திமுக சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர்களாக
மதுராந்தகத்தில் பரந்தாமன் அண்ணன் அவர்களும்,
தாராபுரத்தில் சகோதரி சுகன்யா அவர்களும் களம் காண்கிறார்கள்.
கழக உடன்பிறப்புகளும், ஆதரவாளர்களும் களத்திலும் சமூக வலைதளங்களிலும் முழு உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றி வேட்பாளர்களை சட்டமன்றத்திற்கு அனுப்புவோம்!
இரு தொகுதிகளிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்வோம்!
#WATCH | “100% வெற்றி வாய்ப்பு இருக்கு.. தவெக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வேன்..”
மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவித்த பிறகு பரந்தாமன் உறுதி
#SunNews | #TNByElections | #Madurantakam
மதுராந்தகம் (தனி) இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரந்தாமன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்
#Paranthaman#MKStalin#News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9
சட்டமன்றத்தில் முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் 12.09.2026 சனிக்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமைக் கழக அறிவிப்பு
திரையுலக மோகம், கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, போலியான பிம்பத்தை சமூக ஊடகங்களின் மூலமாகக் கட்டமைத்து - குழந்தைகளை ஏமாற்றி குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி – போலி வாக்குறுதிகள் அளித்து ஆட்சியைக் கைப்பற்றி - அதுவும் ஆட்சி அமைக்கும் வலிமையைப் பெறமுடியாத மைனாரிட்டி நிலைமை என்பதால் - தி.மு.க. கூட்டணியில் வென்றவர்களுக்கு அமைச்சர்கள் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களது ஆதரவைப் பெற்று - அதிமுக சார்பில் வென்றவர்களுக்கும் அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி, முதலமைச்சராகியிருக்கிறார் நடிகர் விஜய்.
இப்பொறுப்புக்கு வந்த பிறகு பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாரா? என்றால் இல்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை அரைகுறையாகச் செய்து ஏமாற்றி வருகிறார். திராவிட மாடல் ஆட்சி மூலமாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தினார். நிறுத்த முடியாத திட்டங்களுக்கு பெயரை மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் சிறப்பாகச் செய்து வருகிறார்.
கொலை - கொள்ளை அதிகமாகிவிட்டது. போதை பொருள் நடமாட்டமும் - பாலியல் வன்முறையும் அதிகமாகிவிட்டது. பல்வேறு குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகளே சிக்கி வருகிறார்கள். அதற்கு எந்த நடவடிக்கை எடுக்காமல், அவர்களை பாதுகாக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். 'தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்' என்று மக்கள் வருந்திச் சொல்லி வருகிறார்கள். இதில் இருந்து திசை திருப்புவதற்காக தனது டயலாக் சூட்டிங் மேடையாக தமிழ்நாடு சட்டமன்றத்தை முதலமைச்சர் மாற்றி விட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முதலமைச்சர் தலைவர் கலைஞரையும் - இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலைநாட்டிய பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில் MISA (Maintenance of Internal Security Act) அவசரநிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தைச் செய்த தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது. அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது.
அவரது உரை மூலமாக சட்டமன்றத்தின் மாண்பு – மரபு - வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கிறது. படங்களாக அந்த அவையில் நிற்கிறவர்கள் தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்திருப்பார்கள். சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி, 'மீம்ஸ்', 'ரீல்ஸ்'-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள். இப்படியாக தந்திர மேடையாக சட்டசபையை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது.
ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியிருக்கிறார். இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், தி.முக.. சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - மாநில - மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளில் உள்ள நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
விவசாயியாகப் பிறக்க வேண்டும் என்று வார்த்தைகளை இனிக்க இனிக்கப் பேசிவிட்டு, நடைமுறையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் தவெக அரசு. நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளையும், அவர்களின் வியர்வைச் சிந்திய உழைப்பையும் மதிக்கும் லட்சணம் இதுதானா?
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, தாமிரபரணி பாசன விவசாயிகள் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் தவெக அரசு செவிசாய்க்கவில்லை. இதன் காரணமாக, சுமார் 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைப் பயிர்கள் நீரின்றிக் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டு, விவசாயிகள் வேதனையின் உச்சத்திற்குச் சென்றுள்ளனர்.
தங்களின் பயிர்களைக் காப்பாற்றவும், வாழ்வாதாரத்தை மீட்கவும் நியாயமான கோரிக்கைகளுடன் தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, அதிகாரத் திமிருடன் குண்டுக்கட்டாகத் தூக்கி தவெக அரசு கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கருகும் பயிர்களைக் கண்டு கண்ணீர் வடிக்கும் விவசாயிகளுக்குத் தண்ணீர் திறக்க மறுப்பது ஏன்? அமைதியான முறையில் போராடிய விவசாயிகளை அடக்குமுறையைக் கையாண்டு கைது செய்வதுதான் ஒரு ஜனநாயக அரசின் பணியா?
வார்த்தைகளில் மட்டும் விவசாயத்தின் மீது அக்கறை காட்டிவிட்டு, செயலில் அவர்களை வீதிக்குத் தள்ளுவது நியாயமா?
அரசு உடனடியாகத் தன் அதிகாரத் தோரணையை விடுத்து, பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்குத் தேவையான தண்ணீரைத் தாமதமின்றித் திறந்து விட வேண்டும். மேலும், நீரின்றிக் கருகிய வாழைப் பயிர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
எல்லா தொகுதிலயும் பிரச்சாரம் பண்ண Permission கொடுத்துருந்தா 234 தொகுதிலயும் ஜெயிச்சிருப்போம் - அமைச்சர் 🤡
கன்னியாகுமரி மாவட்டத்துல பிரச்சாரத்துக்கு போனாரே அங்க ஏன் ஒரு தொகுதி கூட ஜெயிக்கல? - LoP 😂🔥
@Udhaystalin#ElectionCampaign#TVKVijayFails
பதிவுச் செயல்பாடுகளை மேம்படுத்தி, புதிய வசதிகளை பொதுமக்களுக்கு தரும் விதமாக, சத்திரப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
#Oddanchatram | #DMK
பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காகப் போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் கொடுங்கோன்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை சார்ந்துள்ள சுமார் 5,000 ஏக்கர் வாழைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பலமுறை மனு அளித்தும், தொடர் போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகமும் நீர்வளத்துறையும் நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளை சாலையில் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது, இந்த அரசு.
விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, பாபநாசம் அணையிலிருந்து 1,500 கனஅடி தண்ணீரை திறந்துவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.