மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், வெறும் 107 MLA-க்களுடன், மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கட்சியின் கொள்கையும் செயல்பாடும் என்னவென்று பார்ப்போமா?
பிச்சை:
தீயசக்தி தீயசக்தி என்று வாய்கிழிய பேசிவிட்டு, அந்த கட்சிக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற அவர்களின் கூட்டணி கட்சிகளை, அதான்…. கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய அதே கட���சிகளில் அலுவலகங்களுக்கு “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல, “சோபா வந்தது முன்னே, தவெக வந்தது பின்னே” என்று படியேறி பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது.
திருட்டு:
சொந்தமாக நின்று ஜெய்க்க வக்கில்லாமல், அடுத்த கட்சி MLA-க்களை “கீழே ராஜினாமா, மேலே இணைப்பு” என தலைமைச் செயலகத்தை குதிரை பேரக் கூடாரமாக மாற்றி, திருட்டுத்தனமாக ஆட்சியை காப்பாற்ற நினைப்பது.
ஓட்டம்:
ச��ய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம்,
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் ஓட்டம்,
கரூரில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது ஓடு ஓடு ஓடு ஓடு என்று ஓட்டம் பிடித்தது எல்லாம் தமிழ்நாடு மறக்குமா?
தமிழினத்தை அழிக்கத் துணிந்து, ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இலங்கையில் கொன்றுக் குவித்த வரலாற்றுத் துரோகி காங்கிரசோடு,
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப் படுத்தியதோடு, சுப்ரீம் கோர்ட் வரை அதை ���ிலைநாட்டி, என்று தமிழக மாணவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் நீங்கள் எல்லாம், எங்கள் கூட்டணியைப் பற்றி பேச கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா என்பதை யோசியுங்கள் தற்குறிகளே!
நேருக்கு நேர் நின்று பிரச்சனைகளை சந்திக்க துணிவு இல்லாமல், 72 நாட்கள் வீட்டுக்குள் முக்காடு போட்டு ஒளிந்துகொண்ட சூரரின் சுண்டெலிகள்… மன்னிக்க… அணில்கள் சற்று ஓரமாக போய் விளையாடவும்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
NARCISSISTIC SPEECH!
இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இது தான்!
தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார்.
ச���்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா?என்னயா புது உருட்டா இருக்கு இதெல்லாம்..?!!
இவர் மீது பழி போடுகிறார்களாம்… தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே.. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற Responsibility தெரிந்ததா? இது Narcissism இல்லாமல் வேறென்ன?
“எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்” என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி மோசமாக இருந்ததை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா?
இதில், இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம்… அப்புறம்?
கத்தி பேசுனா, கத்தி பட டயலாக் modulation-ல பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் கா��்ட முடியுமா ?
மாறாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்தத் துவங்கிய குதிரை பேரத்திற்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1!
இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை (வரப்போகும் வழக்கின் முக்கியமான சாட்சி) பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை?
எங்களை “மற்றும் பலர்” என்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அஇஅதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்?
ஆனா ஒன்னு…
ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே…
எதுல? மக்களை ஏமாத்துறதுல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுல..!!
அதுல நீங்க திமுகவை மிஞ்சி தான் இருப்பீங்க போல!
எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க!
(பி.கு. : நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? உலகமே உங்களை சுத்தி தான் இயங்குற மாதிரி சும்மா நசநச ன்னு புலம்பிட்டு இருக்காதீங்க @actorvijay!)
#கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியே குலுங்கும் அளவிற்கு, எழுச்சிப் பயணக் கூட்டத்திற்கு செல்லும் வழியெங்கும் மக்கள் எழுச்சியுற பெருந்திரளாக வந்து வாஞ���சையோடு வரவேற்றனர்.
இந்த எடப்பாடி பழனிசாமி, தனிப்பட்ட ஒருவன் அல்ல. நான் எப்போதும் 2 கோடி அஇஅதிமுக தொண்டரில் ஒருவனாகவே இருக்கிறேன்.
எத்தனையோ சோதனைக் கற்களை வெற்றிப் படிகளாக மாற்றிய இயக்கமான அஇஅதிமுக, அதே வெற்றி வரலாற்றை மீண்டும் 2026-ல் படைக்கும்!
2026-ல் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று, @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், முதல் வெற்றித் திருவிழா கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெறும்!
#மக��களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
தலை பத்தும்,
நூறு படையும்,
கோடி பகையும் நின்றாலும்...
மக்களே துணையாய்க் கொண்டு,
வெல்வான் ஒரு தலைவன்!
எழுச்சிப் பயணத்தின்
175-வது தொகுதியாக
#கோபியில்_எடப்பாடியார் !
ஈரோட்டில் மேடை ஏறிய பொம்மை முதலமைச்சர், வழக்கம் போல
என்னைப் பற்றியே புலம்பித் தள்ளியுள்ளார்.
அவர் எதிர்க்கட்சியில் இருந்த போது,
எது நடந்தாலும் "ஆக, எடப்பாடி பழனிசாமி பதவி விலக வ��ண்டும்" என்று கூறிக்கொண்டே இருந்த பழக்க தோஷம் மாறவில்லை போல,
"நான் டெல்டாக்காரன்" என்று பச்சைதுண்டு போட்டு டயலாக் பேசிவிட்டு,
மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டக் கையெழுத்து போட்டு, அதே டெல்டாவை பாலைவனமாக்கத் துடித்த துரோகத்தின் தொடர்ச்சியாக தானே,
இப்போது நெல்மணிகள் நனைவதைக் கண்டும் காணாமல் இருந்தார் இந்த துரோகி ஸ்டாலின்?
ஆட்சிக்கு வந்து இந்த நான்கரை ஆண்டுகளும், விவசாயிகளு��்கு அடிப்படைத் தேவையான குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டைக் கூட அளிக்காமல்,
முறையாக நீரைத் திறக்காததால், கடைமடை வரை நதிநீர் சென்று சேராததால், டெல்டா பகுதியில் 2 லட்சம் ஏக்கர் வரை தொடர்ந்து பாதித்து, விவசாயிகள் தவித்த போது கூட, விவசாயிகள் மீது அக்கறை கொள்ளாமல் வஞ்சித்த துரோகி தானே நீங்கள்?
உங்கள் பக்கம் இருந்த மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே சொல்லியிரு��்பார்கள், இந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு செய்தன என்னவென்று!
நூறு ஏரிகளுக்கு நீரேற்றும் சரபங்கா திட்டம் முதல், தலைவாசல் கால்நடைப் பூங்கா, அத்திக்கடவு அவிநாசி திட்டம் வரை மேற்கு மண்டலத்திற்காக நான் கொண்டுவந்த எண்ணற்ற திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் போது, இதெல்லாம் நான் கொண்டு வந்த திட்டம் என்று தெரியவில்லையா இந்த பொம்மை முதல்வருக்கு?
கோவை மட்டுமல்ல, மதுரை மெட்ரோவும் வர வேண்டும் என இப்போது கூட மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை சந்தித்த போது கோர���க்கை வைத்துள்ளேன் நான்.
எங்கள் அரசு முன்மொழிந்த மெட்ரோ திட்டத்திற்கான DPR-ஐக் கூட முறையாக சமர்ப்பிக்கத் தெரியாமல், உங்கள் அரசு சமர்ப்பித்த DPR-ல் உள்ள முரண்பாடுகளை மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அதையெல்லாம் நிவர்த்தி செய்து மறு சமர்ப்பிப்பு செய்வதை விட்டுவிட்டு, இதை வைத்து தனது அற்ப அரசியல் லாபத்தை தேடிக்கொள்வதற்கு உண்மையிலேயே திரு. @mkstalin வெட்கப்பட வேண்டும்.
"அஇஅதிமுக ஆட்சியில் கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் வரும்" என்று சொன்னதைக் கேட்டு வயிற்றெரிச்சல்பட��டு, திமுக ஆட்சி என்பதால் புறக்கணிப்பா? என்று கேட்கிறார். திரு. @mkstalin அவர்களே- நீங்கள் ஒரு கையாலாகாத, நிர்வாகத் திறனற்ற முதல்வர் என்பதைத் தான் நாங்கள் எப்போதும் கூறுகிறோம்.
உங்கள் ஆட்சி இருக்கும் போது தான், சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்து நான் வலியுறுத்தினேன். எங்களின் கோரிக்கையினை ஏற்று தான், மத்திய அரசும் ரூ. 63,246 கோடிய��� ஒதுக்கி உத்தரவிட்டது.
ஆக, @AIADMKOfficial எப்போதும் மக்களுடன் நின்று, மக்களுக்கு நன்மை செய்து வருகிறது. நீங்களோ, நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு, மக்களுக்கு எந்த நன்மையும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளீர்கள். இப்போது சொல்லுங்கள், யார் துரோகி என்று!
ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் வியர்க்க விறுவிறுக்க, வியர்வையைத் துடைக்க கர்சீப்பைக் கூட மறந்துவிட்டு டெல்லிக்கு பதற���ப் பறந்தீர்களே- அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா திரு. ஸ்டாலின் அவர்களே?
நான் எப்போதும் என் உயிருக்கு உயிரான தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார்! ஆனால், ஒரே ஒரு கேள்வி-
எல்ல���வற்றையும் எடப்பாடி பழனிசாமி தான் செய்ய வேண்டும் என்றால்,
நீங்கள் எதற்கு சார் முதல்வராக இருக்கீங்க?
பரமக்குடி–இராமநாதபுரம் இடையிலான #NH87 நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
₹1,853 கோடி மதிப்ப���ல் மேற்கொள்ளப்படும் இந்த வழித்தட மேம்பாட்டு திட்டமானது, பயண நேரத்தை குறைத்து, பயணப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், தென் தமிழகத்தில், குறிப்பாக ராமேஸ்வரம் புனித யாத்திரைப் பகுதியில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பெரிதும் ஊக்கப்படுத்தும்.
தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்க��றேன்.
@PMOIndia
@AIADMKOfficial
முதல்வர் @mkstalin-ன் தொலைபேசி உரையாடல்- அலட்சியத்தின் உச்சம்!
கொலை செய்தது உங்கள் அரசு.
"SORRY" என்பது தான் உங்கள் பதிலா?
அஜித்குமார் இருந்த��ால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது.
அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, "தைரியமாக இருங்கள்" என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு?
முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே?
"என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்" என்று சொல்கிறீர்களே... போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா ?
வேறென்ன செய்துவிடப் ப���கிறீர்கள்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே.. அதை போன்ற முயற்சிதானே இதுவும்?
அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு FIR, கைது எல்லாம் நடக்கிறது.
உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவ���ை ஏமாந்தது போதாதா? அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?
"நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை!
இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோஷூட் போன் காலே சாட்சி!
#JusticeForAjithkumar
#NationWithAjith
@AIADMKOfficial
40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான திரு. ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட���ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்.
: 8.10.2024 - செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு.
#Humanchainprotest
கழகத்தின் இதயதெய்வங்களாம் புரட்சித்தலைவர்-புரட்சித்தலைவி அம்மா
ஆகியோர் கட்டிக்காத்திட்ட
கழகத்தின் கோயிலாம்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில்
கழகத்திற்கான, கழகப் பிரச்சாரங்களுக்கான காட்சிப் பதிவுகளைத் திரையிடும்
நிரந்தர LED பதாகையினை
தனது பொற்கரங்களால் திறந்துவைத்த
மாண்புமிகு அம்மா அவர்களின் நூற்றாண்டு கனவு நோக்கி நம்மை வழிநடத்திச் செல்லும் கழகத்தின் மூன்றாம் அத்தியாயம்,
மாண்புமிகு கழகப் ப��துச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களுக்கும்,
விழாவினை சிறப்பித்த கழகத்தின் மூத்த தலைமைக் கழக முன்னோடிகளுக்கும்
@AIADMKITWINGOFL சார்பில் பாதம் பணிந்த நன்றியினை உரித்தாக்குகிறோம்!
#EPSfor2026
#புரட்சித்தமிழரின்MasterClass
ம���்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்குத் தரவேண்டிய முதல் தவணை நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கும்; நிதியை போராடிப் பெறாத விடியா திமுக அரசுக்கும் கண்டனம் !
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு @EPSTamilNadu அவர்களின் அறிக்கை.
உழவர்களின் காவலர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.எஸ்.பழனிசாமி அவர்களுக்கு மணிமண்டபம் திறந்து வைக்க, திருப்பூர் மாவட்டம், பல்லடத்திற்கு ���ருகை தந்த,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றேன்.
@EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @ADMK_Kovai @ADMK_Tiruppur #Coimbatore #Tirupur #AIADMK #அஇஅதிமுக
அஇஅதிமுக நல்ல விஷயங்களுக்காக,
பொதுவான விஷயங்களுக்காக கண்டிப்பாக ஒன்றிணைந்து காவிரி நதிநீரை பெறுவதற்கு முயற்சி எடுக்கும்.
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் முடிந்த பின் கழக தலைமை நிலைய செயலாளர் முன்னாள் அமைச்சர் @spvelumanicbe அவர்கள் பேட்டி.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும்.
இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் ��ிமுக அரசின்
இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@AIADMKOfficial @EPSTamilNadu
அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு எக்ஸ் வலைதளம் மூலமாக ஆதரவளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரர் திரு. @Seeman4TN அவர்களுக்���ும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்த @NaamTamilarOrg மாநிலப் பொருளாளர் திரு. ராவணன் அவர்கள் தலைமையிலான நிர்வாகிகளுக்கும் நன்றி.
#பயமா_ஸ்டாலின்
#Resign_Stalin
ராஜரத்தினம் மைதானத்திற்கு நேரில் வருகைதந்து, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து, விடியா திமுக அரசிற்கு எதிரான தனது கூர்மையான விமர்சனங்களை முன்வைத்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி. @PremallathaDmdk அவர்களுக்கு நன்றி.
#பயமா_ஸ்டாலின்
#Resign_Stalin
எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நின்றாலே நேரலை துண்டிப்பு தானா @mkstalin @AppavuSpeaker ?
எதிர்க்கட்சித் தலைவரின் நியாயமான கோரிக்கையை எழுப்பும் போது நேரலையை துண்டித்துவிட்டு, நீங்கள் பேசும் போது மட்டும் நேரலை காட்டுவது நாலாந்தரம் இல்லையா சபாநாயக��ே?
அவை நாகரிகம் என்று பேசும் உங்களின் உண்மை முகம் இதுவே!
#Resign_Stalin