கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் பெரம்பலூர் மாநகரில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது.
#தமிழ்_வாழ்க#EPSfor2026#ADMK_PBLR#ADMK_TRY
மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
A Year of Hope, A Year of Triumph
With the People, For the People
Lets win this year together
#HappyNewYear2026
#Welcome2026
Heartiest congratulations to
Thiru. Nitin Nabin Avl on his appointment as the National Working President
of @BJP4India.
Paramount responsibility entrusted to Thiru. @NitinNabin Avl , reflects his organisational strength, leadership capabilities, and unwavering commitment to public service.
I am confident that under his leadership, the organisation will be further energised and strengthened in its mission of nation-building.
Wishing him every success in this important role.
@AIADMKOfficial
தான் கண்ட போர்களில் எல்லாம்
வெற்றி வாகை சூடிய மாவீரர்,
முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர்,
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர்
திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர்
திரு. @CPR_VP அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பிலும், @AIADMKOfficial சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
@PMOIndia@VPIndia
ஏழை எளிய மாணவர்களுக்கும் அறிவுப்பூர்வமான கல்வி கிடைப்பதை உறுதி செய்த திட்டம், மாண்புமிகு அம்மா அரசின் விலையில்லா மடிக்கணினி திட்டம்.
அரசுப்பள்ளிகள், அரசுக் கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களின் Career Guide-ஆக, Life Shaping Device-ஆக, கல்விக்கான ஆயுதமாக இருந்த மடிக்கணினியை, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் தொடர்ந்து வழங்கி வந்தது எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு.
இந்த மடிக்கணினிகளால் பயனடைந்த இளைஞர்களை இன்றைய தினம் சந்தித்து, #PricelessScheme_AmmaLaptop தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய பெரும் மாற்றத்தினைக் கேட்டு அகமகிழ்ந்தேன்.
அதே சமயம், தற்போதைய அரசுப்பள்ளி மாணவர்களும், இன்றைய விடியா திமுக ஆட்சியில் லேப்டாப் கிடைக்காமல், விஞ்ஞானக் கல்வி கிடைப்பது தடைபட்டு, தாங்கள் வஞ்சிக்கப்படுவதை, தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்கள்.
ஸ்டாலின் மாடல் அரசு, நான்கரை ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல், தற்போது தேர்தல் வரப்போகிறது எனத் தெரிந்ததும், ஒரு நாடகத்தை அரங்கேற்றத் தயாராகி விட்டார் இன்றைய பொம்மை முதலமைச்சர்.
அரைகுறை ஆயிரம் ரூபாய் போலவே, இதுவும், சம்மந்தமே இல்லாமல், கல்வி ஆண்டின் நடுவில், கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதன் காரணம் என்ன? ஏன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை?
இன்றைய AI காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு தகவமைத்துக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் தரும் லேப்டாப் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை.
பொம்மை முதல்வரைப் போன்றே பொம்மை லேப்டாப் கொடுத்து மாணவர்களை ஏமாற்றப் பார்க்கிறதா ஸ்டாலின் மாடல் அரசு?
Election Eyewash-க்காக லேப்டாப் கொடுப்பது போல Drama நடத்தும் உங்களுக்கும்,
Education Elevation-க்காக தொடர்ந்து லேப்டாப் கொடுத்த எங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது திரு. @mkstalin அவர்களே!
#WhereIsOurLaptop என்று நான் கேட்கவில்லை; உங்களால் நான்கரை ஆண்டுகாலமாக வஞ்சிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் கேட்கிறார்கள்.
உரிய , முறையான பதில் வருமா
திரு. ஸ்டாலின் அவர்களே?
இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம்போட்டு, 'நவோதயா பள்ளிகளுக்கு' வழி ஏற்படுத்தியுள்ள விளம்பர மாடல் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. @mkstalin-க்கு கண்டனம்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை.
2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, திமுக-வின் தேர்தல் அறிக்கையில், இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் திரு.@mkstalin
திமுக ஆட்சிக்கு வந்தவுடன்,
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும்,
மற்றும் ஊதியமும் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார் .
மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை.
அவர் பதிவிட்டு இருந்த நீண்ட
“x” தள பதிவில்
ஏன் இதை பற்ற எந்த குறிப்பும் இல்லை?
இது போன்ற பச்சை துரோகத்தை செய்து விட்டு பச்சை துண்டு பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது ?
@arivalayam
தற்போது, மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்க்கிறேன்.
எனினும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
@MoRD_GoI
விடியா திமுக @mkstalin அரசு,
2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதி எண் 356ஐ நிறைவேற்றக்கோரியும்,
மாண்புமிகு அம்மாவின் அரசால் கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போதைய விடியா திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று (18.12.2025) தமிழ்நாடு செவிலியிர்கள் மேம்பாடு சங்கத்தின் சார்பாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சிவானாந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு 7.30 மணிக்கு காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை கைது செய்து அவர்களை பேருந்துகள் மூலமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர்.
இறக்கிவிடப்பட்ட செவிலியர்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே தங்களது கோரிக்கைகள் நிறைவேறாமல் கலையமாட்டோம் எனக்கூறி விடியா திமுக அரசுக்கு எதிரான கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, விடியா திமுக அரசின் காவல்துறை அவர்களை மீண்டும் கைதுசெய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கடந்த நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிப்பதுடன், 2021 சட்டமன்றப்
பொதுத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடியா திமுக,
Failure மாடல் ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
அன்பிற்கினிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு வணக்கம்.
தமிழ்நாட்டில் SIR கணக்கீட்டுப் பணிகள் முடிவுற்று, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது, அஇஅதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த SIR தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது.
எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது.
அன்பார்ந்த வாக்காளர்களே- வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் விடுபட்டு இருந்தால், பதட்டப்பட வேண்டாம். புதிய வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள தேர்தல் ஆணையத்தின் படிவம்-6 நிரப்பி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அடையாள அட்டைகளுள் ஒன்றோடு சமர்ப்பித்தால், தங்களின் பெயர் நிச்சயமாக இணைக்கப்படும்.
இதற்கு உங்களுக்கு நம் @AIADMKOfficial கழகத்தின் BLA-2 பாக முகவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
பொம்மை முதல்வரும், அவர் தலைமையிலான திமுக-வும் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் வாக்கு பறிபோனது போல சித்தரிக்கப் பார்ப்பார்கள். அவர்களின் சதிவலையில் யாரும் விழவேண்டாம். ஒரு உண்மையான வாக்கு கூட இல்லாமல் போகும் நிலை, @AIADMKOfficial இருக்கும் வரை உருவாகாது.
என் உயிருக்கு உயிரான நம் கழக உடன்பிறப்புகளே- SIR கணக்கீட்டுப் பணிகளில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும். ஆனால், இப்போது தான் நமக்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது.
ஒவ்வொரு பூத் வாரியாக பழைய வாக்காளர் பட்டியலோடு, வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, வரைவு பட்டியலில் உள்ள வாக்காளர்கள் சரியான காரணத்திற்காக (இறப்பு, இடமாற்றம், இரட்டை வாக்கு) நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். சரியான காரணம் இன்றி வாக்காளர் நீக்கப்பட்டு இருந்தால், அவர்களின் இல்லத்திற்கே சென்று, அவர்களுக்கு படிவம்-6 நிரப்பி, BLO-விடம் வழங்கி அவர்களின் வாக்குகள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது நம்முடைய தலையாயக் கடமை.
அதேபோல், போலி வாக்குகள் நீக்கப்படாமல் இருந்தால், அதனை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டு, அவை நீக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களை அறிவுறுத்துகிறேன். மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு, SIR பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் இப்பணிகளை ஒருங்கிணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த உரிமையான நம் வாக்குகள் உண்மையானதாக இருப்பதை உறுதி செய்ய நடைபெறும் இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல், தமிழ்நாட்டின் உண்மையான வாக்காளர்கள் மட்டுமே இருக்கின்ற, 2026 சட்டமன்றத் தேர்தலில் உண்மையான மக்களாட்சிக்கு அடித்தளமிடும் பட்டியலாக அமைத்திடும் வகையில் பணியாற்றிடுவோம்.
#மக்களைக்_காப்போம்!
#தமிழகத்தை_மீட்போம்!
@AIADMKOfficial
உலகிற்கு உணவளிக்கும் உழவுத் தெய்வங்கள், மண்ணோடு உயிர் கலந்த உழைப்பால் தேசத்தின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்விற்கும் அடித்தளமாக நிற்கும்
விவசாயப் பெருமக்களுக்கு
தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள்
இன்னல்களையும் , இயற்கைச் சோதனைகளையும் தாண்டி, அர்ப்பணிப்பு கொண்டு உழைக்கும் அவர்களின் தியாகம் அளவிட முடியாதது.
நம் விவசாயிகளின் நலன், பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்வதே நம் தேசத்தின் முன்னேற்றத்திற்காண அடிப்படை.
உழவர் வாழ்வு உயர, தேசம் உயர உறுதியை இன்று மீண்டும் எடுத்துக்கொள்வோம்.
@AIADMKOfficial
தமிழக அரசியல் வரலாற்றின்
பொற்கால அத்தியாயம்…
வறியவர்களின் வேதனையைத் தன் வேதனையாகக் கொண்டு,
அன்பையும் , அருளையும் அரசியலாக்கிய
மக்கள் திலகம்,
நம் இயக்கத்தை மட்டுமல்ல,
ஒரு தலைமுறையின் கனவுகளையும்
உருவாக்கிச் சென்ற
நமது வாழ்நாள் வழிகாட்டி,
தமிழ்நாட்டின் சமூகநீதி, கல்வி, மருத்துவம், வர்த்தகம் என எந்தத் துறையை எடுத்தாலும், அவற்றின் வரலாற்றைச் செதுக்கிய சிற்பியாகத் திகழ்ந்த ஒப்பாரும் மிக்காருமற்ற முதலமைச்சர்,
திராவிட இயக்கத்தின் திரைமுகமாய்,
எளிய மக்களிடம் இயக்கக் கொள்கைகளைக் கொண்டு சேர்த்தப் பேராளுமை,
பேரறிஞர் அண்ணாவின் வழிமறந்து தமிழகத்தை ஒரு குடும்பம் தன் கொள்ளைக் காடாக மாற்றத் துடித்த போது, @AIADMKOfficial எனும் மக்களாட்சி விழுமியங்களைக் காத்து நிற்கும் அண்ணா வழிப் பேரியக்கத்தைக் கண்ட நம் கழகத்தின் நிறுவனத் தலைவர்,
அன்றும், இன்றும், என்றும்
#எங்கள்_வாத்தியார்_MGR
மாண்புமிகு "பாரத ரத்னா" இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளான இன்று, நம் உயிர்நிகர் தலைவர் அவர்களை வணங்குகிறேன்.
புரட்சித்தலைவரின் பெரும் புகழையும், சரித்திர சாதனைகளையும் ஏந்தி நிற்கும்
நம் உயிருக்கு ஒப்பான நம் கழகம்,
புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தைக் கண்டெடுத்த நோக்கத்தை, தலைவர் எப்படி நிறைவேற்றிக் காட்டினாரோ, அதேபோல் மீண்டும் நிறைவேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்க வேண்டிய கடமை இன்றைக்கு நமக்கு இருப்பதை உணர்ந்து,
தீயசக்தி திமுக-வின் மக்கள் விரோத விடியா ஆட்சிக்கு தமிழக மக்கள் துணையோடு முடிவுரை எழுதிட உறுதியேற்போம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
ஆதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் சுட்டெரித்த பேரொளி,
தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி,
திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று,
மனிதம் போற்றும் உன்னதக் கோட்பாடாம் திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்!
#PeriyarForever
@AIADMKOfficial
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே அரசு பேருந்து மற்றும் கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 7பேர் உயிரிழந்தனர் என்று செய்தியறிந்து ஆற்றொண்ணா துயரமடைந்தேன்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும், மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மேலும் பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பாக விரைந்து உரிய நிவாரணமும், உயரிய மருத்துவ சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்
@AIADMKOfficial
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த திரு. ரீகன் என்பவருக்கு சொந்தமான 3 விசைப்படகுகள்,
திரு. சிங் அவர்களுக்கு சொந்தமான
1 விசைப்படகு என நான்கு விசைப்படகுகளையும், அதில் உள்ள தமிழக மீனவர்களையும் நேற்று (22.12.2025) இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
கச்சத்தீவைத் தாரைவார்த்த தமிழ்நாடு விரோத சுயநல திமுக- காங்கிரஸ் கூட்டணியின் வரலாற்றுத் தவறால் இன்று வரை தமிழகத்தின் மீனவர்கள் சொல்லொண்ணாத் துயர்களுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக உள்ளது. திமுக கூட்டணியின் ஒற்றைத் தவறைத் திருத்தவே இன்று வரை @AIADMKOfficial தொடர்ந்து போராடி வருகிறது.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், படகுகள் மற்றும் உடைமைகளை உடனடியாக விடுவிக்க அந்நாட்டு அரசோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
@MEAIndia@CMOTamilnadu
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியோடு, கழக பொதுச்செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு விருப்பமனுவை தாக்கல் செய்தபோது.
#EPSFOR2026#ADMK