சென்னை மின்வாரிய தலைமையகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 700 உதவிப் பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டேன்.
முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, திறமையான மனிதவளத்தை ஊக்குவித்து, பொதுமக்களுக்கு தரமான மற்றும் தடையற்ற மின்சேவையை வழங்குவதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறது.
பதவி உயர்வு என்பது ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல; மேலும் அதிக அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய புதிய வாய்ப்பாகும். பதவி உயர்வு பெற்ற அனைத்து அதிகாரிகளும் மின்வாரியத்தின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
பதவி உயர்வு பெற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
@CMOTamilnadu@TVKVijayHQ
#TNEB #TANGEDCO #TamilNadu #PowerSector #CTRNirmalKumar
பெண்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த சமூகப் புரட்சியாளர்,
மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த தினம் இன்று!
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராகவும், பெண்களின் கல்வி, மருத்துவம், சமூக நீதி மற்றும் மகளிர் உரிமைக்காக எண்ணற்ற சாதனைகளைப் படைத்த பெருமைக்குரிய பெண் தலைவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு எனது பணிவான மரியாதையையும் புகழஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களின் முன்னேற்றம், சமூக நீதி மற்றும் மனிதநேயத்தை உயர்த்திப் பிடித்த அவரது தொலைநோக்குச் சிந்தனைகளும், அர்ப்பணிப்புமிக்க சேவைகளும் என்றும் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழட்டும்.
அவர் விதைத்த சமத்துவம், கல்வி மற்றும் மகளிர் முன்னேற்றத்தின் விதைகள் என்றும் இச்சமூகத்தில் செழித்து வளரட்டும்.
மகளிர் முன்னேற்றத்தின் முன்னோடி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்! 💐
#DrMuthulakshmiReddy #WomenEmpowerment
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக 'அவ்வை இல்லம்', புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக 'அடையாறு புற்றுநோய் நிலையம்' போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி ஆவார்.
அவரது உயரிய இலட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்!
#CMJosephVijay
இன்று சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) வளாகத்தில் இயங்கும் எரிசக்தி ஆய்வகம் (Energy Lab) மற்றும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BEES - Battery Energy Storage System) ஆகியவற்றைப் பார்வையிட்டு, எதிர்கால எரிசக்தித் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக அறிந்துகொண்டேன்.
தொடர்ந்து, மாணவர்களின் தொழில் வழிகாட்டல் மாநாடு 2026 நிகழ்ச்சியில் பங்கேற்று, இளைஞர்களின் திறன் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி அடைந்தேன்.
புதுமை, அறிவியல் மற்றும் திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்டு இளைஞர்களை உருவாக்குவதே தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான வலுவான முதலீடாகும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
This year, I wish you with immense happiness and a heart full of pride as the Honourable Minister of Tamil Nadu and a proud leader of TVK, @CTR_Nirmalkumar Anna❤️🙏
Wishing you a very healthy, happy, and prosperous year ahead. 🎉🎂
Anna, you make us proud every single day with your dedication, leadership, and service to the people. Your journey continues to inspire us, and it is truly a privilege to work alongside you.
As your beloved sister, I wish you nothing but only the best always!!
@TVKHQITWingOffl | @CTR_Nirmalkumar
#HappyBirthdayCTRANNA🎊
@TVKHQITWingOffl | @CTR_Nirmalkumar
மாண்புமிகு தமிழக முதல்வர், எங்கள் ஆருயிர் அண்ணன் தளபதி திரு. ஜோசப் விஜய் @சிஎம் அவர்களின் ஆசியுடன்,
கழகப் பொதுச் செயலாளர், எங்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அப்பா திரு. N. ஆனந்த் @bussyanandoffl அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி, போதும்பு கிராமத்தில் உள்ள ஈகிள் நகரில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இலவச ஆரி வேலைப்பாடு மற்றும் சேலை அணிவித்தல் (Saree Draping) சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போது…
பெண்களின் திறமைகளை வளர்த்து, அவர்களை சுயசார்புடன் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதே தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கம்! 💪✨
#TVK #தமிழகவெற்றிக்கழகம் #ThalapathyVijay #NAnand #BussyAnand #WomenEmpowerment
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
#CMJosephVijay | #Census2027 |
தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்.
கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர்.
எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக!
#CMJosephVijay
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாள்
தமிழகத்தின் கல்விப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்த,ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்த,நேர்மை, எளிமை மற்றும் மக்கள் சேவையின் அடையாளமானபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாளில்
அவரது உயரிய சிந்தனைகளையும், தன்னலமற்ற பொதுச்சேவையையும்
போற்றி வணங்குகிறோம்.
“ஒவ்வொரு குழந்தையும் கல்வி பெற வேண்டும்” என்ற அவரது கனவை
நனவாக்கும் பணியில் நாம் அனைவரும் உறுதியாக பயணிப்போம்!
@TVKVijayHQ | @BussyAnand@TVKHQITWingOffl
ஒரு முதல்வரால மக்களுக்கு கொடுக்க முடிஞ்ச ஆகப்பெரிய சொத்து 'தைரியம்' தான்!
"நான் இருக்கிறேன்" என்று தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் முதலமைச்சர்தான் மக்களுக்கான மிகப்பெரிய பலம்.
லஞ்சமில்லா நேர்மையான ஆட்சியை நோக்கி தமிழ்நாடு!
#TNCMCaresForKarur
It was a pleasure being a part of the Cancer-Free Medical Camp organized by the Madurai West Union in association with Hyundai Hope On Wheels.
I had the privilege of participating in this noble initiative alongside the Honorable Member of the Legislative Assembly of Sholavandan Constituency, Mr. M.V. Karuppaiyaa,@mvkaruppaiahtvk along with Director Dr. Veda Shastri from @karkinoshealthcare and our committed party cadres who continue to work tirelessly for the welfare of the people.
This medical camp benefited more than 100 individuals, providing them with essential cancer screenings, medical consultations, and diagnostic tests. Participants were also guided on follow-up care and the importance of early detection, reaffirming our commitment to safeguarding public health.
Cancer is not just a medical challenge; it is a social responsibility that demands collective action. At a time when cancer cases are increasing across India, awareness, prevention, and early diagnosis have become more important than ever. Through initiatives like these, we are taking healthcare directly to the people and strengthening our commitment to building a healthier society.
Together, let us continue to spread awareness, encourage preventive healthcare, and work relentlessly towards a cancer-free future.
Serving the people is our duty, and their well-being remains our highest priority. 💙🎗️
@TVKHQITWingOffl | @BussyAnand
#CancerFree #CancerAwareness #HyundaiHopeOnWheels #Sholavandan #PublicHealth
சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய திராவிடமணி திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 167-வது பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான புகழ்வணக்கங்களையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது சிந்தனைகளும், சமூக முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும் என்றும் நமக்கு வழிகாட்டியாக விளங்கட்டும்.
சோழவந்தான் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அய்யா திரு.M.V கருப்பையா அவர்களிடம் சத்தியமித்திரன் மாத நாளிதழை வாடிப்பட்டி சத்தியமித்ரன் ரிப்போர்ட்டர் திருமதி. உமாலக்ஷ்மி அவர்கள் வழங்கினார் அதனை MLA அவர்களிடம் இருந்து பெற்றுகொண்ட பொழுது!
@TVKHQITWingOffl | @BussyAnand
சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களின் குறைகள் மற்றும் மகளிர் சார்ந்த பிரச்சினைகள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர் அய்யா திரு. M.V. கருப்பையா அவர்களிடம் நேரடியாக எடுத்துரைக்கப்பட்டது.குறைகளை கவனமாகக் கேட்டறிந்த அவர், அவற்றை உரிய முறையில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தர உறுதியளித்தார்.
என்றும் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி மக்களின் நலனுக்காக,
@karuppaiahmvtvk@TVKHQITWingOffl | @BussyAnand
தமிழக மக்கள் அனைவரும் போற்றுகின்ற, நேர்மையான, ஊழலற்ற, மனசாட்சியுள்ள மக்களாட்சியை மக்கள் விரும்பும் வகையில் வெற்றிகரமாக வழங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், கோவளத்தில் இன்று நடைபெற்றது. இதில் தோழமைக் கட்சிகளின் மாநில நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(1/4)
மக்கள் விரும்பும் தலைவர், தமிழக முதல்வர் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு,
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம்- மேலூர் சட்டமன்றத் தொகுதி மேலூர் மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணன் திரு.மனோஜ் குமார் அவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சிறப்பாக நடைபெற்றது.
மாண்புமிகு எரிசக்தி (ம) சட்டத்துறை அமைச்சர் அண்ணன் திரு.CTR. நிர்மல் குமார் அவரகள் தலைமையிலும் மட்டும் மதுரை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவர்களுடன் கலந்து கொண்ட போது!
இடம் : மேலூர் to சிவகங்கை சாலை