��ுளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணை கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உர��ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்கள், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தன் கட்சிக்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, முதலில் தன் கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும்.
மேடைதோரும் “படிங்க, படிப்பு தான் முக்கியம்” என பேசியவர். தேர்தல் பிரச்சாரம் போகும் வழியில் பார்க்கும் குழந்தைகளிடம் “என்ன படிக்கற? நல்லா படிக்கனும்” என்றவர். இன்று தன் பேரனின் பட்டமளிப்பு விழாவில் ஆரத்தழுவி பேரன்பை வெளிபடுத்தும் இந்தக் காட்சியை காணும் பொழுது மகிழ்ச்சி, ஏக்கம், பொறமை என உணர்ச்சிகள் ஒரு சேர வருகிறது. மகிழ்ந்து இருங்கள் தலைவரே !
மாண்பு இல்லாத 'மாண்புமிகு' முதல்வர்! நாவடக்கத்தை மறந்தால் மக்கள் அடக்கத் தயங்க மாட்டார்கள்!
மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்புக்கும், அந்த இருக்கையின் கண்ணியத்திற்கும் துளியும் சம்பந்தமில்லாமல், மூன்றாந்தர வீதிப் பேச்சாளரைப் போலத் தரம் தாழ்ந்து பேசுவதை முதலமைச்சர் விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும்!
‘ஓடு.. ஓடு..’, ‘கொளத்தூரில் கொத்து பரோட்டா’, ‘வெளுத்து விடுங்க’ என உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும், இந்த மாநிலத்தின் நிர்வாகத்தையே கேலிக்கூத்தாக்கும் துர்நாற்றம் வீசும் வார்த்தைகளாகவே இருக்கின்றன.
நீங்கள் பின்பற்றும் கொள்கைத்தலைவர்களின் பெயர்களைக் வெறும் அடையாள அரசியலுக்காக மட்டும் பயன்படுத்தாமல், குறைந்தபட்சம் அவர்களின் பண்பையாவது உங்கள் பேச்சில் வெளிப்��டுத்துங்கள்.
‘வாய��� இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவேன்’ என்ற உங்கள் திமிர் பிடித்த பேச்சு, ஒரு முதலமைச்சருக்கு அறவே அழகல்ல.
நாவடக்கம் என்பது உங்களுக்கு மிக மிக அவசியமான ஒன்று! பொறுப்புணர்ந்து பேசக் கற்றுக்கொள்ளுங்கள்; இல்லையெனில், மக்களின் கோபத்தால் அந்த நாக்கு நிச்சயம் அடக்கப்படும்!
கரூர்ல தன்னோட விளம்பர வெறிக்காக மக்கள் கூட்டத்த கூட்டினது மட்டுமில்லாம, வேனும்னே லேட்டா வந்ததால ஏற்பட்ட துயரச் சம்பவத்தப்பக் கூட, பாதிக்கப்பட்ட மக்கள் கூட நிக்காம, ஒரு ஆறுதல் கூட சொல்லாம, அங்கிருந்து தலைதெறிச்சு ஓடிப் போன #ஓட்டநாயகன் விஜய்யின் நினைவா, அதே கரூ��்ல ஒரு நினைவுச் சின்னம் அமைச்சா அது எப்படி இருக்கும்?
உங்க Creative Thinkingல வர்ரத டிசைனா மாத்தி கமெண்ட்ஸ் தெறிக்க விடுங்க, உங்க Pagesலையும் #ஓட்டநாயகன் hashtag போட்டு போடுங்க!
சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன்.
அடிமையாய் உயிர்வாழ்வதைக் காட்டிலும் அடக்குமுறைக்கு எதிராக வீரத்துடன் போராடி மடிவதே மேல் என விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்��ள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம்!
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
அமைச்சர் ஆதம் அர்ஜுனாவுக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடர வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அனுப்பிய புகார் மனுவை முறைப்படி ஆய்வு செய்து சிபிஐ அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தது உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு