📸 | இன்று (25.08.2026) 290 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் @TVKVijayHQ !
#TVKVijayHQ#CVB
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 290 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பேருந்திலுள்ள வசதிகளைப் பார்வையிட்டார்.
#CMJosephVijay
மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.290.08 கோடி செலவிலான 250 புதிய பேருந்துகளின் சேவையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
புதுக்கோட்டை மேற்கு மாவட்டம், #நம்ம_விராலிமலை
தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் பேரூர் கழக #தவெக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இலுப்பூரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் புதிதாக இணைந்த பொறுப்பாளர்கள், தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்ட இச்சிறப்புமிகு கூட்டத்தில் பங்கேற்று; இனி வரும் எல்லாத் தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கொடியை நிலைநாட்டிட
அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு,
புகழ்க் கோட்டையாம் புதுக்கோட்டையை
தமிழக வெற்றிக் கழகத்தின் கோட்டையாக்குவோம் என்று உறுதியோடு தெரிவித்து நிகழ்வை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன்! 🙏❤️💐
#CMJosephVijay
#CMVijayForTNRights
#தமிழகவெற்றிக்கழகம்
#PudukkottaiWestTVK
#TVK
‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின்
16-ஆம் ஆண்டு விழா வாழ்த்துகள்! 💐
செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், புதுமையான அணுகுமுறை, நேர்த்தியான நெறியாள்கை, நம்பகத்தன்மை எனத் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்து, தமிழ் ஊடக உலகில் தொடர்ந்து பயணித்து வரும் ‘#புதியதலைமுறை’க்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
உண்மையின் குரலாகவும், மக்களின் நம்பிக்கைக்குரிய ஊடகமாகவும், இன்னும் பல ஆண்டுகள் சிறப்புடன் பயணித்து, மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!
@PttvNewsX
#16வதுஆண்டில்புதியதலைமுறை
#16YearsOfPuthiyathalaimurai
தமிழகத்தின் அரசியல் வரலாற்றிலேயே மாபெரும் திருப்புமுனையை உண்டாக்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் “ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி" 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
நமது புதுக்கோட்டை மத்திய மாவட்டக் கழகத்தின் சார்பில், புதுக்கோட்டை திலகர் திடலில்,
மாபெரும் மக்கள் திரளின் எழுச்சியோடு நடைபெற்றது.
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்; புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர் ஜா.முகமது பர்வேஸ் அவர்களோடு சிறப்புமிகு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று;
மக்களின் பேராதரவோடு ஆட்சி அமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின்;
'100' நாள் சாதனைகளையும், மக்கள் மனம் போற்றும் நலத்திட்டங்களையும் நேர்மையான, வெளிப்படையான ஆட்சியின் நிர்வாக திறன்களையும் எடுத்துக் கூறி;
இனி வரும் எல்லாத் தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி உறுதி என்பதையும், அனைவரும்
ஒன்றுசேர்ந்து புகழ் கோட்டையாம் புதுக்கோட்டையை தமிழக வெற்றிக் கழகத்தின் கோட்டையாக்குவோம் என்றேன்.
இந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!
#CMJosephVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#PudukkottaiTVK
#TVK
தொடமாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்களையும் விடமாட்டோம் என சொல்லி, எங்க செயல்பாடுகளை பாருங்கன்னு சட்டமன்றத்தை LIVEஆ ஓபனா கொடுக்குறாங்க.. அதுக்கு ஒரு துணிச்சல் வேணும்.
இனி எந்த தேர்தல் வந்தாலும் த.வெ.க தான் வெற்றி பெரும் -
அண்ணன் @Vijayabaskarofl பேச்சு
#TVKVijayHQ#CVB
பல வரலாறுகளை
தனதாக்கிக் கொண்ட;
தரணியாண்ட தமிழரின்
சிங்க நகரம்!
வங்கக் கரை கொண்ட
தங்க நகரம்!
இயற்கைப் பேரிடர்கள்
எத்தனை வந்தாலும்
எதையும் தாங்கும் பெருநகரம்!
திருவிழாக் காலங்களின்
திருநகரம்!
வந்தார்க்கு வாழ்வளிக்கும்
அன்னை!
தமிழரின் வாழ்வோடு கலந்துவிட்ட
சிறப்புமிகு சென்னை!
அனைவருக்கும் சென்னை தினம் நல்வாழ்த்துகள்! 🙏❤️
#ChennaiDay
#Chennai387
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எனது ஆருயிர் தலைவர் அவர்களிடம் இன்று ஆசி பெற்று, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளை வெளியிட்டேன்.
#சூரசம்ஹாரம்@CMOTamilnadu | @TVKVijayHQ
இன்று (21.08.2026)
திருச்சி விமான நிலையம் வருகைதந்த
கழக பொதுச்செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand அவர்களை.
முன்னாள் அமைச்சர்
மாவட்ட கழக அமைப்பு செயலாளர்
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர்
அண்ணன் @Vijayabaskarofl அவர்கள் வரவேற்றார்.
புதுக்கோட்டை மாவட்டம்,
#நம்ம_விராலிமலை தொகுதி விராலிமலை வடக்கு மற்றும் குன்றாண்டார்கோவில் மேற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் குளத்தூரில் நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், புதிதாக இணைந்த பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்துகொண்ட இச்சிறப்புமிகு நிகழ்வில் பங்கேற்று;
#புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி–வைகை–குண்டாறு திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கியதற்காக
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்,
மாண்புமிகு நீர்வளத்துறை
அமைச்சர் புஸ்ஸி என்.ஆனந்த்
அவர்களுக்கும்,மாண்புமிகு
அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் அவர்களுக்கும் மண்ணின், மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு;
இனி வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும்
தமிழக வெற்றிக் கழகம் மகத்தான, சிறப்பான வெற்றியைப் பெறும். நமது பாதை இனி வெற்றிப் பாதை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என உறுதியேற்று, விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன்! 🙏🏻💐
#CMJosephVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#PudukkottaiWestTVK
#TVK