திரையில், ‘ஜனநாயகன்’ எனப் பெயர் சூட்டிக் கொள்ளும் முதல்வர் விஜய், தரையில் மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையின் மூலம் அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்யலாமா? திரைப்படத்தில் மட்டும்தான் ஜனநாயகனா? வடநாட்டு இளைஞர்கள் டெல்லி வீதிகளில் கல்வியுரிமைக்காகக் களத்தில் நிற்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களைத் திரையரங்க வாசலில் நிறுத்தி இருப்பதெல்லாம் ஏற்கவே முடியாத பெருங்கொடுமை.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
#tvkfails #ntk #ntkitwing #seeman #banneet
உங்களுக்கு புரியர மாதிரி சொல்லணும்னா உங்க அண்ணன் விஜய் நடித்த கத்தி, தலைவா போன்ற படங்களுக்கு தடை வந்தப்போ அதை எதிர்த்து பேசியவர் அண்ணன் சீமான் தான். உனக்கு தெரியலன்னா போய் உங்க அண்ணன் விஜய்ட்ட கேளு சீமான் யாரு என்று.
இல்லைனா கூட்டணி கட்சி காங்கிரஸ் ராகுலிடம் கேளுடா வெண்ணெ!
ஒருபக்கம், டெல்லியில் நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் மீதான பாஜக அரசின் அடக்குமுறையைக் கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, தமிழ்நாட்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்களை தவெக அரசு ஒடுக்க நினைப்பது இரட்டை வேடமில்லையா? பாஜகவைக் கொள்கை எதிரியெனக் கூறிவிட்டு, பாஜகவுக்காக தவெக அரசு செய்யும் மறைமுகச் சேவகமில்லையா இது? கேலிக்கூத்து!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
#tvkfails #bjpfails #ntk #ntkitwing #banneet
வழக்கறிஞர், மருத்துவர், நீதிபதி, காவல்துறை ஆகிய பணிகளுக்கு வர வேண்டுமென்றால் தேர்வு எழுத வேண்டும்.
ஆனால், நாட்டை ஆளும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் ஏன் தேர்வு எழுத வேண்டியதில்லை?
அந்தப் பதவிகளுக்கும் தேர்வு நடத்துங்கள். அதில் வெற்றி பெறுபவர்கள் நாட்டை ஆளட்டும்; அமைச்சர்களாகட்டும்.
#ntk #seeman #bjpfails #banneet
இன்று #மாஞ்சோலை படுகொலைநாள் சூலை 23 1999ல் மாஞ்சோலை தேயிலை தோட்ட ஊழியர்கள் கூலி உயர்வு கேட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய போது காவல்துறை தடியடி நடத்தியதால் தப்பி ஓடிய மக்கள் ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்ததில் ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தாமிரபரணி ஆற்றில் மலர்தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
https://t.co/QjcCkU8WOB
நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நமக்கானதல்ல
அடுத்த தலைமுறைக்கானது..!!
ஆத்திரமும் அவசரமும் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அடுத்த தலைமுறைக்கு வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கிறது..!!
வாழ வேண்டிய இளைஞர்களும்
சீரழிவான பாதையில் சிக்கி சீரழிகிறது..!!
அருவா கலாச்சாரத்தால் அழியும்
தென் மாவட்டம் ..??
அந்த நாளை நினைத்தால் இன்னும் என் உடல் கிடுகிடுவென ஆடத்தொடங்கும்... ஆம் சிவாஜி அய்யாவின் தீவிர ரசிகனான நான் சென்னை வந்து இயக்குனராகி அவரையும் பார்த்து அவரிடமே கதை சொல்லி பிறகு அவரின் உடல்நிலை காரணமாக அந்த சங்கடத்தை தவிர்த்து இப்படி அவர் இருக்கும் சாலையில் பயணிக்கும் போதெல்லாம் சந்தோசம் கொண்ட நான் ஒரு நாள் அந்த சலையின் வெளியில் ஒரு ஓரத்தில் நடுங்கி நிற்கிறேன்... வீட்டின் உள்ளே சென்று அவரை காண நான் தயாராயில்லை.. அதை பார்க்க வேண்டாம் போல இருக்கிறது.. ஆனால் அவர்தான் எனக்கான பாதை காண்பித்தவர்.. எப்படி பார்க்காமல் இருக்க முடியும்... பார்த்தேன் அந்த பார்க்க முடியாத காட்சியை... அன்று முழுவதும் அருகில் ... அவரோடயே பயணம்.. அரசு மரியாதையில் ஒரு ஓரத்தில் என் கண்ணீர் மரியாதை.. அவரை தூக்கி கொண்டு வருகிறார்கள்.. நான் ஓரத்தில் அவர் முகம் பார்க்கிறேன்.. தலையை தாங்கி வந்த வாசு சார் தடுமாறுகிறார்.. சரத் சார் சேரன் பிடிங்க என்ற குரல் காதில் ஓங்கி ஒலிக்க என் கைகளில் என்தெய்வத்தின் முகம்.. கடைசியில் அக்னிக்குள் என் அய்யன் கடந்தபோது கதறி அழத்தோன்றிய அந்த நடுக்கம்... இன்றும் அந்த நாள் வரும்போதெல்லாம் நடுக்கம் இருக்கிறது... அவர் வெண்திரையில் என் முன் காண்பித்த அத்தனை தோற்றங்களும் கதாபாத்திரங்களும் உணர்வுகளின் வெளிப்பாடுகளும் வித்தியாச வித்தியாசமான நடிப்பும் புதிய கதைகளை தேடித்தேடி களம் கண்ட அந்த அணையா விளக்கின் ஆன்மா இன்னும் திரையுலகில் எத்தனையோ கலைஞர்களை உருவாக்கி வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை...
நீட் போன்ற அனைத்து நச்சுத் திட்டங்களையும் உருவாக்கியது காங்கிரஸ்.
அவற்றை வளர்த்தது பாரதிய ஜனதா கட்சி.
அவற்றுக்கு துணை நின்று ஆதரித்தது திமுக.
#ntk#seeman#ntkitwing#tamilnationlism
உன் தலைவனை பார்க்க வந்து கரூரில் 41 பேர் இறந்தபோது கலங்காத உனது கண்கள்..
திருவள்ளூரில் அம்மோனியா கசிந்து மக்கள் பலியான போது கலங்காத உனது கண்கள்..
ஒவ்வொரு நாளும் சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் அடித்து கைது செய்யப்படும்போது கலங்காத உனது கண்கள்..
கல்வி வன்முறையான ஊழல் மயமாகிவிட்ட நீட் தேர்வு முறையால் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்கின்ற மாணவ மாணவியரை எண்ணி கலங்காத உனது கண்கள்..
ஜூன் 12 வந்திருக்க வேண்டிய காவிரி நீர் இதுவரை வராமல் காவேரி மாவட்டங்கள் காய்ந்து பாலைவனமாக மாறி விவசாயம் அழிந்து போனதையும், விவசாயிகள் சாவில் விளிம்பில் நிற்பதையும் எண்ணி கலங்காத உனது கண்கள்..
தமிழகத்தின் கனிம வளங்கள் கொள்ளைப் போவதை பற்றியும், அண்டை மாநிலங்களின் மருத்துவ கழிவுகளின் குப்பைத் தொட்டியாக தமிழ்நாடு மாறிப்போனதை எண்ணியும் கலங்காத உனது கண்கள்..
ஒவ்வொரு நாளும் பாலியல் வன்முறைகளால் பெண்கள் சிறுமிகள் சூறையாடப் படும்போது கலங்காத உனது கண்கள்..
நாட்டில் நடக்கும் எந்த அநீதிக்கும் கலங்காத, கசியாத உனது கண்கள்..
உனக்குப் பிடித்த நடிகனின் கடைசி திரைப்படம் என்பதால் கலங்குகிறது என்றால் அவை கண்கள் அல்ல...
புண்கள்.
அது கண்ணீரும் அல்ல.. உன் பிழைப்புக்காக நீ நாவூறி சிந்தும் எச்சில்.
- மணி செந்தில்.