கடந்த வாரத்தில் மட்டும் நாமக்கல்லில் 7 வயது சிறுமி, கிருஷ்ணகிரியில் 60 வயது மூதாட்டி என திமுக ஆட்சியில் அரங்கேறிய கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் சூடு தணியும் முன்னே, நேற்றிரவு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மதுபோதையில் இருந்த மர்ம நபர்கள் சிலர், 14 வயது சிறுமியைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி நம்மை உறையச் செய்கிறது.
தாம்பரத்திலிருந்து தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மதுபோதையில் இருந்த சிலர் பின் தொடர்ந்து சென்று அவர்களைத் தாக்கி, அத்திவாக்கம் ஏரி பகுதிக்கு அச்சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்ற விவரங்களை படிக்கும் பொழுதே, ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் என் நெஞ்சு படபடக்கிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட சிறுமி, முழு உடல் மற்றும் மன நலத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
போதைப் பழக்கம் தலைவிரித்தாடும் தமிழகத்தில் ஒரு பெண் தனியாக வெளியே சென்று பத்திரமாக வீடு திரும்புவதே காணக்கிடைக்காத அதிசயமாக மாறிக்கொண்டிருப்பது ஆளும் @arivalayam அரசுக்கு பெரும் அவமானம். கண்ணில் படும் பெண்களை எல்லாம் வேட்டையாடுமளவிற்கு குற்றவாளிகளுக்கு கொழுப்பு கட்டி நிற்பது தமிழக காவல்துறைக்கும் அவர்களை இயக்கும் முதல்வர் திரு. @mkstalin அவர்களுக்கும் வெட்கக்கேடு. இந்த லட்சணத்தில் இப்படியொரு கேடுகெட்ட ஆட்சிக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டுமென வாய்க்கூசாமல் திமுகவினர் வாய்ப்பு கேட்கின்றனர்!
Shri Bishnu Pada Ray, MP, A&N Islands, attended #NariShaktiAbhiyan at Car Nicobar today. He interacted with tribal women & children, explained the initiative launched by PM Shri @narendramodi, and urged all to avail its benefits for better healthcare. 🙏✨
@narendramodi
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. திரு. விஜய் அவர்கள் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.
உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
நாளை, 27.12.2024: சாட்டையால் அடித்துக் கொள்ளும் கவன ஈர்ப்புப் போராட்டம்.
தமிழக மக்கள் மிகவும் பண்பானவர்கள். அமைதியானவர்கள். பொறுமை மிக்கவர்கள். கடந்த நான்கு ஆண்டுக்கால திமுக ஆட்சியில், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாகி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, பெண் காவலர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள், பெண்கள், குழந்தைகள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.
பெரும்பாலான குற்றங்களில், திமுகவினருக்குத் தொடர்பிருப்பதால், ஊடகங்களின் துணை கொண்டு, திமுக அரசால் அவை பொதுமக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் தாங்கள் படும் இன்னல்களுக்குத் தீர்வு கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
குற்றவாளிகளுக்கு அமைச்சர்கள் வரையிலான தொடர்புகளும், நெருக்கமும் இருப்பதால், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. தங்கள் பாதிப்புகளுக்குத் தீர்வு கிடைக்காமல், குற்றவாளிகள் தங்கள் கண்முன்னே சுதந்திரமாகச் சுற்றி வருவதைப் பார்த்து, தமிழக மக்கள் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும், தமிழக பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற பிறகே, திமுக குற்றவாளிகளைக் கைது செய்கிறது காவல்துறை. பல நேரங்களில், பொதுமக்கள் தங்கள் பாதிப்புகளுக்கு உரியத் தீர்வு கிடைக்காமல், ஆளுங்கட்சியினரால் காவல் நிலையங்களில் வைத்தே மிரட்டி அனுப்பப்படுவதும் நடைபெறுகிறது. இந்தக் குற்றங்கள் வெளியே தெரிவதும் இல்லை.
திமுகவினர் என்பதால், நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே அவதூறு பரப்பும் வகையிலும், அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழலில் தமிழகம் இருக்கிறது. இனியும் இதனை அனுமதித்தால், நம் சகோதர, சகோதரிகள், குழந்தைகள் எதிர்காலத்தில் இருள் சூழ்ந்து விடும்.
கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழக மக்களை இன்னலுக்குள்ளாக்கி இருக்கும் திமுக அரசைக் கண்டித்து ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த, திமுக அரசு அனுமதிப்பதில்லை. எங்களைக் கைது செய்து, பொதுமக்கள் கவனத்தைத் திசை திருப்பிவிடலாம் என்று செயல்படுகிறது.
எனவே, திசைமாறிப் போன திமுக அரசின் கவனத்தை ஈர்க்கவும், குற்றவாளிகளை, கட்சி சார்பின்றி குற்றவாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று காவல்துறையை வலியுறுத்தியும், எனது இல்லத்தின் முன்பு, சாட்டையால் என்னை நானே அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன்.
தமிழகம் முழுவதும் உள்ள பாஜக சகோதர சகோதரிகள், அவரவர் இல்லத்திற்கு முன்பு நின்று, திமுக அரசுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை மட்டும் பதிவு செய்வார்கள்.
சட்டம் ஒழுங்கு மீட்கப்பட்டு, மீண்டும் அனைவருக்கும் பாதுகாப்பான மாநிலமாக, குறிப்பாக நமது சகோதரிகள் அச்சமின்றி வாழும் மாநிலமாகத் தமிழகம் மாறும் வரை, தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும்.
Hearty birthday wishes to my brother Thiru @Tejasvi_Surya avl, MP of Bangalore South & National President of @BJYM.
A doer with fiery energy and zeal, walking the talk, catering to the needs of the people he represents with utmost sincerity, he is an inspirer to many. Praying the almighty for his good health and life in his service to our nation.
On this holy occasion of Eid-ul-Adha, I wish islander peace, harmony, happiness, good health, and prosperity. Eid Mubarak! @BJPMinMorcha@BJP4AnN@BJP4India