக்கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
@CMOTamilnadu @TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வடமாநிலத் தொழிலாளி பிபின் மஞ்சி என்பவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு இதயத்தை நொறுக்குகிறது. பெற்ற குழந்தையைப் பறிகொடுத்து ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவித்து நிற்கும் பெற்றோருக்கு என்ன வார்த்தைகள் கூறினாலும் அவர்களின் மனதவிப்பை ஆற்றிவிட முடியாது. பஞ்சு போன்ற குழந்தைய���ன் காலில் சிறு முள் குத்தினாலும் தாங்க முடியாத தாய் - தந்தையரின் இழைக்கப்பட்ட இப்பெருங்கொடுமையை எப்படிக் கடந்து வாழப்போகிறதோ என்று எண்ணும்போதே நெஞ்சம் பதறுகிறது.
தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் பெண்கள் பாதுகாப்பிலும், போதைப்பொருள் ஒழ��ப்பிலும் அலட்சியம் காட்டுவது பேராபத்தானது. அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் காரணமான போதைப்பொருளை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிடுவதில் அதீத கவனம் செலுத்தும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள், போதைப்பொருளை ஒழிப்பதில் அத்தகைய ஆர்வத்தையும், வேகத்தையும் காட்டுவதில்லையே ஏன்? போதை ஒழிப்பை முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய அரசிடமிருந்து தொடங்க வே��்டும். ஊர் முழுக்கப் புதிதாக டாஸ்மாக் பார்களைத் திறந்து வைத்துவிட்டு போதைப்பொருளை ஒழிக்கப்போவதாகத் தவெக அரசு கூறுவது நகைப்புக்குரியது. வெட்கக்கேடானது.
கடந்த திமுக ஆட்சியில் இதேபோன்று கும்மிடிபூண்டியில் 10 வயது சிறுமி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோதே, அதனை நான் கடுமையாகக் கண்டித்ததோடு, பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்துள்ள வடமாநில தொழிலாளிகள் வருகை மற்றும் இருப்பு குறித்து முறையான ஆவணப்பதிவு அவசியம் என்றும், அவர்களின் கட்டுப்பாடற்ற நடமாட்டம் குறித்துத் தொடர் கண்காணிப்பு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அன்றைய திமுக அரசும், இன்றைய தவெக அரசும் வடமாநிலத்தவர் வருகை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே தற்போதும் வடமாநில தொழிலா��ியால் மீண்டும் ஒரு பெண் குழந்தை அநியாயமாக வன்கொடுமைக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளது.
ஏதும் அறியா பெண்குழந்தைகளை வன்கொடுமை செய்யும் ஈவு இரக்கமற்ற கொடூர குற்றவாளிகளுக்கு விரைவான மரண தண்டனை அளிப்பது ஒன்றே, இதுபோன்ற கொடுங்குற்றங்களைத் தடுப்பதற்கு ஒற்றை வழியாகும். அத்தகைய உறுதியும், பெண்கள் மீத���ன அக்கறையும் இல்லாததாக ஆளுகின்ற அரசுகள் இருக்கும் வரை இதுபோன்ற கொடூர குற்றங்களை ஒழித்திட முடியாது.
ஆகவே, தவெக அரசு இனியாவது வெற்று விளம்பர அரசியல் செய்வதை நிறுத்தி, பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கடலூர் பரங்கிப்பே���்டை கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது!
@CMOTamilnadu @TVKVijayHQ
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று போராடி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
நிலத்தையும், நீரையும் மாசுபடுத்திச் சுற்றுச்சூழலை சீர் கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அனுமதிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது. காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் திட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்தது. அதனையடுத்து, திமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி, இராமநாதபுரம் கடற்கரை பகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தொடங்கவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கடும் எதிர்ப்புப்போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆண���யத்திடம் (TNCZMA) சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதி பாரம்பரிய மீன்பிடித் தொழில் பகுதி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தொடங்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டமானது கடல் நீரை மாசுபடுத்தி, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை அழித்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கே பேராபத்தை ஏற்படுத்தும்.
தனியார் பெருநிறுவனங்களின் நலனுக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும், கடல் வளத்தையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு அனுமதியளிக்க வேண்டாமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி