பரந்த வெளியில் ஆரத்தழுவ அவாவும் ஆதுரக்கை விரித்திருந்தேன். ஆயிரம் லட்சமென ஆகாயத் துளிகள் வாழ்த்தாய்ப் பெய்தன. திரைக் கலைஞர், நண்பர் என ஒவ்வொரு துளிக்கும் தனித்தனியே நன்றி சொல்ல நாப்பரப்பும் நாட்பரப்பும் போதா. மனமே தருகிறேன். ஏந்திக்கொள்க.
கரூரில், திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி க்ளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது?
நம்மவர் 66 : நாள் -9
சேலம் மேற்கு மாவட்டம் மகளிர் அணி சார்பாக இன்று முதல் மக்கள் நீதி மய்யத்தின் தெருமுனை பிரசாரம் 'நம்மவர் 66' என்ற தலைப்பில் தொடர்ந்து 66 நாட்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
பொதுமக்களிடையே மிக பெரிய எழுச்சியைக் காண புறப்பட்டுள்ளனர்!
வடசென்னை பெரம்பூர் தொகுதி மூலக்கடையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பொதுச்செயலாளர் @MouryaMNM அவர்கள்!!!
#சீரமைப்போம்_தமிழகத்தை
நம்மவர் 66 : நாள் -7
சேலம் மேற்கு மாவட்டம் மகளிர் அணி சார்பாக இன்று முதல் மக்கள் நீதி மய்யத்தின் தெருமுனை பிரசாரம் 'நம்மவர் 66' என்ற தலைப்பில் தொடர்ந்து 66 நாட்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
பொதுமக்களிடையே மிக பெரிய எழுச்சியைக் காண புறப்பட்டுள்ளனர்!
அரசியல் மாணவர்கள் மீது தாக்கம் செலுத்தும் முன், மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருக்கட்டும் என கேரளத்தின் புகழ் மிக்க தெரஸா கல்லூரி மாணவிகளிடம் ஆற்றிய உரையை இங்கே பகிர்கிறேன். (1/2)
'என் வாழ்க்கையே என் செய்தி' என வாழ்ந்து உலகிற்கு ஒளியூட்டிய காந்தியாரின் நினைவைப் போற்றுவோம். உயர்ந்த லட்சியங்களை எட்ட காந்திய வழியை விட பலம் மிக்க பிறிதொன்றில்லை.
தமிழக அரசு, யானைப் புத்துணர்ச்சி முகாம் நடத்துகிறது. இதே ஆட்சியில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் ஆக்கிரமிப்பு, வாழிடக் குறைப்பு, உணவின்மை, வேட்டை போன்ற காரணங்களால் பலி ஆகியிருக்கின்றன. கோயில்யானைக்கான அக்கறையைக் காட்டுயானைக்குக் காட்டக்கூடாதா?
கமல்ஹாசன் அறிவித்த தேர்தல் உறுதிமொழியான 'இணைய வசதி அடிப்படை உரிமை' மற்றும் ஒவ்வொரு வீட்டுக்கும் கணினி வசதி ஆகியவை கேரள அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
நன்றி @strashib
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது.
(1/2)
விடுதலைப் போரில் தமிழர்களின் பங்கு வெளித்தெரியவே வெகுகாலம் ஆயிற்று. தகவல் தொடர்புக் குறைபாடு, மொழி இடைவெளி போன்ற காரணங்களால், இன்று இந்திய ராணுவத்தில் தமிழர்களின் பங்களிப்பும் போதுமான அளவு புரிபடவில்லை.
(1/2)