@directorganesan@annamalai_k Cho was the real chanakkya!
Some journos trying hard but they keep bringing shame to themselves by exposing their inability to read the political ground!
@rangaraj
@ChanakyaaTv அதுக்கு முன்னே பலவீனம் அடைந்து விட்டது! கூட்டணி ஒரு மிகப்பெரிய தவறு. தனியாக சென்று இருக்க வேண்டும்! வரலாற்றில் எப்போது திரும்பி பார்த்தாலும் 2026 தமிழக பாஜகவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை பறிகொடுத்த கோபத்தை தந்து கொண்டே இருக்கும்!
@Shibin_twitz@DrTamilisai4BJP கிணற்றில் போட்ட கல்லு மாறி அப்படியே இருக்குன்னு சொல்லுவாங்க போல! பொது மக்களை கவரும் அரசியல் செய்யாமல் தங்கள் அறிவாளி தனத்தை நிரூபிக்க முயலும் தமிழிசை போன்ற ஆட்கள் இருக்கும் வரை கட்சி வளராது.
திருந்தாத OG’s! நேற்று விஜய்.. இன்று அண்ணாமலை!
...........................................................
தவறு செய்வது மனித இயல்புகளில் ஒன்று. ஆனால் செய்த தவறை திருத்திக்கொண்டு பாடம் கற்பது தான் நல்ல அறிவு நாணயம் கொண்ட மனிதர்களின் குணம். ஆனால் தமிழகத்தில் ஒரு சில மாதங்களாக நடந்து வரும் நிகழ்வுகளுக்கு இங்கு இருக்கும் OG பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் செய்யும் திணிப்புகளை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இதனால் இங்கு இருக்கும் பத்திரிகை சமுகத்தின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகிவிட்டது.
அவர்களின் பார்வையில் நான் பெரிய பத்திரிகையாளராக இல்லாமல் இருக்கலாம். பெரிய தலைவர்களை எனக்கு தெரியாமல் இருக்கலாம். நான் கால் செய்தால், எந்த பெரிய தலைவர்களும் அமைச்சர்களும் Phone எடுக்காமல் இருக்கலாம். ஆனால் இன்னும் நான் லோக்கல் ரயிலில் பயணிக்கிறேன். வரிசையில் நின்று நியாயவிலை கடையில் பொருட்கள் வாங்குகிறேன். அரசு மருத்துவமனையில் நோட் போட்டு சிகிச்சை எடுக்கிறது என் குடும்பம். இவர்கள் பார்வையில் நான் சாதாரண வெத்துவெட்டு பத்திரிகையாளராகவே இருந்துவிட்டுபோகிறேன். ஆனால் எளிய மக்கள் பேசுவதை காதில் வாங்குகிறேன். அவர்களுடன் கூட்டத்தில் ஒருவனாகவே நானும் அமர்ந்து இருக்கிறேன்.
இவர்கள் 2 மாதங்களுக்கு பேசியவை உங்களுக்கு நினைவில் இருக்கா.. விஜய் வரவே மாட்டார். கூட்டம் எல்லாம் ஓட்டுகளாக மாறாது. விசில் சத்தம் திரையரங்கில் தான் கேட்கும். சட்டமன்றத்தில் கேட்காது. கூத்தாடிக்கு அரசியல் செய்ய தெரியுமா என்றெல்லாம் கூச்சமில்லாமல் கேட்டார்கள். ஆனால் இன்று தமிழக மக்கள் அதிகம் கொண்டாடும் தலைவராக முதலமைச்சராக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் விஜய். ஆனால் அப்படி பேசியவர்களின் நேர்மையை பாருங்கள் விஜய் ஜெயித்தால், அரசியல் பேச மாட்டேன் என்று சொன்ன பலர் இன்றும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். யாருக்கும் வெட்கமில்லை. எளிய மக்களின் தவிப்பை புரிந்தவர்களுக்கு தான் அவர்களின் சிந்தனை புரியும். விஜய் மீதான தங்களது கணிப்பு பொய்த்துப்போனது, எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று தப்பை உணரும் நேர்மை கூட இல்லை. பரவாயில்லை.
ஆனால் விஜய்க்கு நேற்று நடந்தது இன்று அண்ணாமலைக்கு நடக்கிறது. அண்ணாமலை என்ன கிழித்தார்.. அவர் ஜெயிக்கமாட்டார்.அவர் ஒரு போலி பிம்பம். அவர் திட்டமே தனிக்கட்சி தொடங்குவது தான். அவர் திராவிட குரலில் பேசுகிறார். இவரால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. அவரது கட்சியில் சேர்பவர்கள் வீணாகப்போவார்கள் என்றெல்லாம் பேச தொடங்கி இருப்பது கேட்கவே அறுவறுப்பாக உள்ளது. நேற்று சொன்ன பொய்களுக்கே வருத்தம் தெரிவிக்காதவர்கள், இன்று இன்னொரு விஷயத்துக்கு வந்துவிட்டார்கள்.
அடிப்படையில் ஒரு விஷயம் தெளிவாகிறது. சமூகத்தின் மீதான இவர்களது பார்வை பழுதடைந்துவிட்டது. அதை சரி செய்ய இவர்களுக்கு சக்தி இல்லை. இளைஞர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை ஒரு துளி கூட இவர்களால் உணர முடியவில்லை.
அண்ணாமலை தோற்றே போகட்டும். இங்கே தினம் தினம் ஆயிரம் பேர் தோற்றுபோகிறார்கள்.
அவர்களில் அண்ணாமலையும் ஒருவராக இருந்துவிட்டுபோகட்டும். கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் இந்தியா போன்ற மிகபெரிய ஜனநாயக நாட்டில் இன்னும் ஆயிரம் பேர் கட்சி தொடங்கினாலும், மக்கள் சேவைக்கு வந்தாலும், அது போதாது. இப்போது தான் அரசியலின் பக்கம் இளைய சமூதாயம் திரும்பி இருக்கிறது. அந்த இளைஞர்கள் கூட்டத்துக்கு பல கனவுகள் உள்ளன. இன்னும் பலர் அரசியல் கட்சி தொடங்கினாலும் மிகுந்த போட்டிக்கு மத்தியில் மக்களுக்கு இன்னும் தரமானது கிடைக்கும். ஆனால் கருத்து சொல்கிறோம் என்ற பெயரில் இவர்கள் செய்வது பழைய நாசக்கார System அப்படியே இருக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு. வேறு காரணங்களும் இருக்கலாம்.
எனவே சொல்கிறேன் இன்னும் ஆயிரம் விஜய்கள்... ஆயிரம் அண்ணாமலைகள் வரட்டும். நம்பிக்கை வந்தால் மக்கள் தேர்வு செய்யட்டும். இல்லாவிட்டால் போகட்டும்.
#vijay #Annamalai #TN
@ChanakyaaTv 45 வயது! அவர் இன்னும் 20 வருட கடின உழைப்பை அங்கு தந்து ஒரு நிலையான இடத்தை அரசியலிலும் மக்கள் மனதிலும் பிடிக்கலாம்! அவர் விலக வேறு காரணம் இருக்கு, அதில் முக்கியம் சமரசம் இல்லாத அரசியல் மக்கள் முன்னேறாம்!
@MuthurajJoseph@ChanakyaaTv ஆவணப்படுத்தப்பட்ட தமிழ் வரலாறு என்று ஒன்று இருக்கு, அதில் தமிழ் வேந்தர்கள் தொடங்கி இலக்கியம் எல்லாம் வரும்! அதுதான் தமிழ் வரலாறு! எனக்கு தெரிந்து அதை அவர் இழிவு படுத்தவில்லை. சுப்ரமணிய பாரதி போன்ற ஒரு தமிழ் இந்தியன் அண்ணாமலை!
@ThanthiTV அப்படியெல்லாம் இல்லை!இதுபோன்ற படிக்காத அரசியல்வாதிகள் வாய்க்கு வந்ததை சொல்லி அரசியல் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்! அந்த அரிசி பறவைகள் மற்றும் சிறு பாலுட்டிகளுக்கு இரையாகிறது. உணவு சங்கிலி பற்றி பேசினால் இவர்களுக்கு புரியுமா என்பதும் சந்தேகம் தான்! கடந்து செல்வோம்!
@major_madhan@annamalai_k This society needs many good leaders! KA is one of them for sure! ஒரு கிராமத்தில் பொது இடத்தில் குப்பை போடக்கூடாது என்று ஒருவர் சொல்லி அதை 100 பேர் கேட்டாலே ஊர் சுத்தமாக இருக்கும்! ஆனால் அப்படிப்பட்ட ஆட்களை நாம் உருவாக்கவில்லை! நல்ல தலைமுறையை உண்டாக்க இங்க மாற்றம் வேண்டும்!
@ChanakyaaTv தேசமே பிரதானம் ஆனால் தேசத்தை பின்னோக்கி இழுக்கும் ஊழல் கட்சிகளை ஆட்சிக்கு கொண்டு வர முயற்சி செய்வோம்!! இது என்ன நிலைப்பாடு?! தேசம் முக்கியம் என்பது வெற்று கோசம் அல்ல, செயல்!!