ஆங்கிலேயர்களிடம் நாடு அடிமைப்பட்டு கிடந்தபோது தாயக விடுதலைக்கு போராடிய தகைமையாளர்..!
"நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்; இசுலாம் எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி" என்று இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கிய மாமனிதர்..!
பிரிவினையின்போது விருப்பமுள்ள இசுலாமியர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்று இந்திய அரசு கூறியபோது, நாங்கள் இந்த மண்ணின் மக்கள், நாங்கள் ஏன் வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று எதிர் கேள்வி எழுப்பிய பெருமகன்.,!
உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று முகமது அலி ஜின்னா கூறியபோது, ‘ஜின்னா அவர்களே, எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம். எங்களின் பாதுகாவலுக்கு இந்தியா என்ற நாடு உண்டு’ என்று நம்பிக்கையுடன் கூறிய பெருவீரர்..!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சிகளை தலைவராக வழிநடத்திய பெருந்தகை..!
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், 20 ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் என்று ஏற்ற பதவிகளுக்கு பெருமை சேர்த்து பொதுவாழ்வில் தூய பெருவாழ்வு வாழ்ந்த
நம்முடைய தாத்தா கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
நடிகரும், இயக்குநருமான @RJ_Balaji அவர்களது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'கருப்பு' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!
இத்திரைப்படத்தில், ஐயா இளையராஜாவின் காப்புரிமை கோரல் தொடர்பாக ஒரு காட்சியைக் கேலியாக அமைத்து, பிறகு, படத்தயாரிப்பு நிறுவனம், அதற்கு ஐயா இளையராஜா அவர்களிடம் வருத்தம் தெரிவித்த செய்தியைப் படித்தேன்.
இச்சமயத்தில் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியும், இனமானத் தமிழர்களும், திரைக்கலைஞர்களும் செய்த போராட்டத்தை கேலிசெய்து பேசினார் இதே ஆர்.ஜே.பாலாஜி. "ஐ.பி.எல்.லை நிறுத்தினால் தண்ணி வந்துடுமா?" எனப் பகடி செய்தார். அதனையே அவர் நடித்த 'எல்.கே.ஜி.' திரைப்படத்திலும் வசனமாகப் பேசி, எள்ளி நகையாடினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் வழக்கில், 'காவிரிச் சிக்கல் தமிழ்நாட்டில் ஒரு சிக்கல் இல்லை; அந்த மாநிலத்தின் தலைநகரத்திலே பெரிய சலனம் இல்லை' என உச்ச நீதிமன்றத்தில் அப்போது வாதிட்டது கர்நாடக அரசு. ஒருவேளை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டிருந்தால், "பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி சென்னையில் கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளிக்கிறார்கள். ஆகவே, காவிரி தமிழர்களுக்கு முதன்மைச்சிக்கல் இல்லை" எனும் வாதத்தை கர்நாடக அரசு முன்வைத்திருக்கும்.
ஏற்கனவே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பான 192 டி.எம்.சி. தண்ணீர் என்பதை, 177.25 டி.எம்.சி.யாக தனது வாதத்தின் மூலம் குறைக்கச் செய்தது கர்நாடக அரசு. ஆம்! தமிழ்நாட்டினுடைய நிலத்தடி நீர் மட்டத்தின் இருப்பு 20 டி.எம்.சி. ஆக இருப்பதைக் காரணமாகக் காட்டி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நீரின் அளவில் 14.75 டி.எம்.சி.யைக் குறைக்கச் சொல்லி, உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது கர்நாடக அரசு. அந்த வாதத்தையும் ஏற்று, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நீர்வரத்தை 177.25 டி.எம்.சி.யாகக் குறைத்துத் தீர்ப்பு அளித்தது உச்ச நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் தமிழகமெங்கும் வலுபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் எனும் கேளிக்கை தேவையில்லை என்பதைக் கருதியும், அந்தக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் அதனையே உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதமாக வைக்கக்கூடும் என்பதாலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அந்த ஆண்டு சென்னையில் நடத்த எதிர்ப்புத் தெரிவித்துப் போராடினோம். அந்தப் போட்டி போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்றாலும், அதற்குப் பிறகு, அந்தாண்டு சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.
உண்மை இப்படியிருக்க, வெகுஜன ஊடகமான திரைப்படத்தில் அந்தப் போராட்டத்தின் நியாயத்தைத் துளியும் உணராது கேலி, கிண்டல் செய்தார் ஆர்.ஜே.பாலாஜி. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதன் விளைவாக, கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு, 68 நாட்கள் புழல் சிறையில் இருந்தவன் எனும் அடிப்படையில் ஆர்.ஜே.பாலாஜியின் அந்தக் கேலி, கிண்டல் எனக்கு வலித்தது; கோபத்தையும் ஏற்படுத்தியது. ஆர்.ஜே. பாலாஜியின் நகைச்சுவையைப் பல சமயம் ரசித்திருக்கிறேன். ஆனால், ஒரு மண்ணுரிமைப் போராட்டத்தை நகைச்சுவைப் பொருளாக மாற்ற முனைவதை ஒருநாளும் ரசிக்க முடியவில்லை.
நிற்க! ஐயா இளையராஜா கோரும் காப்புரிமை என்பது உரிமை தொடர்பானது; அதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை என உணர்ந்து கொண்டது போல, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நிறுத்தக் கோரி அன்றைக்குப் போராடிய அண்ணன் சீமான், ஐயா மணியரசன், ஐயா பாரதிராஜா, அண்ணன் வெற்றிமாறன் உள்ளிட்ட இனமானத் தமிழர்களின் போராட்டமும் நியாயமானது; அதில் கேலி, கிண்டலுக்கு இடமில்லை என்பதை ஆர்.ஜே.பாலாஜி இனியாவது உணர்ந்து கொள்வார் என நம்புகிறேன்.
நேற்று இன எழுச்சி நாள் கூட்டத்தில் மட்டும் 400 யூனிட் குருதி 3 மருத்துவமனைக்கு வழங்கினோம். அண்ணன் பேசி கூட்டம் முடிந்தும் பெருவாரியான உறவுகள் வரிசையில் காத்திருந்து குருதிக்கொடை வழங்கியது நெகிழ்ச்சியின் உச்சம்..
ஒருங்கிணைத்த குருதிக்கொடை பாசறை உறவுகளுக்கு வாழ்த்துகள்...
சரியான கட்சியில் இருப்பதே தனி கெத்து தான்..
நாம் தமிழர் கட்சித்தலைவர் அண்ணன் சீமான் ஊடகங்களுக்கு தேவையில்லாமல் பேட்டி தரக்கூடாதென ஒருவேளை முடிவெடுத்திருந்தால் அதை முழுமையாக வரவேற்கிறேன்..மிகவும் நல்ல முடிவு
ஏதாவது பேச வேண்டுமென்றால்..
இனி வீடியோவாக பதிவு செய்து காப்பிரைட் இல்லாமல் NTK Youtube,X தளத்தில்
page-ல் போடவும்
எல்லோரும் எடுத்து நியூஸா போடுவானுங்க..
எடுத்து ஒளிபரப்புவானுங்க வேற வழியே இல்லை…
இன்னொரு விஷயம்..
Instagram Reels-தான்
அரசியல்/மாற்றம் என நம்பும்
மக்களுக்காக இனி ஊர் ஊராக பயணப்பட்டு தேவையில்லாமல் உடலை வருத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டுமென @Seeman4TN அவர்களை தனிப்பட்ட வகையில் கேட்டுக்கொள்கிறேன்
அதிக தொகுதிகள் வென்றிருக்கும் தவெகவை ஆளுநர் பதவி ஏற்க அழைக்கவேண்டும் என்பதில் உடன்படுகிறேன். ஆனால் தான் ஆட்சி அமைக்க எந்த திமுக கூட்டணியை எதிர்த்து ஓட்டு வாங்கினாரோ அந்த திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவது விஜயின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம். காங்கிரஸ் ஆதரவை பெற்றபொழுதே அவரின் முகமூடி கிழிந்துவிட்டது. அதே போல் திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று விட்டு அமைச்சர் பதவிக்காக விஜயை ஆதரிக்கும் சந்தர்ப்பவாத கட்சிகளை இனி மக்கள் துடைத்தெறிய வேண்டும்.
பதவிக்காக எதிரியின் காலை பிடிப்பதை விட கேவலம் எதுவுமில்லை..
"ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து, பிறகு அவன் தானாக கிளர்ந்து எழுவான்"- புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்"
சட்டம் வகுத்த மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆவடி தொகுதி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.. #AmbedkarBirthDay
நாங்க(ஆவடி தொகுதி) தயார் பன்னாதான் தரமா இருக்கும்னு ஊருக்கே தெரியுமே💥🔥💪🏾
ஆவடி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் முனைவர் புனிதா சண்முகம் ஆவடி தொகுதி முழுவதும் தேர்தல் பரப்புரை செய்ய பரப்பரை வாகனம் தயார்...
ஆவடி என்றாலே தரம் 💥💥💥
#vivasayi#சீமான்_2026@Seeman4TN
ஆவடி தொகுதி வெற்றி வேட்பாளர் புனிதா சண்முகம் அவர்கள் இன்று பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயில் ஆகிய பகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்டார்..
மக்கள் பெரும் மகிழ்வுடன் வரவேற்றனர், உறுதியாக நாம் வெல்வோம்,.
#naamtamilarkatchi#Avadi#vivasayi#ntkitwing#punithashanmugam#seeman
இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் நிர்வாகி அன்புச்சகோதரர் சிவா திலீபன் அவர்கள் அன்னைத் தமிழ் காக்க தன் இன்னுயிரை இழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
இந்திக்கு இங்கு ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் நாட்டினரே! செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்தும் ஒரு லாபமுண்டோ? என்ற புரட்சி பாவலர் தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் உணர்ச்சிமிகு பாவரிகளுக்கு ஏற்ப தாய் மொழிக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் தலையை கொடுத்தேனும் அதனை தடுத்து நிறுத்துவதுதான் தமிழர் மரபு என்றபோதிலும், அத்தகைய ஈகத்தால் வரும் இழப்பினை ஏற்க மனம் மறுக்கிறது. வலிக்கிறது!
சகோதரர் சிவா திலீபன் இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ்ந்து இந்தியைத் திணிக்கும் இந்திய ஒன்றிய அரசிற்கு எதிராக இன்னும் வலுவான பற்பல வீரியப் போராட்டங்களை முன்னெடுத்து, அன்னைத்தமிழை அழியாது காக்கும் அரணாக களத்தில் நின்றிருக்க வேண்டும் என்கிற சிந்தனையே இத்துயர்மிகு சூழலில் உள்ளத்தில் எழுகிறது.
இனப்பற்றும், மொழிப்பற்றும் கொண்ட தன்மானத் தீரர்கள்
இறந்து போராடுவதை விடவும், இருந்து போராட வேண்டும் என்பதையே இனிவரும் தலைமுறையினருக்கும் அறிவுறுத்தலாகவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.
அன்புச்சகோதரர் சிவா திலீபன்
அவர்களை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மே 17 இயக்கத்தினருக்கும், தமிழ் மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
தாய்த்தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த அன்புச்சகோதரர் சிவா திலீபன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ராஷ்டிரிய உலமா கவுன்சில் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய சகோதரர் அக்ரம்கான் மற்றும் தமிழ்நாடு சுன்னத் ஜமாத் அமைப்பின் நிர்வாகிகள் இன்று 11-03-2026 நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து சந்தித்து, வருகின்ற சட்டமன்றத் தேர்தல்-2026இல் நாம் தமிழர் கட்சிக்கு தங்களது இயக்கங்கள் சார்பாக முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகவும், 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்றுவதாகவும் உறுதியளித்தனர்.
ஆவடி அரசு மருத்துவமனையின் அவல நிலையை ஆதாரத்துடன் விவரிக்கிறார் ஆவடி தொகுதி வெற்றி வேட்பாளர் புனிதா சண்முகம்..
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழிவகை செய்யவேண்டும்
#ஆவடி#avadi@_ITWingNTK@Seeman4TN@NaamTamilarOrg@TiruvallurCollr
சேலம் கூட்டத்தில் சுராஜ் என்பவர் இறந்துபோனார். அவரது இறப்புக்கு ஒரு இரங்கல் அறிக்கைகூட விஜய்யிடமிருந்து வரவில்லை.
நேற்று தஞ்சாவூரில் ஒரு தம்பி விபத்தில் சிக்குண்டு கடும் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அதுகுறித்து நலம் விசாரிப்போ, 'யாரும் இதுபோல செய்யக்கூடாது' எனும் ஒரு அறிவுறுத்தல் அறிக்கையோ இதுவரை வரவில்லை.
இன்றைக்கு விஜய்க்காக வரிந்து கட்டுகிறவர்கள் எவராயினும் அவர்களுக்கும் இதுதான் நிலை. தனது தொண்டர்களின் உயிரைப் பற்றியோ, அவர்களின் உணர்வைப் பற்றியோ விஜய்க்கு எந்தக் கவலையுமில்லை.
அதீத நல்லவனாகவும், அநியாயத்தைத் தட்டிக் கேட்பவனாகவும் திரைப்படத்தில் நீங்கள் பார்த்த விஜய் நிஜத்தில் அவ்வாறு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.