தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டம் வெற்றிகரமாக அமைய, தலைவர் ப. மாணிக்கம் தாகூர் MP அவர்கள் ஒப்புதலோடு இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
#TamilNaduCongress
சிவகாசி, நமஸ்கரித்தான்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக உரிய நிவாரண உதவிகள் வழங்கிட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இனிவரும் காலங்களில் பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் உயிருக்கு உரிய பாதுகாப்பை @VNRCollector உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilNadu@Keerthana4VNR
#Sivakasi
Hon'ble Congress President has approved the proposal for the constitution of the State Training Department for Tamil Nadu, as follows, with immediate effect.
சமூக ஊடகங்களில் இதுபோன்ற உருவக்கேலி செய்யும் ஒரு வன்மவாதிக்கு தான் கடந்த திமுக ஆட்சியில் ஐந்து வருடங்கள் மாதாமாதம் மக்கள் வரிப்பணத்தில் இருந்து மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது உங்களில் கித்னா பேருக்கு தெரியும் ❓ @Iyankarthikeyan
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ,நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பைக் கண்டித்து நாளை கண்டனப் சத்தியாகிரகம்##*
அன்புடையீர், வணக்கம்.
உத்தரகாண்ட் மாநிலம்,
ஹல்த்வானி நகரில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த பேராதரவைக் கண்டு பொறாமையடைந்த தீவிர வலதுசாரி அமைப்பினர், திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் எளிய சமூகப் பின்னணியில் இருந்து உயர்ந்தவர் என்பதைக் காரணமாகக் கொண்டு, அவர் பங்கேற்றதால் அந்த இடம் “தீட்டுப்பட்டுவிட்டது” என்று கூறி,
கங்கை நீரைத் தெளித்து அந்த இடத்தை “சுத்திகரிப்பு” செய்துள்ளனர்.
சாதிய வன்மத்துடனும்,
தீண்டாமை மனநிலையுடனும் நடத்தப்பட்ட இந்தப் பிற்போக்குத்தனமான செயல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு மட்டுமல்ல; சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி மற்றும் மனித மாண்பை நிலைநாட்டும் இந்திய அரசியலமைப்பிற்கே விடுக்கப்பட்ட சவாலாகும்.
எனவே, இந்த அவமதிப்புச் செயலையும் சாதிய பாகுபாட்டு மனநிலையையும் வன்மையாகக் கண்டித்தும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முழுமையான ஆதரவைத் தெரிவித்தும், நாளை (14.08.2026) மாலை தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் கண்டன சத்தியாகிரகப் போராட்டமும் நடத்திட வேண்டும்.
மாவட்டத் தலைவர்கள் தலைமையில் நடைபெறும் அண்ணல் காந்தியடிகள் சிலையிலிருந்து தொடங்கி, புரட்சியாளர் அம்பேத்கர் சிலை முன்பு நிறைவு பெறும் வகையில் அமைக்க வேண்டும். அங்கு சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தி, சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை மனநிலைக்கு எதிரான காங்கிரஸ் பேரியக்கத்தின் உறுதியான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
மாவட்ட, வட்டார நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்று, இந்தப் போராட்டத்தை எழுச்சியுடனும் வலிமையுடனும் நடத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
*சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான சாதிய மனநிலைக்கு இந்திய மண்ணில் இடமில்லை என்பதை உரக்கச் சொல்வோம்🤝@INCTamilNadu@GAMIR_INC@nivedithalva@PChidambaram_IN@DrAChellaKumar
Hon'ble Congress President has approved the proposal for the appointment of Presidents of the District Congress Committees in Tamil Nadu, under Sangathan Srijan Abhiyan, as follows, with immediate effect.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்புகளை சீரமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சீரமைக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்று அதில் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் கலந்து கொண்டார்.
இயக்க சீரமைப்பின் இரண்டாம் கட்டமாக தமிழகமெங்கும் உள்ள வட்டார, நகர, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டிகளும், மாநகராட்சிகளில் உள்ள சர்க்கிள் மற்றும் வட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் முழுமையாக சீரமைக்கும் திட்டத்தை தமிழக காங்கிரஸ் துவங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 75000 வாக்குச்சாவடிகளை, பத்து வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற அடிப்படையில் சுமார் 7500 மண்டல காங்கிரஸ் தலைவர்களும் நியமிக்கப்பட இருக்கின்றனர். இந்த இயக்க சீரமைப்பின் இரண்டாம் கட்ட பணிகளை ஒருங்கிணைக்க ஒரு ஒருங்கிணைப்பு குழுவினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்படுத்தி உள்ளது.
அந்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவரும் மேனாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் நியமிக்கப்படுகிறார்.
ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களாக திரு. கே.சிரஞ்ஜீவி, திரு. கே. தணிகாசலம், திரு. என். அருள்பெத்தையா, திரு. எஸ்.டி. நெடுஞ்செழியன், திரு. ஆர்.எம். பழனிச்சாமி, Ex.MLA, திரு. வி.ஆர். சிவராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட அளவில் இந்த பணிகளை மாவட்ட தலைவர்களோடு இணைந்து செயல்படுத்திட 74 கட்சி மாவட்டங்களுக்கு, இயக்கப்பணிகளில் நீண்ட அனுபவம் பெற்ற 74 மேனாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும் பார்வையாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட உள்ளனர்.
திரு ப மாணிக்கம் தாகூர் MP
மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வு பேரணி!
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பின்படியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப.மாணிக்கம் தாகூர் MP அவர்களின் ஆலோசனையின்படியும், தமிழக மக்களின் அரசியல் உரிமைகளைப் பறித்து, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவரவுள்ள மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக, வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாவட்ட தலைவர் திரு. ஜெ. டில்லிபாபு MC அவர்கள் தலைமையில், கண்ணதாசன் நகர் EB அருகிலுள்ள காமராஜர் சிலையிலிருந்து தொடங்கிய இப்பேரணியை, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் தொடங்கி வைத்து, தொண்டர்களுடன் நடைபயணத்தில் பங்கேற்றார்.
“REJECT MODI – REJECT DELIMITATION” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இப்பேரணி, கண்ணதாசன் நகர் காமராஜர் சிலையிலிருந்து MR நகர் சீலம் பேக்கரி அருகிலுள்ள ராஜீவ் காந்தி சிலை வரை நடைபெற்றது. தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
இப்பேரணியில், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள் மற்றும் வட்டத் தலைவர்கள், பிரிவு தலைவர்கள், கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்போம்!
ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம்!
தொகுதி மறுவரையறை திணிப்பை எதிர்ப்போம்!
#RejectModi #RejectDelimitation #Delimitation #Congress #TamilNaduCongress
@INCIndia@INCTamilNadu@manickamtagore
हम पहले से कहते आ रहे हैं कि इस देश में दलितों के लिए कोई जगह नहीं है। आखिर वहां 'हवन' की क्या ज़रूरत थी?
रामलीला मैदान में हर पार्टी के लोग जनसभा करते हैं, लेकिन वहां जो किया गया, वह हिंदू धर्म के खिलाफ है।
इससे यह भी साफ होता है कि BJP के लोग देश को बांटने और जातियों के बीच झगड़ा कराने का काम कर रहे हैं।
यही BJP की कथनी और करनी में फर्क है। मैं इसकी निंदा करता हूं।
: उत्तराखंड में रामलीला मैदान का शुद्धिकरण करने पर कांग्रेस अध्यक्ष और राज्यसभा में नेता प्रतिपक्ष श्री @kharge का वक्तव्य-
I moved a resolution in the Rajya Sabha today to disapprove the introduction of the Mines Bill & protect states' rights & fiscal autonomy.
Expectedly, it was disallowed
மாநிலங்களின் உரிமைகளையும் நிதி தன்னாட்சியையும் பாதுகாப்பதற்காக, சுரங்க மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வந்தேன்.
எதிர்பார்த்தபடியே, அது நிராகரிக்கப்பட்டது