#Kamalfan
தவறான வழியில்
செல்பவனை
வாழ்த்தியும்,
நேர்மையான
வழியில் சென்று
தோற்பவரை
தாழ்த்தியும் பேசும்
சமுதாயம்தான்
குற்றங்களுக்கு
காரணம்...
@ikamalhaasan
கவிஞர் பெருந்தகை புவியரசு மறைந்தார். அவரை நண்பரென்பதா, இலக்கிய வழிகாட்டியென்பதா, ஆசிரியரென்பதா, பழகிய விதத்தால் சகோதரரென்பதா... நீண்ட கால நட்பு எங்களுடையது. என் மனதில் வாழ்வார். அவர் எனக்களித்தவை போக தமிழிலக்கியத்துக்கு அளித்தவை ஏராளம். அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். கவிஞரின் குடும்பத்தாருக்கும், அவர்தம் பிற மாணவர்களுக்கும், என் இதயமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உடல் நலக்குறைவால் மரணித்த நண்பர் கே. பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார். அவர் மாபெரும் ஆளுமை மட்டுமல்ல மகத்தான மானுடநேயரும் கூட. அவர் என் தோழர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
தமிழ்த் திரையிசையின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த கவியரசுக்கும் மெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்த நாள். ஒ���ு பாடலின் உயிரும் உடலுமாக இரு துருவங்கள் இணைந்து பயணிக்க முடியும் என்பதன் வரலாற்று சாட்சியாக ஒலித்தவர்கள் கண்ணதாசனும் எம்.எஸ். விஸ்வநாதனும். மாமேதைகளை இந்நாளில் மனம் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்க���் உயிரிழந்திருப்பதும், பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்��டுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
@CMOTamilnadu
Happy Birthday, Rahul ji.
You’ve walked the length of India, carrying a message of love, secularism, and progress, reminding us that politics must connect, not divide.
Keep walking, keep listening.
@rahulgandhi
Congratulations to Shri @narendramodi ji on becoming India’s longest continuously serving elected Prime Minister. In a diverse democracy like ours, sustained public trust is a significant feat. May our collective focus remain on India’s progress and the welfare of our fellow citizens.
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்ப���ை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுள���ப் பெற்று வாழவேண்டும், இசையோடு.
உங்கள்
கமல்
@ilaiyaraaja
#HBDIlaiyaraaja
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞராக இருந்து சமூகநலனுக்காகவும் சமநீதிக்காகவும் எத்தனையோ வழக்குகளில் வாதாடி வென்ற திருமதி. வி.மோகனா அவர்கள், அந்த உச்சநீதிமன்றத்தின் நீதி��தியாகவே பதவி ஏற்கிறார். இப்படி வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் தமிழ்ப் பெண்மணி இவரே என்பதில் தமிழகம் பெருமை கொள்கிறது.
உச்சநீதிமன்ற மாண்பமை நீதிபதி வி. மோகனா அடைந்திருக்கும் உயர்வு, தத்தம் துறைகளில் அந்தரங்கசுத்தியோடு ஈடுபடும் எவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கும். அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
அன்புத் தாயை இழ��்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிக���ுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳