ஆழ்ந்த இரங்கல்.
தொல்லியல் அறிஞர் திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு நீடுபுகழ் வணக்கம்.
தொல்லியல் ஆய்வு, கல்வெட்டியல் ஆய்வு, நாணயவியல் ஆய்வு, செப்பேடுகள் ஆய்வு, வரலாற்றியல் ஆய்வு, சுவடியியல் ஆய்வு எனப் பல்வேறு களங்களில் அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, தமிழ்ச் சமூகத்தில் புதிய, புதிய ஆய்வு வெளிச்சத்தைப் பாய்ச்சியவர் பேரறிஞர் திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், தொப்பளிக்குப்பம் என்ற கிராமத்தில் திரு. நடனசபாபதி, திருமதி. ருக்குமணி அம்மையார் ஆகியோருக்கு மகனாக 1.11.1940 -இல் நடன. காசிநாதன் அவர்கள் பிறந்தார்.
1963 -இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வரலாறு இளங்கலைப் பட்டமும், 1965 -இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொன்மை வரலாறு மற்றும் தொல்லியல் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1967 – இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராகப் பணியில் சேர்ந்து, 1981 துணை இயக்குநராகவும், 1989 – இல் இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றார்.
தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை இயக்குநராகப் பணியாற்றி காலங்களில் அரிய கண்டுபிடிப்புகளையும், அரிய செயல் திட்டங்களையும் நிகழ்த்திக்காட்டியவர். வெளி உலகிற்கு வராமல் மறைந்து கிடந்த பல வரலாற்று உண்மைகளை தனது நுட்பமான அறிவால் கண்டறிந்து வெளிக்கொண்டு வந்தவர்.
1984 ஆம் ஆண்டு தஞ்சையில் சோழப் பெருவேந்தன் முதலாம் இராசராசன் முடிச்சூட்டப் பெற்றதின் 1000 – மாவது ஆண்டு விழா கொண்டாடியதும், அதனையொட்டித் தஞ்சையில் இராசராசன் அகழ் வைப்பகம் ஏற்படுத்தியதும், தஞ்சை மாவட்டம், பூம்புகாரில் கடலகழாய்வை மேற்கொண்டு கடலினுள் கி.மு. 5 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐந்து கட்டட அமைப்புகளைக் கண்டுபிடித்ததும், கி.பி.18 – ஆம் நூற்றாண்டையச் சிதைந்த கப்பல் ஒன்றைக் கண்டுபிடித்ததும், 1994 –இல் தஞ்சையில் நடைபெற்ற எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி, தஞ்சாவூர், தரங்கம்பாடி கோட்டை, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, சரபேந்திரராசன்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பழமை மாறாமல் சீர் செய்ததும் குறிப்பிடத்தக்கவை.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொல்லியல் துறை மூலமாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு தமிழர் வரலாற்றை வெளிக்கொண்டு வந்தார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நடந்த கருத்தரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்.
வரலாற்று, தொல்லியல் ஆய்வுலகம் இவரது கண்டுபிடிப்புகள், சாதனைகளை அங்கீகரித்துள்ளது. பேராசிரியர் ந. சஞ்சீவி, கல்வெட்டுப் பேரறிஞர் ஐராவதம் மகாதேவன், முனைவர் இரா. நாகசாமி, சிற்பகுரு. முனைவர் வை.கணபதிஸ்தபதி ஆகியோரால் ’காசுநாதன்’, ’கல்வெட்டுச் செம்மல்’, ’தொல்லியல் அறிஞர்’, ’தமிழ்ச் செம்மல்’, ’வட்டெழுத்து அறிஞர்’, ’வரலாற்றுத் திலகம்’ போன்ற பட்டங்கள், விருதுகளால் புகழப்பட்டவர்.
1967 –இல் இலங்கைக்கும், 1996 – இல் அந்தமான் தீவுக்கும், 1997 –இல் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் கல்விப்பயணம் மேற்கொண்டார். தனது பணி ஓய்வுக்குப் பின், ‘தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம்’ என்னும் ஓர் அமைப்பை உருவாக்கி அதன்வழியே தொடந்து தமிழர் வரலாற்றை உலகறிய கருத்தரங்குகள் நடத்தியவர்.
ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டவர். இளம் ஆராய்ச்சியாளர்களை இந்த அமைப்பின் வழியாக ஊக்கப்படுத்தி உருவாக்கி வந்தவர்.
தமிழ்ச் சமூகத்தின் மேன்மைக்காக தன் பணிகளுக்கு இடையே தமிழில் 57 நூல்களும், ஆங்கிலத்தில் 16 நூல்களும் என இதுவரை 73 நூல்களை எழுதி வெளியிட்டவர். இவரது நூல்கள் தொல்லியல் உலகில் பெரும் கவனத்தைப் பெற்றவை.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆளவை உறுப்பினராகவும், நடுவணரசு இந்திய மொழிகள் நிறுவனத்தின் சான்றாதார வல்லுநராகவும், தமிழ்நாடு அரசு வரலாறு எழுதும் வல்லுநர் குழுவின் உறுப்பினராகவும் திறம்பட பணியாற்றியவர்.
இத்தகைய தொல்லியல் பேரறிஞரின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு பெரும் இழப்பாகும். அவர் மறைந்தாலும் அவரது புகழ் இம்மண்ணில் என்றும் நிலைத்திருக்கும். தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறது. அவரை இழந்துவாடும் குடும்ப உறவுகளுக்கும், வரலாற்று, தொல்லியல் அன்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாராபுரம் சுற்றியுள்ள பகுதிகளில்
தொடரும் காற்றாலை விபத்துகள்.
சரியான பராமரிப்பு இல்லாததால் விபத்துகள் ஏற்படுகிறதா?
ஆயுட்ககாலம் முடிந்தும் பயன்பட்டில் உள்ளதா?
தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒருபோதும்,
எங்கள் மக்கள்,கால்நடைகள்,விவசாய நிலங்களின் பாதுகாப்பு பற்றி கவலைகொள்ளாது!
பெரும் உயிர்சேதம் ஏற்படும் முன்னர் #திருப்பூர்மாவட்ட_ஆட்சியர் அவர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
பராமரிப்பு இல்லாத,ஆயுட்காலம் முடிந்த காற்றாலைகளை அப்புறப்படுத்த உத்தரவிடவேண்டுமென #தமிழகவாழ்வுரிமைக்கட்சி கேட்டுக்கொள்கிறது.
@VelmuruganTVK@TPRDtCollector
#windmill #dharapuram #rdo #tiruppurdistrict_collector
நன்றி :
படங்கள் @sunnewstamil@ThanthiTV@behindwoods
தமிழ்தேசிய புலிப்படை அமைப்பின் தலைவர் திரு. முத்துப்பாண்டி. அவர்கள் மற்றும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த திரு. முத்துக்குமார். அவர்கள் ஆகியோர் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும்
ஈர்க்கப்பட்டு மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர், மதுரை யா ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் முன்னணி தலைவர்களோடு பங்கேற்றேன்.
The Economic Survey of Tamil Nadu 2024-25 reaffirms the state’s leadership in economic and social progress, outpacing India and other states. With a GSDP of ₹27.22 lakh crore, Tamil Nadu contributes 9.21% of India’s GDP despite having just 6% of the population. The per capita income (₹2.78 lakh) remains 1.6 times the national average, reflecting broad-based prosperity.
As India’s manufacturing powerhouse, Tamil Nadu leads in automobiles, textiles, and leather, has the second highest MSMEs (35.56 lakh enterprises), and disburses the most agricultural credit. It ranks #1 in the Social Progress Index, SDG Index, and Climate Action while achieving India’s lowest poverty rate (1.43%).
With a vision to become a 1 trillion USD economy by 2030, Tamil Nadu is not just growing, it is leading India’s growth story!
மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு தீவிரம் : தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைக் காக்க, ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க, விவசாயிகளும், மக்களும் ஒன்று திரள வேண்டும்!
கர்நாடகாவில் காங்கிரசு ஆட்சியிலும் சரி, பாஜக ஆட்சியிலும் சரி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்பதில் முதன்மை நோக்கமாக வைத்திருக்கிறார்கள். ஏனென்றால், தாங்கள் கன்னடர்கள் என்ற ஒன்றைப்புள்ளியில் நிற்கின்றனர்.
உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், ஒன்றிய அரசு, அண்டை மாநிலங்கள் என்று பல அமைப்புகளைத் தாண்டி மேகதாது அணையைக் கட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது கர்நாடக அரசு.
அதன் தொடர்ச்சியாக, கர்நாடக அரசு 2025 --2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 7.03.2025 அன்று தாக்கல் செய்திருக்கிறது. அப்போது மேகதாது திட்டம் தொடர்பாக உரையாற்றிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, மேகதாது நீர்தேக்கத் திட்டத்திற்கான ஆயத்தப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
மேகதாது அணை கட்டினால், தமிழ்நாட்டில் 26 லட்சம் ஏக்கர் பாசன நிலம் பாலை வனமாகிவிடும். சென்னை, ராமநாதபுரம், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்குக் குடிநீர் கிடைக்காது.
காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் இல்லை. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி மேகதாது அணையை கட்ட முடியாது.
அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணைக்கான ஆயத்தப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்வதே சட்டவிரோதமாகும்.
ஆனால், ஒன்றிய அரசு, இதைக் கருத்தில் கொள்ளாமல் கர்நாடகத்தின் செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதால் தான் அணைக்கான ஆயத்தப் பணிகளை முடிக்கும் அளவுக்கு கர்நாடகம் சென்றிருக்கிறது.
கர்நாடக அரசு தனது எல்லையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டி, தமிழ்நாட்டுக்கு வெள்ள நீர் கூட வராமல் தடுக்கும் வேலையில் தீவிரமாக உள்ளது. கர்நாடகத்தின் இந்த சட்ட விரோதச் செயலை மோடி தலைமையிலான அரசு ஊக்கப்படுத்தித் தூண்டி வருகிறது.
இவை தவிர, மேகதாது அணை தொடர்பான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கவும், அதனடிப்படையில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கவும் இடைக்காலத் தடை விதித்தது.
ஆனால், இதை சற்றும் மதிக்காமல், மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யும் பொறுப்பை ஒன்றிய நீர்வள ஆணையத்திடம் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 2020ஆம் ஆண்டு ஒப்படைத்தது. அதற்கு எதிராக அப்போதிருந்த அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கர்நாடக அரசு துணிச்சல் பெற்று, மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்திருக்கிறது.
எனவே, இதற்குப் பிறகும் கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்வது தான், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை நிரந்தரமாகத் தடுப்பதற்கான தீர்வு. அதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஒன்றிய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுத்து, மேகதாது அணை குறித்த எந்த பணியையும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, கர்நாடகத்தில், தாயகம், தண்ணீர், மொழி ஆகிய சிக்கல்களில் யாரும் அரசியல் செய்வதில்லை. கன்னட இனச்சிக்கலில் கர்நாடகக் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதில்லை!
அதுபோன்று, தாயகம், தாய்மொழி, ஆற்றுநீர் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளில் தமிழர்கள் உரிய விழிப்புணர்வை பெற்று, ஒன்று திரள வேண்டும். தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் உயிர்நாடியாக உள்ள காவிரி உரிமையைக் காக்க, மக்கள் ஒருங்கிணைந்து அறத்துடன் போராட முன் வர வேண்டும்.
இதுவே, மேகதாது அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கும், அதற்கு துணைபோகும் பாசிச மோடி அரசுக்கும், தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கும் தக்க பதிலடியாக இருக்கும்.
08.03.2024 அன்று பேசிய வட்டாள் நாகராஜ், மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை என்றால் தமிழ் படங்கள் ஓடாது எனக் கூறியிருக்கிறார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு
திரு.பிரம்மமூர்த்தி அவர்களின் ஒருங்கிணைப்பில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இளம்பிள்ளையில்
எனது தலைமையில் நடந்த நிகழ்வில் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
தமிழர் வாழ்வுரிமை மீட்புக்கான பயணத்தில் எங்களோடு இணைந்த உறவுகள் அனைவரையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.
பிரார்தனை பண்ணி ஏத்தி வச்ச விளக்கை தண்ணீ ஊத்தி அணைக்குறீங்களே இது பாவமில்லையா..? பூசாரியை பணி நீக்கம் செய்த கோவில் நிர்வாகம்...!
#Polimer | #Temple | #Viralvideo
“டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க IAS, IPS அதிகாரிகளை வைத்து அரசு ஆலோசனை செய்வது எவ்வளவு பெரிய கொடுமை” - வேல்முருகன்
#Velmurugan | #TVK | #TASMAC | #TNGovt
“டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க IAS, IPS அதிகாரிகளை வைத்து அரசு ஆலோசனை செய்வது எவ்வளவு பெரிய கொடுமை” - வேல்முருகன்
#Velmurugan | #TVK | #TASMAC | #TNGovt