மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தங்கள் கிராமங்கள் மேம்பட கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமா��ு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கிராம சபை சிறக்கட்டும்!கிராமங்கள் செழிக்கட்டும்!!
#Gramasabai
இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் ஒற்றை நம்பிக்கை நாயகர், நம் ஜனநாயகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து, அவரது அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றேன்.!
@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்களின் தலைமையில் தமிழகம் ஒரு புதிய பொற்காலத்தை நோக்கிய அடிகளை எடுத்து வைத்துள்ளது. கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் உள்கட்டமை���்பு என அனைத்துத் துறைகளிலும் நீங்கள் மேற்கொள்ளும் புரட்சிகரமான மாற்றங்கள் அனைத்தும் என்றும் நீடித்திருக்கக் கூடிய புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது.
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் தொலைநோக்குப் பார்வையும், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய உங்களின் சிந்தனைகள் என்றும�� போற்றத்தக்கவை.
நீங்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடனும், நீடித்த ஆயுளுடனும் வாழ்ந்து, நம் மாநிலத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் உன்னதப் பணியில் உங்களோடு இணைந்து பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
வாழ்க தளபதி! வாழ்க வெற்றித் தலைவர்!
நம் தளபதி… நம் தலைவர்… தமிழக மக்களின் நம்பிக்கை! தமிழ்நாட்டின் எதிர்காலம்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தளபதி!
#HBDCMJosephVijay
@TVKVijayHQ
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வ���ழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.
அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின�� மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர்.
இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.
85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று.
வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?
தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.
தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.
குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.
குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி.
நம்பிக்கையோடு இர��ப்போம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
அனைவருக��கும் வணக்கம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த ��ிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், வெற்றித் தலைவர் அவர்களின் சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.
நாளை திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர்கள் குழு, நிகழ்ச்சி நேரம் மற்றும் இடம் ஆகியவை பின்வருமாறு:
1. த��ருச்சி
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:
1. T.கரிகாலன்
2. M.சந்திரா
3. M.விக்னேஷ்
4. P.ஜெகன் மோகன்
5. M.ரவிசங்கர்
6. K.அருள்ராஜ்
7. M.செந்தில்
நிகழ்ச்சி நேரம் : காலை 10.35 மணி
இடம்: மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில்,
2. அரியலூர் மாவட்டம்:
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:
1. M.சிவகுமார்
2. K.ரவிக்குமார்
3. V. திருத்தணி முருகன்
4. P. சித்திரக் கண்ணன்
5. V. பிரவீன் குமார்
நிகழ்ச்சி நேரம் : பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 ���ணி வரை
இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில்
3. பெரம்பலூர் மாவட்டம்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:
1. K.சிவக்குமார்
2. T.ஆரோக்கியசாமி
3. T.தர்மேந்திரன்
4. A.சி��்னதுரை
5. S.P.வினோத்
6. N.வில்லு விஜய்
7. R.P.மகேந்திரன்
8. S.மோகன்ராஜ்
நிகழ்ச்சி நேரம்: மாலை 4.00 மணி
இடம்: குன்னம் பேருந்து நிலையம் அருகில்
நிகழ்ச்சி நேரம்: மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
இடம்: வானொலித் திடல், பெரம்பலூர்
வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுக்களுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
வாகை சூடும் ���ரலாறு திரும்ப, வெற்றித் தலைவர் அவர்களின் பின்னால் ஒன்றுசேர்வோம்!
வென்று காட்டுவோம்!
இப்படிக்கு,
என்.ஆனந்த்,
பொதுச்செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்.
தமிழ் மொழி மீது அதிக அக்கறை கொண்டிருப்பது போல் காட்டிக்கொண்டு, தமிழ் வழியில் பயின்ற ஏழை எளியவர்களுக்கான வேலைவாய்ப்பை மறைமுகமாகப் பறிக்கும் நடவடிக்கையை மேற்கொண��டு வரும் கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு அரசில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,395 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தொகுதி - 4 தேர்வினை, கடந்த 12ஆம் தேதி நடத்தியது. சுமார் 11 லட்சம் பேர் இத்தேர்வினை எழுதினர். இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில் தமிழ் மொழிப் பகுதிக்கான கேள்விகள் மிகக் கடினமாகக் கேட்கப்பட்டதாக���் தேர்வு எழுதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தொகுதி - 4 தேர்விற்குப் பத்தாம் வகுப்புத் தரத்திலான வினாக்கள் மட்டுமே கேட்கப்படும் என்று தெரிவித்திருந்தது. காலம் காலமாக இந்த நிலைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கேட்கப்பட்டுள்ள தமிழ் வினாக்கள், அறிவிக்கையின் போது தெரிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்புத் தரத்திற்கு மேலான பட்டப் படிப்புத் தரத்திலும் ஆராய்ச���சித் தரத்திலும் கேட்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் வழியில் பத்தாம் வகுப்புத் தரம் அளவில் தொகுதி - 4 தேர்விற்குத் தயாராகி இருந்த தேர்வர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் நடத்தப்பட்ட குரூப் - 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி, தேர்வர்களுக்கு நீதி வழங்கத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ���ுன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கபட நாடகத் திமுக அரசானது தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் செயல்படுவது இது முதல் முறை அல்ல.
கடந்த ஆண்டு (2024) முதல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி - I, தொகுதி - II, தொகுதி - II A ஆகியவற்றுக்கான கொள்குறி வகைத் தேர்வுகளில், பொது ஆங்கிலத்திற்கான வினாத்தாளானது, குறிப்பிடப்பட்டுள்ள தரமான (Standard) பத்தாம் வகுப்புத் தரத்திலேயே தயார் செய்யப்பட்டு, தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், பொதுத் தமிழுக்கான வினாத்தாளானது, அறிவிக்கையின் போது பத்தாம் வகுப்புத் தரம் என்று அறிவித்துவிட்டு, ஆராய்ச்சி நிலையில் (Research Standard) இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இந்தச் செயல்பாடானது, தமிழ் வழியில் பயின்ற ஏழை எளிய மக்களுக்கான வேலைவாய்ப்பை மறைமுகமாகப் பறிக்கும் நடவடிக்கையே அன்றி வேறெ���்ன?
தமிழ் மொழி மீது அதிக அக்கறை கொண்டிருப்பது போல் காட்டிக்கொண்டு, தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்க நினைக்கும் கபட நாடகத் திமுக அரசின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தங்களுக்கு அரசுப் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கடினமாக உழைத்துப் படித்து��் தேர்வெழுதிய லட்சக்கணக்கான தேர்வர்களை ஏமாற்றி, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அதன் வாயிலாக லாபமடைய நினைக்கிறீர்களா? தமிழக வெற்றிக் கழகம் இதை ஒருபோதும் அனுமதிக்காது.
இனிவரும் காலத்தில், தமிழுக்கும் தமிழ் வழியில் பயின்ற ஏழை எளியவர்களுக்கும் உண்மையான முக்கியத்துவம் அளித்து, தேர்வுகள் நடத்தி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என எங்கள் கழகத் தலைவர் அவர்��ளின் ஒப்புதலுடன் வலியுறுத்துகிறேன்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 வருடங்களுக்குத் தண்டனைக் குறைப்போ மற்றும் வேறு எந்தச் சலுகையுமோ அற்ற ஆயுள் தண்டனையும் ரூ. 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது.
இந்த வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்து, அவரைக் காப்பாற்ற முயன்றனர். சட்டப் பேரவையிலேயே தமிழ்நாட்டின் முதலமைச்சரே குற்றவாளியின் பெயரைச் சொல்லி அவர் மீதான களங்கத்தைப் போக்க முயன்றார். எதிர்க் கட்சிகள் அதை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டி, நீதிக்கு வழிவகுத்தனர். தமிழக வெற்றிக் கழகம�� உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் போராட்டங்களையும் மீறி, தமிழக மக்களைச் சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்கிற இவர்களின் எண்ணம் நிறைவேறாமல் போனது.
சட்டம் ஒழுங்கை முறையாகக் காப்பாற்ற வகையற்ற, பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கத் தவறிய, செயல்திறன் அற்ற ஓர் அவல ஆட்சி இது. இத்தகையக் கொடூரக் குற்றங்கள் தொடர்ந்து இழைக்கப்படுவதை இனியாவது விழித்துக்கொண்டு, தடுக்கவில்லை எனில் மக்கள் மன்றத்தில் இந்த கபட நாடகத் தி.மு.க. அரசு தண்டிக்கப்படுவது உறுதி என்பதை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடுத் தெரிவித்துக்கொள்கிறேன்.
யூட்யூபர் திரு.சவுக்கு சங்கர் அவர்கள் வீட்டில், அவருடைய தாயார் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிலர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீடு முழுக்கச் சாக்கடையையும் மலத்தையும் கொட்டிவிட்டு, மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.
ஒருவரின் விமர்சனம் ஏற்புடையதாக இல்லையென்றால், அதைச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து, விமர்சனம் செய்தவரின் வயதுமுதிர்ந்த தாய் இருக்கும் இடத்தில் இப்படி அராஜகம் செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
இந்த இழிவான செயலைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
@TVKVijayHQ@TVKPartyHQ
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வ��ற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்.