திங்கள் அன்று சென்னை SSN கல்லூரியில் நடந்த Full Scholarship ற்கான Aptitude exam and interview இல் கலந்து கொண்டு BE IT சேர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனது அரசு பள்ளியில் பயின்ற மாணவி.இது விளம்பரத்திற்கான பதிவு அல்ல. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் திறமை மிக்கவர்கள் தான்.
என்னைப் போன்ற சாமானிய ஆசிரியர்களின் உழைப்பையும் கனவுகளையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் புதிய தலைமுறை குழுமத்திற்கும், கனவு ஆசிரியர் அமைப்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏❤️
அரசுப் பள்ளியில் படித்த மாணவ-மாணவியர்கள் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் முதுகலை பயில தமிழ்நாடு அரசு நிதியுதவி அளிக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கடந்த 2021 முதல் 2026 வரையிலான கல்வியாண்டுகளில், தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த 1,912 மாணவர்கள் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி உள்ளிட்ட நாட்டின் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். இது தமிழ்நாட்டின் சிறந்த கல்வித் தரத்திற்குச் சான்றாகும்: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
இன்று தேசிய மீன் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில் மீன்வளம் & நீர்வாழ் உயிரின வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு (career awareness session on fisheries& aquaculture) நிகழ்வு நடைபெற்றது. அதில் எங்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்து கொண்ட நிகழ்வு.