பிறரின் பேராசையை இந்த பிரபஞ்சம் எவ்வாறு அடக்குகிறது தனது சுயத்தை எவ்வாறு மீட்கிறது என்பதனை மிக அழகாக சொன்ன ஒரு நாவல்
சிறந்த திரைபடத்திற்க்கான கதை கொண்ட ஒரு புத்தகம்
முன்னெப்போதோ, எங்கேயோ நடந்தது போல கதை விரிந்தாலும் இன்று, இங்கே கண்முன் நடக்கும் பல கொடூரங்களை அப்படியே தோலுரிக்கிறது இக்கதை.
வாசிக்கத் துவங்கிய நொடியிலிருந்து காட்டுத்தீப் பற்றியதைப் போன்று திகுதிகுவென வேகமெடுக்கும் கதை நிறைவடைந்த பின்னும் உள்ளுக்குள் அதே கனல் (1/3).
அதன் மக்களையும் வெறும் கற்பனையில் மட்டும் நிச்சயமாக சொல்ல இயலாது. காட்டையும், காட்டின் மக்களையும் தேடிப் புழங்கித் திரிந்த ஒரு மனிதனால் மட்டுமே இந்த வர்ணனை சாத்தியம். நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் "பன்றி வேட்டை".(3/3).
மனிதர்களின் வெறியை, வேட்கையை, இயலாமையை விரக்தியை, கீழ்மை குணங்களை எந்த சமரசமுமின்றி தோலுரித்துக் காட்டுகிறது. காலம்காலமாக தொடரும் எல்லா வேட்டைகளின் முடிவையும் தீர்மானிப்பது காடுகள் தான். விறுவிறுப்பான ஒரு திரைப்படம் பார்ப்பதைக் போன்று விவரிக்கப்பட்ட காடுகளையும்,(2/3)