தமிழக மாணவர் எழுச்சி பேரவையின் அதிகாரபூர்வ பக்கம் | @tmepofficial
ஒருங்கிணைப்பாளர் @johnpauldinaka3
மாணவர்களுக்கான குரல் 🔥💯💪
#tmepofficial#voice4students
திமுக அரசின் ஏவல் துறையால் அண்ணா பல்கலைக்கழகம் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய விடாமல் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறோம்!!
குற்றங்களை கட்டுபடுத்த வக்கில்லாமல், குற்றவாளிகளை தப்பவிட்டு போராடுபவர்களை கைது செய்து என்ன பயன்?
@_ITWingNTK#dmkfail
அண்ணா பல்கலைக்கழக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் இந்த திமுக அரசு நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தை முடக்குவது கண்டிக்கத்தக்கது .
#EnsureWomenSafety
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 24.08.2024 இன்று பிற்பகல் 02 மணியளவில் திருவாரூர் ( ஆண்டிப்பந்தல்) அமைந்துள்ள ருக்மணி அம்மாள் திருமண அரங்கத்தில் திருவாரூர் - நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது...
@Seeman4TN@NaamTamilarOrg
கொரோனோ பெருந்தொற்றுப் பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியைக்கூடச் செய்ய மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
கொரோனோ பெருந்தொற்றுக் காலம் முதல் தற்போதைய டெங்கு தொற்றுக் காலம் வரை தம் உயிரைப் பொருட்படுத்தாது, மக்கள் உயிர் காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றி வருபவர்கள் அரசு மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள் வர அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்கக் கடின உழைப்பே முதன்மையான காரணமாகும். தமிழ்நாட்டின் 18000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை-எளிய தமிழக மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளனர்.
ஆடம்பரத் திட்டங்களுக்காகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கும் திமுக அரசு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவர்கள் வீதியில் இறங்கிப் போராடியும், அவர்களது அடிப்படை உரிமைகளைக் கூட இன்றுவரை நிறைவேற்றாமல் அலட்சியம் செய்வது கொடுங்கோன்மையாகும்.
அதுமட்டுமன்றி, கொரோனோ பெருந்தொற்றுப் பணியின்போது உயிரிழந்த
11 அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும், அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சிறிதும் மனச்சான்று இன்றி திமுக அரசு ஏற்கமறுப்பது அதைவிடவும் பெருங்கொடுமையாகும்.
கடந்த 22.11.2020 அன்று மருத்துவப்பணியில் இருக்கும்போதே கொரோனா தொற்றால் மரணமடைந்த திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் விவேகானந்தன் அவர்கள் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அவருடைய மனைவி திவ்யாவிற்குக் கருணை அடிப்படையில் அரசுப்பணி கேட்டுப் பலமுறை முறையிட்டும் திமுக அரசு அவரது கோரிக்கைக்கு இன்றுவரை செவிமடுக்கவில்லை.
அரசு மருத்துவர் விவேகானந்தன் மரணத்திற்குப் பிறகு அவரது ஏழைக் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அவரது மனைவிக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்று முதலில் அறிக்கை வெளியிட்டது வேறு யாருமல்ல; அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய முதல்வருமான ஐயா ஸ்டாலின் அவர்கள்தான்! தான் முன்வைத்த கோரிக்கையை, தன் கையில் அதிகாரம் கிடைத்த பிறகு நிறைவேற்ற மறுப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது தங்கை திவ்யாவிற்காக முதலைக் கண்ணீர் சிந்திய ஐயா ஸ்டாலின் அவர்கள், முதல்வரான பிறகு கோரிக்கைப் பெட்டியை சாவியோடு தொலைத்துவிடுவதற்குப் பெயர்தான் திராவிட மாடல்! தங்கை திவ்யா தன்னுடைய பச்சிளம் குழந்தைகளோடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களைப் பலமுறை சந்தித்து மன்றாடியும் இன்றுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை.
தங்கை திவ்யாவிற்காக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு அறப்போராட்டங்களை முன்னெடுத்தும் திமுக அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை. வேறுவழியின்றி, சட்டப் போராட்டக் குழு தங்கை திவ்யாவிற்கு அரசுப்பணி வழங்கக்கோரி தொடர்ந்த வழக்கில், கடந்த 25.11.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் கருணை அடிப்படையில் வேலை தர வேண்டும் என உத்தரவிட்ட பின்னரும், திமுக அரசு வேலை வழங்கவில்லை. இதுதான் சட்டத்தையும், நீதியையும் திமுக அரசு மதிக்கும் முறையா?
கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம், உயிரைக் காப்பாற்றும் அரசு மருத்துவர் செத்தால், அவரது குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைப்பதுதான் திமுக அரசு கடைப்பிடிக்கும் சமூக நீதியா?!
மக்கள் உயிர் காக்க தன் உயிரைப் பணயம் வைத்த அரசு மருத்துவரின் குடும்பத்தை ஒரு கருணை வேலைக்காகக் காத்திருக்கச் செய்து அலைகழிப்பது என்பது, மருத்துவர்களின் ஈகத்தையும், அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துவதாகும். திமுக அரசின் இத்துரோகச்செயல், இனிவரும் இளந்தலைமுறை மருத்துவர்களிடத்தில் சேவைபுரிய வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடும் கொடுஞ்சூழலை ஏற்படுத்திவிடும்.
ஆகவே, கொரோனோ பெருந்தொற்று பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கோன் என்றால் மன்னன்
கோன் என்றால் உனக்கு கேவலமாக தெரிகிறது . என்ன மொழி என்றே தெரியாமல் யாதவர் என்றால் பெருமை கொள்கிறாய் .
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
@Seeman4TN
தம்பி உதயநிதியை கூட சுட்டி காட்டிருக்கலாம் இல்லையா? அதற்கு ஏன் தம்பி விஜயை இழுக்கிறீர்கள்?
அறிஞர் அண்ணா பெரியார் வழி வந்தவர்கள் தானே நீங்கள், ஏன் கூட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டி வருகிறீர்கள்?
அண்ணன் செந்தமிழன் சீமான்
@Seeman4TN
"நீங்க முதல்ல நாகரிகமா பேசுங்க.. எனக்கு கத்துக்கொடுக்காதீங்க... எனக்கு தெரியும் எப்படி பேசணும்னு"... சீமான் ஆவேசம்
#Seeman | #NTK | #Chennai | #PolimerNews
'மாலை முரசு' நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுடைய 90ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி 11-08-2024 இன்று காலை சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மாலை முரசு அலுவலகத்தில் நடைபெற்ற மலர்வணக்க நிகழ்வில் #நாம்தமிழர்கட்சி சார்பாகப் பங்கேற்று ஐயாவின் திருவுருவப்படத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார்.
https://t.co/WYSvxezE2R
'மாலை முரசு' நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுடைய 90ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி 11.08.2024 இன்று காலை சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மாலை முரசு அலுவலகத்தில் நடைபெற்ற மலர்வணக்க நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் பங்கேற்று ஐயாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தியபோது,
https://t.co/k4whuS0ALI
அரசு பள்ளி , கல்லூரிகளின் நிலமை எப்படி இருக்கு . அவற்றை சரி செய்யாமல் சிலை வைப்பது , கார் பந்தயம் வைப்பது
உங்களை எந்த கணக்கில் சேர்ப்பது ?
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
@Seeman4TN