தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விநாயகம் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்.
உலகின் தலைசிறந்த அறிஞர், சமத்துவப் போராளி, உலகத் தலைவர், முன்னோடி சிந்தனையாளர், நவீன இந்தியாவின் அரசியலமைப்பு சிற்பி' ஆகிய புகழுக்குச் சொந்தக்காரரான புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், லண்டனில் பொருளாதார மாணவராக ஆய்வு மேற்கொண்டபோது வசித்த நினைவு இல்லத்தை பார்வையிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்கிற லட்சியத்தின் வழியில் உன்னத சமூகத்தை உண்டாக்க, தன் வாழ்வையே அர்ப்பணித்த புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களைக் காண்பதற்கு, லண்டன் மாநகர தமிழ் உறவுகள் உள்ளம் நிறைந்த அன்போடும் உணர்வோடும் ஆர்வமாக இருப்பீர்கள்! ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டும், லண்டன் மாநகரக் காவல்துறையின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் உங்களைப் பார்க்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அவரைக் காண்பதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் வைக்கிறோம்.
மேலும் வெற்றித் தலைவர் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் வாசலில் காத்திருப்பது, அவர் செல்லும் வழியில் காத்திருப்பது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Holyyyy jesussss 👺🔥
What the actual hell is going on? MADNESS AT ITS PEAK, Anil's are queued up to meet THALAPATHY, UK police on duty 💥
Yaar saamy nee 🔥
தலைமை நிலைய அறிவிப்பு:
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்
இ.யூ. முஸ்லிம் லீக் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
#iuml#iumltamilnadu#iumltamilnadustate
இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் துணையுடன் நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது. சாலைகள், பாலங்கள், அணைகள், விண்வெளி ஆய்வுகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல் என நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் நமது பொறியாளர்களின் திறனும், உழைப்பும் மிளிர்கின்றன.
பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்!
#CMJosephVijay
#EngineersDay
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப்பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
“கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு”, "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்!
#CMJosephVijay