தமிழ் சமுதாயத்திற்கு சமத்துவ உணர்வைவூட்டி ‘திராவிடன்’ எனும் அடையாளத்தை முன்னெடுத்த அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
அறிவுப் போராளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்து பெருமைப்படுத்தியது நம் திராவிட மாடல் அரசு.
சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்ற நிலையை அடைய அயோத்திதாசர் வழியில் தொடர்ந்து பணியாற்றுவோம்.
வாழ்க அயோத்திதாசரின் புகழ்! வளர்க சமத்துவம் !
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அத்தனை தம்பி - தங்கைகளுக்கும் என்னோட பாராட்டுகளைத் தெரிவிச்சுக்குறேன்.
Exam-ல Pass-ஆக முடியாத Students கவலைப்படாதீங்க. அடுத்தடுத்த வாய்ப்புகள் இருக்கு. மீண்டும் முயற்சி பண்ணா வெற்றி பெறலாம். விட்டதை பிடிக்கலாம்.
எல்லாத்தையும் விட இந்த வயசுல education தான் முக்கியம். அதை விட்டுறாம தொடர்ந்து முன்னேறுங்க.
உயர்கல்வியிலயும் - வாழ்க்கையிலயும் சாதிக்க என் அன்பும் - வாழ்த்தும்.
#10thResults
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
திருமிகு சவுமியா சுவாமிநாதன் அவர்கள் புகழ்பெற்ற இலண்டன் இராயல் சொசைட்டியின் உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பெருமை, நம் அறிவுத்திறத்துக்கான உயர் அங்கீகாரம்!
இந்தியாவில் இருந்து இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது பெண்மணி இவர்தான் என்ற வகையில் புதிய வரலாற்றைப் படைத்து, மேலும் பல பெண்கள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிபெறத் திருமிகு @DoctorSoumya அவர்களின் சாதனை ஊக்கமளிக்கும்.
திராவிட மாடல் அரசின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் பங்கேற்று, நமது திட்டங்களைப் பாராட்டிப் பேசி, ஆலோசனைகளையும் வழங்கி வந்த திருமிகு சவுமியா அவர்களுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையிலும் மகிழ்ச்சியளிக்கிறது.
அவரது தந்தை மரியாதைக்குரிய திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் அடிச்சுவட்டில் செயற்கரிய சாதனைகளைப் படைத்து வரும் திருமிகு. சவுமியா சுவாமிநாதன் அவர்கள் தொடர்ந்து தமது அறிவுக்கொடையை நம் மக்களின் முன்னேற்றத்துக்காக வழங்கிடுவார்கள் என்று நம்புகிறேன்.
நேர்லயும் சோஷியல் மீடியாக்கள்லயும் உடன்பிறப்புகளான நீங்க வெளிப்படுத்துற உணர்வுகளைக் கவனிக்குறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்து, தலைவர் கலைஞர் ஊட்டிய உணர்வோட பயணிக்குற நமக்கு, புத்தெழுச்சி ஊட்டக் கூடிய நாளா, தலைவர் கலைஞரின் பிறந்தநாள் வருது!
ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி, தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடுற அதேவேளையில், சோஷியல் மீடியாவுலயும் தலைவர் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைப் பரப்புவோம்! இளைய தலைமுறைக்கு நம்மோட வரலாற்றையும் – தேவையையும் எடுத்துச் சொல்வோம்!
தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறக்கணும்னா அதுக்கு தி.மு.க.தான் தேவை என்பதை இளைஞர்களுக்குச் சொல்ல தலைவர் கலைஞரின் பிறந்தநாளில் உறுதியேற்று உழைக்கத் தொடங்குவோம்!
#LetterToBrethren #Kalaignar103 #KalaignarForever
சாதியெனும் இருள் அகற்றிடத் தோன்றிய #திராவிடப்_பேரொளி அயோத்திதாசரின் புகழ் ஓங்குக!
மயங்கிக் கிடந்த நம் இனம் விழித்தெழ, புரட்சிகரச் சிந்தனைகளை விதைத்த திராவிட இயக்கத்தின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள்.
🔷 அவருக்குத் திருவுருவச் சிலையும் மணிமண்டபமும் அமைத்தது;
🔷 அவரது பெயரில் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கியது உள்ளிட்டவை #DravidianModel-க்குக் கிடைத்திட்ட பெரும் பெருமை!
சாதிபேதமற்ற சமுதாயத்தைக் கட்டமைத்திட, 'தமிழன்', 'திராவிடன்' ஆகிய சொற்களை அரசியல்களத்தில் ஆயுதமாகப் பயன்படுத்திய அயோத்திதாசரின் சிந்தனைகள் நீடு வாழ வேண்டும்! திராவிடச் சிந்தனை நோக்கி இளைஞர்களை ஈர்த்த அவரது வழியில் பயணிப்போம்! தமிழ்ச் சமூகம் மேன்மையுற தொடர்ந்து பாடுபடுவோம்!
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
உங்க Career-ஐ உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது.
இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன்.
#10thResult #ExamResult
“தி.மு.க.வின் கதை முடிந்துவிட்டது என நமது இன எதிரிகள் நினைக்கிறார்கள். ஆனால், நமது கழகம் தோல்வி அடைந்தபோதெல்லாம் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல எழுந்து வந்துள்ளது என்பதுதான் நமது வரலாறு.” - கழகத் தலைவர் @mkstalin அவர்கள்
#DMK4TN
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
கழகத் தலைவரிடம் தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன?
இனி நாம என்ன பண்ணணும்? என்பதை தெரிவிக்க 👇🏽
உடன்பிறப்பின் குரல்
🔗: https://t.co/C7HMSgQphn
@mkstalin#DMK