தலைமைக் கழக அறிவிப்பு:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திண்டுக்கல் மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.K.P.நல்லசாமி அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
தலைமைக் கழக அறிவிப்பு:
கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக தலைமை நிலைய செயலாளரும், தருமபுரி மாவட்டக் கழக செயலாளருமான திரு.D.K.ராஜேந்திரன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிற���ர்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திண்டுக்கல் மாவட்டக் கழக நிர்வாக வசதிகளுக்காக திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் மத்தியம் மற்றும் திண்டுக்கல் தெற்கு ஆகிய கழக மாவட்டங்களாக மறுசீரமைக்��ப்பட்டு கீழ்காணும் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக பொருளாளரும், சேலம் மத்திய மாவட்டக் கழக செயலாளருமான வீரபாண்டி திரு.S.K.செல்வம் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கம்.
#TVKFails
ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெக வின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்
தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் மாநகர், தஞ்சாவூர் வடக்கு மற்றும் தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் தஞ்சாவூர் மத்தியம், தஞ்சாவூர் கிழக்கு மற்றும் தஞ்சாவூர் தெற்கு என மறுசீரமைப்பு- தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில்
திரு.P.ராஜேஸ்வரன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில்
அக்ரி திரு.G.சரவணகுமார், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில்
திரு.V.M.பாண்டியராஜா நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகம், மற்றும் வடசென்னை மேற்கு மாவட்டக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மறுசீரமைக்கப்படுகிறது. திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில்
திரு.S.லோகநாதன், வடசென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில்
திரு.பி.ஆனந்தன் நியமனம்.
ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெக வின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
அம்மாவின் தொண்டர்களை குதிரை பேரத்��ின் மூலம் அழிக்க நினைக்கும் நாசகார சக்திக்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதும் காலம் விரைவில் வரப்போகிறது.
@TVKVijayHQ @TVKPartyHQ
#வேண்டுமா_இப்படியொரு_பிழைப்பு
மூன்று எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்து விட்டுத்தானே வந்தார்கள், அது எப்படி குதிரை பேரமாகும் என்கிறார்கள் சிலர்...
பதவி ஏற்ற முதல் நாளிலயே, "வாக்குறுதிகளை நிறைவேற்ற எனக்கு அவகாசம் வேண்டும்", என சொல்லி, இதுவரை கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட முழுமையாக நிறைவேற்ற கைழுத்திடாத ஆட்சி,
பதவியேற்ற 15 தினங்களுக்குள் 30க்கும் அதிகமான கொலைகள், பாலியல் குற்றங்கள் என சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு,
அதிகரிக்கும் மின்வெட்டு, அரசு நிர்வாகத்தில் ஆளும்கட்சியினரின் அத்துமீறல், பாலியல் வன்கொடு��ையால் கொல்லப்பட்ட குழந்தையின் மரணத்தை கூட சிரிப்பால் கடக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் என ஆதரித்து வாக்களித்தவர்கள் முன்பு கூட தலைகவிழ்ந்து நிற்கிறது இந்த ஆட்சி.
அப்பேற்பட்ட ஆட்சியை கண்டு வியந்து, உச்சி குளிர்ந்து, மனமெங்கும் மகிழ்ச்சி பொங்கி, வெற்றி பெற்ற 21 நாட்களிலயே, அதுவும் எல்லோருக்கும் கிடைத்திடாத சட்டமன்ற உறுப்பினர் என்கிற பெரும்பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும��கட்சியில் இணைந்தது பணத்திற்கும், பதவிக்கும் இல்லையென அந்த மூவரும் சொல்வதை, அவர்கள் வீட்டு அம்மாவும், அப்பாவும், மகன்களும், மகள்களும் உண்மை தான் என முதலில் சத்தியம் செய்யட்டும், விமர்சனத்தை நிறுத்திக் கொள்கிறோம்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ��ிகிச்சைப்பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்றிட எல்லாம் வல்ல இறைவனை ப���ரார்த்திக்கிறேன். @thirumaofficial
அன்றைய காலகட்டத்தில் பெரும் பணம் செலவழித்து கட்சி ஒன்று, சென்னை ஆவடியில் நடத்த இருந்த மாநாடு பற்றிய பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் இன்று நடக்கவுள்ள துரோகிகளின் மாநாட்டோடு பொருந்துவது போல் உள்ளது.
“தம்பி பெரும் பணம் செலவழித்து, தோரணங்கள���ம் தோகைகளும் ஓவியங்களும் கொண்டு மாநாடு நடத்தி பயன் எதுவும் வராது.
திறமை மிக்க ஓவியன் ஒருவன் காட்டில் உள்ள நல்ல கனி தரும் மரங்களை அப்படியே நம் கண்முன்னே கனிகள் காய்த்து தொங்குவதை போல் ஓவியமாக வரைந்தான் . அனைவரும் கண்டு
மெய்சிலிர்த்து வியந்தனர்.
ஆனால் தம்பி, அ��்த ஓவியத்தில் உள்ள கனிகளை கண்டு ரசிக்க தான் முடியுமே தவிர அதனை உண்டு நம் பசியை போக்க முடியாது.
அதே போன்று தான் தம்பி பெரும் பணம் மட்டுமே செலவழித்து நடத்தப்படும் மாநாடுகள் மக்களிடம் துளியும் நம்பிக்கை பெறாது, அவை அனைத்தும் பயனற்றது”.
"சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும் நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவு தான் தம்பி அவர்களுக்கு இருக்கும் நம்���ிக்கை".
சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது.
மருத்துவர்களின் அலட்சியத்தால், மேற்சிகிச்சையின்போது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக குழந்தையின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இப்போது அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழ���்திருக்கிறது.
மருத்துவத்துறை அதிகாரிகளும், அமைச்சரும் குழந்தை உயிரிழப்பு குறித்து அளித்து��்ள பதில் ஏற்கனவே துன்பத்தில் உள்ள பெற்றோரை மேலும் துன்பத்தில் ஆழ்த்துவதுபோல் உள்ளது.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், பெற்றோரின் குற்றச்சாட்டை உரிய விசாரணை நடத்தி காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.@CMOTamilnadu
எதிர் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் இருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டாவில் நெற்பயிர்களை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகா அரசிடம் எ��்தவித கோரிக்கையும் விடுக்காமல் திரும்பியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கத��.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தபோதிலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் அடம்பிடிக்கும் கர்நாடகாவின் விருந்தோம்பலில் மகிழ்ந்த திமுக தலைவருக்கு, டெல்டா பாசன விவசாயிகளின் நிலை பற்றி கவலை இல்லையா?
டெல்லி சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தந்தால் மட்டுமே கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவேன் என டெல்லி முத��மைச்சர் சொந்த மாநிலத்தின் நலனுக்காக குரல் கொடுத்ததைப் போல திமுக தலைவர் குரல் கொடுக்கத் தவறியது ஏன்?
எப்போதுமே தமிழ்நாட்டின் மக்களின் நலனை புறந்தள்ளிவிட்டு சொந்த நலனுக்காகவே சிந்திக்கும் திமுக தலைவர், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிவாரா?
பெங்களூரு விமானநிலையத்துக்கே வந்து தன்னை வரவேற்ற துணைமுதலமைச்சரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.க��.சிவக்குமாரிடம் மரியாதை நிமித்தமாகவாவது காவிரியில் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கோரிக்கைவைக்கத் தவறியது ஏன் ?
க��றுவை சாகுபடிப் பயிர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று டெல்டா விவசாயிகள் தவிப்பது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கூட்டணி விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பியிருக்கும் திமுக தலைவர், தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவது கண்டிக்கத்தக்கது. @CMOTamilnadu