மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களைப் பின்பற்றி, உழைப்பு உழைப்பு உழைப்பு என்ற கொள்கையோடு, தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக முதல் 100 நாட்களை கடந்துள்ளேன். எனது பணிகள் பற்றிய நிறைகள், குறைகள் மற்றும் கோரிக்கைகளை இதில் பதிவிடவும்.
https://t.co/PX3pQkOyNx
இன்று (10.06.26) மதியம் தஞ்சாவூர் வடக்கு வாசலில் உள்ள அன்பாலயம் மனநல காப்பகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாநகர கோட்டை பகுதி சார்பில் மதிய அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன்
திரு .துரை ச��்திரசேகரன் MLA அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்து கொண்ட போது.
மேலும் இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், தலைமை செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ,மாநகர கழக நிர்வாகிகள்,பகுதிச் செயலாளர்கள்,துணை மேயர் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் இருந்தனர்.
இன்று (07.06.26) மாலை தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் GENZ DMK MEET நிகழ்ச்சி வெகு சிறப்பாகவும், மிகபிரம்மாண்டமாகவும் நடைபெற்றது...
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்களை தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் திரு .துரை சந்திரசேகரன் MLA அவர்களோடு இணைந்து தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு .ச.முரசொலி அவர்கள் மற்றும் கும்பகோணம் மாநகரச் ச���யலாளர் துணை மேயர் திரு .சு.ப. தமிழழகன் ஆகியோர் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை பாராட்டுகளையும் தெரிவித்தோம்.
இன்று (06.06.26) மாலை தஞ்சாவூர் செங்கோ மஹாலில் கவிஞர் வனஜா செந்தில் செல்வம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து
மனதோடு பேசுங்கள் என்ற நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினேன்.
இன்று (03.06.26)
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு
தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ அவர்களின் தலைமையில்
கிழவாசல் காமராஜர் சிலை அருகில் இருந்து தஞ்சை மாநகர உடன்பிறப்புகளோடு ஊர்வலமாக புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் ��ள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்வில் கலந்து கொண்ட போது.
மேலும் இந்நிகழ்வில் முன்னாள் மத்திய இணை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்
திரு .ச .முரசொலி அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, பகுதி கழக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள்,துணை மே��ர் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கழக உடன்பிறப்புகள், கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#KalaignarForever
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமத்துவச் சிந்தனையைத் தமிழ்நாட்டில் விதைத்த நம் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் இன்று.
கலைஞரை நாம் கொண்டாடக் கொண்டாட, சமூகநீதியும் சமத்துவமும் வளரும்.
கொண்டாடுவோம்!
#KalaignarForever
இன்று (30.05.26) மாலை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள Hamly towers software company திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது.