சிறந்த அனிமேஷன் & விஷுவல் எபெக்ட்ஸ் - பிஜோய் அற்புதராஜ் (அயலான்)
கடிவாளம் பூட்டப்படாத கற்பனையே சினிமாவை அடுத்தடுத்த உயரங்களுக்கு இட்டுச் செல்லும். அப்படி மெய்யாகும் ஒவ்வொரு கற்பனைக்குப் பின்னாலும் எண்ணற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு இருக்கிறது. இயக்குநர் ஆர்.ரவிக்குமாரின் ஏழு வருட ஏலியன் கனவிற்கு உருவம் கொடுத்துத் திரையில் உலவ வித்திட்டது ஃபேன்டம் எஃப்.எக்ஸ் குழு. மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் வழியே படிப்படியாய் இவர்கள் செதுக்கிய ஏலியனின் சேட்டைகளைப் பார்த்துக் குதூகலமானார்கள் குழந்தைகள். போதாக்குறைக்கு, பள்ளத்தில் விழும் யானை தொடங்கி சூரியகாந்தியை கபளீகரம் செய்யும் வெட்டுக்கிளிகள் வரை, இந்தக்குழு நிகழ்த்திய மாயாஜாலம் இருக்கையோடு கட்டிப்போட்டது பெரியவர்களையும். வானியல் அதிசயம் தொடங்கி விலங்கியல், தாவரவியல் என அறிவியலின் அத்தனை இயல்களையும் தொழில்நுட்ப உதவியோடு மறுவரையறை செய்யும் ஃபேன்டம் எஃப்.எக்ஸ், தமிழ் சினிமாவின் நவீன முகங்கள்.
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards
Celebrating one year of #Ayalaan! 🎉
Dive into the spectacular #VFXbreakdown that brought this special project to life. Here’s to
the creativity, Sagos! 👽🌟
👉 Watch the full breakdown on YouTube: https://t.co/BuXL3uCCsw
@bejoyraj@Phantomfxstudio@Siva_Kartikeyan