'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிற சமத்துவ கோட்பாடு, 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்கிற அரசியலமைப்பு மாண்பு, 'சுயமரியாதை மற்றும் சமூகநீதி' என்கிற தமிழக வரலாற்று மரபு ஆகியவற்றைக் காக்கும் விதமாக, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தன்னிகரற்ற சக்தியாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய தோழமைக் கட்சிகள் கைகோர்த்துள்ள கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் மதச்சார்பின்மை சிறப்பையும், தமிழ்நாட்டின் சமூகநீதி அடையாளத்தையும் பின்பற்றி அனைவருக்குமான கொள்கை அரசியலில் உறுதியுடன் நமது கூட்டணி பயணிக்கும்.
1/3
"மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி!"
ஒரு வரலாறு உருவாகிறது. இந்திய நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக சிறப்பையும், தமிழ்நாட்டின் சமூகநீதி அடையாளத்தையும் பின்பற்றி அனைவருக்குமான கொள்கை அரசியலில் உறுதியுடன் பயணிப்போம்.