@IndiaHaier I'm very disappointed of authorised haier service centre VENDHAN ENTERPRISES. I have raised a complaint regarding my air conditioner on 13th April 26 technician came and said the manager named Yasar will update the estimate bill,till now there is no proper response
சென்னையில்
மழை வந்தால் வெள்ளம் !!!
மழை இல்லையெனில் வறட்சி !!!
இதற்கு தீர்வு தான் என்ன ???
வாங்க பார்ப்போம்...
சென்னை இரண்டு பருவ மழைகளால் தண்ணீரை பெறுகிறது. தென்மேற்கு பருவமழை ஜூனிலிருந்து செப்டம்பர் வரை 33% நீரையும், வடகிழக்கு பருவமழை அக்டோபரில் இருந்து டிசம்பர் வரை 48 சதவீத நீரையும் சென்னைக்கு தருகிறது. இந்த பருவமழை பெய்யும் போது தருகின்ற நீரைக் கொண்டு அந்த பருவ மழை காலத்தின் போதும், அடுத்த பருவமழை தொடங்கும் வரையும், அந்த நீரைக் கொண்டுதான் நமது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது .
நமது மெட்ரோ வாட்டர் சென்னைக்கு தேவையான நீரை சென்னைக்கு வெளியில் உள்ள நீர் நிலைகளில் இருந்தே கொடுத்து வருகிறது. ஆனால் அது சென்னையின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. மீதியுள்ள இரண்டு மடங்கு தேவைக்கு நாம் நமது நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறோம்.
சென்னையின் பரப்பளவு 426 சதுர கிலோமீட்டர். இதில் 1400 மில்லி மீட்டர் சராசரி மழைப்பொழிவு உள்ளது . அப்படி எனில் நமக்கு ஒவ்வொரு வருடம் 21 டிஎம்சி அளவிற்கான தண்ணீர் மழையின் மூலம் கிடைத்து வருகிறது. இதனைத் திட்டமிட்டு நாம் சேமித்தால் மட்டுமே வெள்ளமும், வறட்சியும் உருவாகாமல் சென்னை பாதுகாக்கப்படும். எப்படின்னு பாக்கலாமா !!!
1. முதலில் சென்னையுடைய பரப்பளவில் ஒரு 50 சதவீதம் கட்டிடங்களாக [ வீடுகள் , கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்தும் ] இருப்பதாக எடுத்துக் கொண்டால், அதில் குறைந்தபட்சம் ஒவ்வொரு கட்டிடத்திலும் பெய்கின்ற மழையில் 80 சதவீதத்தை நேரடியாக நிலத்தடி நீராக மாற்றிக் அமைக்கக்கூடிய கட்டமைப்பு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் சென்னையில் பெய்யக்கூடிய மழை நீரில் 40 சதவீத நீர் நேரடியாக நிலத்தடிநீராக மாறும், அதாவது ஏறக்குறைய 8 டிஎம்சி நீர் நிலத்தடி நீராக நேரடியாக மாறும். [ கட்டிடங்களின் சதவீதம் அதிகமாக இருக்குமெனில், இன்னும் அதிகமான நீரை சேமிக்க முடியும் ].
2. மீதியுள்ள 60% நீரில் குறைந்தபட்சம் 20% நீரை நமது நீர் நிலைகளில் சேமிக்க வேண்டும். ஏறக்குறைய 21 க்கும் மேற்பட்ட ஏரிகளையும் , 210க்கும் மேற்பட்ட குளங்களையும் கொண்ட சென்னை ஆனது , அதற்கு தகுந்த கொள்ளவு உடைய நீர்நிலைகளாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். உதாரணமாக அம்பத்தூர், கொரட்டூர், ரெட்டேரி ஏரிகள் மூன்றும் சங்கிலித் தொடர் ஏரிகள். இந்த மூன்று ஏரிகளின் பரப்பளவு 1400 ஏக்கர், இதனுடைய சராசரி ஆழம் 20 அடியாக இருக்கும் பட்சத்தில், ஏறக்குறைய 1.2 டிஎம்சி அளவுக்கான நீரை இதில் நேரடியாக தேக்க முடியும். ஆனால் இதுவரை இந்த மூன்று ஏரிகளும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவே இல்லை.
3. நமது வீட்டுக்கு அருகில் உள்ள மழை நீர் கால்வாய், அது கொண்டு சேர்க்கக்கூடிய 32 இயற்கையான கால்வாய்கள், ஓட்டேரி நல்லா, மாம்பலம் கால்வாய், வளசரவாக்கம் கால்வாய், போன்ற கால்வாய்கள் மற்றும் கொஸஸ்தலை , கூவம்,அடையாறு, பள்ளிக்கரணை போன்ற ஆறுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் 20% நீரை, நிலத்தடி நீராக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இப்படி செய்யும் பட்சத்தில் பெய்கின்ற மழையில் 80% நீர் நிலத்தடி நீராக மாற்றியமைக்கப்படும். மீதியுள்ள 20% நீர் மட்டுமே கடலை அடையும். இதன் மூலம் அதிக மழை பெய்யும் பொழுது வெள்ளமாக மாறாமலும், குறைவாக மழை பெய்யும் பொழுது அது வறட்சியாக மாறாமலும் சென்னை பாதுகாக்கப்படும்...
கட்டிடங்களில்,கால்வாய்களில் போதுமான மழைநீர் சேகரிப்பு இல்லாததால், எவ்வாறு வெள்ளமும், வறட்சியும் ஏற்படுகிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...
#ChennaiRains #Arappor