சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாற்றுத்திறன் மகளிர் இல்ல சகோதரிகளுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்தோம். அவர்களுடன் கேக் வெட்டி நலத்திட்டங்கள் வழங்கியதோடு, அவர்களின் அன்பான வாழ்த்தில் நெகிழ்ந்தோம்.
@nchitrarasu
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம்.
பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் ��ந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார்.
இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும்.
குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலா��ர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம்.
இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.
ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம்.
ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.
இணையற்ற இயக்கத்தின்
இனமானக் காவலர்
திராவிட பேரரசரின் வாழ்த்துகளுடன்..
நாளைய விடியலின் நம்பிக்கைச் சூரியன் இளைஞர் படையின் எழுச்சி நாயகன் இளம் தலைவரின் பிறந்தநாள்!
பொன்மன தலைவருக்கு
இளைஞரணி இதயங்கள்
புகழ் மாலை சூட்டிடும் வகையில்…
"உதயா அண்ணன் வாராரு'..
பாடல் வெளியீட்டு விழா!
26-11-2026
கலைஞர் அரங்கம்
காலை 9 மணிக்கு,
முன்னாள் நித���யமைச்சர் @TThenarasu MLA., அவர்கள் வெளியிடுகிறார்கள்!
எழுச்சியோடு வருக! வருக! Stay tuned.. 🔥
@mkstalin @Udhaystalin @dmk_youthwing
#இளம்தலைவர்
#உதயா_அண்ணன்_வாராரு
#HBDUdhayAnna
#UdhayaAnnanVaaraaru
முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு.முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள் இன்று!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மனசாட்சி என போற்றப்பட்டவர்.
திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளர்.
பத்திரிகை - எழுத்து - திரையுலகம் - அரசியல் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்.
கொள்கை உறுதியோடு க���கம் வலுப்பெற உழைத்தப் பெருமைக்குச் சொந்தக்காரரான முரசொலி மாறன் அவர்களின் பணிகளை என்றென்றும் போற்றுவோம்.
வாழ்க அவர் புகழ்!
Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்!
இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்���தால் குறுவை பொய்த்தது.
சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார்.
அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.
இந்த நிலை ஏற்படக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும�� - அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூட���து எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள்.
ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்!
சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
திரு.பாபு அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்கள் - அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய விடுதலைப்போரில் தன்னலம் பாராமல் போராடிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று.
அந்நியர்களை நிலைகுலையச் செய்யும் வகையில் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய சரித்திர சாதனைக்குச் சொந்தக்காரர்.
வ.உ.சி அவர்களின் உறுதி கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள், அவர் மீது ஏவிய அடக்குமுறைகள் ஏராளம்.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் தியாகத்தையும் - போர்க்குணத்தையும் போற்றுவோம்!
#VOC #வஉசிதம்பரனார்
In the era of the IPL, one man who has given millions of people across Tamil Nadu countless unforgettable memories is now stepping away from the field.
Fans of CSK will miss those iconic helicopter shots, brilliant stumpings, exceptional captaincy and the composure with which he turned difficult situations into memorable victories.
Thank you @msdhoni, for all the beautiful memories and incredible moments. Tamil Nadu, especially Chennai, will always hold a special place in its heart for you.
As you take on a new role as the mentor of CSK, my very best wishes.
சென்னை மேற்கு மாவட்டம் - சேப்பாக்கம் பகுதி - 114-வது வட்டக்கழகச் செயலாளர் சகோதரர் கோபி கார்மேகம் அவர்களின் அன்பு மகள் மருத்துவர் காவ்யா - மருத்துவர் சாய் விக்னேஷ் ஆகியோரின் திருமண விழா ம��ுரவாயலில் இன்று நடைபெற்ற போது பங்கேற்றோம்.
மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று தமிழ் போல் வாழ்கவென்று வாழ்த்தினோம்!
#ChepaukTriplicane @Avadi_Nasar @nchitrarasu
கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் @KN_NEHRU அவர்களின் சகோதரர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுடைய அன்பு மகன் தம்பி விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் இணையரின் திருமணத்தை கழகத்தலைவர் @mkstalin அவர��கள் சென்னையில் இன்று நடத்தி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கின்ற மணமக்கள் விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் இணையர் கழகமும் - கலைஞரும் போல, தலைவர் அவர்களும் - உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@ArunNehru_DMK
சென்னை கிழக்கு மாவட்டக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி – ஆதிதிராவிடர் நலக்குழு – சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
சென்னை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், தகவல் தொழில்நுட்ப அணி, ஆதிதிராவிடர் நலக்குழு & சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு (1/4)
பொதுப்புத்தி மனப்பான்மையில் இருந்தோ சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ கண்மூடித்தனமான கருத்துருவாக்கம் செய்ய முயல்வது அல்ல பத்திரிகையாளரின் பணி!
சமூகத்தின் சிந்தனைப் போக்கே சீரழி��ும் நிலையிலும் அதனைச் செதுக்கி, பக்குவப்படுத்தும் பெரும் பணிதான் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்துறையின் பணி.
அதனாலேயே, மற்ற மூன்று தூண்களைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஊடகங்களின் பணி கருதப்படுகிறது.
நேர்மையும், அஞ்சாமையும், உண்மையைக் கண்டறியும் ஆர்வமும் உழைப்பும் பொறுமையும் கொண்டு கடமையாற்றிடும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!
கழகத்தின் மூத்த உடன்பிறப்பு காசி தாத்தாவை இன்று சந்தித்தோம். முரசொலியை அரசியல் அரிச்சுவடியாக்கி இ���்று வரை கொள்கை உறுதியோடு பயணிக்கும் காசி தாத்தா நம் கழகத்தின் பெருமை!
50 ஆண்டுகளுக்கு மேலாக தான் பெற்ற உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் - மாநாட்டிற்காக அவர் அச்சடித்த போஸ்டர்கள் - பத்திரப்படுத்திய கலைஞரின் கடிதங்கள் - கருப்பு, சிவப்பு திருமண அழைப்பிதழ்கள் என்று கழக வரலாற்றைச் சேமித்து வைத்திருக்கிறார் காசி தாத்தா.
கலைஞரின் உடன்பிறப்புகளுக்கே உரிய வேகமும் - துணிச்சலும் காசி தாத���தாவிடம் இன்றும் சற்றுக்கூட குறையவில்லை. அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி கொள்கிறோம்!