தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து கொண்டு வருகிறது.
இதனைக் கண்டு கொள்ளாமல்,
இந்த #DummyCM விதவிதமான Shooting-யை எடுப்பதை விட்டுவிட்டு மக்கள் படும் துயரங்களை துடைக்க, வேறு எந்த ஒரு சாக்கும் சொல்லாமல் Take Action..
-மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள்.
வாக்களித்த விரல் மை காய்வதற்குள்ளாகவே 'உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும்' பச்சை துரோகத்தை செய்த வேட்பாளருக்கு வெட்கமும் கூச்சமுமின்றி வாக்கு கேட்பதுதான் தூய சக்தியின் லட்சணமா?
-மாண்புமிகு கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்.
இடைத்தேர்தல்: வாக்காளர்களின் கண்��ியத்திற்கு முதலமைச்சர் விட்டிருக்கும் சவால்!
மக்களிடம் பெற்ற வாக்குகளை விற்ற ஒரு வேட்பாளர் - அதை விலை பேசி வாங்கிய ஒரு கட்சி. இவர்களுக்கா உங்கள் வாக்கு?
பெரும்பான்மையான மக்களின் ஆதரவில்லாத “ரீல்ஸ்” முதலமைச்சரின் ஆணவத்துக்குப் பதிலடி கொடுக்க, தாராபுரத்தின் தன்மானம் காக்க அக்டோபர் 6-ஆம் நாள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சகோதரி வழக்கறிஞர் சுகன்யா அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்!
#VoteForDMK #DharapuramByElection #Dharapuram
MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா?
தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது.
அன்ற��டச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?
இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட, #DravidianModel ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது.
ஆனால் இன்றைய நிலை என்ன?
இந்தியா முழுவதும் GST வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத Waste ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான Guidance TN-இல் இருந்தும் அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வருகின்றன.
பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.
இவற்றில் கவனம் செலுத்தாமல், விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் என்பது போல எல்லாவற்றிலும் 'வெற்றி' என Sticker ஒட்டினால் போதும் என நினைக்கும் அரசிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவிக்கின்றனர்.
#VoteForDMK #Dharapuram