‘கௌரி லங்கேஷ் தினம்’
கௌரி லங்கேஷின் பத்திரிகைப் பணி முக்கியமாகச் சாதிப் பாகுபாடு, விளிம்புநிலை மக்கள் மீதான தாக்குதல்கள், மதவாத அரசியலின் தீவிரம் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளை விமர்சிப்பதாக அமைந்திருந்தது.
#GauriLankeshDay#hindutva#communalism#indianpolitics
கொல்கத்தாவில் வித்யா பாரதி அமைப்பின் 74வது நிறுவன நாள் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வரா சுவேந்து அதிகாரி, ‘‘மாநிலத்தின் கல்வி அமைப்பில் தேசியவாதக் கருத்துகளை ஆழமாகப் பதிய வைக்கும் நோக்கில், மேற்கு வங்கத்தில் ஓராண்டுக்குள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வித்யா பாரதி அமைப்பு சார்பில் குறைந்தபட்சம் 1,000 புதிய பள்ளிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.
மேலும் அவர், ‘'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாட மறுக்கும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசு நிதியுதவி மற்றும் மானியங்கள் உடனடியாக முற்றிலும் நிறுத்தப்படும்,’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
விரிவான கட்டுரைக்கு… https://t.co/XgB7ERAej6
#kolkata #westbengal #schools #suvendu #rss
கட்சி முடிவு எடுத்தால்
தேர்தலில் களமாடுவேன்!
கேள்வி: தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளீர்களே...
நேஹா: எனது பார்வையும் லட்சியமும் தேர்தலுக்குள் மட்டுமே அடங்கிவிடுவதில்லை. நான் சார்ந்திருக்கும் CPI-ML-Liberation கட்சி களத்தில் எங்கள் போராட்டங்களை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாகத் தேர்தலைக் கருதினால் மட்டுமே நான் அதில் போட்டியிடுவேன்.
#nehabora #cpimlliberation #studentprotest #delhi #ThehardlineNews
தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கையை நோக்கி வருகைத் தந்ததாகச் சந்தேகிக்கப்படும் 11 பேரை இலங்கை கடற்படை, தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து மீட்டுள்ளது.
தலைமன்னார் மணல் திட்டுக்களிலிருந்து இந்த 11 பேர் இருவேறு சந்தர்ப்பங்களில் இன்று மீட்கப்பட்டதாக இலங்கைக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சமிந்த வலாகுலகே, எமது தி ஹார்ட்லைன் செய்திப் பிரிவிற்குத் தெரிவித்தார்.
விரிவான கட்டுரைக்கு... https://t.co/XgB7ERAej6
#srilanka #thalaimannar #srilankannavy #rescueteam #thehardlinenews
சமகாலக் கடவுள் ஒருவரைத் திரையரங்கில் கண்டு வழிபடச் சென்ற பார்வையாளர்களுக்கு, அக்கடவுள் உடலுறவு கொள்ளும் காட்சிகளைக் காண மனம் இடம்தரவில்லை.
‘டாக்ஸிக் திரைப்படத்தைக் காண்பதே ஒரு பாவச் செயல்; பாதியிலேயே வந்துவிட வேண்டும்; படத்தைக் காண்பதே பண விரயம்’ என்றெல்லாம் வரும் கருத்துகளின் தன்மை, திரையில் நிகழ்ந்தவொரு பாதிப்பை எதிர்கொள்ளப் பார்வையாளர்கள் பயன்படுத்தும் உள தணிக்கை (Repression) குணாம்சமாகவே தோன்றுகிறது.
– பிரதீப் பாலு, எழுத்தாளர்
#PradeepBalu #ToxicFilm #IndianCinema #Repression #TheHardlineNews
ஆணாதிக்கச் சொல் தான் ‘கன்னிப்பேச்சு’ என்பது. அந்த வார்த்தைக்குப் பதிலாக வேறு வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். அவைக் குறிப்பில் இருந்தும் அந்த வார்த்தையை நீக்க வேண்டும்.
-சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்த பா.ம.க - எம்.எல்.ஏ. சௌமியா, சி.பி.எம். - எம்.எல்.ஏ. லதா
#patriarchy #soumiyapmk #lathacpim #tamilnaduaseembly #tnpolitics
டபுள் எஞ்சின் அரசின் நிர்வாகக் குளறுபடிகளைக் கேள்வி கேட்கும் CJP இளைஞர்களுக்கு அச்சம் ஏற்படுத்த, வீடு புகுந்து தாக்கத் தொடங்கியுள்ளதா பா.ஜ.க. அரசு? மேற்கு வங்கத்தில் நடந்தது என்ன?
#doubleenginegovernment#cjp#bjp#westbengal#thehardlinenews
கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்களின் விவரத்தை சேகரித்துத் தருமாறு விஏஓ, ஆர்ஐகளுக்கு வட்டாட்சியர் எழுத்துபூர்வமாக உத்தரவிட்டிருக்கிறார்.
எதற்காக இந்த கட்சிவாரியான சென்ஸஸ்?
அடுத்த சென்ஸஸ் 'டிமாகி நக்ஸல்'களுக்கா?
இது மாநிலம் முழுவதும் நடக்கப் போகிறதா?
-ஜி.குப்புசாமி, எழுத்தாளர்
#GKuppusamy #PartyWiseCensus #VAO #RevenueInspector #DimagiNaxal
‘நியாயமான மறுசீரமைப்பு’ என்ற நிலைப்பாட்டில்தான் தொடக்கம் முதலே தி.மு.க. இருந்து வருகிறது.
தி.மு.க. ஆட்சியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நிலைப்பாடு எடுக்கப்பட்டு மசோதாவே தோற்கடிக்கப்பட்ட பின்னர், த.வெ.க. கூட்டத்தைக் கூட்டுவது ஏன்?
கட்சிகளை அழைக்காமல் எம்.பி.க்களை அழைத்துக் கூட்டம் போடுகிறது த.வெ.க.
எம்.பி.க்கள் கட்சியின் கொறடாவுக்குக் கட்டுப்பட்டவர்கள். கட்சியின் நிலைப்பாடே முக்கியம்; எம்.பி.களைக் கூட்டிக் கூட்டம் போடுவது முட்டாள்தனமானது.
-கான்ஸ்டன்டைன் ரவிந்தீரன், மாநிலங்களவை எம்.பி. – தி.மு.க.
#ConstantineRavindran #DMK #TVK #Delimitation #fairdelimitation
GenZ போராட்டமும்…அரசின் அடக்குமுறையும்!
நிருபர்: சன்கிளாஸ் அணிந்த கரப்பான் பூச்சியின் AI உருவப் படத்துடன் தொடங்கிய ஒரு கிண்டலான பதிவுதானே இது?
அருந்ததி ராய்: ஆமாம். ஒதுக்கப்பட்டிருந்த அல்லது முதன்மை ஊடகங்களால் ஒடுக்கப்பட்டு, வில்லன்களாகச் சித்தரிக்கப்பட்ட நம்மைப் போன்ற அனைவருக்கும் இது புதிய ஒன்றாக இருந்தது. இது ஒருங்கிணைக்கப்பட்ட விதமும் புதியது. இதிலிருந்து மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
#ArundhatiRoy #GenZ #StudentsProtest #ArtificialIntelligence #TheHardlineNews
கென்-பெட்வா நதிநீர் இணைப்பில் நீர்ப்பாசனம், குடிநீர், வளர்ச்சி என, ஒன்றிய அரசு முன்வைக்கும் இலக்குகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் அதன் மறுபக்கத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களின் வாழ்விடங்களும், விவசாய நிலங்களும், தலைமுறைகளாக இயற்கையோடு பின்னிப் பிணைந்த வாழ்க்கையும் நீரில் மூழ்கப் போகின்றன.
#KenBetwa #RiverLinking #TribalRights #MadhyaPradesh #TheHardlineNews
பா.ஜ.க., எதிர்ப்பு என்பதைத் த.வெ.க., தீவிரமாக மேற்கொள்வதில்லை. த.வெ.க.,வை நோக்கி நாம் குரல் எழுப்பும் சூழலில், தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’ தன் இந்துத்துவ ஆதரவு அரசியல் விருப்பத்தை, மிக அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறது.
– திருமுருகன் காந்தி
#tvk |#murasoli |#hindutva |#bjp |#dmk @thiruja2009
கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக, டெல்லியில் மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஒன்றிய அரசை உலுக்கி வரும் வேளையில், தமிழ்நாட்டில் ஒரு சினிமாவுக்காக அரசின் பிரதிநிதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதும் அந்த மனநிலைக்கு மக்களைத் தயார் செய்வதும் வெட்கக்கேடானது.
-எழுத்தாளர் தமிழ் பிரபா
#NEET #StudentProtest #TamilPrabha #UnionGovernment #Delhi
தேசத்தின் வருங்காலத் தலைமுறை குரல் கொடுக்கிறது. அதை அடக்கு முறையால் நசுக்கினால், அதன் எதிர்காலமே நசுக்கப்படும்.
நியாயமான கோரிக்கைக்காக அமைதியாகப் போராடும் ஒவ்வொருவரையும் ஆதரிக்கிறேன்.
-டோவினோ தாமஸ், திரைக்கலைஞர்
#TovinoThomas#StudentProtest#YouthVoice#PeoplesVoice #TheHardlineNews
பா.ஜ.க., ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் தீவிரமாக நடைபெறும் போதெல்லாம், ‘இது தேசத்திற்கு எதிரான போராட்டம். போராடுபவர்கள் தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தி திசைதிருப்புவது சங்-பரிவார கும்பலின் வாடிக்கை.
- பெ.சண்முகம், CPI(M)
#sanghparivar#bjp#tamilnadupolitics#cpim #thehardlinenews @Shanmugamcpim